Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் மஹிந்தவின் மூத்த அமைச்சர்

Featured Replies

கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் மஹிந்தவின் மூத்த அமைச்சர்

 

 

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரையும்,முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட மஹிந்தவாதிகளையும்இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்குழுவின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவே இந்தத் தகவலை கூறியிருக்கின்றார்.

கொழும்பு பொரளை பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ்.பி.திஸநாயக்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இந்தஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் மற்றுமொருமுக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்டிருந்த போதிலும், எஸ்.பி.திஸாநாயக்கவின்கூற்றுக்களை நிராகரிக்கவில்லை.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்குபதிலளிக்கையில், “ எங்களுக்கும் தெரிந்த சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்களையும் கொன்றுவிட்டனர்என யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் மஹிந்தவின் அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயேசிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபாலசிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராக எஸ்.பி குறிப்பிட்டார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

கருணா என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த விநாயகமூர்த்திமுரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சிறிலங்காஇராணுவத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கானசிறப்பு இராணுவத் தளபதியாக தம்பிராஜா துரைராஜசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதிரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.

யுத்தகாலத்தில் கேர்ணல் ரமேஷ் என அறியப்பட்ட அவர் சிறிலங்காஇராணுவத்திடம் சரணடைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றைஎடுத்திருந்ததாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தான் சரணடையப்போவதாகவும் ஆங்கிலத்தில் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

ரமேஷ் சரணடைந்தார், ரமேஷ் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள்நிகழ்ந்திருக்கின்றன என்றும் எந்தவித பொருட்டும் இல்லாமல் மஹிந்தவாதியான எஸ்.பி. திஸநாயக்க ஊடகவியலாளர் முன்னிலையில் கூறினார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பில் கேர்ணல் ரமேஷ் இருந்தகாட்சிகளும், அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் அடங்கியகாணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. எனினும் சிறிலங்காவின்மமுன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அதனை நிராகரித்திருந்ததுடன்,குறித்த காணொளி சோடிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.

 

 

குறித்த காணொளியில் கேர்ணல் ரமேஷிடம் கேள்விகளை கேட்கும்இராணுவ சீருடையுடன் காணப்பட்ட சிப்பாய்களின் கூற்றுகளுக்கு அமைய அன்றைய தினம் 2009மே மாதம் 22 ஆக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் 2009 மே மாதம் 19 ஆம்திகதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர்மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானச் செயலகத்தின் தலைவர் சீவரத்னம் புலித்தேவன்ஆகியோர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்த போதிலும், வெள்ளைக்கொடியுடன்அவர்கள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதாக நம்பகரமானசாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகளானஇவர்கள் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மறைமுகமாக சில தகவல்களைவெளியிட்டார்.

 

 

“ நீங்களும், நாங்களும் குறிப்பிடாதஇன்னும் சிலரும் இருந்தனர். அவர்களும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்பதை நாம்பகிரங்கமாக கூறாதிருக்கும் பலரும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் நன்கு அறிவோம்”என்று டஎஸ்.பி.கூறினார்.

இன்றைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமுன்னாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புஅமைச்சராக இருந்தசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, போரின்போது அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்பாவி பொது மக்களை படுகொலைசெய்ததற்கான முழுப் பொறுப்பையும்இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத்திற்கு தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல்சரத் பொன்சேகாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான பெரேராகுறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/ltte/80/106087?ref=imp-news

  • தொடங்கியவர்

இறுதிக்கட்டப் போரில், படையினரிடம் சிலர் சரணடைந்தார்கள் எனவும், அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

படையினரிடம் சரணடையும் முன்னர் ரமேஷ் என்னிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அறிவித்தார் - எஸ்.பி. திஸாநாயக்க

 

இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை தாமும் அறிந்திருந்ததாகவும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ரமேஷ் இராணுவத்தினரிடம் சரணடையும் முன்னர் தொலைபேசியில் அறிவித்ததாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த விடயம் குறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவர்கள் இதனை கூறியுள்ளனர்.

