Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்…

January 2, 2019

sabjpg.jpg?zoom=3&resize=335%2C237

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த  50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று சென்ற போதும் அவர்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பியிருந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை இரு பெண்கள் அதிகாலை சபரிமலைக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள பகுதியினூடாக சென்று அவர்கள் வழிபட்டு விட்டு திரும்பியுள்ளனர். இதேவேளை சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்து சன்னிதானம் மூடப்பட்டுள்ளதுகோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/2019/108662/

 

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் பிந்து, கனகதுர்கா: ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் சென்றது எப்படி?

 
சபரிமலைபடத்தின் காப்புரிமை Getty Images

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் தரிசனம் செய்த நிலையில் கோயில் நடை சிறிது நேரம் சாத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.

இந்த இரு பெண்களும் கேரளாவை சேர்ந்தவர்கள். இந்த பெண்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்திருந்தனர். பாஜக ஆதரவு போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அப்போது இவர்கள் திருப்பியனுப்பட்டனர்.

பிந்துவின் வயது 40. கனகதுர்காவின் வயது 39.

இரு பெண்கள் சபரிமலைக்குள் சென்றதாக ஒளிபரப்பகும் காட்சி.படத்தின் காப்புரிமை Twitter

சமூக ஊடகங்களில், ஐயப்பன் கோயில் கருவறையை கருப்பு உடையணிந்த இருபெண்கள் சுற்றி வருவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்தக் காட்சிகள், பிந்து, கனகதுர்கா தரிசனம் செய்யச் சென்ற காட்சிகளா என்பதை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.

இந்த இரு பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

620 கி.மீ. நீள பெண்கள் சுவர்

சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக புத்தாண்டு தினத்தன்று 620 கி.மீ. நீள மனித சங்கிலியை நடத்தினர் கேரள பெண்கள்

கேரள அரசு ஏற்பாடு செய்த இந்த மனித சங்கிலி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நீண்டது.

அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலியை நடத்தினர்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த மனித சங்கிலியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெரிவித்தனர்.

இந்த பெண்கள் இயக்கம் நடந்த மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் சபரிமலை கோயில் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய பிந்து, தாங்கள் அதிகாலை 3.45 மணிக்கு ஐயப்பன் சிலை அருகே சென்று தரிசித்ததாக கூறி உள்ளனர்.

காலை 1.30 மணிக்கு கிளம்பிய அவர்கள் 6.1 கி.மீ நடந்து சென்றுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதனை உறுதிபடுத்தி உள்ளதாக கூறுகிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

அந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க விஜயன் உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறது ஏ.என்.ஐ-யின் அந்த ட்விட்.

இதற்கு மத்தியில் கோயில் நடை ஒரு மணி நேரம் சாத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குபின் மீண்டும் திறக்கப்பட்டது.

பிபிசி இந்தியிடம் பேசிய பிந்து, "நான் செயற்பாட்டாளர் மட்டும் அல்ல பக்தரும் கூட. நான் 1978ஆம் ஆண்டு பிறந்தேன். கனகதுர்கா பிறந்த ஆண்டு 1979."

"நான் சாஸ்தா பக்தர். கனகதுர்கா சுவாமி ஐயப்ப பக்தர். நாங்கள் இருவரும் நாடெங்கும் உள்ள பல கோயில்களுக்கு சென்றுள்ளோம்" என்றார்.

வனிதாமதிலும் சபரிமலையும்

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தனர்.

தற்போது சபரிமலையில் பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று தரிசனம் செய்துள்ள நிலையில், இது குறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வியிடம் பேசினோம்.

வனிதாமதிலும் சபரிமலையும்படத்தின் காப்புரிமை Facebook Image caption வனிதாமதிலும் சபரிமலையும்

"அப்போது நாங்கள் ஒருங்கிணைத்திருந்த சபரிமலை செல்லும் நிகழ்வுக்கு பிந்துவும், கனகாவும் வருவதாக இருந்தது. ஆனால், காவல்துறை தடுத்ததால் அவர்களால் வர இயலாமல் போய்விட்டது." என்று பிபிசி தமிழின் செய்தியாளர் நியாஸ் அகமதுவிடம் தெரிவித்தார்.

