Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்காவும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை. வேலை எப்பிடியோ தெரியாது என்று நான் யோசிக்க, உமக்கு எல்லாம் அது கடினமாக இருக்காது. முதலில போய்  கேழும். வேலை பழக்கி விடுவினம் தானே என்று சொல்ல, சரி வியாழக் கிழமை போய் கேட்பம் என எண்ணிக்கொண்டு சரி போய்ப் பாக்கிறன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். 

அவன் கூறிய தபாற் கந்தோர் என் வீட்டில் இருந்து காரில் என்றால் பத்து நிமிடம் தான். எனவே நடந்து கூடப் போகலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வியாழன் காலை வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு போய் பார்த்தால் அங்கு எந்த அக்காவையும் காணவில்லை. ஒரு அண்ணா தான் வேலை செய்துகொண்டு இருந்தார். அக்காவின் பெயரைக் கூறி அவர் இல்லையா என்று கேட்டதுக்கு,  வியாழனில் தான் தான் வேலை செய்வதாகவும் மற்றைய நாட்களில் தான் அக்கா வேலை செய்வதாகவும் கூறினார். சரி என்று கூறிவிட்டு திரும்பி வரும்போது என்னடா இது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே. இன்று அக்கா இல்லாமல் போய்விட்டாரே என மனம் எண்ணினாலும் சரி பார்ப்போம் என்று விட்டு இருந்துவிட்டேன்.

நான் நடத்தும் தமிழ்ப் பள்ளிக்கு அருகிலே ஒரு பெரிய கடை. அந்தக் கடையினுள்ளேதான் தபாற் கந்தோரும் இயங்குகிறது. எனது பள்ளியில் ஏதும் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள், ஒன்றுகூடல்கள் என்பன நடக்கும்போதெல்லாம் அந்தக் கடையில் தான் நான் தண்ணீர், ஜூஸ் , பிஸ்கட் போன்றவற்றை வாங்குவது. அக்காவைத் தெரியாவிட்டாலும் கடையில் வேலை செய்பவர்கள் என்னுடன் நட்புடன் கதைப்பார்கள். அடுத்து வந்த சனிக்கிழமை தமிழ் பள்ளிக்குப் பொருட்கள் வாங்கப் போகும்போது பார்த்தால் அந்த அக்கா அங்கு நிற்பது தெரிய,  நான் அவரிடம் சென்று, என் நண்பன் குமரன் நீங்கள் வேலைக்கு ஆட்கள் தேடுவதாகக் கூறினான் என்றேன்.

ஓம் எனக்கு வேலைக்கு ஆட்கள் தேவை தான். உங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் வேலை தெரியுமோ என்றார். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லித் தந்தால் ஓரிரு வாரங்களில் பழகிவிடுவேன் என்றேன். புதிதாகப் பழக்குவது என்றால் அதுக்கு மூன்று மாதம் செல்லும். எனக்கு வேலை தெரிந்தவர்கள் தான் தேவை என்றார். அட இத்தனை நாட்கள் சும்மா வீட்டில் இருந்ததுக்கு பக்கத்துப் போஸ்ட் ஆபீசில் போய்ப் பழகியிருக்கலாமே என்று மனதில் எழுந்த ஆதங்கத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சரி என்ர மனிசன் தானே வழமை போல் திட்டினால் திட்டீற்றுப் போகட்டும் என்று இருந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் பள்ளிக்கூடத்துக்குத் தண்ணீர்ப் போத்தல் வாங்கக் கடைக்குப் போய் பணம் செலுத்த வரிசையில் நிக்க, இங்க நீங்கள் தானே வந்து வேலை கேட்டது. பே பண்ணீற்று ஒருக்கா வந்து கதைச்சிட்டுப் போறீங்களே என்று அக்கா கேட்க, குபீர் என மனதில் எழுந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது. அக்காவிடம் போனால் நான் உங்களுக்கு வேலை பழக்கிறன். நீங்கள் எந்த நாட்கள் பிறீ என்றார் அக்கா.  நான் சனிக் கிழமையைத் தவிர எல்லா நாளும் பிறீ தான் என்று சொல்ல திங்கட் கிழமை வாங்கோ என்று சொல்லி அனுப்பினார் அக்கா. வீட்டுக்கு வந்த உடன மனிசனிட்டை விசயத்தைச் சொல்ல மனிசன்ர சந்தோசத்தைப் பாக்க வேணுமே. 

