Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

drougth-300x200.jpgதற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

வடக்கில் ஏனைய மாவட்டங்களான  கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வரட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/05/27/news/38178

இப்ப என்ன கவலை எல்லாம் இந்த வரட்சயை எப்படி சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மீது பழியை போடலாம் என்பது தான் .........🤔🤔🤔🤔

தமிழர் தாயகம் உட்பட பல நிலப்பரப்புகள் தொடர் வரட்சி காண்பதுடன் பாலைவனமாகும் சாத்தியமும் உள்ளது, அகக்காரணிகள் புறக்காரணிகள் இதில் பங்களிப்பை செய்கின்றன. 

எமது சமூக நலன்விரும்பிகள் இது சம்ப்பந்தமாக கவனம்   செலுத்தாவிட்டால் நிலைமை மிகவும் கவலைக்கு உரிய விடயமாக போய்விடும். 

மழைநீரை பாதுகாக்கவேண்டும் 
குளங்கள் புனரைமைக்கப்படல் வேண்டும் 
குறைந்த நீரில் விவசாயம் செய்யும் முறைகளை வளர்க்கவேண்டும் 
தூர்நிலங்களில் மரங்கள் வளர்க்கப்படல் வேண்டும் 
இருக்கும் மரங்கள் பேணப்படல் வேண்டும் 
......

========================================================

க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும்.

=========================================================

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

இப்ப என்ன கவலை எல்லாம் இந்த வரட்சயை எப்படி சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மீது பழியை போடலாம் என்பது தான் .........🤔🤔🤔🤔

அதானே வடக்கு கிழக்கு எங்கும்  தமிழரே நிர்வாகிக்க கூடிய அதிகார அலகுகளை  கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தபின் வரட்ச்சி ,புயக்கு சிங்கள அரசுதான் காரணமென்றால் அது நியாயமில்லைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

இப்ப என்ன கவலை எல்லாம் இந்த வரட்சயை எப்படி சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மீது பழியை போடலாம் என்பது தான் .........🤔🤔🤔🤔

சுனாமியின் போது நாங்கள் தானே எங்கட வேலையைப் பார்த்தம். அமெரிக்கனை கூப்பிட்டு வைச்சிருக்கவில்லையே.

எங்களை எங்கள் பாட்டில் விடுங்கள்.. நாங்கள் எங்களையும் மண்ணையும் நிர்வகிச்சுக் கொள்ளுவம் எந்த சூழலிலும்.

சிங்கப்பூரையும் மலேசியாவை கட்டியமைத்ததே தமிழன் தான். அவனுக்கு ஈழத்தைக் கட்டி அமைப்பது பெரிய விடயமே அல்ல. கனடிய அரசு புகழும் அளவுக்கு கனடிய ஊசி இலைக்காட்டுப் பகுதிகளை.. பெரும் நகரங்களாக்கியதில் தமிழனின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்கிறது. 

எமது மண்ணின் சூழலை கெடுப்பதால் தான் அதிக வரட்சி. காடுகளை முஸ்லீம்கள் ஒருப்பக்கம்.. புத்த பிக்குகள் ஒருபக்கம் அழித்துக் குடியேற்றங்களை செய்து கொண்டிருக்கும் நிலையில்.. நீர் வீழ்ச்சிக்கும்.. நீர் பிடிப்புக்கும் காடுகளில்.. பற்றைக்காடுகளில் தங்கி இருக்கும் வடபகுதி.. மற்றுக் கிழக்குப் பகுதி இதனால் வரட்சிகளை எதிர்கொள்வது என்பது முழுமையாக இயற்கை அனர்த்தம் கிடையாது. ஆக்கிரம்புச் செயற்பாடுகளின் விளைவிலும் தங்கியுள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு

May 27, 2019

1 Min Read

IMG_8274.jpg?resize=800%2C533வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடும்பங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன் இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச்செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவப்பிரிவினுடைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவபை;பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்கசை;சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பூநகரிப்பிரதேசசெயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச்சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்;பட்டிருப்பதாக குறிபபிடப்பட்டுள்ளது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்;களைச்சேர்ந்த 6296 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச்சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் இடப்படடிருப்பின்றது

இவ்வாறு நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு 12766 குடும்பங்களைச்சேரந்த 40093பேரும் கிளிநொச்சி மாவட்;டத்தில் 2738 குடும்பங்களைச்சேர்ந்த 9082 பேரும பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால தெரிவிக்கப்பட்டுள்ளது.

#வறட்சி  #கிளிநொச்சி #முல்லைத்தீவு  #குடும்பங்கள் #பாதிப்பு #kilinochchi #mullaitheevu #drought

IMG_2387.jpg?resize=800%2C533  IMG_8289.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2019/122778/

22 minutes ago, பெருமாள் said:

அதானே வடக்கு கிழக்கு எங்கும்  தமிழரே நிர்வாகிக்க கூடிய அதிகார அலகுகளை  கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தபின் வரட்ச்சி ,புயக்கு சிங்கள அரசுதான் காரணமென்றால் அது நியாயமில்லைதானே. 

