Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரித ரயில் சேவை ஆரம்பம்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
துரித ரயில் சேவை ஆரம்பம்! 
 
zxscfgvhbn.jpgகொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகல் ரயில் நிலையத்திற்கும், குருணகால் ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://www.elukathir.lk/NewsMain.php?san=23729

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nunavilan said:

கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்னொரு ரயில்பாதை வருமா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்துக்கு இன்னொரு ரயில்பாதை வருமா?:unsure:

முதலில் 'பலாலி' விமான நிலையத்தையாவது சர்வதேச விமான நிலையமாக மாற்ற முயலுங்கள், சாமி..! 😉

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

மேற்படி 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஏன்இன்னமும் அதிவேகசாலை யாழுக்கு அமைக்கப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிக்கு தேர்தல் வரப்போவதும் சிங்கள கட்சிகள் இங்கே முழுபலத்துடன் கால்பதிக்க தமது பிரச்சார பீரங்கிகளை முடுக்கிவிட்டதும் புரிகிறது. இப்போதுள்ள ரயில் இந்த வேகத்திலேயே பாதுகாப்பற்ற கடவைகளில் எத்தனை எத்தனை தமிழ் உயிர்களை காவுகொண்டுவிட்டது.  துரித ரயில் இந்த  உயிரிழப்புகளையும் சேர்த்து துரிதப்படுத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2019 at 3:32 PM, nunavilan said:
அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உடனடியாக சாத்தியமில்லை, ஓமந்தையில் இருந்து கொழும்பு வரை ரயில் பாதை புனரமைக்கப்படணும். போக வர தனி தனி பாதை அமைத்தால் மட்டுமே வேகமாக பயணிக்கமுடியும்.
மக்கள் பயனுற மட்டுமா படையினர் பயன்படுத்தவும் வேணும் தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ராசவன்னியன் said:

முதலில் 'பலாலி' விமான நிலையத்தையாவது சர்வதேச விமான நிலையமாக மாற்ற முயலுங்கள், சாமி..! 😉

சும்மா பெயருக்கு சர்வதேச விமான நிலையம் எண்டு வந்தாலும் வருமே தவிர.....வியாபார ரீதியாக சிங்களர் முன்னேற விடமாட்டார்கள்.☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.