திங்கள் காலை எழுந்து வடிவா வெளிக்கிட்டு ஒன்பது மணிக்கு டாண்  என்று அங்க போய் நிண்டா அக்காவைக் காணவில்லை. தபாற்கந்தோர் இருட்டாய் இருக்கு. திடும் என்று ஒரு பதட்டம் மனதில் ஓட முன்னால் உள்ள கவுண்டரில் நின்றவனிடம் போய் போஸ்ட் ஒபிஸ் எத்தனை மணிக்குத் திறக்கும் என்று கேட்க, ஒன்பதுக்குத் திறக்க வேண்டும். ஆனால் அந்த மேடம் வர லேற் என்கிறான் அவன். என்னடா இது முதல் நாளே இப்பிடியாக் கிடக்கு என்று யோசித்தபடி நிக்க ஒரு ஐந்து நிமிடத்தின் பின் அக்கா ஓட்டமும் நடையுமாக  வாறா. சொறி சரியான ட்ராபிக் என்றபடி கதவைத் திறந்து அதில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்  அலுவலைப் பார்க்கிறா. அதற்குள் அங்கு வரிசையாக ஆட்கள். கதவைத் திறந்து இப்ப சனி வந்திடுவார். அதுக்குப் பிறகுதான் உங்களை உள்ளுக்குள் கூப்பிடலாம் என்று கூறிவிட்டுப் போகிறா. ஏழரைச் சனி, பொங்குசனி எல்லாம் முடிஞ்சு போட்டுதே. இப்ப எந்தச் சனியோ என்று நான் கண்டதையும் எண்ணிக்கொண்டு வேறுவழியின்றிக் காவலிருக்க அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த சனி ஹாய் அக்கா, எப்படி இருக்கிறாய்? என்றபடி வந்து கை குலுக்கியவன் சிங்கின் மகன் சனி என்பதில் மனம் நின்மதியானது. ............

 

 

வரும்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த, கருத்தும் பதிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

8 hours ago, ஈழப்பிரியன் said:

உந்தப் போஸ்ட் ஒவ்பீஸ் கதை முன்னமும் எங்கேயே கேட்ட ஞாபகம்.சரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சந்தைக்கு இல்லை யாழுக்கு

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

நான் எழுதுத முதல் ஆரப்பா கதை சொன்னது?????

45 minutes ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

அதானே

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

6 hours ago, suvy said:

எதோ லண்டனில் ஒரு போஸ்ட் ஒவ்விஸ்தான் இருக்கிற மாதிரி சொல்லுறிங்கள்...... அது வேற  இது வேற......!  tw_blush:

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

தொடருங்கோ ...வா சிக்கும் ஆவலுடன் 

தொடருமக்கா

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

 

13 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

 

அட இதில ஒன்றிரண்டு வரி வருது மறந்திடேன் .

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே என்ன கிருபன் எங்கேயோ கேட்ட குரல்

இல்ல இந்த போஸ்ட் ஆப்பிஸ் கண்பியூஸ் தான் பாஸ் எனக்கும் அடிக்கடி சுழலுதுதா அதான் கொஞ்சம் தலை சுத்துது  spointing-left-100-103.gif

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதேதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :35_thinking:

14 hours ago, கிருபன் said:

எனக்கும் முந்திக் கேட்ட மாதிரித்தான் இருக்கு!

 

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையைத் தொடர்ந்து வாசிச்சால் சுத்தாத்து ராசா

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

 

49 minutes ago, குமாரசாமி said:

உதாலைதான் நான் இந்தப்பக்கம் தலையை காட்டவேயில்லை....freu.gif

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் வரட்டும் வாசித்துத்தான் பார்ப்போமே 

எதுக்கும் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் :grin: மண்டையில் கல் எறி விழும் சில வேளை நான்  இல்லை அக்காதான் எறியும் :104_point_left:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 எதுக்கும் அஞ்சா நெஞ்சன் இந்த குமாரசாமி :cool:

funny images of indian police à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐய பாடி ரொம்ப வீக்கு ஒரு ஓரமா போகவும் ப்பீளிஸ்:grin::):)

?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுக்கு கல்லை எறியவே தேவையில்லை. கையில தூக்கினாலே போயிடும் போல இருக்கு 

இதை அந்த மனுசன் காது பட சொல்ல வேண்டும் வருத்தப்படுவார் சிங்கன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனைப் பார்த்த உடனேயே அவன் பிரச்சனை காரன் இல்லை என்று என் மனம் சொல்ல அவனோடு இலகுவாகக் கதைக்க முடிந்தது.போஸ்ட் ஆபீஸ்  வேலை தெரியுமா என்று அவன் கேட்க, இரண்டு வாரத்தில் பிடித்துவிடுவேன் என்ற என்னை எடுப்பதா வேண்டாமா என்பதுபோல் அவனுக்கு ஒரு தயக்கம் முகத்தில் தெரிந்தது. அவன் இல்லை என்று சொன்னாலும் என்ற பயத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னர் கொஞ்சம் பழகினானான் என்று சொல்ல, நீ கவலைப்படாதே ஒரு வாரத்திலேயே நான் அவாவுக்குப் பழக்கிப்போடுவன் என்று அக்கா சொல்ல எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது.

