Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஏக்கிய இராச்சிய” என்பது குறித்து 100 தடவைகளுக்கு மேல் விளக்கிவிட்டேன்” - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
December 29, 2018

Sumanthiran-2.jpg?zoom=1.102499949932098
“ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச்  சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது  கருத்து வெளியிட்ட  அவர்,

“மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்கர்களும் தமிழிலா உரையாடினார்கள். அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர். அன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டார்கள்.

மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/108259/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிழம்பு said:

இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

100 தடவை நீங்கள் சொன்னாலும் 
உங்கள் ஆசிரியர் விக்னேஸ்வரன் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

DPJgR8WUEAE1wot.jpgஅன்னைக்கு காலைல ஒரு அஞ்சு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவிச்சா..?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

DPJgR8WUEAE1wot.jpgஅன்னைக்கு காலைல ஒரு அஞ்சு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவிச்சா..?

ஆமா....நானும் பொத்திக்கிட்டு.போர்த்திட்டு படுத்திட்டேனே....

3 hours ago, பிழம்பு said:

“ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"ஏக்கீய ராஜ்ஜிய"என்றால் அது ஒற்றை ஆட்சி தான் என்பதை பல சிங்களவர்கள் அடித்து சொல்லிவிட்டார்கள்.

உங்களுக்கு சந்தேகம் என்றால், கூகிளில்,
united meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் එක්සත් (எக்சத்) என்று வரும். அதாவது "ஐக்கிய" என்பது கருத்து.
unitary meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் ඒකීය (ஏக்கீய) என்று வரும். அதாவது "ஒற்றை" என்பது கருத்து.
federal meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் ෆෙඩරල් (பெடரல்) என்று வரும். அதாவது "சமஸ்டி" என்பது கருத்து.

இதன் பின்னரும் தமிழின ***** **** அரசியல்வாதிகளான சுமந்திரன் நூறு முறை சொன்னால், அல்லது சம்மந்தன் திக்கித்திக்கி மாதக் கணக்கில் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும் என்று சொல்லவல்ல கடைந்தெடுத்த முட்டாள்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

Edited by நிழலி
Abusive words removed

  • கருத்துக்கள உறவுகள்

 

14 hours ago, பிழம்பு said:

“ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன்.

அப்பிடின்னா இவர் 100 தடவைக்கு மேல சொறிலங்கா அரசிடம் / ரணிலிடம் இலஞ்சம் வாங்கிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

 சீன ஆட்சி மாதிரி இருக்கு

49183575_3068646896494636_20419168866224

On 12/29/2018 at 11:50 PM, போல் said:

"ஏக்கீய ராஜ்ஜிய"என்றால் அது ஒற்றை ஆட்சி தான் என்பதை பல சிங்களவர்கள் அடித்து சொல்லிவிட்டார்கள்.

உங்களுக்கு சந்தேகம் என்றால், கூகிளில்,
united meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் එක්සත් (எக்சத்) என்று வரும். அதாவது "ஐக்கிய" என்பது கருத்து.
unitary meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் ඒකීය (ஏக்கீய) என்று வரும். அதாவது "ஒற்றை" என்பது கருத்து.
federal meaning in sinhala என்று தேடிப்பாருங்கள் ෆෙඩරල් (பெடரல்) என்று வரும். அதாவது "சமஸ்டி" என்பது கருத்து.

இதன் பின்னரும் தமிழின ***** **** அரசியல்வாதிகளான சுமந்திரன் நூறு முறை சொன்னால், அல்லது சம்மந்தன் திக்கித்திக்கி மாதக் கணக்கில் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும் என்று சொல்லவல்ல கடைந்தெடுத்த முட்டாள்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சுமந்திரன் 100  அல்ல 1000 தரம் கூட சொல்லி சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றியே தீருவன் என்டு ஒற்றைக் காலில் நிக்கிறார்!

