Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள்! எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் 'ஹரோ ஒன்த ஹில்' பிராந்தியத்தில் உள்ள 'மெட்ரோ வங்கி' வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள்.

தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமென்றே பரப்பிவருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பான ஒரு உத்தியோகபூர்வ மின்னஞ்சலையும் எமக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/uk/80/119719?ref=imp-news

சமூக வலைஊடகங்கள் வந்த பொய் செய்தி கீழே 

Urgent . Guys if anyone has metro bank account with money or locker. You need to empty as soon as possible. The bank is facing lot of financial difficulties and may be shut down down or going bankrupt. Their share price and market capital has dropped by 85% since last year and they may not get funding. If your money or locket gets trapped might be harder to pull money out or even loss. Please withdraw all lockers and keep in a safe place. https://www.bbc.com/news/business-48215674

அநேகமான மெற்றோ பாங்கில் இன்று இதுதான் நிலைமை . எங்கடை தமிழ் சனம் தாங்களாகவே கள்ளருக்கும் கொள்ளையருக்கும் இன்று பதறி அடிச்சு காட்டி கொடுத்துவிட்டுதுகள் இனி வரும் காலம் மிகுந்த அவதானமாய் இருப்பது நல்லது .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து விட்டது அந்த ஒரு வதந்தி செய்தியால் பல பேருடைய ரகசியமான இருப்புக்கள் தெரிய வந்துள்ளன இன்னார் இன்னார் எல்லாம் எக்ஸ்ட்ரா பெரிய பொக்ஸ் வைத்து இருக்கினம் என்று அங்கு போன பொம்பிளையள் கதைக்க தொடங்கி விட்டினம் இனி கள்வர்களின்  அறுவடைதான் என்று இருக்காமல் உசாராக இருப்பது நல்லது வாடைகை  வீடோ சொந்த வீடோ பாதுகாப்பு அலாரம் பூட்டுவது முக்கியம் halifax போன்ற வங்கிகள் எல்லா கிளையும் அல்ல முக்கிய கிளைகள் லொக்கர் சிஸ்ட்டம் உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ரோ வங்கிக்கு இப்போ கஸ்டகாலம் என்பது பொய்செய்தி அல்ல. வங்கியின் பிரதான முதலீட்டாளர் பின்வாங்கியுள்ளார்.

https://www.theguardian.com/business/2019/jan/23/metro-bank-shares-crash-after-loans-blunder-revealed 

ஆனால் சேவ் டிபோசிட் பெட்டி மட்டுமே வங்கிக்குகுரியது அதில் உள்ள பொருட்கள் அல்ல, ஆகவே வங்கி திவால் ஆனாலும் அதிலுள்ள பொருட்களை வங்கிக்கு கடன் தந்தவர்கள் தொட முடியாது.

வங்கி திவால் ஆனாலும், வங்கியில் வைபிலிட்ட பணத்திலும் - 85000£ வரை அரசு திருப்பித் தரும்.

ஆகவே இப்படி முண்டியடிக்க வேண்டியதில்லை.

கொசுறு: ஹரோ பகுதியில் மிகவும் விலை உயர்ந்த பகுதியே ஹரோ ஹில்ஸ் இங்கே தமிழர் செறிந்து வாழ்வதாக, அங்கிருந்து 2 மைல் தூரத்தில் அலுவலகம் நடத்தும் ஒரு ஊடகம் பிதற்றுகிறது😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை எனக்கு WhatsApp இல் வந்து இது தான்,

*Urgent* . Guys if anyone has metro bank account with money or locker. You need to empty as soon as possible. The bank is facing lot of financial difficulties and may be shut down down or going bankrupt. Their share price and market capital has dropped by 85% since last year and they may not get funding. If your money or locket gets trapped might be harder to pull money out or even loss. Please withdraw all lockers and keep in a safe place. https://www.bbc.com/news/business-48215674