தொட்டதுக்கெல்லம், சிங்களவனை பிழை கூறினால் அதிகார அலகு கூட இல்லை, மாநகர சபை கூட கிடையாது.

என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிங்க்ளவன் தமிழ் இனவழிப்பு நடவடிக்கையின் அங்கமாக எங்கழுடைய ஈழ போராளிகள் மாற்ற முயன்றார்களோ அத்துடன் தீர்மானித்தேன் இந்த இனம் உருபடபோவதில்லை என்று

பிரான்ஸில் இருந்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேற்கிறார் அது ஏன் புலம்பெயர் தமிழர்கள் பாவிக்கும் ஹொட்டல்களில் குண்டு வெடித்ததாம்......? இதை வாசித்த போது அவரது அறிவை நினைத்து அழுவதா சிரிப்பதா......???

பிறகு திருநாவுகரசு என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்  இது 2வது முள்ளிவாயிக்காலாம், அப்பப்பா கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா .....???

இப்படிபட்ட அரசியல் மற்றும் பொருளாதார அறிவற்ற இனம் உருப்படிம......???

எங்களுக்கு தெரிந்த பொருளாதாரம் 60 லட்சம் அனுப்புவது

எங்களுக்கு தெரிந்த அரசியல்  அந்த 60 லட்சத்தை வைத்து பிரான்ஸில் வந்து அசைலம்....!!!!!!

அந்த 60 லட்சத்தை வங்கியில் போட்டால் 10% படி வருடம் 600,000 வட்டி வரும் என்பதை கூட அறியாத முட்டாள் கூட்டம் 😡😡😡😡😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்டு மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .

28 minutes ago, nedukkalapoovan said:

எமது மண்ணின் சூழலை கெடுப்பதால் தான் அதிக வரட்சி. காடுகளை முஸ்லீம்கள் ஒருப்பக்கம்.. புத்த பிக்குகள் ஒருபக்கம் அழித்துக் குடியேற்றங்களை செய்து கொண்டிருக்கும் நிலையில்.. நீர் வீழ்ச்சிக்கும்.. நீர் பிடிப்புக்கும் காடுகளில்.. பற்றைக்காடுகளில் தங்கி இருக்கும் வடபகுதி.. மற்றுக் கிழக்குப் பகுதி இதனால் வரட்சிகளை எதிர்கொள்வது என்பது முழுமையாக இயற்கை அனர்த்தம் கிடையாது. ஆக்கிரம்புச் செயற்பாடுகளின் விளைவிலும் தங்கியுள்ளது. 

முதலில் நங்கள் எங்கள்து பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் அதுக்கு பின்னர் தான். அதை விட  சிங்கள பேரினவாதம் தமிழருக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது. அது மின்சாரம் நின்ற மின் விசிறி கொஞ்சம் சுற்றி தான் நிற்கும்: அதுக்குரிய காரணம்  80களுக்கு பின்னர்  பிறந்த  சிங்கள  சமூகம் இனவாதத்தில் அக்கறை காட்டபோவதில்லை: ஒரு கேள்வி எத்தனை  வீடுகள் புலம்பெயர் தமிழரால் மக்களுக்கு கட்டி கொடுக்கபட்டன; எத்தனை வியாபார முயற்சிகள் செய்யபட்டன; 

ஆனால் ஊர் கோவில்களை திருத்த  ஊருக்கு எத்தனை கோடிகள் செலவளிக்கப்ட்டது .......? அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து.......? இவற்றை யோசியுங்கோ தமிழன் தோல்வி எங்கே தொடங்குகிறது என விளங்கும்

14 minutes ago, பெருமாள் said:

ஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்டு மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .

14 minutes ago, பெருமாள் said:

ஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்டு மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .

ஒரு சிலரா........போர் முடிந்த்வுடன் எத்தனை பேர் இங்கு வந்து அசைலம் அடித்தனர்.....!!!

அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்.........!!!

அதுமட்டுமல்ல இந்த யாழ் களத்திலேயே எத்தனை பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தமிழ் சிங்கள போராக சித்தரிக்க முற்பட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

இப்ப என்ன கவலை எல்லாம் இந்த வரட்சயை எப்படி சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மீது பழியை போடலாம் என்பது தான் .........🤔🤔🤔🤔

மொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது.

கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும்.

மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

f5-03.jpg

இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும்.

1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.

#TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர்

பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்?

வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-47928489?fbclid=IwAR0Hpc6boDCv1PhZGSfTJuWFB4q3FV08s5J7_y34Y5qBZRCJFLRx4xGHErk

பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்?
 
Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.