Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z_p05-why.jpg

மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு

வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மக்களுக்கான-காலக்கெடு-நி/

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில மரக்கறி வெட்டிற, குழை வெட்டிற கத்திகளையும் ஒப்படைக்கணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தொட்டிகள் வைத்தால் பொலிஸூக்கு பயப்படும் மக்களும் இதனை ஒப்படைப்பார்கள். பிரித்தானியாவில் அண்மையில் அதிகரித்துள்ள கத்திக் குத்துச் சம்பவங்களுக்குப் பின்.. பொதுத் தொட்டிகளில்.. கூரிய ஆயுதங்களை.. மனிதருக்கு உயிர் ஆபத்து விளைவிக்க வல்ல.. கூரிய ஆயுதங்களை ஒப்படைக்க கோரப்பட்டது. ஒப்படைப்பவர்கள் அநாமதேயத்தவர்களாக.. அனானிமஸ்.. ஆக தொடர்ந்து இருக்கலாம். 

இப்படியான காலக்கெடுக்கள் எந்தளவுக்கு வேர்க் அவுட் ஆகுமோ..?! 

  • கருத்துக்கள உறவுகள்

இனி வடக்கில் வாள்வெட்டுகாரரின் அட்டகாசம் துளியும் இருக்காது(?) அல்லது குறஞ்சிடும் என்று நம்பலாமா? வாளுக்கு பஞ்சமில்லை கொழும்பிலை யாரோ ஒரு முஸ்லிம் கனவான் சீனாவிலிருந்து பெரிய தொகை வாள் எடுப்பிச்சு மசூதியில் பற்றை வெட்ட கொடுத்ததாக அண்மையிலைதான படிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. 

 

என்னடா சூட்கேஸ் உறை செய்யுற துணியில உடுப்பு செய்து போட்டுருக்க..🤔

SarcasticCheapFinwhale-size_restricted.g

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பாக்குவெட்டி, சத்தகம், அரிவாள், உளி இப்படி உள்ள கூர்ச்சாமான்கள் எல்லாத்தையும் எங்கடைசனத்திட்டையிருந்து புடிங்கிட்டிபோயிற்றா ஊரிலை மிஞ்சியிருக்கிறது வெறும் சேமணையாத்தான் இருக்கும். அப்ப இந்த வருசமும் ஊருக்குபோறதை நினைச்சும் பார்க்கேலாது. அடங்கொய்யால எதை கொண்டுபோனாலும் கொண்டு போங்க என்ரை நல்லூரான்ரை வேலாயுதத்தை மட்டும் கேட்டுபோடாதையுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

இவர்களின் அறிவிப்பை நம்பி..... நேரில் கொண்டு போய் ஒப்படைக்க, 
பயங்கரவாதிகள் அவ்வளவு முட்டாள்கள், என நான் நம்பவில்லை.
கிழக்கில் முஸ்லீம் மயானத்தில் சில துப்பாக்கிகளும், குண்டுகளும் கண்டு பிடித்தார்கள்.

வடக்கில், நாவாந்துறையில்... கூரிய  ஆயுதங்களை எறிய வந்த...  மூன்று முஸ்லீம்களில்,
ஒருவர் பொது மக்களால் பிடிக்கப் பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்  பட்டுள்ளார்.
மற்ற இருவர் தப்பி ஓடி விட்டார்களாம்.

மிகுதி ஆயுதங்களை... எங்காவது குளத்தில் எறிந்திருப்பார்கள்.
கோடைக்கு குளம் வத்தும் போதுதான்,   உண்மை தெரியவரும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

கிழக்கில் நிறைய முஸ்லீம் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இறைச்சி வெட்டும் கத்தி,வாள் போன்றவற்றை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்களாம் என்று கேள்விப் பட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

கிழக்கில் நிறைய முஸ்லீம் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இறைச்சி வெட்டும் கத்தி,வாள் போன்றவற்றை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்களாம் என்று கேள்விப் பட்டேன் 

ரதி கிழக்கு நிலமை வேறு.
வடக்கில் யார்யாரிடம் என்ன என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது பாதுகாப்பு படையினருக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.