"நாங்கள் எல்லோரும் கோட்டயத்தில் கூடி அங்கிருந்து சபரிமலைக்கு செல்வதாக திட்டம். ஆனால், போலீஸ் எங்களை நேரடியாக பம்பைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. கோட்டயத்தில் கூடிய பிந்து, கனகா மற்றும் அவர்களது குழுவை பம்பைக்கு அனுமதிக்காமல் அலைகழித்தது. அந்த சமயத்தில் பிந்துவின் வீடும் தாக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் அழுத்தம்

அப்போது மறுத்த போலீஸ் இப்போது பாதுகாப்பு தர என்ன காரணமென்று நீங்கள் கருதுகிறீர்கள் என்ற நம் கேள்விக்கு, "பெரு மக்கள் அழுத்தம்தான் காரணம்" என்கிறார்.

செல்வி

அவர், "பெரு மக்களின் விருப்பத்திற்கு எதிராக சென்றுவிடக்கூடாது என்றுதான் அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்பும். பெண்கள் சபரிமலைக்கு செல்வதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதுபோல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அந்த பிம்பம் நேற்று கட்டுடைக்கப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து 'வனிதா மதில்' என்ற தலைப்பில் மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள். இதன் தாக்கம்தான் போலீஸ் இப்போது பாதுகாப்பாக நிற்க காரணம்." என்கிறார்.

இனி இது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் போக்கிலும் தாக்கம் செலுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-46733438

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்கள் உண்மையிலேயே விசரிகள்...அங்கு பெண்களுக்கு தேவையான எத்தைனையோ விஷயங்கள் போராடும் தேவையில் இருக்கும் போது ,போயும்,போயும் சாமிக்காக போராடுதுகள்...அதுவும் இந்தியாவில் அதிகம் படித்த பெண்கள் உள்ள கேரளாவில்...சுத்தம் 😠

  • கருத்துக்கள உறவுகள்

அய்யப்பன் கோயிலுக்கு சசிகலா போனது உண்மைதான்... இந்தாங்க சிசிடிவி ஆதாரம், போலீசார் அதிரடி !

srilanka-women23434-1546589595.jpg

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இலங்கை பெண் சசிகலா சென்று சாமி கும்பிட்டது உண்மைதான் என்று கூறியுள்ள கேரள போலீசார், அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.நாடு முழுவதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவகாரங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலும் ஒன்றாகும்.

கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றும் தீவிர பக்தர்கள் அவர்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்.இருப்பினும், கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள காவல்துறை உதவியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இது அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.

இலங்கை பெண் சபரிமலை பயணம்

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் சபரிமலை சென்றதாகவும், 18 படிகள் ஏறி தரிசனம் முடித்த பின்னர் பம்பையில் உள்ள முகாமிற்கு அவர் பாதுகாப்பாக திரும்பி கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கோயிலினுள் செல்லவில்லை

அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் கோயிலுக்குள் தாம் செல்லவில்லை என்று அந்த பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். பம்பையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இதனை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் ஒரு பக்தை. 48 நாட்கள் விரதத்தை முடித்து, அய்யப்பனை தரிசிக்க சென்றேன்.

போலீசார் தடுத்துவிட்டனர்

ஆனால் என்னை செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். சாமி தரிசனம் செய்யக் கூடாது என்று என்னை தடுக்க இவர்கள் யார்? என்னுடைய கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது. அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் உள்ளது. ஆகையால் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முழு உரிமையும் எனக்கு இருக்கிறது என்றார்.

