Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

#BFM - பிரான்ஸ்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

#சிறீலங்கா அரசு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை..

https://www.facebook.com/parani.krishnarajani

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

வாய்க்குள் தள்ளி  விட்டவனும்  அதே  வாய்க்குள்  வரும் போது வருமே

அதே  நிலை  தான்

தமிழருக்கு  நன்றாக  தெரியும் இது  சிங்களத்துக்கே செரிமானம்  என்று

ஆனால் சில  மதம் கொண்டவர்களுக்கு  புரியவில்லை

புரியவும் போவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது.

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

ஒற்றை வரியை பிரித்தெடுத்துக் கேட்டால் பதில் “தெரியவில்லை” என்பதுதான்.

எனது கருத்தில் சொல்ல வந்தது என்னவென்றால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகும்போது மகிழ்ச்சியை காட்டுவது தமிழர்களுக்குள் புரையோடியிருக்கும் முஸ்லிம் இனவெறுப்பின் வெளித்தோற்றம்தான். அதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் இருக்கும். இலங்கை முஸ்லிம்களோடு பழகாமல், அவர்களுடன் நண்பர்களாகக்கூட இல்லாமல் இருக்கும் எனக்குள்ளும் ஏதோ ஒரு இனவெறுப்பு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்தத் தாக்குதல்களை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய நெருக்கடியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நெருக்கடி தமிழர்களுக்கு நன்மைகளைப் பயக்காது. அதாவது சிங்களவர்கள் தமிழர்களை திடீரென்று நன்றாக நடத்தப்போவதில்லை. கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

ஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
 

புலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன. பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல.
ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை. தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள். இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள்.


அன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது.

இன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புலிகள் கோலோச்சிய காலத்தில்கூட  தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது.

தமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது. யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.!

ஒரு நண்பர் வாட்சப் மூலம் அனுப்பிக் கிடைத்த இடுகை. 
  • கருத்துக்கள உறவுகள்

இது சந்தர்ப்பவாத உளறல். இதே நாடுகள் எமது இனத்தை அழிக்க கூட்டுச் சேர்ந்து குண்டு போட்ட போது எத்தனை தேவாலயங்கள் அழிந்தன.. எந்தனை தமிழ் பேசும் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அழிந்தார்கள்.

அப்போதெல்லாம்.. அந்த அப்பாவி மக்களும்.. இவர்களுக்குப் பயங்கரவாதிகளாகவே தென்பட்டனர்.

நவாலி தேலாவயம் மீது குண்டு போட்டுவிட்டு பயங்கரவாதிகளின் பெரிய முகாம் தகர்க்கப்பட்டது என்று கதிர்காமரை வைத்துப் பொய் சொன்னவர்கள்.. சந்திரிக்கா அம்மையாரும்.. ரத்வத்தையும். 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

முன்பு சிறு வயதில் வாசித்தது ஒன்று ஞாபகம் வருகிறது .

பெரிய கப்பல் ஒன்று போய் கொண்டிருக்கு அதில் எதோ பழுது வந்து விட்டது இன்னும் அரை  மணி நேரத்தில் அது எதோ ஒரு நிலையாக இருக்கும் இரு பெரிய பகுதியுடன் மோதப் போகின்றது .

எனக்கு ஒரே குழப்பம். அரை மணித்தியாலத்தில் மொத்தப் போகின்றது என்றால்  ஏன் இவங்கள் பிரேக் போட்டு நிப்பாட்ட வேண்டியது தானே என்று .

எங்களுக்கும் அரை மணித்தியாலம் அல்லது சற்றுக்  கூடுதலான ஒரு நேரத்தில் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கக் இருக்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை .

இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்பதில் கொள்கையளவில் எல்லாரிடமுமே ஒரு புரிந்துணர்வு இருப்பதை  நாங்கள் உணர்ந்து கொள்ளலாம் .நிபந்தனைகள் எல்லாம் ஒருமித்து வரும் போது இது சாத்தியமாகின்றது.  இதற்கான உறுதியான அத்திவாரம் 83 இலிருந்து ௦9 வரை அந்த உத்தமர்கள் இட்டு விட்டு தான் போயிருக்கிறார்கள்.

இரட்டைக் கோபுரம்,  2019  ஈஸ்டர் என்பதெல்லாம் நிபந்தனைகளை ஒருமிக்க வைக்கும் கூட்டு செயல் பாடுகளின் பகுதிகளே . இன்றைய திகதியில் இலகுவாக தீர்த்து வைத்திருக்க வேண்டிய தமிழரின் பிரச்சனையை  தீர்க்காமல் விட்டு நாட்டைஇராணுவ மையப்படுத்தி வைத்திருப்பதுவும் ஈஸ்டர் 2019 க்கு ஒரு  காரணி என இவர்கள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருப்பதே இவர்களின் இந்த கூற்றுக்கு காரணம்.   

 நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயலிழக்கமால் நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்வது தான்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

இதெல்லாம் ஓரிரு நாட்களில் செய்யக் கூடிய விடயங்கள் என்று உண்மையிலேயேயே நம்புகிறீர்களா.

தனது சொந்த நலன்களை பாதுகாத்தல் , பொது நியாயங்களை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு etc  என்று சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டிய நிலைமைகள் இருப்பதனை நாங்களும் புரிந்து கொள்ள  வேண்டும். 

சம்பந்தப்பட்டவர்கள் ( வர்கள், நாங்கள் , நீங்கள் ) எல்லோரும் முரண்பாடுகளை குறைக்கும் வகையில் செயல்படும் வேளையில் இதன் சாத்தியப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் .

  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு அதாவது எனது அப்பாக்களுடன் வாழ்ந்த அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இனவாதம் இல்லை தமிழர்களுடன் சேர்ந்து வாழப்பழகியவர்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு தனிய தனிய என்பதை விட ஊர் ஊருக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது கரையோர பிரதேசம் எங்களுக்கு வேண்டும் அல்லது ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் எக்காரணம் கொண்டும் வட்க்கு கிழக்கும்  இணையக்கூடாது கிழக்கில்  இருக்கும் தமிழர்களிடம் தாங்கள் கையேந்தக்கூடாது  என்றும் நினைத்து வாழ்கிறார்கள் வாயால் ஒற்றுமையென்று சொல்லிவிட்டு மனதால் அது சரிப்பட்டு வராது என்று வாழ்கிறார்கள்

 

சின்ன உதாரணம் கல்முனை  தமிழ் பிரதேச செயல்கத்தை தரம் உயர்த்தகூடாதெனவும் அதற்கு ஆதரவு கேட்டு தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு தடையுத்தரவும் (நீதிமன்றத்தில்) வழக்கும் போட்டவர்கள் இவர்களை நம்புவர்கள் இன்று யாரும் இல்லை அவர்கள் அவர்களது பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.