அன்றே வேலை பழக ஆரம்பிச்சாச்சு. தபாற்கந்தோர் புதிது என்பதும் நல்ல வசதியாகக் கட்டி இருந்ததும் பார்க்க ஆசையாக இருக்க, எனக்கே ஒரு வாரத்தில் எப்பிடியும் பழக்க வேணும் என்ற வைராக்கியம் வந்து எட்டு மணித்தியாலங்கள் ஐந்து நாட்களும் பழகி அக்காவின் வாயால் பாராட்டும் வாங்கியாச்சு. நீங்கள் அடிப்படை விடயங்கள் எல்லாம் பழகிவிட்டியள். ஒரேயடியா யாராலும் பழக்க ஏலாது. நீங்கள் கெட்டிக்காரி. நான் கொஞ்ச சம் கொஞ்சமா உமக்குப் பழக்கிப் போடுவன் என்று சொன்ன அக்கா ஒரு பெரிய குண்டையும் தூக்கிப் போட்டா. இன்னும் இரண்டு வாரங்களில் நான் சிறிலங்கா போறன். நீங்கள் தனியாத்தான் செய்ய வேணும் எண்டதும் எனக்குத் தலை சுத்த வெளிக்கிட்டித்து. ஐயோ அக்கா என்ன சொல்லுறியள் என்று நான் கேட்க,சனியும் உங்களோட நிப்பான். அதனால பயம் இல்லை. என்று அக்கா கூறினாலும் முதலாளியோட எப்பிடி நிண்டு வேலை செய்யிறது .... அதிலும் வரும் இரண்டு கிழமையிலும் எவ்வளவு வேலை பழக்க முடியுதோ அவ்வளவும் பழகி முடிக்கவேணும் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டு ஓரளவுக்கு எல்லாம் பழகியாச்சு.

எங்கு நான் போவதானாலும் வெள்ளணவே போய்விடுவேன். இப்போதும் அப்பிடித்தான். என் வீட்டிலிருந்து பத்து நிமிடக் கார் ஓட்டம். ஒன்பதுக்கு வேலை தொடங்கும். நான் போய் கதவு திறந்து அலாமை நிப்பாட்டிப்போட்டு அயன்சேவை  திறப்பதற்கான அழுத்தியை அழுத்திவிட்டு ஐந்து நிமிடம் காத்திருக்க அது திறக்கும். அதன்பின் ஸ்கிரீனை உயிர்ப்பித்து user name, pass word போட்டுத் திறந்து பணப்பெட்டி, முத்திரைகள்,  சில்லறைகள், சீல் எல்லாம் எடுத்து ஒழுங்கு செய்து போட்டு நிமிர்ந்தால் பென்ஷன் எடுக்க வாற கிழடுகள் கொஞ்சம் வரிசையில நிக்குதுகள். நல்ல காலம் சனி தூரஇருந்து வருவதால் இன்னும் வரவில்லை என்பதே பெரிய நின்மதியாக இருக்க, ஒரு அரை மணிநேரம் எந்த இடையூறும் இல்லாமல் தனியா வேலை செய்த பெருமிதம் என் மனதில். அடுத்தநிமிடமே என்ன அக்கா எல்லாம் ஓகேயா என்றபடி சனி அறையுள்  வர என்னை அறியாமலே ஒரு பதட்டம் வந்து சூழ்கிறது. என்றாலும் நான் அதை வெளியே காட்டாது அவன் பார்வை என் முதுகில் குத்த நின்று வேலை செய்கிறேன். அவனும் என்ன எண்ணினானோ" அக்கா நான் முன்னேயுள்ள கவுண்டரில் நிக்கிறேன். ஏதும் பிரச்சனை என்றால் கூப்பிடு என்று கூறிவிட்டுச் செல்ல எனக்கோ சரியான சந்தோசம்.