ஆதாரங்களை வெளியிட்ட போலீஸ்

சம்பவம் குறித்து அவரது கணவர் கூறுகையில், நாங்கள் மரக்கூட்டம் என்ற பகுதி வரை மட்டும் தான் செல்ல முடிந்தது. அதன் பின்னர் எங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் என்றார். ஆனால் இந்த சம்பவத்தை மறுத்துள்ள கேரள காவல்துறை, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை பெண் சசிகலா கோயிலுக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, சாமி தரிசனம் செய்ய தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்."

https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-police-released-cctv-visuals-sasikala-who-entered-into-sabarimala-temple-338119.html

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் பெண்கள் நுழைவது இதுதான் முதல்முறையா? உண்மை என்ன?

விக்னேஷ்.அ பிபிசி தமிழ்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைந்துள்ளதாக, கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவிப்பவர்களால் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

 

எனினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டின் அனுமதியுடனே, மாதவிடாய் உண்டாகும் வயதுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன..

இதற்கு அப்பெண்களிடம் நுழைவுக் கட்டணம் வாங்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அதை திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பிலேயே நீதிமன்றத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தபின், அங்கு பல பெண்கள் செல்ல முயற்சித்த பின்னரும் பலத்த எதிர்ப்பு, போதிய பாதுகாப்பின்மை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் அவர்கள் பாதியிலேயே திரும்பி வரவேண்டி இருந்தது.

ஜனவரி 2-ஆம் தேதியன்று அதிகாலை சுமார் 03:45 மணியளவில் காவல்துறை பாதுகாப்புடன் கோயிலை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் பதினெட்டாம் படி வழியாகச் செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்.

இந்த இரு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து கேரளா மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும், கோயில் நுழைவுக்கு எதிரான மற்றும் ஆதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மற்றும் ஆதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்திய போராட்டங்கள் அனைத்திலும் இதுவரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது முதல் முறை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில ஊடகங்களும் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவது இது வரலாற்றிலேயே முதல் முறை என்று செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மைதானா என்று ஆராய்ந்தது பிபிசி.

1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி வெளியான ஜன்மபூமி மலையாள நாளிதழில், தேவசம் போர்டின் ஆணையராக இருந்த சந்திரிகா என்பவரின் பேரக்குழந்தைக்கு முதல்முறை உணவூட்டும் நிகழ்வில், அக்குழந்தையின் தாயான சந்திரிகாவின் மகள் இருக்கும் படம் வெளியானது.

இதையடுத்து பெண்கள் நுழைய தாங்கள் ஆதரவளிக்கவில்லை என 2016இல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக எஸ் .மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். (S Mahendran vs The Secretary, Travancore Devaswom Board and Others - AIR 1993 Ker 42)

சபரிமலைபடத்தின் காப்புரிமை Getty Images

அந்த மனு உயர் நீதிமன்றத்தால், பொது நலன் வழக்காக மாற்றப்பட்டது. தேவசம் போர்டு மீது அந்த வழக்கில் அவர் சாட்டியிருந்த குற்றம், இளம் பெண்கள் சபரிமலை கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர் என்பதுதான்.

தாம் ஆணையர் பதவியில் இருந்தபோது அந்த நிகழ்வு நடந்ததை சந்திரிகாவும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவர் ஆணையர் பதவியில் இருந்தார் என்பதால் முறைகேடாக மாதவிடாய் வயதில் உள்ள பெண் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நாளில் பிற குழந்தைகளுக்கும் முதல் முறை உணவூட்டும் நிகழ்வு நடந்தது என்று அப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த சடங்குகள் நடத்த தேவசம் போர்டால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அனைவரிடமும் வசூலிக்கப்பட்டது.

பொதுமக்களின் உரிமை எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதால், இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரரின் உரிமையை தனது எதிர்மனுவில் கேள்வி எழுப்பிய தேவசம் போர்டு, அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியது..

அந்த வழக்கின் விசாரணையின்போது, திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமானப் பாத்திரத்தில், 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் குழந்தைகளுக்கு முதல் முறை உணவூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள சபரிமலை கோயிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கான கட்டணங்களுக்கு தேவசம் போர்டு தரப்பில் ரசீதும் வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், சில அரிதான நேரங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவது தெரிய வருகிறது என அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.

