Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-3.jpg

புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது!

லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலிகளின்-கொடியுடன்-லண்ட/

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிகின்றது இன்னும் புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்படுகின்றது. 

இல்லையே , புலிகளின் எழுத்து நீக்கிய கொடி , தமிழர்களின் கொடி ஏற்கனவே தடை நீக்கம் பெற்றுவிட்டது ...சில புரிதலில் உள்ள தப்பு மாதிரி தெரிகின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்

ஏர்போட்டில நம்ம நாட்டுக்காரர், அயல்நாட்டுகாரர் பலர் செக்கீயூரிட்டி செக் பண்ணுபவர்களாக இருக்கிறார்கள். யாராவது கொடியை பார்த்ததும், அலேட் பண்ணி இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் விமான நிலையங்களின் அலேட் மிக சீரியஸான விடயம் என்பதால் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் அழைக்கப்பட்டிருப்பார்கள். சில புரிதல், விளக்கங்களின் பின்னர் விடப்பட்டிருப்பார்கள். முக்கியமான விசயம், இவர்கள் ஜஎஸ் அமைப்புடன் தொடர்பில் இல்லாத தமிழர்கள் என்பதே உறுதி செய்யப்பட்டிருக்கும்.

நிறம் ஒன்று, கூடவே, எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று யாருக்கும் தெரியாது.

விமானநிலையம் போவதானால், நாமதான் கவனமாக இருக்கவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

COUNTER-TERRORISM police arrested a Tamil musician at Heathrow airport hours before he was due to perform at a UN summit in Switzerland.

Vakeesan Thangavel, 36, was surrounded by armed police on Monday morning after he boarded a flight bound for Geneva.

Officers allegedly shouted: “You are attempting terrorism! You have got a flag!”

 

Mr Thangavel had a red Tamil national flag in his baggage, which police sometimes confuse with the banned Tamil Tiger logo.

Officers hauled Mr Thangavel and a friend off the flight at 6.20am and questioned both men under the Terrorism Act 2000.

The pair were later taken to the Metropolitan Police’s counter-terrorism headquarters in Earl’s Court.

Then at 5pm dozens of police officers raided Mr Thangavel’s home and seized his laptop, USBs, documents and clothing.

The men were eventually released on bail around 11pm on Monday night.

Mr Thangavel is a member of the Tamil drumming group Parai Voice of Freedom and was travelling to Geneva to perform at a protest outside the UN Human Rights Council.

The UN summit is currently reviewing a catalogue of war crimes committed against Tamil civilians by Sri Lankan forces at the end of the country’s conflict in 2009.

Mr Thangavel told the Morning Star he was “very afraid” and “not sleeping” because of the experience.

Police have confiscated his travel documents and he fears he will now have to cancel his wedding, which is scheduled to take place abroad later this month.

His arrest comes just days after it emerged that the Sri Lankan embassy in London was actively spying on Tamil protesters.

On Friday, Westminster magistrates’ court heard evidence that the Sri Lankan military attache in London was ordered to “plan and execute appropriate strategies to counter” any protests against the Sri Lankan government.

The same official was under orders to “keep close contacts with … New Scotland Yard; Counter Terrorism Command.”

Last October, four Tamil activists was arrested and detained by anti-terror police.

They were seized by Thames Valley Police after protesting against a visit by Sri Lanka’s Prime Minister Ranil Wickremesinghe to the Oxford Union.

One of the suspects was Sockalingam Yogalingam, an elected member of the exiled Transnational Government of Tamil Eelam, who was charged with “belonging to a proscribed organisation.”

His home was searched by seven officers from the South East Counter Terrorism Unit who seized paperwork and electronics.

He recently told the Morning Star that his case had still not been resolved.

The Metropolitan Police said enquiries into Mr Thangavel continue. He has not been charged with any offence.

Courtesy: https://morningstaronline.co.uk

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 6:31 AM, colomban said:

இதிலிருந்து தெரிகின்றது இன்னும் புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்படுகின்றது. 

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

பிரித்தானிய காவல்துறைக்கு சட்டம் தெரிந்திருந்தால் மட்டும் இவர்களை மேளதாளம் மாலை மரியாதையுடன் அழைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. கொடியை பயணத்தின்போது எடுத்துச் செல்லவோ அல்லது இலண்டனில் அதை வெளியே தெரியும்படி காட்டவேண்டிய அவசியமோ இவர்களுக்கு கிடையாது. புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  ஆக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்த தமிழ் அமைப்பு வேண்டிய கொடிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

அதில்லை விசயம்.

ஆங்கிலத்தில் மிக தெளிவாக போடப்பட்டுள்ளது. இலங்கைத்தூதரகம்  சில வேலைகளை செய்கிறது. அதற்க்காக  பணம் செலவு செய்கிறது.

His arrest comes just days after it emerged that the Sri Lankan embassy in London was actively spying on Tamil protesters.

ஜெனீவாவுக்கு செல்பவர்களை பயமுறுத்துவதும், விலக வைப்பதும் அதில் ஒன்று.