ஒரு சிறிய சூப்பர் மாக்கற்றுக்குள் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் என்றபடியால் அப்பப்ப ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். முதல் நாள் ஒரு பத்துத் தடவைகள் சனி சனி என்று கூப்பிட்டு, இரண்டாம் நாள்  ஏழு எட்டுத்தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு மூன்றாம் நாள் மூன்று தடவைகள் மாத்திரம் கூப்பிட்டு, வார இறுதியில் அவனை ஒரு தடவை கூடக் கூப்பிடாது திடமானபின் அடுத்து வந்த இரு வாரங்களும் நான் தனியாகவே வேலை செய்யுமளவு வந்திட்டன். மூன்று வாரங்கள் விடுமுறையில் சென்ற அக்கா திரும்பி வந்து கணக்குவழக்கெல்லாம் பார்த்து எந்தப் பிழையும் இல்லை கெட்டிக்காறி  என்று பாராட்டிய பாரராட்டில எனக்கு நானே தலையில கிரீடம் வைக்காத குறை.

அதுக்குப் பிறகு அக்கா  எனக்குத் தனியான  ஸ்டொக் யுனிட் எல்லாம் தயார்படுத்தி வெளியில உள்ள கவுண்டருக்கு என்னை அனுப்பியாச்சு. அக்கா உள்ள - கண்ணாடி அறையுக்குள்ள. நான் வெளியே திறந்த கவுண்டரில. ஆனாலும் தபால்களை, பொதிகளை வாங்குவது எனக்கு இலகுவாக இருக்க என் கவுண்டர் எனக்காகவே செய்ததுபோல் என் உயரத்துக்கும் பொருந்திப்போக,இனி பென்ஷன் எடுக்கும் வரையும் இது தான் என் வேலை என்று என் மனம் ஆசையாக நினைத்துக்கொண்டது.

அக்கா என்னைப்போல் உயரம் இல்லாவிட்டாலும் நல்ல முகலட்ஷணமாத்தான் இருப்பா. சாதாரணமாகக் கதைக்கும்போது  கூடக்  கொஞ்சிப்பேசுவதுபோல் இருக்கும். என்னிலும் மூன்று வயதுதான்  கூட. ஆனாலும் அவாவை பெயர் சொல்லிக் கூப்பிட என்னால் முடியவில்லை. அக்கா என்றே நானும் கூப்பிட்டுப் பழகிவிட்டுது. நான் வேலைக்குப் போன புதுசு என்பதால் நான் வேலை மட்டும் தான் செய்வன். அல்லது  சும்மா கடைக்குள் வந்து போகும் வாடிக்கையாளர்களை புதினம் பார்த்துக்கொண்டு இருப்பன்.எமது தபாற் கந்தோரில் காலையிலும் பூட்டும் நேரமும் தான் சனம் வரிசையில் நிற்கும். மற்றப்படி ஒன்று இரண்டு பேர்வந்து போய்க்கொண்டு இருப்பர்.  அக்கா என்னைக்கூப்பிட நான் உள்ள போய் மற்றக்கதிரையில் இருந்து ஒரு ஒன்றரை மாதத்தின் பின்தான் கதைக்க ஆரம்பித்தது.

அக்காவுடன் கதைத்தபின் தான் அவர் ஊர் குடும்ப விபரம் தெரியவந்தது. அவரின் இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் 24 வயது டென்டிஸ்ற்  என்றும் இரண்டாமவர் 22 வயது ஒப்ரோமெட்ரி என்றும் சொன்னபோது  இரண்டாவது வேலை என்ன என்று எனக்கு விளங்காமல் அது என்ன வேலை என்று கேட்டேன். அவ கிட்டத்தட்ட கண் டொக்டர் போல தான். நல்ல சம்பளம் நிவேதா. மூண்டே மூண்டு நாள் தான் வேலை. வருஷம் நாற்பத்தெட்டாயிரம் சம்பளம். இரண்டுபேரும் நல்லா உழைக்கினம். கலியாணம்கட்டி ஒவ்வொருத்தருக்கும் இரண்டு பிள்ளைகளும் நல்ல சிறப்பா இருக்கினம்  என்று கூற, இருபத்தி நாலாகியும் என் மகள் இன்னும் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறாளே என்னும் ஆதங்கம் மனதில் எழுந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கணவர் கேட்க அவரிடம் அக்கா பற்றிய விபரங்களை சொல்ல, அவர்களை தனக்குத் தெரியும் என்கிறார் என் கணவர். நாம் கடை நடத்தியபோது ஒரு அரைமைல் தள்ளி இருந்த கடை இவர்களது கடை என்றும், கடை நடத்த முடியாமல் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டுப் போனவர்கள் இவர்கள் தான் என்றும் என் கணவர் கூற நீங்கள் வேறு யாரையோ சொல்லுறியள் போல என்று நான் மறுக்க, எங்கள் கடையில் வேலை செய்த ஒருவர் இவர்களுக்குச் சொந்தக்காரர் என்றும் அவர் இவர்களைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார் என்றும் கணவர் சொன்னபோது அதற்குமேல் மறு க்கவில்லை நான்.