அனுப்பியவருக்கு எனது பதில்,

FAB35-EF0-58-F9-43-DB-994-E-9-A831-FBA1-

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகள் எல்லா விதத்திலும் பாதுகாப்பு என்டு நினைக்கும் எம்மவர்களுக்கு சமர்ப்பனம்.ஒலகம் உருண்டை.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் ஆமி வருகுதாம் என்ற வதந்திக்கே.. மண்ணைக் கிண்டி.. அடுப்பைக் கிண்டி..  நகையை தாட்டிட்டு ஓடிற கூட்டம். ஆனால்.. புலிகள் 16 கிராம் கடனாத் தாங்கோ..தாயக மீட்பு நிதி என்று கேட்ட போது.. நகையை பறிக்கப் போறாங்கள் என்று கொழும்புக்கு பெட்டிகட்டின ஆக்கள் பலர்.

எம்மவர்களில் அநேகர்.. அறிவாலிகள் போல தோற்றம் காட்டும் அறிவிலிகள். என்ன தான் படிச்சாலும்.. வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். ☺️

வங்கிகள் நிதி.. நெருக்கடிகளை சந்திப்பதும்.. மீள்வதும் வழமை. 2008 இல் இருந்து எத்தனை வங்கிகள் இதனைச் சந்தித்து விட்டன. 

ஆனால்.. வங்கி முறைமையே மக்களிடம் உள்ளதை அரசுக்கு சார்ப்பான இடத்தில் புடுங்கி வைப்பது தான். அதனை ஏற்று தான் நாம் எல்லோரும் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
 
4 hours ago, goshan_che said:

கொசுறு: ஹரோ பகுதியில் மிகவும் விலை உயர்ந்த பகுதியே ஹரோ ஹில்ஸ் இங்கே தமிழர் செறிந்து வாழ்வதாக, அங்கிருந்து 2 மைல் தூரத்தில் அலுவலகம் நடத்தும் ஒரு ஊடகம் பிதற்றுகிறது😂

இதென்னப்பா, நம்ம  ஊரைப் பத்தி நமக்கே தெரியாத செய்தி.

Harrow-on-the -Hill  ஒரு நகர் பகுதி. இங்கே விலை உயர்ந்த வீடுகள் இல்லை. அலுவலங்கள், சில அடுக்கு மாடிகள், அங்காடிகள் உள்ளன.

இந்த வங்கியும் அங்கெ உண்டு.

இந்த நகர் (town) உள்ள Harrow மாவட்டம் (Borough) வில், hatchend, pinner village cucoo hill போன்ற விலையுயர்ந்த வீடுகளுள்ள பகுதிகள் உள்ளன.

IBC இருப்பது, south ruislip பகுதி. இது Hillington மாவட்டம் (Borough).

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

Harrow on the Hill station , Harrow on the Hill இல் இராமல் Harrow Town Center அல்லது Green Hill இல் இருப்பதால் ஏற்படும் மயக்கம் இது. ஊரில இணுவில் ஸ்டேசன் புகையிலை தோட்டத்துக்க இருக்க, இணுவில் ஊர் கொஞ்சம் தள்ளி இருப்பதைப் போல. நீங்கள் சொல்லும், Harrow on the Hill station, அலுவலகங்கள், Harrow high school,  இருக்கும் இடத்தின் பெயர் Green Hill. ஸ்டேசனுக்கு பக்கத்தில இப்ப Harrow college என்றழைக்கபடும் FE college இருக்கிறதே, ஒரு 30 வருடங்களுக்கு முன் அதன் பெயரே கிறீன் ஹில் காலேஜ்.

உண்மையான Harrow on the Hill என்பது பாரம்பரியம் மிக்க Harrow School boarding school இருக்கும் அந்த மலைப்பாங்கான இடம் மட்டுமே. அங்க வீட்டு விலை தெரியும்தானே?

தரவுக்கு கீழே உள்ள சுட்டியை தட்டவும்:

https://en.m.wikipedia.org/wiki/List_of_districts_in_the_London_Borough_of_Harrow

(Harrow-on-the-Hill station, although named after the settlement, is located some distance to the north of the hill).

