Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சரவை விபரம் – LIVE UPDATE

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை விபரம் – LIVE UPDATE

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு-

  ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

 மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம்

♦ ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சர்

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்! 

புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஆரம்பம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

அது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அமைச்சரவை விபரங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை 

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்விற்கு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு உறுப்பினர்கள் வருகைதந்துள்ளனர்.

தற்போது பதவிப்பிரமாண நிகழ்விற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை (3ஆம் இணைப்பு)

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதரவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமைச்சரவை பதவிப்பிரமாணத்திற்கு ஐ.தே.க. உறுப்பினர்கள் வருகை (2ஆம் இணைப்பு)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் 30 அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/இலங்கையின்-புதிய-அமைச்சர/

diga-720x450.jpg

ஆறுமுகன் வசமிருந்து அமைச்சுப் பொறுப்பை மீண்டும் கைப்பற்றினார் திகாம்பரம்

புதிய அரசாங்கத்தின் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக காணப்பட்ட அரசாங்கத்திலும் திகாம்பரத்திற்கு இந்த அமைச்சுப் பொறுப்பே வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உருவான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் இப்பதவி ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்பதவி திகாம்பரம் வசமாகியுள்ளது.

http://athavannews.com/ஆறுமுகன்-வசமிருந்து-அமைச/

mano-720x450.jpg

மனோவிற்கு இந்து விவகார அமைச்சுப் பொறுப்பு!

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சராக மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.

http://athavannews.com/மனோவிற்கு-இந்து-விவகார-அ/

Sajith-premadasa-640x400-720x450.png

வீடமைப்பு அமைச்சு மீண்டும் சஜித்திற்கு!

புதிய அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக காணப்பட்ட அரசாங்கத்திலும் சஜித் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வீடமைப்பு-அமைச்சு-மீண்டு/

hakeem-720x450.jpg

உயர் கல்வி அமைச்சராக ஹக்கீம்!

புதிய அரசாங்கத்தின் உயர் கல்வி மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

http://athavannews.com/உயர்-கல்வி-அமைச்சராக-ஹக்/

Rajitha-Senarathne-720x450.jpg

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித!

புதிய அமைச்சரவையில் ராஜித சேனாரத்னவிற்கு மீண்டும் சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவிவகித்த ராஜிதவை மீண்டும் அப்பதவிக்கு நியமிக்க வேண்டாமென ஜனாதிபதிக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது. எனினும், அவருக்கும் மீண்டும் சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சுகாதார-அமைச்சராக-மீண்டு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mangala-1-720x450.jpg

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சராக மங்கள!

புதிய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக காணப்பட்ட அரசாங்கத்திலும் மங்கள சமரவீரவே நிதியமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் நிதியமைச்சை ரவி கருணாநாயக்க கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு மீண்டும் மங்களவிற்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-அரசாங்கத்தின்-நிதி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ravi.Karunanayake.jpg

ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், குறித்த பதவிப்பரமாண நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, இரண்டு வருடங்களின் பின்னர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்புகளை பேணி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ரவி-கருணாநாயக்கவிற்கு-அ-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

VajiraFaizer-720x450.png

பைஸரின் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வஜிர வசம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், உள்விவகாரம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பொறுப்பு வஜிர அபேவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பைஸர் முஸ்தபா வசமிருந்த அமைச்சுப் பதவி புதிய அரசாங்கத்தில் வஜிரவின் வசமாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

http://athavannews.com/பைஸரின்-உள்ளூராட்சி-மன்ற/

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை விபரம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு-

ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

 மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம்

♦  ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியம்

♦  மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்துவிவகாரம்

♦ ரவுப் ஹக்கீம் – உயர் கல்வி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

♦  ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ விவகாரம் அமைச்சர்

♦  காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி

♦  லக்ஷ்மன் கிரியெல்ல – பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி

♦  திலக் மாரப்பன – வெளிநாட்டு அலுவல்கள்

ஹரின் பெர்னாண்டோ – தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

♦  ரவி கருணாநாயக்க – மின் சக்தி மற்றும் எரிசக்தி

♦  வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்

♦ தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

♦ அகிலவிராஜ் காரியவசம் – கல்வி

♦ சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

♦ ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு

♦ பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி

♦  நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை

♦  தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

♦  மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழிநுட்பம்

♦ பி.ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்

♦ கபீர் ஹாசிம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

♦ ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ

♦ கயந்த கருணாதிலக – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு

♦  அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

♦  பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி

♦  சந்திரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

♦  அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார

♦  சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி

 

http://athavannews.com/இலங்கையின்-புதிய-அமைச்சர/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, இந்து சமய கலாசார அமைச்சு யாருக்கு ? அப்படியொன்றே இல்லையா??

பெளத்தத்திற்கு இருக்கு, கிறீஸ்த்தவத்துக்கு இருக்கு, முஸ்லீமுக்கு எல்லா அமைச்சர்களுமே சேவையாற்றுவார்கள், அப்போ இந்துவுக்கு ?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

அப்போ, இந்து சமய கலாசார அமைச்சு யாருக்கு ? அப்படியொன்றே இல்லையா??

பெளத்தத்திற்கு இருக்கு, கிறீஸ்த்தவத்துக்கு இருக்கு, முஸ்லீமுக்கு எல்லா அமைச்சர்களுமே சேவையாற்றுவார்கள், அப்போ இந்துவுக்கு ?????

மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்துவிவகாரம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த "இந்து" என்கிற சொல் மாற்றம் செய்யப்பட்டு "தமிழர் சமய கலாச்சார" இப்படியான ஏதாவது ஒரு பெயரை முன்வக்க வேண்டும்.
"இந்து" என்றால் எனக்கென்னவோ இந்தியா என்கின்ற கண்றாவி தான் மனத்தில் வந்து தொலைகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கபீர் ஹாசிம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் 

எனக்கு தெரிந்த வரையில் இது "அட்சய பாத்திரம் - 1"

ஏனைய அட்சய பாத்திரங்கள் வரிசைபடி தமிழீழ சொந்தங்களுக்கு தெரியும் தானே ? சற்று விபரமாக அடியேனுக்கு ரெல் மீ .. 😝

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் 

இது அட்சய பாத்திர வரிசையில் 2 ஆவது வரக்கூடியது ..

22 hours ago, கிருபன் said:

நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை

இது மூன்றாவதாகும்

22 hours ago, கிருபன் said:

பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி 

இது அட்சய பாத்திர வரிசை நான்காவது

22 hours ago, கிருபன் said:

தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் 

இது ஐந்தாவது

 

22 hours ago, கிருபன் said:

ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் 

இது அட்சய பாத்திர வரிசை ஆறாவது ..

பொதுப்பணித்துறை என்று மொத்தமாக சுருட்டுவதிலும் பார்க்க சமமாக பிரித்து கொடுத்துள்ளார்கள் ..

மிகுதி அமைச்சுக்கள் 5 பைசா பெறாதவை . அவ்வளவாக 'உழைக்க இயலாது' என்றாலும் அமைச்சர் களின் திறனும் கணக்கில் கொள்ள வேண்டும் 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.