Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான முடிவுகள் வெளியாகின!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான முடிவுகள் வெளியாகின!

இலங்கையில் இந்த ஆண்டுக்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தற்பொழுது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்குரிய மேற்படி பரிட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அதன்படி தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்

https://www.ibctamil.com/srilanka/80/107128?ref=ibctamil-recommendation

யாழின் இரண்டு பாடசாலைகள் அபாரச் சாதனை!

சற்று முன்னர் வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி தமிழ் மொழி மூலம் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் விபரம் பின்பவருமாறு,

முதலிடம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை - மகேந்திரன் திகாலோலிபவன் - 198, முதலிடம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை - நவாஸ்கன் நதி - 198, இரண்டாம் இடம் வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை - பாலகுமார் ஹரித்திகன் சுஜா - 197, மூன்றாம் இடம் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - நேசிகா சம்தினேஷ் - 196 , மூன்றாம் இடம் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி - சுகா சாகீர் மொஹமட் - 196

https://www.ibctamil.com/srilanka/80/107131?ref=imp-news

புலமைப் பரிசில் பெறுபேறு : சிறந்த பெறுபேற்றை பெற்றோர் விபரங்கள் இதோ…

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 199 புள்ளிகளை பெற்று பிலியந்தலை மற்றும் வெயாங்கொட பகுதி மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தையும் , 198 புள்ளிகளை பெற்று சாவக்கச்சேரி , யாழ்ப்பாணம் மற்றும் மினுவாங்கொட பிரதேச மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அது தொடர்பான மேலதிக விபரங்களை கீழே பார்க்கலாம். -(3)

Untitled-1.png

http://www.samakalam.com/செய்திகள்/புலமைப்-பரிசில்-பெறுபேற-4/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசில் : மாவட்ட வெட்டுப் புள்ளி விபரங்கள் இதோ

வெளியாகியுள்ள 5ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமை மாவட்ட ரீதியிலான தமிழ் மொழி மூல வெட்டுப் புள்ளி விரங்களை கீழே பார்க்கலாம். -(3)
கொழும்பு – 165
கம்பஹா – 165
களுத்துறை – 165
கண்டி – 165
மாத்தளை – 165
காலி – 165
மாத்தறை – 165
கேகாலை – 165
குருநாகல் – 165
நுவரெலியா – 162
அம்பாந்தோட்டை – 160
யாழ்ப்பாணம் – 164
கிளிநொச்சி – 163
மன்னார் – 162
வவுனியா – 164
முல்லைத்தீவு – 163
மட்டக்களப்பு – 164
அம்பாறை – 163
திருகோணமலை – 162
புத்தளம் – 162
அனுராதபுரம் – 162
பொலனறுவை – 162
பதுளை – 163
மொனராகலை – 162
இரத்தினப்புரி- 162

http://www.samakalam.com/செய்திகள்/புலமைப்-பரிசில்-மாவட்ட-வ/

  • கருத்துக்கள உறவுகள்

ஜந்தாப்பு ஸ்கோலர்சிப் பெறுபேறுகள். 

Out of 200:

199 புள்ளிகளை இரு சிங்கள மாணவர்களும், 198 புள்ளிகளை ஒரு சிங்கள மாணவரும், இரு தமிழ் மாணவரும், 197 புள்ளிகளை ஒரு தமிழ் மாணவரும் பெற்றுள்னர்

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரம் விளை நிலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் !

_16931_1538729245_EEF38259-4FAB-4E42-A48F-CA4A916216DA.jpeg

(சசி)

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,

மட்டக்களப்பு, உன்னிச்சை 6 ஆம் கட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.துகிந்தரேஷ் 196 புள்ளிகளைப் பெற்று  மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று தனக்கும் பாடசலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கட்டமைப்பு வசதிகள் குறைந்த கிராமமான உன்னிச்சையில் இருந்து இம் மாணவன் சாதித்துள்ளமையானது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமைப்படத்தக்கதுமான விடயமாகும்.

எமது Batti Naatham ஊடகப்பிரிவு மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவன் ஜெ.துகிந்தரேஷ் அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்

_16931_1538729395_174B88C9-D234-4611-AC9

http://www.battinaatham.net/description.php?art=16931

திருகோணமலையில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள்

_16934_1538743151_fhfgjghjghj.jpg

திருகோணமலையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள். தங்கேஷ்வரன் விதுஷ் மற்றும் முனாஸ் முகம்மட் சமாஷ் ஆகியோர் 193 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்கள்.

http://www.battinaatham.net/description.php?art=16934

அம்பாறை மாவட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவி!

_16935_1538743564_fhgfhfghf.jpg

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் விபுலாநந்தர் வித்தியால பாடசாலையில் மாணவி நிதுர்சா 171 புள்ளிகள் பெற்று சாதணை படைத்துள்ளார்.