எஸ்.பி. திஸாநாயக்க,

நீங்களும் நாமும் அறிந்திருந்திருந்தும் வெளியில் கூறாத சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டவர்களில் சிலரும் இருக்கின்றனர். இது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

டிலான் பெரேரா.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வரப்பட்ட போது, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாங்களும் அதற்கு உதவினோம்.

எஸ்.பி. திஸாநாயக்க.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை நாங்கள் முழுமையாக எதிர்ப்பவர்கள். நாங்கள் இருவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள்.

எனினும் போரின் இறுதிக்கட்டங்களில் பிரபாகரன் மிகவும் மனிதாபிமானமற்றவராக செயற்பட்டுள்ளார். பிரபாகரன் அவர்களின் ஆட்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். அவர் ரமேஷை கொண்டு சென்று சிறை வைத்திருந்தார்.

கருணா அம்மான் விலகிய பின்னர், பிரபாகரன் ரமேஷை கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தார். ரமேஷை சுட்டுக்கொன்றிருப்பார். இறுதியில் ரமேஷ் படையினரிடம் சரணடைந்தார். அவரை கொன்றனர். இப்படியான விடயங்கள் இருக்கின்றன.

டிலான் பெரேரா.

பிரபாகரன் கொலை செய்த அரசியல் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அவர் அதிகளவில் தமிழ் அரசியல் தலைவர்களையே கொலை செய்துள்ளார்.

தனது மகன் காணாமல் போனால், ஒரு சிங்கள தாயாருக்கு இருக்கும் வலியே தமிழ் தாயாருக்கும் இருக்கும். தமிழ் தாயாருக்கு தனியான வலிகள் எதுவுமில்லை. ஒரு பிள்ளை காணாமல் போனால், அந்த பிள்ளை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை பெற்றோருக்கு உள்ளது.

எஸ்.பி. திஸாநாயக்க,

ரமேஷ் படையினரிடம் சரணடைய 10 நிமிடங்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் இராணுவத்திடம் சரணடைய போகிறேன் என்று கூறினார்.

டிலான் பெரேரா,

காணாமல் போனோர் சம்பந்தமான எடுக்கப்படும் விடயங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வந்த போது நாங்களே கைகளை தூக்கி அதனை நிறைவேற்றினோம்.

அது மட்டுமல்ல, அதில் இருந்த ஆபத்தான பந்திகளை ஜனாதிபதியிடம் கூறி மாற்றினோம். காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை எதிர்க்கும் தரப்பினர் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கலாம்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் என்ற வகையில் சிங்கள பிள்ளையின் தாயும், தமிழ் பிள்ளையின் தாயும் இரண்டு பேரும் தாய்மார்கள் அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறோம்.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பல நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு வேறு ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு வேறு.

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் தமது பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பான நிலைமையை அறிந்துக்கொள்ளும் உரிமை தமிழ் தாய்மாருக்கு இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு.

எஸ்.பி. திஸாநாயக்க.

உலகில் இப்படியான சம்பவங்கள் நடந்தால், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்களை தெரியப்படுத்தி அவர்களை தேற்ற வேண்டுமே தவிர துரத்தி, துரத்தி அடிக்க கூடாது.

தேவை ஏற்பட்டிருந்தால் தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டோலாவுக்கு வெள்ளையர்கள் அனைவரையும் கொலை செய்திருக்க முடியும். அவர் அப்படி செய்யவில்லை. விடயங்களை தேடி அறிந்து பாதிக்கப்பட்டவர்களின் மனதை தேற்றி, அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

டிலான் பெரேரா.

இலங்கையிலும் தென் ஆபிரிக்காவில் நடந்தது போல், அனைத்தும் முடிவடைந்த பின்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தென் ஆபிரிக்காவின் ஆயர் டுட்டு தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் அமர்ந்து நடந்த உண்மை சம்பவங்களை விசாரித்தனர்.

