Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?

Featured Replies

kilinochchi-buddha-statue-1-300x200.jpgவடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

வடக்கில், இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடத்தப்படாத நிலையில், பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன், வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த ஆளுநர்கள் பதவியில் இருந்த போதே, இத்தகைய மாநாடு நடத்தப்படாத நிலையில், தமிழரான ஆளுநரின் தலைமையில், பௌத்த மயமாக்கல் குறித்து குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இத்தகைய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், அரச செயலகங்களில் மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சுரேன் ராகவன், பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/02/10/news/36334

  • Replies 51
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு காலத்தில் கொண்டாடிய புத்தன் தானே!
நடத்தட்டும். 
பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து அவர்களை வாழ்க்கைத்தரம் உயர இது போன்ற நிகழ்வுகள் ஒரு போதும் உதவாது.
புத்தனையும் அவரை வழிபடுவோரையும் வெறுக்க தான் உதவும்.

இவர் சுத்து மாத்து மந்திரன் மாதிரியான அடுத்த சிங்கள கூலி .....மைத்திரி சும்மா ஒருவரை நியமிப்பாரா ...
எங்கள் விக்கி ஐயா போன்றவர்கள் தேவை மிக அவசியம் ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

இவர் சுத்து மாத்து மந்திரன் மாதிரியான அடுத்த சிங்கள கூலி .....மைத்திரி சும்மா ஒருவரை நியமிப்பாரா ...
எங்கள் விக்கி ஐயா போன்றவர்கள் தேவை மிக அவசியம் ....

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

ஏன் நீங்கள் செய்றது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nellaiyan said:

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இது உங்களுக்கே ஓவராய் தெரியேல்லை?

அடங்கொக்கா மவனே!

யாழ்ப்பாணத்திலை வாழுற பௌத்த சனங்களுக்கு என்னபிரச்சனை? என்ன சவால்கள்?

ஆரப்பா உந்த சுரேன் ராகவனை கண்டு புடிச்சது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஏன் நீங்கள் செய்றது......

தாராளமாக செய்யலாம், ஆளுனர் அழைப்பிதழ் அனுப்பினால்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

தாராளமாக செய்யலாம், ஆளுனர் அழைப்பிதழ் அனுப்பினால்.

ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பியே இதுவரை விக்கியர் செய்தது....

1 hour ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்திலை வாழுற பௌத்த சனங்களுக்கு என்னபிரச்சனை? 

யாழில் சந்திக்கு சந்தி புத்தரை மணவறையில் வைக்க, யாழ் மக்கள் விரும்பவில்லையாம்.

  • தொடங்கியவர்

முதலில் யார் இந்த சுரேன்?

* மூதாதையர்கள் கேரள தொடர்பு!
* முன்னாள் சிறிலங்கா அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையில் சிங்கள ஒலி/ஒளிபரப்பிற்கு பணிப்பாளர்
* பெளத்தத்திலேயே முனைவர் பட்டம்
* பெளத்த மதத்திற்கு மத மாற்றம்
* மைத்திரியின் முன்னாள் ஆலோசகர்

... சிறிலங்கா அரசின் வடக்கு ஆளுனர் சுரேன் பதவிக்கு வந்த முதல் வேலை... வடக்கில் அரச நிறுவனங்களில் உள்ள பெயர்பலகைகளை மூன்று மொழிகளிலும் மாற்ற உத்தரவிட்டதே" !

... தற்போது பெளத்தர்கள் பெரும்பான்மையாக(?), பல்லாயிரம் ஆண்டுகாலமாக(?) வாழும் வடபகுதியில், பெளத்த மாநாடு!

சும்/சம் கும்பலுடன் எம்மில் பலர் விசிலடித்தோம், சுரேனின் வருகைக்காக! அன்று மைத்திரி/ரணிலுக்காக விசிலடித்து, இன்று வாந்தி எடுப்பதை போலவும் .. சுரேனின் முகத்தில் பூச்சு போடப்பட்டு இறக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்திலேயே கரைய தொடங்கி விட்டது! உண்மை முகம் தெரிய வெகுகாலம் காத்திருக்க தேவையில்லை!