மேலும் இதே பாடசாலையில் 04 தமிழ் மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

http://www.battinaatham.net/description.php?art=16935

மட்டக்களப்பில் யாருமறியாத ஊரிலும் சாதனை

_16938_1538754158_fggdfgh.jpg

இதுதான் கற்றலின்வெற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு பூலாக்காடு என்றால் எத்தனைபேருக்கு தெரியுமோ தெரியாது.

வெளியாகிய புலமைப்ப்பரிசில் பரீட்சையில் புலியாய்ந்த கல் பாடசாலையில் கல்குடா கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்களின் முன்னேடுப்புடன் எமது புலம்பெயர் உறவின் நிதி(பிரதிஸ்,பிரநஸ்) பங்களிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் விளைவாக 185புள்ளிகளை பெற்று பூலாக்காட்டினை சேர்ந்த மாணவி சித்தியடைந்துள்ளார். மாணவியை பாராட்டுவதோடு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் இரவில் பிள்ளைகளுடன் தங்கி விடுதியில் காவல்காத்த அதிபர்கள்,மற்றும் நிதி உதவிபுரிந்தவர்கள்,கல்விப்பணிப்பாளர் ஆகியோருக்கும் நன்றிகள்.(நிதியினை ஒழுங்கமைத்து வழங்கிய ஜோர்ச் ரெமின்ரா அவர்களுக்கும் நன்றிகள்)

குறிப்பாக பணம் படைத்தவர்களை தேடி அலையும் இன்றைய உலகில் இப்படி எல்லாம் சாதனை இடம் பெருகிறது என்றால் கடவுள் இருக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் புறங்களை விட யாருமறியாத பல இடங்களில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை நல் எடுத்துக் காட்டு.

http://www.battinaatham.net/description.php?art=16938

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

சிறப்பு வாழ்த்துக்கள் இவ் மாணவிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்...அத்துடன் பரிச்சைசையில் சித்தியடைந்த அனைத்து மாணவருக்கும் பாராட்டுக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில்  ஒரு கையை இழந்தும்,  புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

October 6, 2018

1 Min Read

Mullai-Studint.jpg?zoom=3&resize=335%2C2

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவியின் சாதனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைகள் வறிய – பின்தங்கிய சூழலில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்காலத்தில் அதன் போக்குகள் மாற்றமடைந்து ஒரு மாணவர்கள் மத்தியில் ஒரு அழுத்தமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப் போட்டி பரீட்சையின் உண்மையான வெற்றியாளராக முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து அனைவரது பராட்டையும் பெற்றுள்ளார்.

பிறந்து ஒரு வயதாக இருந்தபோது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தன் ஒற்றை கையை இழந்த நிலையிலும் கல்வியின்மீது கொண்ட தீராத ஈடுபாடு காரணமாக தற்போது அவர் அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மாணவி ராகினியின் இந்தச் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். போரின் குழந்தையாக முள்ளிவாய்க்காலிருந்து மீண்டெழுந்த ராகினியின் சத்தமற்ற சாதனை அனைவரையும் கண்கலங்கவும் வைத்திருக்கிறது.

http://globaltamilnews.net/2018/98506/

  • கருத்துக்கள உறவுகள்

81_BE957_A-_B516-4153-8_F1_C-_FA6_F4951_

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையான மைக்கல்ஸ் தேசிய பாடசாலைக்கு கொண்டு சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் தான் வேலை செய்யும் பாடசாலையில் சேர்த்து அதாவது மட்டு மேற்கு வலயத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான உன்னிச்சையில் ஓர் பாடசாலையில் பயின்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள் அந்த பெற்றோருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2018 at 12:46 PM, கிருபன் said:

முள்ளிவாய்க்காலில்  ஒரு கையை இழந்தும்,  புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

October 6, 2018

1 Min Read

Mullai-Studint.jpg?zoom=3&resize=335%2C2

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவியின் சாதனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைகள் வறிய – பின்தங்கிய சூழலில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்காலத்தில் அதன் போக்குகள் மாற்றமடைந்து ஒரு மாணவர்கள் மத்தியில் ஒரு அழுத்தமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப் போட்டி பரீட்சையின் உண்மையான வெற்றியாளராக முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து அனைவரது பராட்டையும் பெற்றுள்ளார்.

பிறந்து ஒரு வயதாக இருந்தபோது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தன் ஒற்றை கையை இழந்த நிலையிலும் கல்வியின்மீது கொண்ட தீராத ஈடுபாடு காரணமாக தற்போது அவர் அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மாணவி ராகினியின் இந்தச் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். போரின் குழந்தையாக முள்ளிவாய்க்காலிருந்து மீண்டெழுந்த ராகினியின் சத்தமற்ற சாதனை அனைவரையும் கண்கலங்கவும் வைத்திருக்கிறது.

http://globaltamilnews.net/2018/98506/

இவள் யாரென்று தெரிகிறதா? 
இறுதிப் போரில் தாய் இறந்ததென தெரியாமல், பால் குடித்தவாறு இருந்த அந்த பச்சிளம் குழந்தைதான் இவளே..

  • கருத்துக்கள உறவுகள்

சோதனையை சாதனையாக்கி காட்டிய மாணவ  செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.