சபரிமலைபடத்தின் காப்புரிமை A S SATHEESH Image caption காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலையில் வழிபடும் திருநங்கைகள்.

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மலையாளப் புத்தாண்டு நாளான விஷூ ஆகிய சமயங்களில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்ட சமயங்களில், கோயில் நிர்வாகத்தால், எந்த வயது வேறுபாடும் இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்பட்டது அந்த வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

எனினும், நீண்ட காலமாக பின்பற்றப்படும் வழக்கம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குள் நுழைய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

10 முதல் 50 வயதுள்ள பெண்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானதல்ல என கேரள உயர்நீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருந்தாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த 20 ஆண்டுகளாகவே பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என அதே தீர்ப்பில் கூறியிருந்தது.

மாதவிடாய் வயதில் உள்ள பெண்களையும் கட்டணம் வாங்கிக்கொண்டு சபரிமலைக்குள் நுழைய அனுமதித்த அதே சபரிமலை தேவசம் போர்டு, 2016இல் பெண்கள் நுழைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

1990இல் ஒரு நிலை எடுத்திருந்த தேவசம் போர்டு அதற்கு மாறாக 2016இல் உச்ச நீதிமன்றத்தில் கூறியது, அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இருக்கலாம்.

சபரிமலைபடத்தின் காப்புரிமை A.S.SATHEESH Image caption டிசம்பர் 2018இல் சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் குழுவினர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

விரதம் இருக்காத பெண்களும் கடந்த காலங்களில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் நுழைய தேவசம் போர்டால் அனுமதி வழங்கப்பட்டியிருந்தாலும், 41 நாட்கள் தொடர் விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என 2016 -ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.

நவம்பர் 27, 1956 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, ஏற்கனவே உள்ள வழக்கங்கள் மற்றும் கோயிலின் புனிதத் தன்மையைக் காரணம் காட்டி, 10 முதல் 55 வயதுள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய திருவாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்திருந்து.

ஆனால், 1969ஆம் சபரிமலை கோயிலில் ஒரு கொடிமரம் நடப்பட்ட நிகழ்வில் பழைய வழக்கங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகவும், கே.பரிபூர்ணன் மற்றும் கே.பி.மாரார் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது கோயில் வழக்கங்களில், சபரிமலை தந்திரியின் ஆலோசனையின் பேரில் அப்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்தத் தீர்ப்பு கூறுகிறது.

எனவே, 2018 செப்டம்பர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே மாதவிடாய் வயதுள்ள பெண்கள் முதல் முறையாக சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தனர் என்பது உண்மையான தகவல் அல்ல.

https://www.bbc.com/tamil/india-46760949

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் இலங்கை பெண் வழிபட்டது உண்மை தான்: மீண்டும் உறுதி செய்தது கேரள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் சசிகலா 18 படி ஏறிச் சென்று வழிபாடு நடத்தியது உண்மை தான் என அம்மாநில போலீஸார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான  பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரள அரசைக் கண்டித்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு சசிகலா என்ற 46 வயதுடைய இலங்கைப் பெண் தரிசனம் செய்தததாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை அவர் மறுத்தார்.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் ‘‘நான் 48 நாட்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன். 18 படிகளில் ஏறினேன். அப்போது என்னை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் என்னால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. நான் உண்மையான ஐயப்ப பக்தை. என்னை ஏன் போலீஸார் தடுத்து நிறுத்தினர்" என்றார்.

ஆனால், சசிகலா 18 படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக கேரள போலீஸார் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கிலத்திடம் அதிகாரிகள் கூறுகையில் ‘‘சசிகலா ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய வீடியோ ஆதாரம் போலீஸார் வசம் உள்ளது. கோயில் வழிபாடு மற்றும் மதநம்பிக்கை தனி மனிதர்கள் சார்ந்தது என்பதால் போலீஸார் அதனை வெளியிடவில்லை. இருப்பினும் தேவைப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளனர்’’ என தெரிவித்தனர்.

சசிகலாவிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தது என்றும், அந்த பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த தேதி 1972, டிசம்பர் 3-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் போலீஸார் முன்னதாக தெரிவித்தனர்.

https://tamil.thehindu.com/india/article25911119.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2019 at 3:45 PM, ரதி said:

இந்தப் பெண்கள் உண்மையிலேயே விசரிகள்...அங்கு பெண்களுக்கு தேவையான எத்தைனையோ விஷயங்கள் போராடும் தேவையில் இருக்கும் போது ,போயும்,போயும் சாமிக்காக போராடுதுகள்...அதுவும் இந்தியாவில் அதிகம் படித்த பெண்கள் உள்ள கேரளாவில்...சுத்தம் 😠

இது பெண்களை ஆண்களுக்குச் சமமாக நடத்தாத பாலியல் ஒதுக்கலுக்கு எதிரான அடையாளப் போராட்டங்களில் ஒன்று என நினைக்கிறேன்! சம ஊதியம், சமமான பதவியுர்வு, உடைகளில் சுதந்திரம் என ஒவ்வொன்றிலும் இத்தகைய போராட்டம் இந்தியாவில் நடக்கிறது! இந்திய சட்டங்கள் இப்போது மேற்கு நாட்டுத் தராதரத்திற்கு வந்திருப்பது நல்ல அறிகுறி!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இது பெண்களை ஆண்களுக்குச் சமமாக நடத்தாத பாலியல் ஒதுக்கலுக்கு எதிரான அடையாளப் போராட்டங்களில் ஒன்று என நினைக்கிறேன்! சம ஊதியம், சமமான பதவியுர்வு, உடைகளில் சுதந்திரம் என ஒவ்வொன்றிலும் இத்தகைய போராட்டம் இந்தியாவில் நடக்கிறது! இந்திய சட்டங்கள் இப்போது மேற்கு நாட்டுத் தராதரத்திற்கு வந்திருப்பது நல்ல அறிகுறி!

நீங்கள் சொல்வது தான் உண்மை...ஆனால் இந்தியாவில் பெண்கள் போராட இதை விட முக்கியமான  பல விஷயங்கள் இருக்கின்றன.
 

கோவிலுக்குள் பெண்கள் போனால் ஐயப்பனுக்கு ஆசை வந்து அந்த பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்து விடுவார் என்று அவரின் பக்தர்களுக்கு அவரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது ஐயப்பன் மீது பொறாமை இருக்கலாம். அது தான் இவ்வளவு ஆக்கோஷமாக எதிர்க்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது தான் உண்மை...ஆனால் இந்தியாவில் பெண்கள் போராட இதை விட முக்கியமான  பல விஷயங்கள் இருக்கின்றன.
 

இந்தியப்பெண்கள் பாராளுமன்றம் சென்று தங்கள் சம உரிமையை வென்றெடுக்க போராடலாம் தானே. 
 ஐயப்பனை தரிசிக்க போராடலாமா? முருகன் இல்லையா? சிவன் இல்லையா? திருஞானசம்பந்தர் இல்லையா? ஏன் பக்தி முத்தினால் ஐயப்பன் படத்தை வீட்டில் வைத்து தரிசிக்கலாமே?

ஐரோப்பா அமெரிக்காவில் கூட இன்றும் பெண் சுதந்திரத்திற்காக  போராடுகின்றர்கள். இங்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை. ஒரு சிலரின் கதையை பார்த்தால் ஐயப்பன் தான் பெண்களின் செம உரிமைக்கு தடையாய் இருக்கிறார் போலும்...
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

கோவிலுக்குள் பெண்கள் போனால் ஐயப்பனுக்கு ஆசை வந்து அந்த பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்து விடுவார் என்று அவரின் பக்தர்களுக்கு அவரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது ஐயப்பன் மீது பொறாமை இருக்கலாம். அது தான் இவ்வளவு ஆக்கோஷமாக எதிர்க்கிறார்கள். 

