Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!! வெளிவரும் உண்மைகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஒரு ISIS தீவிரவாதியை மடக்கி சோதனையிட்டபோது......

59915417_2106574139461793_83009947946251

ஆயுதங்களை கடத்துவது இப்படியானவர்கள் தான்...தமிழர்களுக்கு நடக்காததா இவர்களுக்கு நடந்து போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

ஆயுதங்களை கடத்துவது இப்படியானவர்கள் தான்...தமிழர்களுக்கு நடக்காததா இவர்களுக்கு நடந்து போச்சு 

உங்களுக்கு இந்த படம் ஒரு தமிழ் மூதாட்டியாக தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

உங்களுக்கு இந்த படம் ஒரு தமிழ் மூதாட்டியாக தெரியவில்லையா?

இல்லை...இந்த அம்மா முஸ்லீம் பெண் தான் ...அப்படியே தமிழ் பெண்ணாயிருந்தாலும் நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் செக் பண்ணுவது தப்பில்லை.

இன்றைய உலகில் மதங்கள் எதையும் பற்றாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

ஒரு காரணாமாக மதம் சார்ந்த வன்முறைகளும் மறுபக்கம் மக்கள் மயமாக்கப்படும் தொழில்நுட்பமும் ( தொழில்நுட்பம் மத வாதத்தை பரப்பவும் உதவுகின்றது) காரணமாக அமைகின்றன. 

உலகம் ஒருநாள் மத வன்முறை அற்ற தேசமாகலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி முஸ்லிம் பெண் என சொல்கிறீர்கள்?  தலையை மூடி இருப்பார்கள் முஸ்லிம் பெண்கள் அல்லவா?

கடந்த பத்து வருடங்களாக தமிழர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.முஸ்லிம்கள் தான் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர்கள்.அவர்களை சோதிப்பது தானே சரி. நீங்கள் சொல்வது போல் சோதிக்க வேண்டுமென பார்த்தால் ஏன் சிங்களவர்களை சோதனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

நுணா,கிழக்கில் இருக்கும் எல்லா முஸ்லீம் பெண்களும் முகத்தை மூடுவதில்லை...காத்தான்குடியில் இருப்பவர்கள் தான் அதிகமாய் முகத்தை மூடுவார்கள். ..இப்ப இருக்கிற சூழ்நிலையில் காசுக்காய் தமிழ் மக்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ,
நிற்க, சிங்களப் பகுதியில் சோதனைகள் நடக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?,,,தவிர அவங்கட  பகுதியில் எதுவும் நடந்தால்/நடக்காட்டில் எனக்கு அது பற்றி கவலை இல்லை...எங்கட பகுதியில் ஒன்றும் நடக்க கூடாது அது தான் என் கவலை.
நானறிந்த வரை மட்டில் தமிழர்களுக்கு ஆமியால் ஒரு செக்கிங் பிரச்சினை இல்லையாம்...இனி மேல் குண்டு வெடித்திடுமோ என்ற பயத்தை தவிர ,வேறு பிரச்சினை ஆமியால் இது வரை தமிழர்களுக்கு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உண்மை தான்...இனி மேலாவது இப்படியான ஆட்களை பிடித்து உள்ளுக்குள் போட வேண்டும் 

எப்படி கவலைப் படாமல் இருப்பது அவர்களும் எங்கட இனம் தானே😟

என்னது எங்கடை இனமா ஹாஹா மாறிப்போனவர்கள் மாறினவர்கள் நம்ம சமயத்தையும் மதத்தையும் கேலியும் கிண்டல் அடிப்பதும் இவர்கள்தான்.  இந்த  மாறிய கிறிஸ்தவர்கள் நம்ம கடவுளை சாத்தான்கள் என்பார்கள் ஆனால் இறந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தி பூசை நடக்கிறது அனைத்து சைவ கோயில்களிலும் நடக்கிறது உண்மையில் சைவர்கள் மதத்தை திணிப்பது இல்லை நீ வா என இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென

31 minutes ago, ரதி said:

நுணா,கிழக்கில் இருக்கும் எல்லா முஸ்லீம் பெண்களும் முகத்தை மூடுவதில்லை...காத்தான்குடியில் இருப்பவர்கள் தான் அதிகமாய் முகத்தை மூடுவார்கள். ..இப்ப இருக்கிற சூழ்நிலையில் காசுக்காய் தமிழ் மக்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ,
நிற்க, சிங்களப் பகுதியில் சோதனைகள் நடக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?,,,தவிர அவங்கட  பகுதியில் எதுவும் நடந்தால்/நடக்காட்டில் எனக்கு அது பற்றி கவலை இல்லை...எங்கட பகுதியில் ஒன்றும் நடக்க கூடாது அது தான் என் கவலை.
நானறிந்த வரை மட்டில் தமிழர்களுக்கு ஆமியால் ஒரு செக்கிங் பிரச்சினை இல்லையாம்...இனி மேல் குண்டு வெடித்திடுமோ என்ற பயத்தை தவிர ,வேறு பிரச்சினை ஆமியால் இது வரை தமிழர்களுக்கு இல்லை 

காத்தான்குடியில் மட்டும் முகத்தை மூடுவார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது எல்லா முஸ்லீம் ஊருகளிலும் மூடுபவர்கள் இருக்கிறார்கள் அதுபோக வயசு போன அம்மாக்கள் (முஸ்லீம்) முக்காடு போடாமல் இருக்க மாட்டார்கள் .