ரணிலோட அவ்வளவு ஒட்டு. அதான் அப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை இன்னமும்- நம்புகிறார் சம்பந்தன்!!

பதிவேற்றிய காலம்: Jan 1, 2019

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­றால் ஒரு­மித்த நாடு என்றே புதிய அர­ச­மைப்பு வரை­வுக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. இறுதி அர­ச­மைப்­பி­லும் அது அவ்­வாறே இடம்­பெ­றும் என்று நம்­பு­கின்­றோம்.தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம சிங்க எமக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன்.

‘அர­ச­மைப்­பில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல் மூன்று மொழி­க­ளி­லும் இருக்­கும். அதில் எந்­த­வொரு மாற்­ற­மும் செய்­யப்­ப­டாது. ஏக்­கிய ராஜ்­ஜி­ய­வுக்கு தமி­ழில் ஒரு­மித்த நாடு என்ற பதத்தை இணைக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போ­தி­லும் அது ஏற்­றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை’ என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரும் சபை முதல்­வ­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் கேட்­ட­போதே இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு நம்­பிக்கை தெரி­வித்­தார்.

“புதிய அர­ச­மைப்பு வரை­வுக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் இது தொடர்­பில் தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளது. ஏக்­கிய ராஜ்­ஜிய என்­றால் ஒற்­றை­யாட்சி என்ற குழப்­பம் இருந்­தது. ஆனால் இடைக்­கால அறிக்­கை­யில் ஒரு­மித்த நாடு என்று தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்­புக்­கான இறுதி வரை­வி­லும் அது­தான் வரும் என்று நம்­பு­கின்­றேன். இந்­தச் சொல் தொடர்­பில் சட்­டச் சிக்­கல் வந்­தா­லும், இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு ஒரு­மித்த நாடு என்ற சொல்லே மேலோங்­கும்.

இந்­தச் சொல்லை வைத்து தமிழ் மக்­க­ளி­லும், சிங்­கள மக்­க­ளி­லும் சில தனி நபர்­கள் சுய­லாப அர­சி­யல் செய்­கின்­றார்­கள். இந்­தச் சொல் நாட்­டின் மூன்று இன­மக்­க­ளின் அர­சி­யல் தீர்­வு­டன் சம்­பந்­தப்­பட்ட சொல். நல்­லி­ணக்­கத்­துக்கு மூல கார­ண­மாக அமை­யும் சொல்.

அப்­ப­டிப்­பட்ட முக்­கி­ய­மான சொல்லை வைத்­துக் கொண்டு சில்­ல­றைத்­த­ன­மான வேலை­க­ளில் ஈடு­ப­டக் கூடாது. இந்­தச் சில்­லறை வேலை­க­ளுக்கு சில சிங்­கள, தமிழ் ஊட­கங்­க­ளும் துணை­போ­வ­து­தான் கவ­லைக்­கு­ரி­யது.
இந்­தச் சொல்­லா­டல் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் இடம்­பெற்ற சந்­திப்­பில், ஏக்­கிய ராஜ்­ஜி­ய­வுக்கு ஒரு­மித்த நாடு என்ற சொல்­லா­டல் பயன்­ப­டுத்­தப்­ப­டும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்’’ – – என்­றார்.

 

https://newuthayan.com/story/08/ரணிலை-இன்னமும்-நம்புகிறார்-சம்பந்தன்.html

 

54 minutes ago, கிருபன் said:

இந்­தச் சொல் தொடர்­பில் சட்­டச் சிக்­கல் வந்­தா­லும், இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு ஒரு­மித்த நாடு என்ற சொல்லே மேலோங்­கும்.

இதைவிட மோசமாக யாராலும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.
சம்பந்தனை விட  மோசமான சில்லறை அரசியல்வாதியும் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2018 at 8:45 PM, பிழம்பு said:

நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன்

பாஷா பாய் .. தொழிலில் சலிப்பு வரப்படாது ..😎

baashha.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.