அந்த ஆணைக்குழுவின் முன் வெள்ளையின படையினரும் நெல்சன் மண்டேலாவின் கறுப்பின போராளிகளும் செய்தவற்றையும் நடந்தவற்றையும் கூறினர். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் அவர்கள் உண்மைகளை கூற ஆரம்பித்தனர்.

எங்களால் இவை நிகழ்த்தப்பட்டன என்று உண்மையை கூறினர். அப்போது மனதில் இருந்த சுமை குறைந்தது. இறுதயில் ஆணைக்குழு இரண்டு தரப்பிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சி பத்திரங்களை வழங்கு, இழப்பீடுகளை வழங்குமாறு பரிந்துரைத்து, இரண்டு தரப்பினருக்கு மன்னிப்பு வழங்கியது.

நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி எனக் கூறி சிறையில் அடைத்த ஜனாதிபதி டி கிளர்க். மண்டேலா ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது அவருக்கு கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார். இலங்கையில் இப்படியான ஒன்றை எண்ணி பார்க்க முடியுமா?.

மகிந்த ராஜபக்ச அல்லது மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியாக இருக்கும் போது சாதாரண தமிழர் ஒருவரை உப ஜனாதிபதியாக நியமிக்குமாறு நான் பரிந்துரைத்தேன் என்று வைத்துக்கொள்வோம்.

கலகொட அத்தே ஞானசார தேரர் இதற்கு எதிராக 10 தடவைகள் இலங்கை முழுவதும் செல்வார். எனினும் எமது நாடு அந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அனைத்து இனத்தவரும் சமமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/193308?ref=home-feed

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்றமே செய்யாத மகிந்த அரசை அநியாயமாக எஸ்.பி குற்றம் சாட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் என்றும் உறங்குவதில்லை.....உறங்கியதில்லை!

என்றோ ஒரு நாள்...அவை...தம்மை...நிச்சயம் இனங்காட்டியே  தீரும்!

இது தான் உலக நியதி!

சு.சாமி சுட்டிக்காட்டிய வருங்கால ஜனாதிபதி....உலக அரங்கில் நாறப்போவதுடன் .....சு. சாமியும் சேர்ந்து நாறப் போகிறார்!

நாறடிக்க வேண்டியது....நமது கடமை!

மரணித்த நமது உறவுகளின் ஆத்மாக்கள்...அப்போது தான் நிரந்தரமாக அமைதியடையும்! 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறங்கக் கூடாது. கொல்லப்பட்ட எமதுறவுகளுக்கு நீதி கிடைக்கும்வரையாவது உண்மைகள் உறங்காமல் இருக்க வேண்டும்.

எனது ஆதங்கம் என்னவென்றால், எமது போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே சர்வதேசம், எம்மைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருந்ததா என்பதுதான்.

80 களின் ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ராணுவ ஆலோசகர்கள் இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சிகளை வழங்கினார்கள். ஆரம்பத்தில் இலங்கை ராணுவம் வீதி ரோந்துகளில் பாவித்த கவச வாகனங்கள், பிரித்தானிய ராணுவம் வட அயர்லாந்தில் பாவித்தவைதான். தமிழ்ப் போராளிகள் சோசலிஸவாதிகள் என்கிற தவறான எண்ணக்கருவை அடிப்படையாக வைத்து இது நடந்திருக்கலாம்

அதேபோல, இஸ்ரேல் கூட இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சிகளை வழங்கியிருந்தது. பாலஸ்த்தீன போராளிக் குழுக்களுடன் தமிழ்ப் போராளிகளுக்கு இருந்த உறவைக் காரணம் காட்டி இது நடந்திருக்கலாம்.

இந்தியா ஜெ ஆருக்குப் பாடம் புகட்ட எமக்கு உதவியது. பின்னர், எவருக்குப் பாடம் புகட்ட எண்ணியதோ, அவர்களுடன் சேர்ந்தே எம்மை அழித்தது.

