Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே மிக உயரமானது.. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை. இன்று திறக்கப்படுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾ à®®à¯à®´à¯à®à¯à®

உலகிலேயே மிக உயரமானது.. குஜராத்தில் இன்று திறக்கப்படுகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை!

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார்.

இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இந்த நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

இதற்கான விழா ஏற்பாடுகள் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட்டு இருக்கிறது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்படுகிறது.

à®à®ªà¯à®ªà®à®¿ à®à®à¯à®à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯

கடந்த 2013 அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். இந்த நிலையில் இத்தனை வருட பணிகளுக்கு பிறகு இன்று இந்த சிலை திறக்கப்பட உள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் சிலை திறக்கப்படுகிறது.

இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. நர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கிய பணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளரால் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.

இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

இந்த சிலை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது இல்லை. உள்புறம் மட்டுமே இந்தியாவில் தயாரானது. வெளிப்புறம் 553 வெண்கல தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 10-15 நேனோ பேனல்கள் உள்ளது. இது சீனாவில் தயாரிக்கப்பட்டது. இது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் இதை உருவாக்கும் வசதி இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதை உருவாக்க 2389 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. தினமும் இதை பார்க்க 15,000 பேர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 500 பேர் வரை இந்த சிலையை பார்க்க முடியும்.

இந்த சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/pm-modi-unveil-sardar-vallabhbhai-patel-statue-today-gujarat-333164.html

###############  ############### ################ ################## ############### ################ ################# 

à®®à¯à®à®®à®¾à®© à®®à¯à®´à®¿à®ªà¯à®¯à®°à¯à®ªà¯à®ªà¯

படேல் சிலை: குஜராத்தில் ஒரு தமிழ்க் கொலை.. நீட் டிரான்ஸ்லேஷனை மிஞ்சிய கேவலமான மொழிபெயர்ப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திறக்கப்படவுள்ள பெரிய சிலையின் அருகே வைக்கப்பட்ட பலகையில் மிகவும் கேவலமாக தமிழை மொழிபெயர்த்துள்ளனர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். இதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

ஒற்றுமையை படேல் பறைசாற்றிய காரணத்தால் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் அவருக்கு மிகவும் உயரமான சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை 182 அடி உயரமாகும். இது உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையையும் பெறுகிறது.

பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி ஆகிய மொழிகளில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் மகா கேவலமாக உள்ளது. கூகுள் டிரான்ஸ்லேட்டில் மொழி பெயர்த்திருந்தால் கூட ஒற்றுமை சிலை என வந்திருக்கும்.

à®à®¾à®à¯à®à®¿à®°à®¤à¯

இத்தனை மோசமாக தமிழை கொலை செய்யும் வகையில் இதை மொழிபெயர்ப்பு செய்தது யார். எல்லாருக்கும் எல்லா மொழிகளும் தெரியாவிட்டாலும் கூட அந்த மொழி தெரிந்த ஒருவரிடம் கேட்டு மொழி பெயர்த்திருக்கலாமே. டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியா என மார்தட்டி கொள்ளும் இந்த அரசு மொழிபெயர்ப்புக்கு இணையத்தை பயன்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக மொழி பெயர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமர்சனங்கள் எழவே அந்த வார்த்தை மட்டும் பெயின்டால் அழிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த எழுத்துகள் தெளிவாக தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/bad-translation-tamil-patel-statue-333165.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 9 நாள் குழந்தையை கடித்துக் கொன்ற எலி?

1540956861-7253.jpg

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை எலி கடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை எலி, நாய் போன்ற விலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
சமீபத்தில் மும்பை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்த பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞனை எலி கடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதே போல் பீகாரில் தெரு நாய் ஒன்று  ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
பிகாரில் பூரன் நீலம் என்ற ஜோடியினருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்பு குழந்தை பிறந்துள்ளது. நீலம் தர்பங்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குழந்தை உடல்நிலை சரியில்லாததால்  ஐசியுவில் அட்மிட் செய்துள்ளனர்.
 
குழந்தையை பார்க்க சென்ற பெற்றோருக்கு பேரதிர்ச்சி. குழந்தை கை கால்களில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.
 
எலி கடித்ததால் தான் குழந்தை இறந்துவிட்டது என பெற்றோர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்துவிட்டதாக விளக்கமளித்துள்ளது.

http://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-baby-admitted-in-icu-dead-because-of-rat-bite-118103100007_1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

###############  ############### ################ ################## ############### ################ ################# 

à®®à¯à®à®®à®¾à®© à®®à¯à®´à®¿à®ªà¯à®¯à®°à¯à®ªà¯à®ªà¯

படேல் சிலை: குஜராத்தில் ஒரு தமிழ்க் கொலை.. நீட் டிரான்ஸ்லேஷனை மிஞ்சிய கேவலமான மொழிபெயர்ப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திறக்கப்படவுள்ள பெரிய சிலையின் அருகே வைக்கப்பட்ட பலகையில் மிகவும் கேவலமாக தமிழை மொழிபெயர்த்துள்ளனர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். இதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

ஒற்றுமையை படேல் பறைசாற்றிய காரணத்தால் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் அவருக்கு மிகவும் உயரமான சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை 182 அடி உயரமாகும். இது உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையையும் பெறுகிறது.

பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி ஆகிய மொழிகளில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் மகா கேவலமாக உள்ளது. கூகுள் டிரான்ஸ்லேட்டில் மொழி பெயர்த்திருந்தால் கூட ஒற்றுமை சிலை என வந்திருக்கும்.

à®à®¾à®à¯à®à®¿à®°à®¤à¯

இத்தனை மோசமாக தமிழை கொலை செய்யும் வகையில் இதை மொழிபெயர்ப்பு செய்தது யார். எல்லாருக்கும் எல்லா மொழிகளும் தெரியாவிட்டாலும் கூட அந்த மொழி தெரிந்த ஒருவரிடம் கேட்டு மொழி பெயர்த்திருக்கலாமே. டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியா என மார்தட்டி கொள்ளும் இந்த அரசு மொழிபெயர்ப்புக்கு இணையத்தை பயன்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக மொழி பெயர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமர்சனங்கள் எழவே அந்த வார்த்தை மட்டும் பெயின்டால் அழிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த எழுத்துகள் தெளிவாக தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/bad-translation-tamil-patel-statue-333165.html

3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Maruthankerny said:

à®®à¯à®à®®à®¾à®© à®®à¯à®´à®¿à®ªà¯à®¯à®°à¯à®ªà¯à®ªà¯

 "- ஸ்  டேட்டுக்கே  ஒப்பி யூனிட்டி" 
  அழிக்கப்  பட்ட, தமிழ் வசனம் இது தான்.
"அமெரிக்காவுக்கு, நிகரான... இந்தியா" ... அப்படி வருமா... தெரியாது.
நீங்கள்  தான், கூற  வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வல்லபாய் சிலையின் மர்மம்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

1541585812-6892.jpg

 சிலநாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி உலகின் மிக பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை திறந்து வைத்தார்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 
பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடிபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்விதம் கூறியிருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

http://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/another-grand-statue-in-india-118110700035_1.html

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 12:42 AM, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, text

அப்ப பழைய இரும்பை காய்ச்சி 
உருக்கி ஊத்திவிட்டு 
3000 கோடியை மாமி ரவிக்கைக்குள் அமுக்கிட்டாரா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

பட்டேலுக்கு... 3000 கோடியில் சிலை வைத்தால்...
ராமருக்கு... 6000 கோடியில் சிலை வைப்பது தான்... முறை.
பிரித்தானியா  கொடுத்த 9000 கோடியில் 3000 பட்டேலுக்கு, மிச்சம்  6000 ராமருக்கு.   
இப்ப காசு பிரச்சினை இல்லை.  எங்கை வைக்கிறது என்று இடம் தான் பிரச்சினையாய் இருக்கு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிதானியாவில் முழுக்கவும் இந்த பட்டேல் சமூகம்தானே ஆட்சி செய்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

DrYjJbbUwAAn_Qw.jpg

spende für india à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

வெள்ளைக்காரன்கள் தங்கடை சனத்திட்டை காசு தண்டி இந்திய ஏழைச்சனத்துக்கு உதவிசெய்ய.......கொழுப்பெடுத்த இந்திய அரசு மூவாயிரம் கோடியிலை சிலை கட்டுது.

அதுக்கை உலகத்திலையே பெரிய சிலையெண்டு தம்பட்டம் வேறை.......உலகமே பார்த்து சிரிக்குது.. tw_glasses:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஸ்டேட்காரனும் சிலை கோதாவில் இறங்கிட்டான் .. எடப்பாடியா றோமாட்டோ தொக்கா ? ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரே பாத்து சிரிக்குது...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி போட்டு  கஜானாவை காலி செய்யும் மாநில அரசுகள்...

1543063637-2092.jpg

வல்லபாய் பட்டேலின் சிலைதான் உலக்திலேயே உயரமான சிலையாக (182 மீட்டர் ) உள்ளது. இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை (  நிச்சயமாக வெளிநாட்டினரின் கண் இல்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது ) இப்போது பட்டேலின் சிலையை விட உயரமான சிலையை கட்டுவோம் என பல மாநில அரசுகள்  போட்டா போட்டி போட்டு கோதாவில் இறங்கியுள்ளனர்.

இந்தப்போட்டியில் இறங்கியுள்ளது நம் இந்திய ஒட்டுறவான மாநில அரசுகள் தான். குறிப்பாக அயோத்தியில் 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கவேண்டும் என உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கூரியிருந்தார்.

இந்நிலையில் மாஹாராஸ்டிர அரசும் வீரசிவாஜிக்கு மிகப் பெரியதாக சிலை அமைக்க வேண்டுமென்று கூறி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசும் காவிரி தாய்க்கு 125 உயரத்தில் சிலை அமைப்பதாக அறிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மாநில அரசுகள் மக்களின் நன்மைக்கும், மாநில வளர்ச்சிக்கும் திட்டம் தீட்டினால்தான் அது மிகப் பயனுடைதாக இருக்கும்.

மாறாக போட்டி போட்டுக் கொண்டு சிலைகள் கட்டி எழுப்புவதால் பெருமையை தவிர வேறு என்ன நன்மை விளையப்போகிறது..? என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்குப் போட்டியாக சிலையை கட்ட வேண்டும் என யாரும் குரலை உயர்த்தவில்லை : அப்படி எதுவும் எழாதவரை  மாநிலத்தின் அமைதிக்கு நல்லது.

http://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/state-governments-to-quit-competition-118112400047_1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.