 பலதும் பத்தும் தெரிஞ்ச நாசா வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போற வத்திக்கானே உந்த விசயத்திலை தலையை குனிஞ்சு கொண்டுதான் திரியுது.முதல்லை அதை கவனிப்பம். அதுக்குப்பிறகு சபரிமலை படி தாண்டிய பத்தினிகளை பாப்பம்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கோவிலுக்குள் பெண்கள் போனால் ஐயப்பனுக்கு ஆசை வந்து அந்த பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்து விடுவார் என்று அவரின் பக்தர்களுக்கு அவரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது ஐயப்பன் மீது பொறாமை இருக்கலாம். அது தான் இவ்வளவு ஆக்கோஷமாக எதிர்க்கிறார்கள். 

பாரம்பரியத்தை எதற்கென்றே தெரியாமல் பின்பற்றும் மந்தைக் கூட்டங்கள் அல்லவா இந்த சபரிமலைப் பெண் தடையை ஆதரிப்போர்? பெண்ணில் கருப்பை விந்துக்குத் தயார் செய்யப் பட்டு, கருக்கட்டல் நடக்காத பட்சத்தில் அது அழிந்து முட்டையுடன் வெளியேறுவதே மாத விலக்கு! இது இலங்கையில் பத்தாம் வகுப்பு படித்தோருக்குப் புரிய வேண்டிய தகவல்! அது எப்படி சாதாரண விந்து வெளியேற்றலை விட வித்தியாசம் என்று விளக்க இயலாத அளவுக்கு அறிவின் வறுமை! இவை பெண்ணைக் கட்டி பிள்ளையும் பெத்து..ஓ மை கோட்! ஐ மீன் என்ர கடவுளே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கதவு அடைத்திருந்தால் இன்னொரு கதவு திறந்திருக்குமென்று யாரோ சொன்னார்களாம். அது போல் இன்னொரு ஐயப்பன் கோவிலை தங்களுக்கென்று திறந்து சுதந்திரமாக  போய் விழுந்து பிரண்டு கும்பிட வேண்டியது தானே.... வெளிநாடுகளிலும் இது தானே நடக்கின்றது.கிறிஸ்தவ தேவாலயங்கள் கூட கருத்து வேற்றுமையால் தானே ஒரு ஊரில் இரு தேவாலயங்கள் கட்டப்பட்டன.

இதுக்குப்போய்  படிச்ச விந்து வியாக்கியானங்களை இதுக்குள்ளை சிதற விட்டுக்கொண்டு..

அவன் ஆரம்பித்த கோவில் அவன் வைச்ச சட்டம். இது தானே உலகம் முழுவதும் நடக்கின்றது. பழையகாலத்து சூதக கதைகளை இப்பவும் போற இடம் முழுக்க தூக்கி பிடிச்சுக்கொண்டு..... ஆண்டவரே நல்ல புத்தியை கொடுத்தருள்வாராக.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு கதவு அடைத்திருந்தால் இன்னொரு கதவு திறந்திருக்குமென்று யாரோ சொன்னார்களாம். அது போல் இன்னொரு ஐயப்பன் கோவிலை தங்களுக்கென்று திறந்து சுதந்திரமாக  போய் விழுந்து பிரண்டு கும்பிட வேண்டியது தானே.... வெளிநாடுகளிலும் இது தானே நடக்கின்றது.கிறிஸ்தவ தேவாலயங்கள் கூட கருத்து வேற்றுமையால் தானே ஒரு ஊரில் இரு தேவாலயங்கள் கட்டப்பட்டன.

இதுக்குப்போய்  படிச்ச விந்து வியாக்கியானங்களை இதுக்குள்ளை சிதற விட்டுக்கொண்டு..

அவன் ஆரம்பித்த கோவில் அவன் வைச்ச சட்டம். இது தானே உலகம் முழுவதும் நடக்கின்றது. பழையகாலத்து சூதக கதைகளை இப்பவும் போற இடம் முழுக்க தூக்கி பிடிச்சுக்கொண்டு..... ஆண்டவரே நல்ல புத்தியை கொடுத்தருள்வாராக.