காசுக்காகவும் செகுசுக்காகவும் கன தமிழர்கள் மாறியும் இருக்கிறார்கள் காட்டியும் கொடுத்து இருக்கிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் ஏன் தொடர்ந்துகொண்டு இருக்கும்  அப்ப  யாழ்ப்பாணத்தில் கம்பசியில் ஏன் நோண்டுறாங்கள் உந்த செய்திகளெல்லாம் தெரியுமோ என்ன அங்கு மாணவர்களை கைதும் பண்ணி இருக்கிறார்கள் 

தமிழர் பகுதிகளும் சோதனையிடப்படும் கொஞ்ச நாள் பொறுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னது எங்கடை இனமா ஹாஹா மாறிப்போனவர்கள் மாறினவர்கள் நம்ம சமயத்தையும் மதத்தையும் கேலியும் கிண்டல் அடிப்பதும் இவர்கள்தான்.  இந்த  மாறிய கிறிஸ்தவர்கள் நம்ம கடவுளை சாத்தான்கள் என்பார்கள் ஆனால் இறந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தி பூசை நடக்கிறது அனைத்து சைவ கோயில்களிலும் நடக்கிறது உண்மையில் சைவர்கள் மதத்தை திணிப்பது இல்லை நீ வா என இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென

காத்தான்குடியில் மட்டும் முகத்தை மூடுவார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது எல்லா முஸ்லீம் ஊருகளிலும் மூடுபவர்கள் இருக்கிறார்கள் அதுபோக வயசு போன அம்மாக்கள் (முஸ்லீம்) முக்காடு போடாமல் இருக்க மாட்டார்கள் .

காசுக்காகவும் செகுசுக்காகவும் கன தமிழர்கள் மாறியும் இருக்கிறார்கள் காட்டியும் கொடுத்து இருக்கிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் ஏன் தொடர்ந்துகொண்டு இருக்கும்  அப்ப  யாழ்ப்பாணத்தில் கம்பசியில் ஏன் நோண்டுறாங்கள் உந்த செய்திகளெல்லாம் தெரியுமோ என்ன அங்கு மாணவர்களை கைதும் பண்ணி இருக்கிறார்கள் 

தமிழர் பகுதிகளும் சோதனையிடப்படும் கொஞ்ச நாள் பொறுங்கள் 

தனி, நான் காத்தான்குடி பெண்கள் தான் அதிகமாய் முக்காடு போடுவார்கள் என்று சொன்னேன்...அதற்காக மற்றவர்கள் போட மாட்டார்கள் என்று அர்த்தமில்லை 

வெடி பொருட்களோடு ஒரு லொறி மட் டுவிற்கு போயிருக்காம் என்று செய்தி அடிபடுது...அத்தோடு ஆரம்ப பாடசாலை 13ம் திகதி தான் தொடங்குதாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்பெண் ராசிக்கிடன் என் பிள்ளை இனிமேல் உனக்கெ அடைக்கலம் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டாவாம்  பிள்ளையை யாரோ அதுவும் பெண்பிள்ளையை யாரோ அனாமத்தில கொண்டுபோய்விட்டான் பெற்றதாய் வெளிநாட்டுக்கு யாருக்கு உழைக்கப்பானவவாம்.

இவவுக்கு நல்லமாதிரி சிகிச்சை கொடுத்தால் எல்லா உண்மையும் வெளியில வரும் 

பெத்த பிள்ளையை சோனகணோட கூட்டிக்கொடுத்துவிட்டு இப்ப குத்துது குடையுது எனக்கூறுகிறா.

தனி, நீங்கள் கெதியா கல்யாணம் கட்டினால் இன்னொரு பெண் முஸ்லிம்களால் கடத்தப்படாம தடுக்கலாமெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

தனி, நீங்கள் கெதியா கல்யாணம் கட்டினால் இன்னொரு பெண் முஸ்லிம்களால் கடத்தப்படாம தடுக்கலாமெல்லோ?

அவர் கலியாணம் கட்டி இப்ப தான் 2 மாதம் ஆகுது.

1 minute ago, Nathamuni said:

அவர் கலியாணம் கட்டி இப்ப தான் 2 மாதம் ஆகுது.