வரும் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கம் 3

 

வேலை தொடங்கி மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. கெட்டிக்காரி கெட்டிக்காரி எண்ட  அக்காவின் வார்த்தை கேட்டு எனக்கே புளிச்சுப்போச்சு. ஒவ்வொருநாளும் வேலை முடிய காசுக்கணக்குப் பார்த்து ஸிஸ்டத்தில் கிளீயர்  செய்துவிட்டுப் போனால் அடுத்தநாள் காலையில் புதிதாகத் தொடங்கும் கணக்கு. அதில் பல பிரிவுகள் இருந்தாலும் முன்பக்க ஸ்கிரீன்  Front Office என்றும் ,மற்றையது Back Office என்றும் இருக்கும்.  எமக்கான வேலைகள் அனைத்தும்  முன்பக்க ஸ்கிரீனின் ஊடாகவே நடைபெறும். கணக்கு வழக்குப் பார்ப்பது, ஏதாவது தவறாகச் செய்தால் திருத்துவது இன்னும் பலவும்  Back Office  ஊடாகச் சென்றே செய்யமுடியும். எனக்கு அதை உடனே அக்கா சொல்லித்தரவில்லை. கொஞ்ச  நாட்கள் போகட்டும் என்று இழுத்தடிதத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு வார முடிவிலும் எனக்கு முன்னால் நின்று Balancing செய்வதாகக்கூறி கடகட என்று எல்லாவற்றையும் அழுத்துவார். எனக்கோ சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தது என்று கூறுவினமே அதுபோல் இருக்கும். ஆனால் என் கணக்கில் பணம்சரி என்று வருவதனால் நானும் எனக்குக் சொல்லித் தாருங்கள் என்று அக்காவைக் கரைச்சல்ப் படுத்துவதில்லை. மாதம் ஒருமுறை TP டிரேடிங் பீரியட் முழு பலன்ஸ் வரும். அதை நான் இல்லாவிட்டாலும் அக்காவே செய்து கொள்ளுவார். ஏனெனில் அது மாத முதல் வாரத்தில் வரும் புதன் கிழமையே வரும்.நானோ புதனில் வேலை செய்வதில்லை.

முதல் நாள் செவ்வாய் என் கணக்கு எல்லாம் பார்த்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிய அக்கா புதன் கிழமை இரவு எனக்குப் போன் செய்து "சொறி நிவேதா உங்கள் கணக்கில் 199 பவுன்ஸ் சோட். நானுமோ எல்லாம் வடிவாத் தேடிப் பார்த்திட்டன். காசு சோட் தான்" என்றவுடன் எனக்கு நெஞ்சு பிசைய ஆரம்பிச்சிது. நேற்று எல்லாம் சரியாத்தானே அக்கா இருந்தது என்று நான் கேட்டதற்கு அது நீங்கள் ஏதும் பிழைகள் விட்டிருந்தால் உடனே காட்டாது. மாத முடிவிலதான் காட்டும். நீங்கள் மாறி ஆருக்கும் குடுத்திருப்பியள்
என்றார். ஐயோ அக்கா எனக்குவேலைக்கு வர பயமாக கிடக்கு என்றேன் நான். அதுக்கெல்லாம் பயந்து வேலையை விடுறதோ ?? நீங்கள் இனிக்க கவனமா இருங்கோ. கொஞ்சம் கொஞ்சமா கட்டுங்கோ என்றுவிட்டு வைத்துவிட, பக்கத்தில கேட்டுக்கொண்டு இருந்த மனிசன் நான் வேலையை விட்டாலும்  என்ற பயத்திலோ என்னவோ சிலவேளை நீ மாறிக் குடுத்திருப்பாய். எதுக்கும் நான் நாளை காசைத் தாறன். கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்திடு என்று சொல்ல, என்னடா திட்டப்போகிறார் என்று நினைக்க மனிசன் காசைத் தந்து விடுறாரே என்று ஆச்சரியப்பட்டபடி காசைக் கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்தன்.   