கேரளாவில்.... உள்ள ஐயப்பபன் ... கன்னி சாமி  என்று, சொல்கிறார்கள்.
அப்ப ... பிள்ளையாரும்.. தனி  கடவுள் தானே....
இதை.... சொல்ல, வெளிக்கிட்டால்,    லூஸு...  என்பார்கள்.😛

9 hours ago, குமாரசாமி said:

அவன் ஆரம்பித்த கோவில் அவன் வைச்ச சட்டம். இது தானே உலகம் முழுவதும் நடக்கின்றது. பழையகாலத்து சூதக கதைகளை இப்பவும் போற இடம் முழுக்க தூக்கி பிடிச்சுக்கொண்டு..... ஆண்டவரே நல்ல புத்தியை கொடுத்தருள்வாராக.

“ஐயப்பன் அன்ட் கோ பிறைவேட் லிமிரெட்” என்று பெயர் கோவிலுக்கு வைத்திருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆன்மீகம், மகரஜோதி, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்,இறைவனின் முன்னால் நாம் அனைவரும் சமமானவர்களே என்று ஒரு பக்கம்  பீலா விட்டுக்கொண்டு  இப்படி முட்டாள்தனமாக  செய்வது தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

“ஐயப்பன் அன்ட் கோ பிறைவேட் லிமிரெட்” என்று பெயர் கோவிலுக்கு வைத்திருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆன்மீகம், மகரஜோதி, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்,இறைவனின் முன்னால் நாம் அனைவரும் சமமானவர்களே என்று ஒரு பக்கம்  பீலா விட்டுக்கொண்டு  இப்படி முட்டாள்தனமாக  செய்வது தான் பிரச்சனை.

அது மட்டுமா? வருவோரிடம் வாங்கும் பணத்திற்கு வரி விலக்கை மறந்து விட்டியளா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, tulpen said:

“ஐயப்பன் அன்ட் கோ பிறைவேட் லிமிரெட்” என்று பெயர் கோவிலுக்கு வைத்திருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆன்மீகம், மகரஜோதி, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்,இறைவனின் முன்னால் நாம் அனைவரும் சமமானவர்களே என்று ஒரு பக்கம்  பீலா விட்டுக்கொண்டு  இப்படி முட்டாள்தனமாக  செய்வது தான் பிரச்சனை.

இந்த வசனம் வாசிக்கும் இடம் வேறு இடமாச்சே?? 
எப்படி இங்கே எதிரொலிக்கின்றது????  :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

கேரளாவில்.... உள்ள ஐயப்பபன் ... கன்னி சாமி  என்று, சொல்கிறார்கள்.
அப்ப ... பிள்ளையாரும்.. தனி  கடவுள் தானே....
இதை.... சொல்ல, வெளிக்கிட்டால்,    லூஸு...  என்பார்கள்.😛

பிள்ளையாருக்கு இப்படியும் ஒரு கதை உண்டு. 

Ganapati1.jpg

நீங்கள் புள்ளி சேகரிப்பதற்காக என்னை லூசு என சொல்லாதீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலைக்கு பெண்கள் போகலாம்..
வேண்டாம் என்ற இரு பாலரும் உண்மை அறியாது பேசுவதால்தான் சர்ச்சை வருகிறது.

பல வருடங்கள் முன்பு இப்படி ஒரு சர்ச்சை 
மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவிலில் இருந்தது 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழர்கள் உடையது 
அங்கே தலித்துகளை உள்ளே அனுமத்திக்க வேண்டும் என்று 
உள்ளே கூடி சென்றதால் வந்த சர்ச்சை.

வீணான பக்தி மோகத்தில் உண்மையை மறந்து 
தமக்கெதிராக கிளம்பிய பல தமிழர்கள் உண்டு.