ஹிலிங்டன் - ஹரோ எல்லையில் அமைந்திருந்தாலும்- ஐபிசி அமைந்திருக்கும் விக்டோரியா ரொட் ரீடெய்ல் பார்க்குக்கும், ஹரோவுக்கும் 2 மைல் தூரம்தான் வரும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

காலம் கடந்து விட்டது அந்த ஒரு வதந்தி செய்தியால் பல பேருடைய ரகசியமான இருப்புக்கள் தெரிய வந்துள்ளன இன்னார் இன்னார் எல்லாம் எக்ஸ்ட்ரா பெரிய பொக்ஸ் வைத்து இருக்கினம் என்று அங்கு போன பொம்பிளையள் கதைக்க தொடங்கி விட்டினம் இனி கள்வர்களின்  அறுவடைதான் என்று இருக்காமல் உசாராக இருப்பது நல்லது வாடைகை  வீடோ சொந்த வீடோ பாதுகாப்பு அலாரம் பூட்டுவது முக்கியம் halifax போன்ற வங்கிகள் எல்லா கிளையும் அல்ல முக்கிய கிளைகள் லொக்கர் சிஸ்ட்டம் உண்டு .

 பெருமாள்!  உங்கை இப்ப புதிசாய் கட்டுற வீடுகளிலை கள்ளர் களவெடுக்கிறது கொஞ்சம் கஸ்டம் எண்டுறாங்கள்.....உண்மையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

நாமு,

Harrow on the Hill station , Harrow on the Hill இல் இராமல் Harrow Town Center அல்லது Green Hill இல் இருப்பதால் ஏற்படும் மயக்கம் இது. ஊரில இணுவில் ஸ்டேசன் புகையிலை தோட்டத்துக்க இருக்க, இணுவில் ஊர் கொஞ்சம் தள்ளி இருப்பதைப் போல. நீங்கள் சொல்லும், Harrow on the Hill station, அலுவலகங்கள், Harrow high school,  இருக்கும் இடத்தின் பெயர் Green Hill. ஸ்டேசனுக்கு பக்கத்தில இப்ப Harrow college என்றழைக்கபடும் FE college இருக்கிறதே, ஒரு 30 வருடங்களுக்கு முன் அதன் பெயரே கிறீன் ஹில் காலேஜ்.

உண்மையான Harrow on the Hill என்பது பாரம்பரியம் மிக்க Harrow School boarding school இருக்கும் அந்த மலைப்பாங்கான இடம் மட்டுமே. அங்க வீட்டு விலை தெரியும்தானே?

தரவுக்கு கீழே உள்ள சுட்டியை தட்டவும்:

https://en.m.wikipedia.org/wiki/List_of_districts_in_the_London_Borough_of_Harrow

(Harrow-on-the-Hill station, although named after the settlement, is located some distance to the north of the hill).

ஹிலிங்டன் - ஹரோ எல்லையில் அமைந்திருந்தாலும்- ஐபிசி அமைந்திருக்கும் விக்டோரியா ரொட் ரீடெய்ல் பார்க்குக்கும், ஹரோவுக்கும் 2 மைல் தூரம்தான் வரும்.

இன்றும் நாளையும் நம்ம சனம் நகையை திருப்பி எடுக்கிறம் என்று கள்ளனுக்கும் கொள்ளையனுக்கும்  தாங்களா போட்டு கொடுத்து அநியாயமாய் பறி கொடுக்க போகுதுகளே என்று நான் கவலைப்பட நீங்க இரண்டு பேரும் இங்கிலாந்துக்கு எல்லை கீறி கொண்டு இருக்கிறியள் .

4 minutes ago, குமாரசாமி said:

 பெருமாள்!  உங்கை இப்ப புதிசாய் கட்டுற வீடுகளிலை கள்ளர் களவெடுக்கிறது கொஞ்சம் கஸ்டம் எண்டுறாங்கள்.....உண்மையோ?