10 minutes ago, MEERA said:

ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பியே இதுவரை விக்கியர் செய்தது....

ஆளுநர் முன்னிலையில், விக்கியார் தலையாட்டிப் பொம்மைதானே!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

ஆளுநர் முன்னிலையில், விக்கியார் தலையாட்டிப் பொம்மைதானே!

உண்மையை ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

மாநாடு, வவுனியாவில்.

யாழில் அல்ல.

பயப்படத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

மாநாடு, வவுனியாவில்.

யாழில் அல்ல.

பயப்படத் தேவையில்லை.

புரியவில்லை........ஏன் பயப்பட தேவையில்லை......

16 minutes ago, MEERA said:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர், இலங்கை அரசின் சட்ட திட்டங்களின் கீழ் சுதந்திரமாக செயல்பட முடியும்.

சந்திக்கு சந்தி புலி அரசியல் பேசும், முதலமைச்சருக்கு,  நீங்கள் விரும்பும் சுதந்திரம் கிடைக்காதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, thulasie said:

யாழில் சந்திக்கு சந்தி புத்தரை மணவறையில் வைக்க, யாழ் மக்கள் விரும்பவில்லையாம்.

மக்கள் விரும்பாததை அரசு ஏன் செய்ய வேண்டும்?
மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மக்கள் விரும்பாததை அரசு ஏன் செய்ய வேண்டும்?
மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா?

சிங்கள பெளத்த மக்களுக்காக அரசு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

6 minutes ago, MEERA said:

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள்

27 minutes ago, MEERA said:

உண்மையை ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

அரச பணத்தில் மாதாந்தம் உதவியாளருடன் விமானப்பயணம் செய்ய உரிமை இருக்கிறது. முக்கியமான உரிமையை எடுத்து வைத்திருக்கிறார்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள்

ஆம் சம் சும் கும்பலுக்கு மட்டும், இல்லாவிடின் கஞ்சா கடத்தல்காரரை விடுவித்து இருக்க முடியுமா?

3 minutes ago, Jude said:

அரச பணத்தில் மாதாந்தம் உதவியாளருடன் விமானப்பயணம் செய்ய உரிமை இருக்கிறது.

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

Edited by MEERA

10 minutes ago, MEERA said:

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

மகிந்த கூறுவது எல்லாம் உண்மையா??

அது எப்படி சாத்தியம், வடக்கு முதலமைச்சருக்கு என்று தனியான சட்டம் உள்ளதா?

8 minutes ago, MEERA said:

மகிந்த கூறுவது எல்லாம் உண்மையா??

அது எப்படி சாத்தியம், வடக்கு முதலமைச்சருக்கு என்று தனியான சட்டம் உள்ளதா?

விக்கியார், சட்டத்திற்கு மீறிய அரச உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது பிற மாகாண முதலைமைச்சர்களின் விசனம்.

அந்த விசனத்தை வெளியில் போட்டு உடைத்தவர் மஹிந்த.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

விக்கியார், சட்டத்திற்கு மீறிய அரச உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது பிற மாகாண முதலைமைச்சர்களின் விசனம்.

அந்த விசனத்தை வெளியில் போட்டு உடைத்தவர் மஹிந்த.

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சாெல்வது காெடுப்பதுபாேல் காெடுத்து இருப்பதையும் எடுப்பதென்று, விக்கியரில் உந்த விளையாட்டு பலிக்கிதில்லை. எடுத்ததெல்லாம் தா. அதன்பிறகு நாங்கள் யாேசிப்பாேம் உனக்கு தாறதா வேண்டாமா? என்று நிக்குது ஆள்.   நீ இண்டைக்கு தருவாய் நாளைக்கு எடுப்பாய். இதை செய்யேலை அதை செய்யேலை எண்டு கணக்கு காட்டுவாய். அதெல்லாம் வேண்டாம் எங்களுக்குரியதை எங்களிடம் தா. எங்களுக்கு தெரியும் எமது மக்களுக்கு எது வேண்டுமென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.