Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
woman_thinking.jpg?zoom=1.21000002622604
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
 இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் பொதுமக்கள் வேண்டுமென்றே இரண்டு அல்லது மூன்று வைத்திய நிபுணர்களால் பார்வையிடப்பட்டு (ஒவ்வொரு பார்வையிடலுக்கும் தனிக் கட்டணம், பரிசோதனைகளுக்கு புறம்பான கட்டணம்) இறுதியில் பெருந்தொகைக்கு அத்தனியார் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேதனையான விடயம் என்னவெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தத் தனியார் வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சிலரும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து அனுப்பப்படும் நோயாளர்களைக் கட்டணம் அறவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வியாபாரத்தில் இணைந்து செயல்படும் அனைத்து வைத்தியர்களும் மக்களது வரிப்பணத்தில் கல்வி கற்று மக்களுக்காகச் சேவையாற்றுவதாகக் கடமைச் சபதம் எடுத்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் பொது மக்கள் இவ்வாறான மருத்துவ நியதிக்கும் நீதிக்கும் மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதற்கு உடந்தையாகச் செயற்படும் பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகளுக்கும் எதிராக ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கையில் இறங்குவது குறித்துப் பிரதேச பொதுமக்கள்  சில அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் போரின் பின்னர் வாள்வெட்டுக் குழுககளின் அச்சுறுத்தல் கஞ்சா பாவனை நுண்கடன் என்ற கந்துவட்டிக் கொடுமை, இவற்றோடு இன்று மருத்துவ வியாபாரம் சேர்ந்துகொள்கின்றது. மேற்சொன்ன எல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் முடிவுக்கு கொண்டுவரலாம் ஆனால் மருத்துவ வியாபாரம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டால் வறுமைப்பட்ட மக்கள் மறைமுகமாக கொலைக்களத்துக்கு அன்றாடம் தள்ளப்படுவார்கள். இந்தியாவில் நடுத்தர குடும்பம் ஒன்றுக்கு ஏற்படும் மருத்துவச் செலவால் சொத்துக்களை இழந்து கடனாளியாகவும் ஆகின்றார்கள். மீள எழுவது பெரும்பாலானவர்களுக்கு சத்தியமற்றுப் போகின்றது. அதைவிட மோசமான நிலை எம்மவர்களுக்கு ஏற்படும். இன்றய இந்த ஆரம்பம் நாளை உயிரைவைத்து விழையாடும் சூதாட்டமாக வேகமாக மாறிவிடும். அறம் சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறையை கொண்டுவருவது பின்னர் சாத்தியமற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழின அழிப்பு செய்ய இயலுமோ
அத்தனை வழிமுறைகளையும் பாவித்து கட்சி பேதமின்றி
ஆட்சிக்கு வரும் சிங்கள தலைவர்கள் நன்கு திட்டமிட்டு
தமிழன அழிப்பைச் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உள்ள  தனியார் வைத்தியசாலைகளின் கிளைகள் பல இப்போது இலங்கையிலும் திறக்கிறார்கள்...கவலை தரக் கூடிய விடயம் 

நான் வெளி நாட்டில் இருந்து முதல் முதல் ஊருக்குப் போகும் போது என் அம்மா கூட கூட தனியார் வைத்தியசாலையில் காசு கொடுத்து மருந்து எடுக்க தொடங்கி இருந்தார்...எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை...கண்ட  பாட்டுக்கு மருந்து எடுத்து கெதியில செத்தும் போனார் 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழின அழிப்பு செய்ய இயலுமோ
அத்தனை வழிமுறைகளையும் பாவித்து கட்சி பேதமின்றி
ஆட்சிக்கு வரும் சிங்கள தலைவர்கள் நன்கு திட்டமிட்டு
தமிழன அழிப்பைச் செய்கிறார்கள்.

எல்லாப் பழிகளையும் சிங்களத்தின் தலையில் கட்டிப்போட்டு நாம் வசதியாக தப்பி விடலாம்.எம்மினம் விழங்கின மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, சண்டமாருதன் said:

அறம் சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறையை கொண்டுவருவது பின்னர் சாத்தியமற்றது. 