அது ரகசியம் அண்ணை 

Harrow on the Hill எனக்கு பிடிக்காதா இடம் ஒரு கோதாரி மொபைல் நெட்வோர்க்கும் ஒழுங்கா வேலை செய்யாத இடம் அது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

இன்றும் நாளையும் நம்ம சனம் நகையை திருப்பி எடுக்கிறம் என்று கள்ளனுக்கும் கொள்ளையனுக்கும்  தாங்களா போட்டு கொடுத்து அநியாயமாய் பறி கொடுக்க போகுதுகளே என்று நான் கவலைப்பட நீங்க இரண்டு பேரும் இங்கிலாந்துக்கு எல்லை கீறி கொண்டு இருக்கிறியள் .

🤣     🤣     🤣

  • கருத்துக்கள உறவுகள்

😂 மெய்யாத்தான் பெருமாள், சனங்கள் எல்லாம் பாவந்தான், ஆனா எல்லாத்தையிம் என்னட்ட தாங்கோ, தேவைபடும் போது திருப்பித்தாரன் எண்டு ஒரு சேவை மனப்பாங்கில சொன்னாலும் ஆரும் கேட்டாத்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, பெருமாள் said:

அது ரகசியம் அண்ணை 

அப்ப என்ரை மொள்ளமாரி மச்சான் சொன்னது சரி...:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்ப என்ரை மொள்ளமாரி மச்சான் சொன்னது சரி...:cool:

மச்சானோ மண்டைகயிரோ (மனிசியின் தம்பி தமையனை மண்டைகயிறு என்று சொல்வதுண்டு )?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிணத்துக்குள் தவறி விழுந்தாலும் உங்களையும் கட்டி தன்னையும் ஒரு கயிறால் கட்டி காப்பாத்தனும் இல்லாவிட்டால் அவரும் சேர்ந்து உங்களுடன் மேல் உலகு மர்கயா அந்த கயிறுக்கு பேர்தான்  மண்டை கயிறு .

11 minutes ago, goshan_che said:

😂 மெய்யாத்தான் பெருமாள், சனங்கள் எல்லாம் பாவந்தான், ஆனா எல்லாத்தையிம் என்னட்ட தாங்கோ, தேவைபடும் போது திருப்பித்தாரன் எண்டு ஒரு சேவை மனப்பாங்கில சொன்னாலும் ஆரும் கேட்டாத்தானே.

ஒரு ஆசை இருக்குத்தான் உங்களுக்கு  ஊரில் இருந்து பச்சை மட்டையும் (பச்சை மட்டை என்றவுடன் ரென்சன் ஆக கூடாது ) எடுக்கவேண்டி வரும் எப்படி வசதி ?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களின்ர பக்கம் இந்த மெட்ரோ பாங் விடயம் சீரியசக தான் போகிறது...

ஒருத்தர் போன் அடித்து நாளைக்கு காலமை மெட்ரோவில் இருக்கிறதை எடுக்கிப்போறன் நீரும் வாறீரோ என்டார். முதலில் எனக்கு விளங்கவில்லை🤔 “ எனக்கு மெட்ரோவில் கணக்கும் இல்லை பெட்டியும் இல்லை” 🤷‍♂️ என்டன். அதற்கு அவர் தான் எடுக்க போறதற்கு பாதுகாப்பிற்கு வாருமன் என்டார் 👮‍♂️👮‍♂️⚔️ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, பெருமாள் said:

ஒரு ஆசை இருக்குத்தான் உங்களுக்கு  ஊரில் இருந்து பச்சை மட்டையும் (பச்சை மட்டை என்றவுடன் ரென்சன் ஆக கூடாது ) எடுக்கவேண்டி வரும் எப்படி வசதி ?

அட்ரா....அட்ரா.....அட்ரா....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

எங்கட ஆட்களின்ர பக்கம் இந்த மெட்ரோ பாங் விடயம் சீரியசக தான் போகிறது...

