Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரை மீன் ரோஸ்ட் / Bake -நிழலி

Featured Replies

என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது

தேவையானவை:

பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்)
வெங்காயத்தூள் - Onion powder
மிளகுத் தூள்
உள்ளித் தூள் - Garlic powder
மஞ்சள் தூள்
சோழ மாவு
மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
உப்பு
ஒலிவ் ஒயில்
லெமன்

20181224_155320.jpg

சமைக்கும் முறை

1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும்.
2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும்
3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும்.
4. ஒன்றாக கலக்கிய பின் கலவை கொஞ்சம் தடிப்பாக வரும் வரைக்கும் தேவையான அளவு சோழ மாவை  இட்டு மீண்டும் கலக்கவும்
5. கலவையை மீன் மீது நன்றாக பூசவும். ஏற்கனவே கீறிய இடங்களினூடாக உள்ளே செல்லும் வண்ணம் கலவையை நன்கு பூச வேண்டும்.
6. கலவையை நன்கு பூசிய பின் அரை மணித்தியாலத்தில் இருந்து 1 மணித்தியாலம் வரைக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் (Freezer இல் அல்ல)

Bake செய்தல்:

7. ஒரு நல்ல அவனில் (Oven) வைக்க கூடிய Tray இல் வைத்து மீனின் மேல் புறம் முழுக்க சிறிதளவு ஒலிவ் ஒயில் தடவி பின் அதன் மேல் லெமன் சாறை பிளிந்து விடவும்.

8. அவனில் 350 பரனைட் வெப்பத்தில் ஒரு மணித்தியாலம் வரைக்கும் bake செய்யவும். இந்த நேர அளவு மீனின் அளவை / எடையை பொறுத்து மாறுபடும்.

இடையில் மீனை எடுத்து அடுத்த பக்கம் புரட்டி போடவும் (கவனமாக செய்தல் வேண்டும், இல்லாவிடின் மீன் பிய்ந்து விடும்)

9. நன்கு bake ஆனவுடன் 10 நிமிடங்களுக்கு Grill பண்ணவும் ( அனேகமான அவனில் Grill பண்ணும் வசதி இருக்கும்).

Grill பண்ணி முடிந்தவுடன் வெளியே எடுத்து சூடு சற்று ஆறிய பின் சாப்பிடலாம்

இன்று என் மதிய உணவு இந்த மீனும் அவித்த முட்டையும் மட்டும் தான். பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....நிழலி !

நாங்கள் அடிக்கடி செய்யும் உணவு வகை இது..!

முன்பெல்லாம் பாரை மீன் தான் உபயோகிப்போம்!

இப்போது ....கிங்க் பிஷ் ..அளவுக்கு முன்னேறி விடடோம்!😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்

தலையை நீக்கினால், இதில் ருசியும், இரசனையும் இல்லாமல் ஆகிவிடுமே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

Grill பண்ணி முடிந்தவுடன் வெளியே எடுத்து சூடு சற்று ஆறிய பின் சாப்பிடலாம்

இன்று என் மதிய உணவு இந்த மீனும் அவித்த முட்டையும் மட்டும் தான். பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டனர்

பார்வைக்கு அழகாக இருக்கிறது.செய்முறையும் சுலபமாக இருப்பதால் செய்து பார்க்கத் தான் இருக்கு.

அது சரி என்ன மீனுடன் முட்டையும்?

  • தொடங்கியவர்
19 hours ago, புங்கையூரன் said:

நன்றி....நிழலி !

நாங்கள் அடிக்கடி செய்யும் உணவு வகை இது..!

முன்பெல்லாம் பாரை மீன் தான் உபயோகிப்போம்!

இப்போது ....கிங்க் பிஷ் ..அளவுக்கு முன்னேறி விடடோம்!😁

முழு king fish (அறுக்குளா?) அளவில் பெரிசா இருக்குமே?