அதுக்குப் பிறகு ஒரு மாதம் கணக்கு எல்லாம் மைனஸ் இல்லாமலிருக்க, வேலை செய்யும்போது மிக அவதானமாக வேலை செய்ய ஆரம்பிச்சன். ஒருநாள் கணக்கு முடிக்கும்போது 89 பவுண்ஸ் அதிகமாக இருக்க, அக்கா எதோ பிழை விட்டிட்டன் போல. இவ்வளவு காசு எப்பிடிக் கூட வரும் என்று கேட்க, ஒருநாள் கூட வந்தால் அடுத்தநாள் கணக்கு சரியாய்  இருக்கும் நிவேதா. நீங்கள் கவலைப் படாமல் போங்கோ என்று அக்கா கூற, வீட்டுக்குப் போனாலும் எப்பிடி அவ்வளவு காசு ஓவராய் இருக்கு?? ஆரின் பணத்தைத் தவறாகக் குடுத்தேன் என்று இரவு எவ்வளவுதான் யோசித்தும் விளங்கவே இல்லை. அடுத்தநாள் காலை அக்காவிடம் "எப்பிடி அக்கா  இவ்வளவு காசைச் சனம் வாங்காமல் போனது" என்று கேட்க நீங்கள் சிலவேளை காசைப் பிழை யாய் எண்ணி இருப்பீர்கள். இன்று கனக்குப் பாருங்கோ சரியாக இருக்கும் என்றதும் மேலும் மனத்தைக் குழப்பாமல் வேலை செய்ய, வேலை முடிவில் பணமும் சரியாக இருக்க என்னடா இது நான் தான் காசைப் பிழையாக எண்ணி வைத்துவிட்டேனோ என்ற குழப்பம் வந்தாலும், அடுத்து சனி ஞாயிறு வந்ததால் அதை மறந்து வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த வார முடிவிலும் கணக்கு ஓகே. மாத முடிவில் பார்த்தால் மீண்டும் 125 பவுன்ஸ் காசு லொஸ்ற்.

எனக்கு இந்த வேலை வேண்டாம் அக்கா. நீங்கள் வேறு யாரையும் பாருங்கள் என்று நான் கூற, எவ்வளவு கஷ்டப்பட்டு நான் உங்களை பழக்கி வச்சிருக்கிறன். நீங்கள் துணிவான  பெண் என்று பார்த்தால் இப்பிடி வேலையை விடப்போறன் எண்டுறியள் என்று உசுப்பேற்ற, வேறு வழியின்றி சரி இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்பம் என்று மனத்தைத் திடப்படுத்தியபடி வீட்டுக்கு வந்து மனிசனிடம் சொல்ல, மனிசன் இம்முறை பணம் தந்து உடனே கட்டு என்று கூறாமல் உன் சம்பளத்தில் ஒவ்வொரு வாரமும் தருவதாகக் கூறிக் கொஞ்சம்கொஞ்சமாக கட்டு என்று சொல்ல, நானும் அக்காவிடம் அப்பிடியே சொன்னன். அக்காவும் பரவாயில்லை நிவேதா நான் கொப்பியில எழுதி வைக்கிறன். கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடியுங்கோ என்றுகூற வேலையும் தொடர்ந்தது. இடையில் இரு இருப்பது பவுன்ஸ், அறுபது பவுன்ஸ் என்று மைனஸ் வர அதுவும் என் கணக்கில் ஏற என் மனமோ வேலையை விடுவதா இல்லையா என்று ஊசலாடியபடி தொடர்ந்தது.

சனங்கள் வந்தால் ஒன்றாகக் காலையில் வருவார்கள், மதியம் உணவு நேரம் வருவார்கள், பள்ளி விட்டதும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவார்கள், மாலையில் ஐந்து தொடக்கம் ஐந்தரை வரை வரிசையில் நிண்டு உயிரை வாங்குவார்கள். இடையில் அக்கா உள் அறையில் யூ டுயூப்பில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பா, பிள்ளைகள், தங்கைகளுடன் போனில் கதைத்துக்கொண்டிருப்பா, அல்லது என்னை உள்ளே கூப்பிட்டு வைத்து கணவர் செய்யும் வேலை பற்றி பிள்ளைகள் செய்யும் வேலைப்பற்றி முன்னர் சொன்னதை மறந்து அல்லது எனக்கு நினைவில் இருக்காது என்று எண்ணி மாற்றிச் சொல்லிப் புழுகிக்கொண்டு இருப்பா. நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தலை ஆட்டியபடி இருப்பன். ஆனாலும் உள்ள ஒரு குரல் கேட்கும் "என்ன நீ இயல்புக்கு மீறி நல்ல பிள்ளைபோல் எல்லாத்தையும் கேட்டுத் தலையாட்டுறியே. எதிர்க்கேள்வி கேளன்" என்று . ஆனாலும் நான் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டே இருப்பன். ஏனெண்டால் வேலைத்தளத்தில் முதலாளி நிற்பதில்லை. அக்காவைத் தவிரக் கேள்வி கேட்க வேறை யாருமில்லை. கன  தூரம் கார் ஓடத் தேவையில்லை. இப்பிடியான வசதிகளால் அக்காவை சகிச்சுக் போகப் பழகினாலும்  சில நேரம் நிவேதா இங்க வாங்கோ, இந்தப் பாட்டைக் கேளுங்கோ, எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ என்பா. முதல் நாள் எனக்குப் பாட்டைக்  கேட்ட உடனே அக்கா பாடினது தான் என்று விளங்கினாலும் விளங்காததுபோல் "ஆரக்கா பாடினது. சுருதி சேர்ந்து பாடினால் நல்லாய் இருக்கும்" என்றன். நேர எல்லாரும் நல்லாய் இருக்கு என்று சொன்னவை. நான் தான் பாடினது. உங்களுக்கு ரெக்கோட் பண்ணினதில கேட்டதால அப்பிடி இருக்கு என்றா. எங்க பாடினாலும் பாட்டு சுருதியோட பாடினால் நல்லாத்தானிருக்கும் என்று சொல்ல நினைத்தும் சொல்லவில்லை.  

