Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மீண்டும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்

Featured Replies

பேஸ்புக் , வட்ஸ் எப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார்.

நேற்றைய தினம் சில பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/119809

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, போல் said:

நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் சமாதானத்தைப் பேண.... ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு.... 
பத்து வருசத்துக்கு மேல் எடுத்தால்....நோய் முற்றி விட்டது என்று அர்த்தம்.

2 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் சமாதானத்தைப் பேண.... ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு.... 
பத்து வருசத்துக்கு மேல் எடுத்தால்....நோய் முற்றி விட்டது என்று அர்த்தம்.

நாய்க்கு எங்க அடிபட்டாலும் காலை தூக்குவது போல இப்ப இந்த முடக்கம் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கை தடை பண்ணா ஓட்டோ கிளம்புமா..? என்னப்பா சொல்ற..🙂

maxresdefault.jpg

  • தொடங்கியவர்

சமூகவலைத்தளங்கள் மீது தடை விதிப்பது முட்டாள்தனமான வேலை!

சமூகவலைத்தளங்கள் மீதான தடை மற்றும் ஊடகங்களில் சில காட்சிகளை காண்பிக்க தடை விதிக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்கள் மீதான தடையை விதித்தல், ஆயுதங்கள் பிடிபடும் போது அவற்றை ஊடகங்களில் காண்பிக்கவிடாமல் தடுத்தல் என்பன முட்டாள்தனமான வேலை.

இதனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்குமே தவிர பிரச்சினை தீராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை பௌத்த நாடு இல்லை என்றும், இது இலங்கையர்களின் நாடே என்றும் அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்திருந்த கருத்துக்கு, இதன்போது மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இது சிங்கள பௌத்த நாடு என்பதை தெளிவாக கூறி இருப்பதாகவும், யாருடைய கூற்றை கேட்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுமாறும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/119874

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு இதே வேலையா போச்சு 

முதல் முதலாக twitter உம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாம். (இலங்கை நேரம் 9.50 pm இலிருந்து)

(அனைத்து Dialog Axiata ISP subscribers க்கும்)

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கிறது ; இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

sri-lanka-police-spokesman.jpg

இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 முதல் 7 வருடங்கள் வரை கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/55881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.