பல அமைப்புகளிடையே, அவர்களின் உளவாளிகள் புகுந்து உள்ளனர். யார், யார் எங்கே, எப்போது என்ன செய்ய கிளம்புகிறார்கள் என்ற பூரண தகவல் அங்கே கிடைக்கின்றன.

போலீசாருக்கு, பயங்கரவாதிகள் என்று சொன்னால் அவர்கள் விசாரித்து விளங்கும் வரை பயணம் தடைபடும்  அல்லது பயணமே செய்ய மாட்டார்கள்.

இது போன்ற கொடிகளை எடுத்து செல்வதானால், இலங்கை தூதரகத்தினை உச்ச வேண்டுமானால், முன்னரே போலீசாருக்கு கடிதம் எழுதி அனுமதியினை பெற்றுக்  கொள்ள வேண்டும். இதன் மூலம், பிரச்சனைகள் எழும் போதே தடுக்க முடியும்.

இலங்கை தூதரகத்தினை அதன் வழியிலேயே வெட்டி ஆடாமல், முடடாள்  தனமாக நடந்தால் இது தான் நிலை.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய தொழிற்கட்சி டொனி பிளேயர் ஆட்சி கொண்டு வந்த தடை என்பது மிகவும் மோசமான அமெரிக்க வால்பிடித்தனத்தின் வெளிப்பாடு.

அந்தத் தடையை இன்னும் அனுமதிப்பது என்பது எம்மவர்கள் சொந்த மக்களுக்கு இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகம்.

அண்மையில் அம்மையார் மே கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம்.. தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவர்களின்.. பிரித்தானிய பிரஜா உரிமையை அரசு கேட்டுக்கேள்வி இன்றி.. ரத்துச் செய்யலாம். இந்த வகையில்.. இப்போ பலரின் பிரஜா உரிமை ரத்தாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களது.  அதிலும் குறிப்பாக இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் நிலை மோசம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. எம்மவர்கள் அசைலம் அடிக்கும் போது எழுதிய பொய் கதைகளில் அவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களே அவர்களுக்கு ஆப்பாக மாறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில்.. புலம்பெயர் தமிழர்கள் தம் இருப்பை பாதுகாக்க வேண்டின்.. விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச தடைக்கு எதிராக காத்திரமான வழியிலும் சட்ட ரீதியான வழியிலும் போராடி வெல்ல வேண்டும். அதாவது அந்தத் தடையை நீக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வன்முறையிலும் ஈடுபடாது மெளனிக்கப்பட்டு ஜனநாயக வழிக்கு முன்னாள் போராளிகள் திரும்பி உள்ள நிலையில்.. அவர்கள் மீதான சர்வதேசத் தடை என்பது ஒரு அடக்குமுறை.. அநாவசியம் என்பதை ஒருமித்த மக்களின் குரலாகவும்.. சட்டத்தின் மூலமும் சர்வதேச நாடுகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு எம்மவர்களுக்கு உண்டு. ஆனால் எம்மவர்கள் அதைச் செய்ய பெரும் முனைப்புக் காட்டவில்லை. ஒரு சில இளையோர் அமைப்புக்கள் தவிர. 

அதன் விளைவே இது. 🙄

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vanangaamudi said:

பிரித்தானிய காவல்துறைக்கு சட்டம் தெரிந்திருந்தால் மட்டும் இவர்களை மேளதாளம் மாலை மரியாதையுடன் அழைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. கொடியை பயணத்தின்போது எடுத்துச் செல்லவோ அல்லது இலண்டனில் அதை வெளியே தெரியும்படி காட்டவேண்டிய அவசியமோ இவர்களுக்கு கிடையாது. புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  ஆக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்த தமிழ் அமைப்பு வேண்டிய கொடிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.

இதே  காவல்த்துறையினர் 

இதே  கொடியுடன் கைதுசெய்து

வழக்குக்கு  சென்று

அது தடை செய்யப்படவில்லை  என தீர்ப்பாகியும்  விட்டதே  பலமுறை

இந்நிலையில்    பேரணிகளுக்கு  செல்பவர்கள்

தம்முடன் கொண்டு   செல்லும்கொடியை

ஒழித்து  வைக்கவேண்டிய  அவசியமென்ன???

அத்துடன் பலரும் பலநாடுகளிலிருந்தும் கொடியை  பறக்கவிட்டபடி  அதே ஊர்வலங்களுக்கு  வரும்போது

பிரித்தானியாவில்   மட்டும்

ஒழித்து விளையாட  வேண்டிய   தேவையென்ன??

 

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில ஊருல் இருந்த வந்த ஒரு நண்பன் ஆர்ப்பட்டத்தின் போது கொடியுடன் நின்றான் போணடித்தால் எல்லாம் நல்லத்துக்கு என்று சொன்னான் அதன் பின்னரே தெரிந்தது அது அசைலத்துக்கு என்று 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 10:16 PM, vanangaamudi said:

புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.