சிவப்பு விளையை இப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்குமென என் சகளை சொன்னார்.

15 hours ago, Kadancha said:

தலையை நீக்கினால், இதில் ருசியும், இரசனையும் இல்லாமல் ஆகிவிடுமே.

தலையை தனியாக வெட்டித்தான் வாங்கினனான். அடுத்த முறை தலையுடன் செய்து பார்க்க வேண்டும்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு அழகாக இருக்கிறது.செய்முறையும் சுலபமாக இருப்பதால் செய்து பார்க்கத் தான் இருக்கு.

அது சரி என்ன மீனுடன் முட்டையும்?

தயார் செய்ய பெரியளவு நேரம் எடுக்காது, ஆனால் bake பண்ணத்தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் எடுத்தது.

நான் லைட்டா ஒரு முட்டை பைத்தியம்..அத்துடன் வேறு ஒன்றும் மத்தியானத்து சாப்பிடவில்லை (சோறு கறி எதுவும் சாப்பிடவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

முழு king fish (அறுக்குளா?) அளவில் பெரிசா இருக்குமே?

சிவப்பு விளையை இப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்குமென என் சகளை சொன்னார்.

தலையை தனியாக வெட்டித்தான் வாங்கினனான். அடுத்த முறை தலையுடன் செய்து பார்க்க வேண்டும்.

தயார் செய்ய பெரியளவு நேரம் எடுக்காது, ஆனால் bake பண்ணத்தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் எடுத்தது.

நான் லைட்டா ஒரு முட்டை பைத்தியம்..அத்துடன் வேறு ஒன்றும் மத்தியானத்து சாப்பிடவில்லை (சோறு கறி எதுவும் சாப்பிடவில்லை)

ஆதிகாலத்தில் சுட்டுச் சாப்பிட்டவனை காட்டான் என்றான்கள் இப்ப சுட்டு சாப்பிட்டு பீலா விடுறாங்கள்  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆதிகாலத்தில் சுட்டுச் சாப்பிட்டவனை காட்டான் என்றான்கள் இப்ப சுட்டு சாப்பிட்டு பீலா விடுறாங்கள்  :grin:

இதை நான் சொன்னால் குதர்க்கம் பிடித்தவன் என்பீர்கள்......tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 9:49 PM, நிழலி said:

தேவையானவை:

-------
ஒலிவ் ஒயில்
லெமன்

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இதை நான் சொன்னால் குதர்க்கம் பிடித்தவன் என்பீர்கள்......tw_lol:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பேக் பண்ணுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் அவனை oven  வெறுமனே சூடாக்கி வைக்கவும். பின்பு  மீனை உள்ளே வைத்தால் விரைவில் பொரிந்து விடும்.........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

11 hours ago, தமிழ் சிறி said:

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

உஸ்
குருக்களின் குசு மணக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

கரி இல்லாட்டி எரிச்ச உமியாலை பல்லை தீட்டிப்பாருங்கோ.....பல்லும் வெள்ளையாய் இருக்கும்.அந்தமாதிரி ஆரோக்கியமாயும் இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

உஸ்
குருக்களின் குசு மணக்காது.

ஏன்.....குருக்கள் முடடை சாப்பிடாத படியாலா,?😂

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
 பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

ம்ம் அந்த மண்ணினால் பல் துலக்கி உப்புத்தண்ணியால் முகத்தை கழுவி தொழில் செய்ய செல்வோரை அதிகம் பார்க்கிறேன் இப்ப வரைக்கும் அண்ண 

18 hours ago, குமாரசாமி said:

கரி இல்லாட்டி எரிச்ச உமியாலை பல்லை தீட்டிப்பாருங்கோ.....பல்லும் வெள்ளையாய் இருக்கும்.அந்தமாதிரி ஆரோக்கியமாயும் இருக்கும். tw_blush:

ஓம் சாமி அண்ண செங்கள் சூளையில் செங்கல் பழுப்பு நிறமான பின் அதன் அடியில் உள்ள சாம்பல் அந்த மாதிரி அது போக அந்தக்கால பற்பொடி உமி சாம்பல் தானே , சேவல் கூவினாப்பிறகு அந்த வேப்பங்குச்சிய வாயில கவ்வி திரிஞ்ச காலமும் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

ஏன்.....குருக்கள் முடடை சாப்பிடாத படியாலா,?😂

யார் சொன்னது குருக்கள் முட்டை சாப்பிடமாட்டார்களென்று?
கருவில்லாத முட்டை மச்சமில்லை அது சைவம் என்கிறார்கள்.பிராமணரும் சாப்பிடுகினமாம்.

  • தொடங்கியவர்
On 12/26/2018 at 12:55 AM, தமிழ் சிறி said:

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

இந்த குறிப்பை எழுதும் போது Lemon இற்கு தமிழ் சாத்துக்குடி தேசிக்காய் சரியாக வருமா என யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் lime இற்கு தமிழ் தேசிக்காய், இந்த மஞ்சள் மளேர் என்று இருக்கும் lemon இற்கு என்ன தமிழ் என்று நினைவில் வரவில்லை. எனவே லெமன் என்றே எழுதினேன்

ஆனால் ஒலிவ் ஒயிலுக்கு தமிழ் சொல்லை தேட முற்படவேயில்லை. அதுக்கு சரியான தமிழ் சொல் இருக்குதா? இருந்தால் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இந்த குறிப்பை எழுதும் போது Lemon இற்கு தமிழ் சாத்துக்குடி தேசிக்காய் சரியாக வருமா என யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் lime இற்கு தமிழ் தேசிக்காய், இந்த மஞ்சள் மளேர் என்று இருக்கும் lemon இற்கு என்ன தமிழ் என்று நினைவில் வரவில்லை. எனவே லெமன் என்றே எழுதினேன்

ஆனால் ஒலிவ் ஒயிலுக்கு தமிழ் சொல்லை தேட முற்படவேயில்லை. அதுக்கு சரியான தமிழ் சொல் இருக்குதா? இருந்தால் சொல்லவும்.

நிழலி,  Lemon ஐ...   எலுமிச்சை  (எலும்பிச்சம்  பழம்) என்று தான்.. ஊரில்  சொல்வார்கள்.
ஒலிவ் மரம் நாட்டில் இல்லாததால்... அதற்கு ஆங்கில வார்த்தையையே நேரடியாக பாவிக்கலாம்.
ஆனால்... அதனை,  ஒலிவ் ஒயில் என்று சொல்லாமல், ஒலிவ் எண்ணை  என்று சொல்லியிருக்கலாம்.  regular.png

Bildergebnis für à®à®²à¯à®®à®¿à®à¯à®à¯  Bildergebnis für à®à®²à¯à®®à®¿à®à¯à®à¯

கன  நாள்.... மனதிற்குள் இருந்த கேள்வியையும்..  இந்தத் தலைப்பில் கேட்டு விடுகின்றேன்.
படத்தில் பச்சையாக இருப்பது எலுமிச்சை. மஞ்சளாக இருப்பது தேசிக்காய். 
இரண்டையும்... புளிப்பு சுவைக்குத்தான் பயன் படுத்துவார்கள்.

என்னைப்  பொறுத்தவரையில்... அதன் புளிப்பு சுவை, ஒரே மாதிரி என்று தான் நினைக்கின்றேன்.
அத்துடன்... மஞ்சளை  விட பச்சை  விலையும்  அதிகம்.
ஆனால்...  சமையலுக்கு, சிலர்  குறிப்பிட்ட பழத்தை மட்டும் தேர்ந்து எடுப்பது ஏன் என்று தெரியவில்லை.

யாருக்காவது... இதன் வித்தியாசம் தெரியுமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.