Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thavarasa-1-720x450.jpg

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி

இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து முஸ்லிம் தலைமைகள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவு வரவேற்கத்தக்கதும் பாராட்டிற்குரியதும் ஆகும். தமிழ் இனம் அல்லற்பட்ட வேளைகளில் தமிழ்த் தலைமைகள் இவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் இன்று நாம் எமது இனத்தின் விடிவை நோக்கிப் பல மைல்கற்கள் முன்னோக்கி நகர்ந்திருப்போம்.

முஸ்லிம் மக்கள் இன்று ஓர் பாரிய நெருக்கடியினைச் சந்தித்திருக்கின்ற சூழ்நிலையில் எவ்வித கட்சிப் பாகுபாடுகளுமின்றி முஸ்லிம் தலைமைகள் யாவரும் ஒன்றிணைந்து தத்தமது பதவிகளைத் துறந்தமையானது தமது இனத்தின் நலன்களை ஏனைய நலன்களினை விடவும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக தேசியக் கட்சியில் போட்டியிட்டு சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலமாக தெரிவு செய்யப்பட்ட அமீர் அலி போன்றோர்களும் இவ்விடயத்தில் ஏனைய முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளமை மிகவும் பாராட்டிற்குரியது.

முஸ்லிம் தலைமைகளின் அரசியல் செயற்பாடுகளைப்போல் தமிழ்த்தலைமைகளாலும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியாதது ஏன்?

தமிழினம் இதுவரை எத்தனையோ இன்னல்களை, அனர்த்தங்களை, சவால்களைச் சந்தித்துவந்துள்ளது, இன்றும் சந்தித்துக்கொண்டேயிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டவர்கள்,  படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள், வடக்கு கிழக்கில் தொல்பொருட் திணைக்கள அதிகாரிகளின் வரம்பு மீறல் செயற்பாடுகள், யுத்தகால நிகழ்வுகள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

ஒரு விடயத்திலேனும் தமிழ்த்தலைமைகள் ஒன்றிணைந்து இதுதான் எமது நிலைப்பாடு என்று அரசிற்கு எடுத்துக்கூறிய வரலாறு உண்டா? இனிமேலாவது இவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா?

அடுத்த தேர்தலில் தமது கதிரைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது அல்லது எவ்வாறு கதிரையினை எட்டிப்பிடிப்பது என்ற அரசியலிற்கு அப்பால் எமது இனத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தலைமைகள் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் அளுத்தம் கொடுக்க இனிமேலாவது முன்வருமா? ” என கேள்வியெழுப்பியுள்ளார்.

http://athavannews.com/முஸ்லிம்-தலைமைகளைப்போல-த/

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திய ஈபிடிபி ஆயுத சன நாய் அக வழியில் வந்த இவருக்கு இந்தக் கேள்வியைக் கேட்கவே தகுதியில்லை.

அப்புறம்...??????! 

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன் இதுபற்றிய எனது பதிவு:

அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும்  ஓரே நோக்கத்துக்காக மனமொத்து பதவிதுறந்தது பாராட்டுக்குரியது. முக்கியமாக உங்கள் ஒற்றுமை தமிழ் அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கு ஒற்றுமை என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்.... 

 

காணிபறித்து, தோட்டம், வீடு, வயல் என்று பறித்து அப்பாவிகளை ஊரைவிட்டுத் துரத்திவிடுவதில் ஏற்படும் ஒற்றுமையா...

 

குழந்தைகள் முதல் பெண்கள் வயோதிபர்கள்வரையில் கொத்துக் கொத்தாகக் குத்தியும் வெட்டியும் கொல்வதில் ஏற்படும் ஒற்றுமையா...

 

கோவில்களை இடித்து இறைச்சிக்கடைகள் கட்டுவதில் உள்ள ஒற்றுமையா...

 

இனக்கலவரம் ஏற்படும் வேளைகளில் வியாபார நிலையங்களைக் கொள்ளையடிப்பதில் ஏற்படும் ஒற்றுமையா...

 

பொருளாதாரத் தடைகளின்போது கொள்ளை இலாபம் ஈட்டி பொருட்களை விற்றுப் பணம் பறிப்பதில் ஏற்படும் ஒற்றுமையா....

 

ஒற்றுமையின்றி இருந்தாலும், இந்தக் கேடுகெட்ட ஒற்றுமைகள் எங்கள் மக்களிடமோ, அரசியல்வாதிகளாக இருப்பவர்களிடமோ இல்லை. இருந்ததுமில்லை, அது தேவையுமிலை.

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

thavarasa-1-720x450.jpg

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி

தேவையில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தன்னுடைய தலமையுடனே ஒற்றுமையில்லை இதில தமிழ் தலமைகளுக்கு வகுப்பு எடுக்கிறார்,,,,ஐயோ எங்க போய் முட்ட

On 6/6/2019 at 9:19 AM, தமிழ் சிறி said:

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி

தவராசா! நீங்க ரிஷாட் பத்தியுதீனுக்கு வால் பிடிக்கிற மாதிரி எல்லாரும் பிடிக்கோணும் என்டு நினைக்கிறீங்களோ?

நீங்க முந்தி டக்ளசுக்கு வால் பிடிச்சதையும் பிறகு அங்க ஒன்டும் கிடைக்கேலை என்டவுடனை இன்னொரு கொப்புக்கு தாவினதை இன்னும் ஆரும் மறக்கேலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.