பாக்கிஸ்த்தானுக்குப் பெரிதாக காரணம் ஏதும் இருக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்னர், இறுதிப் போர்பற்றிய சில ஆய்வுகள் பற்றிய எனது தேடுதலில், ஒரு பாக்கிஸ்த்தானிய செய்தியாளரின் கட்டுரை ஒன்றைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. தமிழருக்கெதிரான போரில் பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவுவதன் காரணத்தை ஒரு வரியில் அவர் சாராம்சப் படுத்தியிருந்தார். அதாவது, தமிழர்கள் இந்துக்கள், அதனால்த்தான் இந்தியா அவர்களுக்கு உதவியது, ஆகவே இந்தியாவுக்கெதிராக தாம் இலங்கை அரசிற்கு உதவுவது கட்டாயம் என்று எழுதியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா 1986 இற்குப் பின்னர் தமிழ்ப் போராளிகளுக்கு உதவுவதை நிறுத்திவிட்டிருந்தது. இந்தக் கட்டுரை வரையப்பட்டதோ 2010 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். 

ஆக, எம்மை அழிக்கத் துணை போனவர்கள் எவருமே தமிழர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதுபற்றியோ, அவர்களுக்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலை பற்றியோ ஏதும் அறிந்திருக்கவில்லை.....அல்லது, இவை எல்லாம் தெரிந்தே துணைபோயிருக்கிறார்கள்.

Edited by ragunathan
spelling

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

 

அல்லது, இவை எல்லாம் தெரிந்தே துணைபோயிருக்கிறார்கள்.

 


 

 
 
ஆயுத   வியாபாரமும் ஒரு காரணம்.
2 hours ago, ragunathan said:

உண்மைகள் உறங்கக் கூடாது. கொல்லப்பட்ட எமதுறவுகளுக்கு நீதி கிடைக்கும்வரையாவது உண்மைகள் உறங்காமல் இருக்க வேண்டும்.

எனது ஆதங்கம் என்னவென்றால், எமது போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே சர்வதேசம், எம்மைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருந்ததா என்பதுதான்.

80 களின் ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ராணுவ ஆலோசகர்கள் இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சிகளை வழங்கினார்கள். ஆரம்பத்தில் இலங்கை ராணுவம் வீதி ரோந்துகளில் பாவித்த கவச வாகனங்கள், பிரித்தானிய ராணுவம் வட அயர்லாந்தில் பாவித்தவைதான். தமிழ்ப் போராளிகள் சோசலிஸவாதிகள் என்கிற தவறான எண்ணக்கருவை அடிப்படையாக வைத்து இது நடந்திருக்கலாம்

அதேபோல, இஸ்ரேல் கூட இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சிகளை வழங்கியிருந்தது. பாலஸ்த்தீன போராளிக் குழுக்களுடன் தமிழ்ப் போராளிகளுக்கு இருந்த உறவைக் காரணம் காட்டி இது நடந்திருக்கலாம்.

இந்தியா ஜெ ஆருக்குப் பாடம் புகட்ட எமக்கு உதவியது. பின்னர், எவருக்குப் பாடம் புகட்ட எண்ணியதோ, அவர்களுடன் சேர்ந்தே எம்மை அழித்தது.

பாக்கிஸ்த்தானுக்குப் பெரிதாக காரணம் ஏதும் இருக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்னர், இறுதிப் போர்பற்றிய சில ஆய்வுகள் பற்றிய எனது தேடுதலில், ஒரு பாக்கிஸ்த்தானிய செய்தியாளரின் கட்டுரை ஒன்றைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. தமிழருக்கெதிரான போரில் பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவுவதன் காரணத்தை ஒரு வரியில் அவர் சாராம்சப் படுத்தியிருந்தார். அதாவது, தமிழர்கள் இந்துக்கள், அதனால்த்தான் இந்தியா அவர்களுக்கு உதவியது, ஆகவே இந்தியாவுக்கெதிராக தாம் இலப்க்கை அரசிற்கு உதவுவது கட்டாயம் என்று எழுதியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா 1986 இற்குப் பின்னர் தமிழ்ப் போராளிகளுக்கு உதவுவதை நிறுத்திவிட்டிருந்தது. இந்தக் கட்டுரை வரையப்பட்டதோ 2010 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். 

