Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவரின் தலையுடன் இராணுவம்! கைது செய்யப்பட்டவர் தலை துண்டித்து படுகொலை!

Featured Replies

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்து புகைப்படம் எடுத்த கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம்

(விடுதலைப்புலிகளின் வேவு அணிகள் இராணுவ சீருடை அணிவது வழக்கம்).

பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை.

சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார்.

அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/115531?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறிஸ்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் எடுக்கப்பட்டது 13 ஆம் நூற்றாண்டில். படத்தில் கொய்யப்பட்ட தமிழரின் தலையைத் தூக்கிகொண்டு நிற்பது சிங்கள வீரர் கிடையாது, ஏ கே 47 காவிக்கொண்டிருக்கும் வேற்றுக்கிரக வாசி!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இது கிறிஸ்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

6 hours ago, ragunathan said:

இந்தப்படம் எடுக்கப்பட்டது 13 ஆம் நூற்றாண்டில். படத்தில் கொய்யப்பட்ட தமிழரின் தலையைத் தூக்கிகொண்டு நிற்பது சிங்கள வீரர் கிடையாது, ஏ கே 47 காவிக்கொண்டிருக்கும் வேற்றுக்கிரக வாசி!!!

 

அமெரிக்க நிறுவனத்தின் காபன் பரிசோதனை நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்கள் யாழ்களத்தில் இருப்பது இங்கு பலபேருக்குத் தெரியவில்லை. நிபுணர்களே! உங்கள் பரிசோதனைகளை உலகமே ஏற்றுக் கொண்டாலும். சிறீலங்க அரசும், அரசின் அரசகரு மொழிகள் இந்து மத கலாசார அமைச்சர் மனோகணேசன் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. 😲

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ ...
சுமந்திரன் இன்னும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை பார்த்தியளோ ....அவர் வாய் திறக்கட்டும் 
அப்புறம் பாருங்கோ யாழ் கள நிபுணர்களின் படையெடுப்பை , ஒருவேளை இவரும் மரித்த விசுவாசியாக இருப்பாரோ....அது சரி நமக்கேன் வம்பு 

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

வரவர ஆக்கபூர்வமான கருத்தாடல் என்று விளம்பரம் கொடுக்கும் யாழ் களம் வெறும் பொழுதுபோக்கு அரட்டைக்களமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதற்கென்றே ஒரு சிலர் திட்டமிட்டு இயங்குகின்றார்கள் போலுள்ளது. நிர்வாகம் வழமை போன்று நித்திரை!

  • தொடங்கியவர்
10 hours ago, கிருபன் said:

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

இலங்கையில்  பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடகத்தில் அதுவும் அரசுக்கு எதிராக ஒரு உல்டா செய்தி வருவதற்கு சாத்தியம் இல்லை! அரசுக்கு சார்பாகவே, தமிழினத்துக்கு எதிராகவே பல உல்டா செய்திகள் வருகின்றன. அவற்றை அனைத்து சிங்கள, ஆங்கில பத்திரிகைகளும் காலம் காலமாக செய்து வருகின்றன.  

மேலும் இந்த செய்தியை உல்டா செய்தி என்று கற்பனை செய்து காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பத்தின் துயரத்தை மேலும் அதிகரிப்பதை உங்கள் பொழுதுபோக்கு ஆக்க வேண்டாமே!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

வரவர ஆக்கபூர்வமான கருத்தாடல் என்று விளம்பரம் கொடுக்கும் யாழ் களம் வெறும் பொழுதுபோக்கு அரட்டைக்களமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதற்கென்றே ஒரு சிலர் திட்டமிட்டு இயங்குகின்றார்கள் போலுள்ளது. நிர்வாகம் வழமை போன்று நித்திரை!

அந்த செய்தியை இன்னும் நிர்வாகம் ஏன் தடை செய்யவில்லை...மன்னார் புதைகுழி விடயத்தில் ஒர் நீதியான‌ தீர்ப்பு வழங்கப்படாத படியால் தான் நாங்கள் இப்படி எழுதுகிறோம்....கிடைத்திருந்தால் இப்படியான‌ அரட்டைகள் வந்திருக்காது....என நினைக்கிறேன் கிருபன்...

இதுவும் புலிகளால் தான் ராணுவம் செய்தது என்று எங்கள் சுத்துமாத்து சொல்வார் பாருங்கோ ...அதனை இங்க கொஞ்ச பேர் புலம்பி தள்ளுவினம் ....

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன். அன்னாரின் இழப்பால் துயருரும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்.