ஓ! நல்ல விஷயம்! தெரியாம போச்சு! தனிக்கு வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி நாதமுனிஸ்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

புலஸ்தினி எப்படி சாராவாக மாறினார்? முஹமட் ஹஸ்துனுடன் திருமணம் நடைபெற்றது எப்படி?

சாரா எனப்படும் புலஸ்தினி மற்றும் முஹமட் ஹஸ்துன் ஆகியோரின் திருமண வாழ்க்கை தொடர்பான பல தகவல்களை சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராஸிக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு

கேள்வி- நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்திய முஹமட் ஹஸ்துன் முன்னறியப்பட்டவரா?

பதில் - நான் கொழும்பைச் சேர்ந்தவன். முஹமட் ஹஸ்துன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். ஓட்டமாவடியில் எமது கிளையொன்று உள்ளது. அங்கு கூட அவர் வந்ததில்லை. அவர் எமது உறுப்பினர் கூட கிடையாது.

கேள்வி - அப்படியாயின் அவருடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?

பதில் - 2015.08.04 அன்று ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பின் தலைமையகத்துக்கு அந்த இளைஞனும், ஒரு யுவதியும் வந்தார்கள்.

அப்போது நான் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தேன். அங்கு வந்த அந்த இளைஞன் குறித்த யுவதி இஸ்லாம் மதத்தை தழுவ உள்ளதாகவும் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறும் கோரினார்.

அன்று தான் நானும் அவர்களை முதற்தடவையாக சந்தித்திருந்தேன். அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தாரின் விபரத்தை கோரி அவர்களை கொழும்புக்கு வரவழைத்திருந்தோம்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையத்திலேயே அவருடைய குடும்ப உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது மனித உரிமை அலுவலக அதிகாரியொருவரும் இருந்தார்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, புலஸ்தினியின் தாயார் இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் தன்னுடனேயே வர வேண்டும் என்று ஆதங்கத்துடன் கண்ணீர் விட்டுக் கூறவும், புலஸ்தினி அதனை மறுத்தார்.

1996 இல் பிறந்த புலஸ்தினி மேஜராக இருப்பதால் அவருக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று பொலிஸ் அறிவுரை வழங்கியது.

பின்னர் ஆகக்குறைந்தது ஐந்து நாட்களாவது தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தாயார் பொலிஸாரிடத்தில் கோரவும் அதற்கும் அனுமதி கிடைத்தது.

கேள்வி - புலஸ்தினி தாயாருடன் சென்ற போது ஹஸ்துன் என்ன செய்தார்? அவர் தேசிய தௌஹித் அமைப்பில் அங்கத்துவத்தை கொண்டிருந்தமை பற்றி நீங்கள் அறிவீர்களா?

பதில் - இந்தப் பேச்சுகள் நடைபெற்ற தருணத்தில் ஹஸ்துன் ஒதுங்கியே இருந்ததை நாம் அவதானித்தோம். அவருடைய குடும்பத்திலும் எவரும் வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் தேசிய தௌஹீத் அமைப்பில் இருந்தாரா இல்லையா என்பது பற்றி எமக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த அமைப்பில் இருந்திருந்தால் இங்கு வராது காத்தான்குடிக்கல்லவா சென்றிருக்க வேண்டும்.

கேள்வி - புலஸ்தினிக்கும் ஹஸ்துனுக்குமான திருணம் எவ்வாறு நடைபெற்றது?

பதில் - தாயாருடன் சென்ற புலஸ்தினி மீண்டும் வரவே இல்லை. ஆனால் அவர் 2015.08.04 அன்று, தான் இஸ்லாமிய மதத்தை தழுவுவதாகவும் தனது பெயரை சாரா யஸ்மின் என மாற்றிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

அதற்கான எழுத்து மூல ஆவணம் எம்மிடத்தில் உள்ளது. பின்னர் 2015.09.25 அன்று, தலைமையகத்துக்கு இருவரும் வந்தார்கள்.

தன்னைத் தாயார் அழைத்துச் சென்றதால் தனது விருப்பப்படி இஸ்லாமிய மதத்தை பின்பற்ற முடியவில்லை என்றும், தனது வகுப்புத் தோழனான ஹஸ்துனை திருமணம் முடித்து வைக்குமாறும் கோரியதோடு அதற்கு எழுத்து மூலமான கடிதத்தையும் எமக்கு வழங்கினார்.

ஹஸ்துனும் புலஸ்தினியை திருமணம் முடிக்க சம்மதித்திருப்பதாக எழுத்து மூலமான உறுதியை வழங்கினார்.

அச்சந்தர்ப்பதில் கூட சாராவின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் தீர்மானத்தை நாம் எடுத்ததோடு அது பற்றிய அறிவிப்பினை அவருடைய தாயாருக்கும் விடுத்தோம்.