ஆக, எம்மை அழிக்கத் துணை போனவர்கள் எவருமே தமிழர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதுபற்றியோ, அவர்களுக்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலை பற்றியோ ஏதும் அறிந்திருக்கவில்லை.....அல்லது, இவை எல்லாம் தெரிந்தே துணைபோயிருக்கிறார்கள்.

 

இந்தியா தமிழ்ப்போராளிகளுக்கு ஆரம்பத்தில் உதவியது ஆனால் அவ் உதவி தமிழர்களின் விடிவு நோக்கியதாக இல்லை மாறாக இலங்கையில் ஒரு ஆயுதக கலகத்தை ஏற்படுத்துவது அதன் நிமிர்த்தம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவது என்ற நோக்கில். போராளி இயங்கங்களுக்குள் பிரிவினையை தக்கவைப்பதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே போராளிகளின் வளர்ச்சியை வைத்திருப்பதும் என்ற அடிப்படையில் உதவியது. இப்பிடியில் இருந்து புலிகள் விலகிக்கொண்டார்கள். 

பல இயக்கங்களின் தோற்றத்தால் தமிழர்கள் போராடடம் குழப்பமான திசைகளை சுட்டிக்காட்டியது. ஒரு இயக்கம் பாலஸ்தீனத்தில் பயிற்சி அதே நேரம் இலங்கைப் படைகளுக்கும் தமிழ்ப்போரளிகளுக்கும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் பயிற்சியளித்தது என்றும் ஒரு செய்தி உண்டு. முதலாளித்துவ போக்கா இல்லை பொதுவுடமைப்போக்கா மதசார்பானவர்களா இல்லை எதிரானவர்களா என்ற பல குழப்பங்களை இயக்கங்களும் ஏற்படுத்தியது. தவிர இயக்க மோதல்களும் இஸ்லாமிய முரண்பாடுகளும் இனவிடுதலையா இல்லை கலகமா என்ற கேள்வியை எழுப்பியது. உலகின் போக்கு மாறியபோது தற்கொலைத் தாக்குதல்கள் பயங்கரவாதம் என்ற அளவுகோலினால் மட்டுமே அணுகப்பட்டது. 

போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இஸ்ரேலின் ஆயுதவியாபாராம். மகாவலி திட்டத்தை ஏற்படுத்தி உலகநாடுகளில் இருந்து பணம் வாங்கி அதில் பெரும்பான்மை நிதியை ஆயுதக் கொள்வனவுக்கு செலவிட்டது இலங்கை. ஆரம்ப காலங்களில் ஆயுதவியாபாரம் ஒரு பெரும் பங்கை வகித்தது. 

தமிழர்களை ஆதரிப்பதால் பொருளாதார அடிப்படையில் என்ன லாபம் என்று நோக்கும் போது சிங்களவர்களுக்கே ஆதரவுக் கரம் சென்றது. தமிழர்கள் நிலத்தில் உலகநாடுகள் லாபம் பெறும் நோக்கில் எந்த பொருளாதார வளமும் இல்லை. மிகப் பெரிய மக்கள் தொகையோ இல்லை சந்தையோ இல்லை. ஆதரித்து என்ன பயன் ?

நீதி நேர்மை அறம் என்ற அடிப்படையில் உலகநாடுகள் ஆதரவளிப்பதில்லை. லாபநட்டம்  எதிர்கால பொருளாதாரம் அதற்கும் அடுத்தபடியாக பாதுகாப்பு. இவைகளின் பின்புலத்திலேயே உலகநாடுகள் ஆதரிக்கும்.இலங்கையரசு செய்வது மகாபாதகம் என்பது நன்கு தெரியும். ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எந்த இஸ்லாமிய நாடும் கைகொடுக்கவில்லை. உலகமயமாக்கலின் பின் சிறுபான்மைத் தேசீய இனங்களுக்கான தனித்துவத்தை ஆதரிப்பது அடிப்படையில் சந்தைப்படுத்தலுக்கு எதிரானது. 