 

வரும்   

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

இப்பிடியே அக்காவின் பொய், புளுகு, பாட்டு எல்லாம் கேட்டு அலுத்துப்போன ஒரு செவ்வாய்க்கிழமை வேலை முடிய என் கணக்கை முடித்து பலன்ஸிங் செய்ய என் கணக்கில் 580 பவுன்ஸ் ஓவர் காட்டுது. எனக்குப் பயத்தில என்ன செய்யிறது எண்டு விளங்கேல்லை. மைனஸ் எண்டால் நான் பிழை விட்டுட்டன் என்று சொல்லலாம். இது அதிகமாக காசு இருக்கு எண்டால் ..... ஐயோ அக்கா என்னக்கா இவ்வளவு காசு அதிகமா இருக்கு. என்ன என்று பாருங்கள் என்றேன். நீங்கள் பயப்பிட வேண்டாம் நிவேதா. மைனஸ் எண்டால் தான் பயம். இது நான் தான் முத்திரை எதையோ உங்களுக்கு மாறி போட்டுட்டன் போல இருக்கு. அதுதான் உங்களுக்கு இவ்வளவு காசு கூட இருக்கு என்று காட்டுது. நான் எதுக்கும் என் எக்கவுண்டுக்கு மாற்றுகிறன். கவலைப் படாதேங்கோ என்றுவிட்டு அன்றைய கணக்கை நேர்படுத்தித்தர,  என்னிடம் தந்திருக்கும் முத்திரைகள் எல்லாம் சரியாக இருப்பதாகத்தானே  அக்கா காட்டுது. பிறகு எப்படி நீங்கள் போட்டதைக் காட்டவில்லை என்றேன் நான். அது சிலவேளை  சிஸ்டம் காட்டாது. உங்களுக்கு என்ன. இப்ப எல்லாம் ஓகே தானே என்று கூற நானும் பேசாமல் போய்விட்டேன்.

ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் தம்பி தன் வங்கிக் கணக்கில் காசு போட வருவார். அன்றைக்குப் பார்த்து என்னிடம் வரவேண்டியவர் அடுத்தவரை விட்டுவிட்டு அக்காவின் கவுண்டர் பக்கம் போக எனக்கு என்னடா இது இந்தப் பொடியன் ஏன் என்னைத் தவிர்க்கிறார் என்று எண்ணியபடியே மற்ற வாடிக்கையாளர்களைப்  பார்த்துவிட்டு நிற்க, அக்கா என்னை தன் அறைக்கு வரும்படி கூப்பிட, நானும் கதைவைத் திறந்து உள்ளே செல்கிறேன். அந்தத் தமிழ்ப் பெடியன் அக்காவின் கவுண்டரில் நிக்கிறான். நான் அவனைப் பார்த்து சிரித்தபடி என்னக்கா என்கிறேன்.