கேள்வி - அதன்பின்னர் அவர்கள் பற்றி ஏதும் அறிந்திருந்தீர்களா?

பதில் - இருவருக்கும் இடையில் சர்ச்சைகள் நீடிக்கவும் புலஸ்தினி தன்னுடைய சித்தியை நாடி ஹஸ்துனை பிரிந்து சென்றார்.

அவ்வாறு பிரிந்து செல்லும் போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2015.12.31 அன்று முறைப்பாடு பதிவு செய்து விட்டு விவாகரத்துக்கான கோரிக்கையும் செய்துள்ளார்.

இந்த விடயம் பற்றி அவர் எமக்கு எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் ஹஸ்துன் மற்றும் அவரது அண்ணன் முன்னிலையில் விவாகரத்து கோரியது உட்பட இஸ்லாம் சமயத்திலிருந்து விலகி தனது சொந்த இந்து சமயத்தையே பின்பற்றவுள்ளதாகவும், பெயர் மாற்றத்தினையும் நீக்கிக் கொள்வதாகவும் எங்களது அமைப்புடனான சகல விடயங்களையும் துண்டித்துக் கொள்வதாகவும் விலக்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்துடன் அவருடனான அனைத்து உறவுகளும் இல்லாது போய்விட்டன.

கேள்வி - பின்னர் ஹஸ்துன் உங்களை தொடர்பு கொள்ளவில்லையா,

பதில் - இல்லை

கேள்வி - ஆனால் புலஸ்தினியை காணவில்லை என்று அவருடைய தாயார் உங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறுகின்றாரே?

பதில் - ஆம், 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருடைய அம்மா தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது மகளை காணவில்லை என்று கூறினார்.

இரண்டு மாதத்துக்கு முன்னர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், குருநாகல் - நாரம்மல பகுதியில் வீடு வாங்குவதற்கு 15 இலட்சம் ரூபா பணம் கேட்டார் எனவும் அதனை தயார் செய்த பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

அப்போது தாயாரின் கண்ணீர் கோரிக்கையை கருத்திற் கொண்டு எமது கிளை சகோதரர்கள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிலருக்கும் இந்த பெண்ணின் விபரத்தை வழங்கி தாயார் தேடும் விடயத்தினைக் கூறியிருந்தோம்.

தற்போது தாயார் ஆதங்கத்தில் என்மீது குற்றம் சாட்டுகின்றார். ஆனால் அவருக்கு மனிதாபிமானமாக நாம் உதவியிருக்கின்றோம் என்பதை அவர் நன்கு அறிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/119842

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 9:57 PM, ரதி said:

தனி, நான் காத்தான்குடி பெண்கள் தான் அதிகமாய் முக்காடு போடுவார்கள் என்று சொன்னேன்...அதற்காக மற்றவர்கள் போட மாட்டார்கள் என்று அர்த்தமில்லை 

வெடி பொருட்களோடு ஒரு லொறி மட் டுவிற்கு போயிருக்காம் என்று செய்தி அடிபடுது...அத்தோடு ஆரம்ப பாடசாலை 13ம் திகதி தான் தொடங்குதாம் 
 
ம்ம் பாடசாலை தொடங்கியது ஆனால் மாணவர்கள் , பெற்றோர்கள் மத்தியில் சின்ன கலக்கம் அதுபோக உறவுகளை இழந்தவர்கள் உயிரோடு இருந்தால் போதுமென பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை  வரவு குறைவு ஆனால் பாதுகாப்பி ஏற்பாடுகள் அரசினால் சிறந்த முறையில் கொடுக்க்ப்பட்டுள்ளது  இருந்தாலும் ஒன்று நடந்து முடிந்த பிறகே நாம் விழித்துக்கொள்கொறோம் 

அந்த லொறி அப்படி என்று கதை அடிபடுது ஆனால் எல்லா இடங்களிலும் சோதனை சாவடிகள்  பாதுகாப்பு பிரிவு சகல துறையினதும் களத்தில் இப்ப வரைக்கும் ஊர்களிலும்

On 5/5/2019 at 5:26 AM, Rajesh said:

தனி, நீங்கள் கெதியா கல்யாணம் கட்டினால் இன்னொரு பெண் முஸ்லிம்களால் கடத்தப்படாம தடுக்கலாமெல்லோ?

சாமி குடும்பத்த பிரிச்சுடாதடா அம்பி 

On 5/5/2019 at 5:32 AM, Nathamuni said:

அவர் கலியாணம் கட்டி இப்ப தான் 2 மாதம் ஆகுது.

ஏன்டா சொல்லி கொடுக்கிறாய் 

On 5/5/2019 at 5:33 AM, Rajesh said:

ஓ! நல்ல விஷயம்! தெரியாம போச்சு! தனிக்கு வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி நாதமுனிஸ்!

நன்றி அப்பு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.