தமிழக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்தமிழர்கள் மேலும் உலகநாடுகளில் இருக்கும் தமிழர்களின் ஐக்கியப்பாடும் அதன் நிமிர்த்தம் ஏதோ ஒருவிதத்தில் சந்தை வியாபார உறவும் ஏற்படுமாயின் சில மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமாக எதிர்காலத்தில் வரக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தைப் பற்றிய புரிதலை தமிழ் மக்களுக்குள்ளேயே உருவாக்குவதில் வெற்றி கண்டதாகத் தெரியவில்லை. சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற வெளிநாடுகளில் இயங்கிய அமைப்புக்கள் முழுமூச்சுடன் இயங்கியதாகவும் தெரியவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமே போராட்டத்திற்கான ஆதரவைத் தக்கவைப்பதில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

எனவே சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசிற்கு தமது நலம்சார்ந்து உதவியதில் வியப்பில்லை.

எஸ். பி. திசநாயக்காவுடன் பேசியபின்னர் சரணடைந்த கேணல் ரமேஸ் கொடூரமாகச் சித்திரவதைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதை எஸ். பி. திசநாயக்க இப்போது சொல்லுவதன் மூலம் கேர்ணல் ரமேஸைக் கொன்றவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை. சில நாட்கள் பரபரப்பாக சமூகவலைத் தளங்களில் பேசப்படலாம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பெரிய அநீதி கிருபன்,

தாம் சரணடைந்த ஒருவரைக் கொலைசெய்தோம் என்று ஒரு நாட்டின் அமைச்சரே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். 

மனிதவுரிமைகள் பற்றியும், போர்க்குற்றங்கள் பற்றியும், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் பற்றியும் ஓயாமல் வாய்கிழியப் பேசும் ஐநாவோ அல்லது மேற்குலகோ என்ன செய்யப்போகின்றன?

இதற்கு முன்னரும் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் தொடரில் நிரூபிக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றியோ அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் பற்றியோ அல்லது பொதுமக்கள் வாழ்விடங்கள், வைத்தியசாலைகள் இலக்குவைக்கப்பட்டுக் குண்டுவீசி பொதுமக்கள் பலியிடப்பட்டதுபற்றியோ, அல்லது ஐநா வின் கண்காணிப்பாளர்களின் சாட்சியங்கள் பற்றியோ இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? எதுவுமேயில்லை. செவிடன் காதில் ஊதப்பட்ட சங்குபோல எமது அழுகுரல்கள் எவர் காதிலும் விழவில்லை.

இன்று இந்தக் குற்றங்களைப் புரிந்தவர்களுடன் உறவாடுவதற்கு இந்த மேற்குலகு உற்பட அனைத்து ஜனநாயகத்தின் காவலர்களும், சோசலிசத்தின் காவலர்களும் முண்டியடிக்கிறார்கள். நீண்டகாலக் கடன், குறைந்தவட்டிக் கடன், அபிவிருத்தித் திட்டங்கள், இலவசப் போர்க்கப்பலகள், போர்ப்பயிற்சி என்று இனவழிப்பில் ஈடுபட்டவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு மாநாடுகள், உயர் விருதுகள் என்று நடத்திமுடிக்கப்பட்ட இனவழிப்புப் பற்றி விளக்கம் எடுத்து வருகிறார்கள்.

எமக்கு நடந்த அதே அவலம் இன்று பர்மாவில் ரொஹிங்கியா முஸ்லீம்களுக்கும் நடைபெறுகிறது. எமக்குக் கேட்ட அதே குரல்கள் இப்போதும் கேட்கின்றன. நடப்பது இனவழிப்புத்தான் என்று யாரோ சிலர் உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து கூக்குரலிடுகிறார்கள்.
வழமைபோல ஐ. நா வும் மனிதவுரிமைகளின் காவலர்களும் மெளனம் காக்கிறார்கள்.

