Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

77 வயதிலும் வீட்டுத் தோட்டம் செய்து அசத்தும் மூதாட்டி விஜயலட்சுமி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்   காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 
வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.

தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.

இவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன.
77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உழைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.

ஆறுமுகம் விஜயலட்சுமி மன உறுதி தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

https://www.madawalaenews.com/2018/12/77.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனவலிமையும் உடல் வலிமையும் உள்ள தாய்.
போற்றிப புகழவேண்டிய தாய்.
பாராட்டுக்கள் அம்மா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரில் இருக்கும் வரையிலும் இதெல்லாம் சர்வசாதாரணம்.விவசாயிகளின் வாழ்க்கையில் வயோதிபம் என்ற சொல்லே இல்லை.
இப்ப கண்டறியாத கைத்தொலைபேசி வந்தாப்பிறகு எல்லாரும் செய்தியாளர் ஆகிட்டாங்கள்.

இனிமேல் கண்ணம்மா கக்கூசுக்கு போனார் எண்டு கொட்டை எழுத்திலை செய்தி வந்தாலும் வரும்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் உங்களுக்கு வேறு செய்தி கிடைக்கவில்லையா போட?? அந்தத் தோட்டமா அவருக்கு வாழ்வாதாரம்?? சின்னப்  பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல் இருக்கு. 

முன்னைய காலத்தில் 80 வயதிலும் அதிகாலையில் எழுந்து ஓடியாடி வேலை செய்வது சர்வசாதாரணம். இது அவர்களை சுகதேகியாக வாழ பெரிதும் உதவியது. கிணற்று நீரை அருந்தி, வெயிலில் நடந்து, மழையில் நனைந்து, தினமும் சமைத்து வீட்டு சாப்பாடு உண்டு, நடை நடையென நடந்து கோவில் திருவிழாக்கள் மற்றும் புத்தக வாசிப்பு என பொழுது போக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இக்காலத்திலோ பெரும்பாலானவர்கள் இரவிரவாக தொல்லைக்காட்சி தொடர்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும் மூழ்கி, தாமதமாக எழுந்து, வடிகட்டிய நீரை அருந்தி, குளிரூட்டியில் வைத்த / கடையில் வாங்கிய உணவுகளை பெரிதும் உண்டு, வெயிலும் மழையும் உடலில் கொஞ்சமும் படாமல் குடை பிடித்து, உந்துருளியில் வலம் வந்து 50 வயதின் பின்னர் பல்வேறு உடல் உபாதைகளினால் பீடிக்கப்பட்டு, ஆரோக்கியமான வாழ்வை தொலைத்து வாழ்கிறார்கள்.

குறிப்பாக பெண்கள் இளவயதிலிருந்து வெயிலில் சிறிது நேரமாவது நடப்பது பிற்காலத்தில் அவர்களின் எலும்பு தேய்வை குறைக்கும். இன்று பெருமளவு பெண்கள் 50 களின் பின்னர் எலும்பு தேய்வு, மூட்டு வியாதி போனற்றவற்றால் அவதிப்படுகிறார்கள்.

இந்தப் பின்னணியில், இந்த மூதாட்டியின் முயற்சி, அதுவொரு சிறு முயற்சியாக இருந்தாலும், இக்கால மக்களுக்கு அவசியமான ஒரு செய்தியை தருகிறது. இறக்கும்வரை ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த மூதாட்டியின் சுறுசுறுப்பு, கடின வேலை நல்ல பாடமாக இருக்கும் என்பது எனது கருத்து.   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருக்கும் வரையிலும் இதெல்லாம் சர்வசாதாரணம்.விவசாயிகளின் வாழ்க்கையில் வயோதிபம் என்ற சொல்லே இல்லை.
இப்ப கண்டறியாத கைத்தொலைபேசி வந்தாப்பிறகு எல்லாரும் செய்தியாளர் ஆகிட்டாங்கள்.

இனிமேல் கண்ணம்மா கக்கூசுக்கு போனார் எண்டு கொட்டை எழுத்திலை செய்தி வந்தாலும் வரும்.tw_glasses:

ஜேர்மனி பக்கம் ஏதாவது தோட்டம் செய்றது சாமி அங்க லண்டன்ல வாழை தோட்டம் செய்யுறாங்கள் ஆப்பிள் தோட்டம் செய்யுறாங்கள் நீங்க ஒரு சொச்சி மரம் நட்டாவது பார்க்கப்படாத என்ன :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.