ஒருத்தர் போன் அடித்து நாளைக்கு காலமை மெட்ரோவில் இருக்கிறதை எடுக்கிப்போறன் நீரும் வாறீரோ என்டார். முதலில் எனக்கு விளங்கவில்லை🤔 “ எனக்கு மெட்ரோவில் கணக்கும் இல்லை பெட்டியும் இல்லை” 🤷‍♂️ என்டன். அதற்கு அவர் தான் எடுக்க போறதற்கு பாதுகாப்பிற்கு வாருமன் என்டார் 👮‍♂️👮‍♂️⚔️ 

உங்கடை ஆள் பரவாயில்லை மெட்ரோ பாங் காரனே வீடு மட்டும் பாதுகாப்பு தந்தவன் எண்டு சொல்றதுதான் பெரிய கொடுமை பாஸ் இன்று சனிதானே பிள்ளைகளை விசாரிச்சா கிழக்கு ரோமேனியன் காரில் பின் தொடர்ந்து இருக்கான் என்ற உண்மை வருது .

வெள்ளைத்தோல் எல்லாம் வெள்ளைக்காரன் தான் என்ற நினைப்பு இன்னும் நம்ம ஆட்களிடம் மாறவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
 
1 hour ago, goshan_che said:

உண்மையான Harrow on the Hill என்பது பாரம்பரியம் மிக்க Harrow School boarding school இருக்கும் அந்த மலைப்பாங்கான இடம் மட்டுமே. அங்க வீட்டு விலை தெரியும்தானே?

நீங்கள் பழைய ஆள் போல கிடக்குது.

Harrow on the Hill அந்த நாளில ஏதோ பெரிய இடமாம். ஒரு பெரிய கார் போய் வர ஏலாது. அதுக்குள மனிசன் இருப்பானா?

கொஞ்சம் வெளிய வந்தா, அதை விட அருமையான வீடுகள் இருக்குது.

IBC யரழ்ப்பாணம், சென்னை எண்டு போய் கனகாலம், உங்க சும்மா ஒரு பெயருக்கு அலுவலகம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் வெளி உலகிலும், பரந்துபட்ட பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை.

2008 வாங்கி நிதி திவால் நெருங்கடி பின்பு, பல விதி முறைகள் வந்துள்ளது.

அதில் ஒன்று, வங்கி வங்குரோத்து அடைவதை, UK அரசாங்கம், bank of england வழியாக, இரகசியமாக   அணுகலாம்.

அதாலேயே, 85000 (சில காலம் 75000 என்றும் இருந்தது)  மட்டும் வரைக்கும் சேமிப்பு உத்தரவாதம்.

சேமிப்பு உத்தரவாதம் வரைமுறை இருப்பதால், மேற்ப்பட்ட சேமிப்பை வங்கி திவாலாகும் நிலையை தடுப்பதற்கு எடுக்கலாம் என்பது வெளிப்படை.   

எந்தவொரு வங்கியிலும் எதாவது பொருளை சேமித்தாலும், அதன் கட்டுப்பாடு வங்கிக்கே சொந்தமானது.

உ.ம். பொருளை வைத்தவர்கள் எடுக்கப் போகும் போது, வங்கி இந்தப் பொருட்களுக்கு நீங்கள் சட்ட அடிப்படையிலான உரிமையாளர் என ஆதாரம் வேண்டும் என நிபந்தனை வைக்கலாம். பெரும்பாலானவர்கள், நகை மற்றும் அரிய பொருட்களுக்கு ஆதாரம் கொடுப்பது கடினம். இது இதுவரையிலும் நடக்கவில்லை, ஆனாலும், சட்டத்தில் இடமுண்டு.       

ஆனாலும், Metro போன்ற பல  சவாலான வங்கிகள் 2008 பின்பும், buy-to-let இருப்பிட சொத்துக்களின் அடமானத்திற்கு கொடுத்த கடனை (mortgage) தவறான risk rating செய்தது உண்மை.  buy-to-let mortgage risk உண்மையில் வர்த்தக அடிப்படையிலான risk ஆகும் (commercial  risk).

அது மட்டுமல்ல, இருப்பிட buy-to-let mortgage இற்கான வரி ஆதரவையும் UK goverment 2015 இல் விலக்கிவிட்டது. இது buy-to-let mortgage risk ஐ இன்னும் Metro போன்ற வங்கிகளில் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த risk, UK banking system தில் உள்ள systemic risk. இதை 2008 இல் UK அரசாங்கமும், bank of england உம்  லாவகமாக மறைத்துவிட்டது என்பதே உண்மை.

