Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eeeddd.jpg

உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்?

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகவுள்ளார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்களில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன.

தகுந்த நபரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலகப்போரின் நிறைவில் ஆரம்பிக்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர்.

உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இது ட்ரம்ப்ப், தனது சொந்த விருப்பின் பேரில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/உலக-வங்கியின்-புதிய-தலைவ/

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு செய்தியும் வெளியாகவில்லை! ஆதவன் நியூசுக்கு click baits தேவைப்படுகிறது போல!

  • கருத்துக்கள உறவுகள்

Ivanka Trump 'being considered as new World Bank chief'

https://www.independent.co.uk/news/world/americas/ivanka-trump-world-bank-chief-head-successor-a8724371.html

According to the Financial Times, names being thrown into the mix for the role include Ivanka Trump, Treasury official David Malpass, former UN ambassador Nikki Haley and head of the US Agency for International Development Mark Green.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வதந்தியை மேற்கோளாகக் கொண்டு யு.கே செய்தித் தாள் போட்டிருக்கும் செய்தி. வாஷிங்ரனில் உள்வீட்டு தகவல்களைப் பிரசுரிக்க என்றே இருக்கும் The Hill பத்திரிகையில் ஒன்றும் இல்லை. அமெரிக்க பிரதான ஊடகங்களிலும் எதுவும் இல்லை. செய்தியின் நம்பகத் தன்மை மிகவும் குறைவு என நினைக்கிறேன்! ஆனால், ட்ரம்ப் இப்படி நினைக்கக் கூடிய ஆள் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Justin said:

அப்படி ஒரு செய்தியும் வெளியாகவில்லை! ஆதவன் நியூசுக்கு click baits தேவைப்படுகிறது போல!

 பத்திரிகைகளில் முக்கிய இடம் பிடித்த செய்தி......உங்களுக்கு தெரியாது எனில் உலகத்துக்கே தெரியக்கூடாது என்றில்லை... 😅

https://www.n-tv.de/wirtschaft/Wird-Ivanka-Trump-Chefin-der-Weltbank-article20808227.html

https://www.businessinsider.de/ivanka-trump-koennte-chefin-der-weltbank-werden-2019-1

https://www.bild.de/geld/wirtschaft/wirtschaft/financial-times-bericht-wird-ivanka-trump-weltbank-chefin-59498732.bild.html

https://www.theguardian.com/business/2019/jan/12/ivanka-trump-world-bank-donald-trump-report

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது ஒரு வதந்தியை மேற்கோளாகக் கொண்டு யு.கே செய்தித் தாள் போட்டிருக்கும் செய்தி. வாஷிங்ரனில் உள்வீட்டு தகவல்களைப் பிரசுரிக்க என்றே இருக்கும் The Hill பத்திரிகையில் ஒன்றும் இல்லை. அமெரிக்க பிரதான ஊடகங்களிலும் எதுவும் இல்லை. செய்தியின் நம்பகத் தன்மை மிகவும் குறைவு என நினைக்கிறேன்! ஆனால், ட்ரம்ப் இப்படி நினைக்கக் கூடிய ஆள் தான்!

தி எக்கோனோமிஸ்ட் பக்கதில் இருந்தது 
நேற்று நான் வாசித்தேன் ...

மெயின் மீடியாக்கள் பெரிதுபடுத்தகவில்லை.
காரணம் கல்வி சார்ந்த அடிப்படை பட்ட்ங்கள் 
வேண்டும் என்று எண்ணுகிறேன். 

இவரிடம் வெறும் பேச்சேலர் டிகிரி தான் இருக்கிறது 

யார் கண்டார் உலக போற போக்கில் இவரும் வரலாம் ....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

தி எக்கோனோமிஸ்ட் பக்கதில் இருந்தது 
நேற்று நான் வாசித்தேன் ...

மெயின் மீடியாக்கள் பெரிதுபடுத்தகவில்லை.
காரணம் கல்வி சார்ந்த அடிப்படை பட்ட்ங்கள் 
வேண்டும் என்று எண்ணுகிறேன். 

இவரிடம் வெறும் பேச்சேலர் டிகிரி தான் இருக்கிறது 

யார் கண்டார் உலக போற போக்கில் இவரும் வரலாம் ....

சரி நீங்கள் சொல்வது! இப்போது யார் முறையாகப் பெற்ற தராதரத்தைப் பார்க்கிறார்கள்? நம்பிக்கையான தரவென்பது ஒருவர் நூறு முறை சொல்வதைப் போல ஆகி விட்டது! அதனாலேயே எல்லா இடத்திலும் பிரச்சினை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/13/2019 at 8:44 AM, தமிழ் சிறி said:

உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்?

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகப்பன்காரன்ரை சோலி எப்ப முடியும் எண்டு உலகமே காத்துக்கிடக்குது.....இதுக்கை மொடல் மோள்காரி உலக வங்கிக்கு தலைவி! கிழிஞ்சுது போ  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.