Edited by ragunathan
spelling

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சண்டமாருதன் said:

போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இஸ்ரேலின் ஆயுதவியாபாராம். மகாவலி திட்டத்தை ஏற்படுத்தி உலகநாடுகளில் இருந்து பணம் வாங்கி அதில் பெரும்பான்மை நிதியை ஆயுதக் கொள்வனவுக்கு செலவிட்டது இலங்கை. ஆரம்ப காலங்களில் ஆயுதவியாபாரம் ஒரு 

தோழர்,

ஆயுத வியாபாரம்  பெரும் காரணமல்ல.. அப்படி இருந்தால் இந்நேரம் போர் தொடர்ந்து இருக்க வேண்டும் இல்லை என்றால் புதிய உள்நாட்டு போர் ஆயுத வியாபரிகளால் தொடங்கப்பட்டு இருக்க வேணும் .

3 hours ago, சண்டமாருதன் said:

தமிழர்களை ஆதரிப்பதால் பொருளாதார அடிப்படையில் என்ன லாபம் என்று நோக்கும் போது சிங்களவர்களுக்கே ஆதரவுக் கரம் சென்றது. தமிழர்கள் நிலத்தில் உலகநாடுகள் லாபம் பெறும் நோக்கில் எந்த பொருளாதார வளமும் இல்லை. மிகப் பெரிய மக்கள் தொகையோ இல்லை சந்தையோ இல்லை. ஆதரித்து என்ன பயன் ? 

இதுவும் ஏற்புடையது  அல்ல. சந்தை படுத்துதலுக்குரிய பெருந்திரள் மக்கள் கூட்டம் இல்லை இலங்கையிடம்.

 

3 hours ago, சண்டமாருதன் said:

உலகமயமாக்கலின் பின் சிறுபான்மைத் தேசீய இனங்களுக்கான தனித்துவத்தை ஆதரிப்பது அடிப்படையில் சந்தைப்படுத்தலுக்கு எதிரானது.  

பாதி உண்மை, எல்லா தேசிய இனங்கள் அல்ல.. தற்சார்பு உடைய , ஏல்லா இனங்களும் குறிவைக்கப்படுகின்றன

 

3 hours ago, சண்டமாருதன் said:

தமிழக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்தமிழர்கள் மேலும் உலகநாடுகளில் இருக்கும் தமிழர்களின் ஐக்கியப்பாடும் அதன் நிமிர்த்தம் ஏதோ ஒருவிதத்தில் சந்தை வியாபார உறவும் ஏற்படுமாயின் சில மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமாக எதிர்காலத்தில் வரக்கூடும்.  

இதுவும் சாத்தியம் இல்லை. பிரித்தாளும் கொள்கை மூலம் எட்டப்பன்கள் உருவாக்கப்படுவார்கள்..

டிஸ்கி


என்னுடைய கருத்து இலங்கையின் புவிசார் அமைவிடமே அதன் ஏல பொருள். அதனை சரியாக பாவித்தது . விதிப்பயனாக ஈழம் கிந்தயவின் அருகே அமைந்து தமிழர்களை கிந்தியாவின்ர ஒரு அம்சமாக சர்வதேசம் பார்த்தது . இதில் கிந்திய விரோத பார்வையில் ராம  / ராவண  காரியங்களும்  அடக்கம்.

கிந்திய மாயையில் இருந்து விலகி தானும் ஓர் எலப்பொருளாகி சர்வதேசத்திடம் மறைமுகமாக பேச வேண்டும். தாய் தமிழகமும் தார்மீக , விவசாய,பொருளாதார் ஆதரவோடு இருப்பதோடு ..குறைந்தபட்சம் கிந்திய தலையீட்டையாவது தடுத்து நிறுத்த வேண்டும். அதுவே இனி ஒரு வழி செய்யும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.