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

On 12/15/2018 at 7:32 PM, பிழம்பு said:

வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மிகக் கேவலமான படித்த பிச்சைக்காரர்கள் என்றால் அதில் வைத்தியர்கள் 90% ஆனவர்கள் அடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

ஊரிலையெல்லாம் காருக்கு பிழை வந்தால் பாட்சை களட்டி உரஞ்சி கிரஞ்சி கடைஞ்சு திருத்தி புதிசுமாதிரி ஆக்கிவிடுவினம்.பிறகு பழைய ஒயிலை விட்டு எஞ்சினை ஓட வைப்பினம்... இஞ்சை அப்பிடியில்லை....எது பிழையோ அதை களட்டி எறிஞ்சு போட்டு புதிசு போடுறதுதன் வழமை. இல்லையெண்டால் காரையே மாத்துவினம்.tw_glasses:

விளங்கினால் சரி...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம புலம் பெயர் எல்லாரின்  தேகம் உருபெற்றது அங்குள்ள மண்ணின் மூலமே நான் நினைக்கிறன் காரை திருத்த கொம்பணிக்கே அனுப்பிஎடுத்தல் முறை போல் உள்ளது குசா .

 

 

இங்குள்ளவர்களையும் சும்மா சொல்ல ஏலாது புதிய மருந்துகளின் பரிசோதனை களம் புலம்பெயர்கூட்டம் தானே .

On 12/15/2018 at 4:51 PM, குமாரசாமி said:

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

மறுப்பதற்கில்லை. ஆனால் ஏதோ ஒருவகையில்  சட்டம் ஒரு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. நேரடியாக மக்களிடம் இருந்து பணம் பறிப்பது வைதியர்களால் சாத்தியமற்று இருக்கின்றது. மேலும் பல்வேறுவிதமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவ செலவுக்கு உதவியாகவும் இருக்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை சட்டம் சிங்களப் பேரினவாதத்தின் கைகளில் உள்ளது. அது வாள்வெட்டுக் குழுக்களுக்கும் வைத்தியர்களுக்கும் சாதகமாகவே இருக்குமேயன்றி வறுமைப்பட்ட மக்களுக்காக ஒருபோதும் இருக்காது இதனால் மக்கள் மிக பாதிப்புக்க உள்ளாவார்கள். 

சாதாரணமாக 3 பிள்ளைகளுககு மேல் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5000 ருபாய் உதவித்தொகை என்ற திட்டமே எவ்வாறு அணுகப்படுகின்றது என்பதைப் பாருங்கள்

7 hours ago, பெருமாள் said:

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

ஏராளமான காரணங்கள் இருக்கின்றது என நம்புகின்றேன். நிறைய சூரிய ஒளி கிடைக்கின்றது. எல்லா நிலத்திலும் விளையும் உணவுகளில் ஒரே மாதிரியான சத்து இருப்பதில்லை. அதிக ரசாயனங்கள் பாவிப்பதும். மரபணு  மாற்றப்படுதலும் என ஏராளமான காரணங்கள் இருக்கின்றது. இயற்கையாக சத்துள்ள மண்ணில் தான் சத்துள்ள காய்கறிகள் விளையும். அந்தவகையில் தாய்மண் வளமானது. ஆனால் பணத்தின் மீதான பாய்ச்சலும் பொருளாதார நெருக்கடியும் தாய்மண்ணிலும் அதிகப்படியான ரசாயன உரப்பாவனையால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது. ஊரில் சிறு பிராயத்தில் நாட்டுமாட்டுப் பாலை பாவித்தேன்  எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை ஆனால் இங்கு பால் ஒத்துக்கொள்வதில்லை.  வீடுகளுக்குள் அடைபட்ட வாழ்வும் மன அழுத்தமும் என ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  புலம் பெயர் வாழ்வு சிஙகளப் பேரினவாத அடக்குமுறையில் இருந்து ஒரு பாதுகாப்பை தந்துள்ளது ஆனால் ஆரோக்கியம் மன நிம்மதி மகிழ்சி என்பன கேள்விக்குறியாகவே உள்ளது. ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைய முடியும் என்ற விதியில் பலதை இழந்துதான் இந்த புலம்பெயர் வாழ்வின் அமைப்பும் உள்ளது என நம்புகின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.