மன்னர் காலத்தில் அப்போ அப்போ  படை எடுப்புகள் 
எல்லா இடங்களிலும் இருந்து இருக்கிறது இவர்களின் நோக்கம் 
குறிப்பாக சுல்தான்களின் நோக்கம் பொன் பொருளை அள்ளி  செல்வது 
தமிழர்கள் பொன்சிலைகள் அரசுக்கு சொந்தமானதை கோவிலிலேயே வைத்து இருப்பார்கள் 
ஆதலால் அவர்களுடைய எதிரிகளின்  பாய்ச்சல்கள் கோவில்களை நோக்கியே இருக்கும் 
இவர்களும் முடிந்தவற்றை தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் ஓடுவதும் பாதுகாப்பதும் 
என்று தொடர்ந்தது ...

இதுவே பாண்டிய ராச்சியம் எழும் முன்பு சோழர் ராச்சியம் பல துரோகங்களால் 
மங்கி கொண்டிருந்த சமயம் விஜய நகரம் தனது ராஜ்ஜியத்தை தெற்கு நோக்கி விரித்தது 
இது இலங்கை பூராகவும் விரிந்து இருந்தது. சிங்களம் எனும் மொழி ஒரு மொழி வடிவில் 
தெலுங்கு எழுத்துருவை பின்பற்றி தமிழ் தெலுங்கு சேர்த்து ஒரு மொழியாக உருவானது இந்த கால கடடத்தில்தான். இதே காலத்தில்தான் சங்கிகள் எமது வரலாற்று ஆலயங்கள் முழுதும் தம் வசப்படுத்தினார்கள். பின்னைய நாட்களில் கடவுள் பயத்தை பயன் படுத்தி சொந்த கோவில்களில் 
தமிழர்கள் புறக்கணிக்க பட்டார்கள் .............. இப்போதுவரையும் இவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது 
இந்துமதம் என்ற பெயரே வெள்ளையன் சூட்டியது ..... இதுக்கும் தமிழருக்குக்கும் சம்மந்தம் இல்லை.
ஜேசுவை  புத்தரை  அல்லாஹ்வை தொழாது இருந்த எல்லோரும் இந்துக்கள் என்ற பொது பெயருக்கும் 
வந்தார்கள். 

திருப்பதி கோவிலே தமிழர்களுடையது பின்பு ஆந்திர ஆளுமைக்குள் சென்றுவிட்ட்து 
அதுபோல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது நடந்த எல்லை பிரிப்பிலேதான் பாலக்காடு 
சபரிமலை எல்லாம் கேரளாவின் எல்லைக்குள் வந்தது. முன்பு ஆண்கள் பெண்கள் எல்லோரும் இந்த  
கோவிலுக்கு சென்று வந்து இருந்தார்கள் .... இந்த படியேறும் பிரச்சனையால் மற்றும் மேலே கழிவறை 
போன்றவை இல்லாத பிரச்சனையால் ஒரு ஆலோசையாகவே பெண்கள் போவதை குறைத்து கொண்டார்கள் 
பின்பு சங்கிலிகள் ஆண் பிரம்மச்சாரியார் என்று கதை புனைந்து .... இப்போதைய நிலை வந்தது. 
சபரிமலையிலேயே அய்யப்பனுக்கு காவலாக ஒரு பெண் கடவுள் உண்டு. 
இங்கே வரும் வருமானம் எங்கும் செல்ல கூடாது என்பதிலும் கொள்ளை அடிப்பதிலும் குறியாக கொண்டே 
அரசுகளின் நடவடிக்கைகளை சங்கிலிகள் எதிர்த்து வருகிறார்கள் ...... இதில் வரும் வருமானம் கேரளா அரசுக்கு அல்லது ஒரு பொதுவான அமைப்புக்கு சென்றால் .... இதில் பக்தர்கள் எந்த சிரமும் இன்றி சவ்கரியமாக  சென்று வர கூடிய கோவிலாக எல்லா வசதிகளையும் கட்டிட முடியும். 
சங்கிலிகளை அடித்து விரட்டுவதில் கேரளா அரசுபோல ... தமிழ் நாட்டிலும் ஒரு அரசு அமைய வேண்டும்.
கேரளாவின் துர்ரதிர்ஷ்டம்  மத்தியில் சங்கிலிகளின் ஆட்சி அமைந்துவிட்ட்து 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.