மன்னார் புதைகுழி விவகாரம் தொடர்பான முடிவை மேற்கோள் காட்டவே இப்படி எழுதினேன். 

தவிர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

அந்த செய்தியை இன்னும் நிர்வாகம் ஏன் தடை செய்யவில்லை...மன்னார் புதைகுழி விடயத்தில் ஒர் நீதியான‌ தீர்ப்பு வழங்கப்படாத படியால் தான் நாங்கள் இப்படி எழுதுகிறோம்....கிடைத்திருந்தால் இப்படியான‌ அரட்டைகள் வந்திருக்காது....என நினைக்கிறேன் கிருபன்...

தனிமடலில் வந்த தகவலின்படி இந்தப்படம் இந்தப்படம் 90ன் இறுதிப்பகுதியில் அல்து 2000த்தின் தொடக்கப்பகுதியில் கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்குதலில் புலிகளால் கைப்பற்றப்பட்டது.  அந்தக் காலப்பகுதியில் எரிமலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளியீட்டுக்கு முன்னர் படம் மைபூசி அழிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாம். 

ஆனாலும் ஐபிசி பரபரப்புச் செய்திகளை வாசகர்களைக் கவரும்விதம் தலைப்புகள் இட்டு வெளியிடுவதும், யாழ் களத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறியாதளவுக்கு கண்டபடி கருத்துக்கள் வைப்பதும் நடந்தபடிதான் உள்ளது.

இந்தப் படம் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்பாகவே வெளிவந்த படம். 
செய்தியில் குறிப்பிட்டது போன்று இராணுவத்தால் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்குமானால் இவ்வாறான ஆதாரங்கள் மீண்டும் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

  • தொடங்கியவர்

இங்கு ஐபிசி செய்திகளில் குறிப்பிட்ட ஆண்டுளுடன் கிருபனின் தனிமடலில் வந்த கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. எனவே உல்ட்டா என்ற கருத்து அடிபட்டு போகிறது!

மேலும் இணையவன் கூறியது போல அது எக்காலத்தில் நடந்திருந்தாலும், இன்றுவரை நீதி நியாயம் கிடைக்காதபடியால் அவற்றை மீள கவனத்துக்கு கொண்டுவருவது ஒரு பொறுப்பான செயலாகவே கருதப்பட வேண்டும். நாம், 1948 இன் பின்னர் 1956, ......, 1977, ......, 1983,  ..... 2016 வரையில் நடந்த பெரிய / சிறிய இனக்கலவரங்களை மறந்துவிட முடியாது. அவற்றுக்கு இன்றுவரை முறையான நீதி கிடைக்கவில்லை.

அதேநேரம் கிருபன் சொன்னது போல இன்று, ஐபிசி மட்டுமல்ல வீரகேசரி முதல் 99% ஆன தமிழ் ஊடகங்களும் ஒரு சிறந்த ஊடகத்துக்குரிய சராசரி அளவுச் சுட்டியின் 50% ஐ கூட இன்னமும் எட்டவில்லை. அல்லது அவர்களது தரம் சராசரி ஊடக தரத்தைவிட தாழ்வாகவே உள்ளது.
இந்த ஊடக பிழைகளை / தவறுகளை / பொறுப்பற்ற தன்மையை / எழுத்து பிழைகளை வெளிகொண்டு வந்து / சுட்டிக்காட்டி அவை திருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் சில மாதங்களின் முன்னர் (A/L பெறுபேறுகள் வெளிவந்த நேரத்தில்) 2 ஊடகங்கள் விட்ட பாரிய தவறுகளுடன் யாழ் களத்தில் ஒரு திரியை வேறொரு பகுதியில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டு திறந்திருந்தேன்.  (அந்த ஊடகங்களில் ஒன்று தனது தவறை பல மணிநேரத்தின் பின்னர் திருத்திக்கொண்டது வேறுவிடயம்) நான் திறந்த அந்த திரியை சில மணிநேரங்களில் காணவில்லை. என்ன செய்வது?

தமிழ் ஊடகங்கள் அவற்றின் தரத்தை சராசரிக்கு மேலாக, பொதுவாக 60% - 70% துல்லியத்தை / தரத்தை (பிபிசி, cnn, அல்ஜிசீரா, தினமணி போன்றளவு ஆவது) அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். 100% இல்லை, 90% க்கு மேல் கூட தரத்தை எட்டுவது என்பது யாராலும் சாத்தியமற்றது என்பதுவும் எனது எண்ணம்.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.