இந்த yarl தளத்தில், வங்கி அமைப்பு யதார்த்தத்தில் எப்படி இயங்குகின்றன என்பதை பற்றி ஓர் you tube இணைப்பை கொடுத்திருந்தேன்.

இப்போதும் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான Metro போன்ற வங்கிகள், buy-to-let mortgage 2008 இல் இருந்து கொடுத்திருந்தால், பெரும்பாலும் நெருக்கடி நிலையை சந்திக்கும்.

காரணம், சர்வதேதச வங்கி விதிமுறைகள் (Basel 3), 2019 இல் நடைமுறைக்கு வருகிறது.

இதனால் risk rating இன்னும் அதிகரிக்கும். அதனால், வங்கி கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய முதலும் அதிகரிக்கும், வங்கிகள் முதலை திரட்ட வேண்டிய நிலைக்கு தாள்ளப்பட்டுவிட்டது.

ஆனாலும், எந்த ஓர் நிறுவனமயப்படுத்தப்பட்ட (markets, interbank lending etc.)  நிதி முதல் திரட்டுதல் மிகவும் கடினமாகும்.        

https://en.wikipedia.org/wiki/Basel_III

Basel III (or the Third Basel Accord or Basel Standards) is a global, voluntary regulatory framework on bank capital adequacy, stress testing, and market liquidity risk. This third installment of the Basel Accords (see Basel I, Basel II) was developed in response to the deficiencies in financial regulation revealed by the financial crisis of 2007–08. It is intended to strengthen bank capital requirements by increasing bank liquidity and decreasing bank leverage.

Basel III was agreed upon by the members of the Basel Committee on Banking Supervision in November 2010, and was scheduled to be introduced from 2013 until 2015; however, implementation was extended repeatedly to 31 March 2019 and then again until 1 January 2022.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நீங்கள் பழைய ஆள் போல கிடக்குது.

Harrow on the Hill அந்த நாளில ஏதோ பெரிய இடமாம். ஒரு பெரிய கார் போய் வர ஏலாது. அதுக்குள மனிசன் இருப்பானா?

கொஞ்சம் வெளிய வந்தா, அதை விட அருமையான வீடுகள் இருக்குது.

IBC யரழ்ப்பாணம், சென்னை எண்டு போய் கனகாலம், உங்க சும்மா ஒரு பெயருக்கு அலுவலகம் இருக்கு.

😂 பழைய ஆள் எல்லாம் இல்லை. யாழில் கருத்தெழுபவர்களில் ஒப்பீடளவில் வயது குறைந்தவர்களில் நானும் ஒருவன்.

எல்லா விடயங்களையும் தீர விசாரித்து ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வருவதாலும், மேம்போக்காக நுனிபுல் மேய்வதை விரும்பாதலாலும் இப்படியான டீடெய்ல்ஸ் கிடைக்கிறது.

ஆனாலும் இந்த Harrow on the Hill மேட்டர் அப்படி ஒன்றும் ரகசியம் அல்ல. இந்த ஏரியாவில் வசிக்கும் பலருக்குத் தெரிந்த விடயமே. லோக்கல் எலெக்சன் வார்ட் கூட இதனசிப்படையை ஒற்றியே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😂 பழைய ஆள் எல்லாம் இல்லை. யாழில் கருத்தெழுபவர்களில் ஒப்பீடளவில் வயது குறைந்தவர்களில் நானும் ஒருவன்.

வாய்பில்லை ராஜா.   :grin: 

முடிந்தால், விக்கை கழற்றிப் போட்டு, படம் ஒன்றை போடுங்கள் பார்ப்போம்.

அதுக்காக ரஜனியை போடப்படாது. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

😂 போடலாம். ஆனால் பெண் பிரசுகள் எல்லாம் வந்து போற இடம். அவயின்ற மனச சஞ்சலப் படுத்த நான் விரும்பேல்ல😂.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.