"என்ன நிவேதா இப்பிடிப் பெரிய பிழை விட்டிருக்கிறியள். இவர் காசு போடத் தர நீங்கள் அவற்றை அக்கவுண்டில் இருந்து காசை எடுத்திருக்கிறியள்"  என்று கோபமாகக் கேட்க்கிறார். கஸ்டமர்களுக்கு முன் அது யாராய் இருந்தாலும் பண்பாகக் கதைக்க வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் அக்கா சின்னப் பிள்ளையை வெருட்டுமாப்போல் என்னைக் கேட்டவுடன் எனக்கு சுரீர் என்று கோபம் வந்தாலும் நான் பிழை விட்டதாகக் கூறியபடியால் "எப்ப அக்கா" என்றேன். போன கிழமை என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டது. "ஓமக்கா இவர் போன செவ்வாய் 290 பவுண்ட்ஸ் டிப்போசிட் செய்தவர். ஓ... எனக்கு இப்ப விலங்கிவிட்டுது. அந்த ஓவர் வந்த 580 பவுண்ட்ஸ் இவர் காசாகத்தான் இருக்கும். உங்களிடம் தானே அக்கா அந்தக் காசு இருக்கு. குடுங்கோ" என்றேன்.
அக்காவின் முகம் ஓடிக் கறுக்க "இவாவின் அக்கவுண்டில் அண்டைக்கு எதோ கூடக் கிடைத்ததுதான். எதுக்கும் நாங்கள் காமராவைச் சுத்திப் பார்த்துவிட்டுத்தான் தருவோம் என்றா". பொடியும் ஓமென்று தலையாட்ட, "அக்கா சனி ஆபீஸ் இல் தான் இருக்கிறான். நான் காமராவைச் செக் செய்துவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு அக்காவின் பதிலை எதிர்பார்க்காது முதலாளி சணி இருக்கும் அறைக்குள் நுழைந்து அவனிடம் நான் பிழைவிட்டுவிட்டேன் என்று விடயத்தைக் கூறினேன். பெடியனிடம் றிசீற்ரை  வாங்கி அதில் நேரத்தைப்  பார்த்துவிட்டு காமராவைப் பார்க்க டிப்போசிட் மேலேயும் விட்ரோ கீழேயும் இருக்க, நான் மாறி அழுத்திவிட்டிருந்தேன். அதனால்த்தான் எனது கணக்கில் 580 அதிகமாக வந்திருந்தது. நாம் காமராவைப் பார்த்தவுடன் அக்காவும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கண்டுபிடிச்சாச்சோ என்றா ஆங்கிலத்தில்.

நானும் உடனே "ஓமக்கா நான் தான் தவறுதலாக விட்ரோ அமத்திவிடடேன்" என்றேன். உடனே "அந்த ஓவர் வந்த பணம் எங்கே" ?என்று சணி  கேட்டான். உடனே நான் "அக்காதான் எல்லா ஓவரையும் தனக்கு மாற்றி எடுத்துவிட்டா" என்றேன். ஒரு அரை நிமிடம் யாரும் பேசாத அமைதி. அக்கா என்ன சாட்டைக் கூறலாம் என்று யோசித்துவிட்டு "நான் முத்திரைகளை மாறி நிவேதாவுக்கு மாற்றியதாக எண்ணி அதை மாற்றினேன்" என்று குரலில் தொய்வோடு கூற, நானோ கொடுப்புக்குள் வந்த சிரிப்பை அடக்கியபடி வெளியே வந்து அந்தப் பெடியனுக்கு மீண்டும் 580 பவுண்ட்ஸ்களை டிப்போசிட் செய்து றிசீற்ரையும் கொடுத்துவிட்டு மனதுள் மகிழ்வு பொங்க மிகுதி வேலைகளைத் தொடர்ந்தேன்.

 

வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 ரீச்சர்! எனக்கு சிலோன் தபால் கந்தோர் தெரியும். ஜேர்மன் தபால் கந்தோர் தெரியும். ஆனால் லண்டன் தபால் கந்தோர் தெரியவே தெரியாது ?

சரி சரி அதுக்காகக் கண்ணைக் கசக்க வேண்டாம் ?

17 hours ago, புங்கையூரன் said:

பார்....அல்லது தவறணை எண்டால்....கண்டு பிடிக்கிறது சுலபம்!

கள்ளுக் கொட்டில் எண்டால்....ஆரிட்டையும் கேட்டுத்தான் ....தேடித் பிடிக்க வேண்டும்!?

??

11 hours ago, MEERA said:

அக்காச்சி, எங்களுக்கு என்ன பென்சன் எடுக்கிற வயசா?

தபாற்கந்தோருக்கு போறம் முத்திரையை ஒட்டுறம் காட்டை தடவுறம் அவ்வளவுதான், அதுவும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்....

நீங்கள் யாருக்கும் பார்சல் - பரிசு அனுப்புவதில்லையா ????

10 hours ago, suvy said:

Image associée

அக்காவும் நீங்களும்.....!  tw_blush:

என் ஆசை உங்களுக்குத்தான் அண்ணா விளங்கியிருக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

 அக்கா எதோ பிரச்சினைக்குள்  உங்களை தள்ளி விடப்பார்க்கிறா..நல்ல  வேளை தப்பித்துவந்துவிடீர்கள்

 அனுபவ கதை பலருக்குப்பயன் படும் தொடருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.