Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் கடும் வெப்பம்

Featured Replies

 

ஐரோப்பியக் கண்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இல்லாத வெப்பநிலைகளை இம்மாதம் காணலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களைக் கையாளத் தயாராகி வருகின்றன.

அதிகரிக்கும் வெப்பநிலையினால் கடுமையான புயல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் வெயிலினால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் அஞ்சி வருகின்றனர்.

வட ஆபிரிக்காவிலிருந்து வீசும் அனல் காற்று, ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

wd03.jpg?itok=VPIg4Pyt

https://www.thinakaran.lk/2019/06/25/வெளிநாடு/36293/ஐரோப்பாவில்-கடும்-வெப்பம்

 

இந்த இணைப்பில் ஏழு தரவுகள் உள்ளன.
எவ்வாறு பூமி வெப்பம் அடைந்து வருகின்றது என காணலாம் !

Climate change: Where we are in seven charts and what you can do to help

https://www.bbc.co.uk/news/science-environment-46384067

  • தொடங்கியவர்

Chart showing the average warming by 2100

_104552637_top_10_emitters_640-nc.png

 

_104552639_growth_v_vulnerability-nc.png

 

_106511962_range_chart_640_v2_3x-optimis

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  ஜேர்மனியிலை நாளைக்கு கன பள்ளிக்கூடங்கள் அரைநேரமாம்...

  • தொடங்கியவர்

இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-48781595

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

 

ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

df.jpg

இந்நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று 40 பாகை செல்சியஸ்க்கு மேல் ஆக உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம் ஆகும்.

sd.jpg

19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த கால தரவுகளுக்கமைய 2003 ஆம் ஆண்டு  ஐரோப்பாவில் அதிகரித்த வெப்பத்தின் காரணமான 14,000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

 

https://www.virakesari.lk/article/59219

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 48c, 49c, 50c, 52c போகின்றது

  • தொடங்கியவர்

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவுபடத்தின் காப்புரிமை AFP

மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது.

 

இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக இன்று பிரான்ஸில் 45.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கடந்த 2003ஆம் ஆண்டில், இங்கு பதிவான 44.1 டிகிரி செல்ஸியஸே இதுவரை அதிக வெப்பநிலை பதிவாக இருந்து வந்தது.

 

பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஆக்னஸ் பூஷின் இதுகுறித்து கூறுகையில், "அதிக அளவு வெப்ப அலையால் அனைவரும் ஆபத்தில் உள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

இருவர் உயிரிழப்பு

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவுபடத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே வயல்வெளிகளில் பணிபுரிந்த 17 வயது இளைஞர் உள்பட இரண்டு பேர் ஸ்பெயினில் கடும் வெப்ப தாக்குதலால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸிலும் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையை அதன் பல்வேறு நகரங்களும் எதிர்கொண்டுள்ளன. வடக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து வரும் அனல் காற்றே இந்த நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கமா?

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் அதீத வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற அச்சம் பலரால் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச வானிலை அமைப்பை சேர்ந்த பேச்சாளரான கிளார் இதுகுறித்து கூறுகையில், "தற்போதைய அதிகபட்ச வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லாமல் இருக்கலாம்" என்று கூறினார்.

கடந்த காலத்தை நோக்கும்போது, வெப்ப அலைகளின் தாக்கம் இயற்கையாக ஏற்படும் ஒன்றாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-48806689

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für auÃenwand isolieren haus

Ãhnliches Foto

Ãhnliches Foto

Ãhnliches Foto

ஜேர்மனியில்... நாளை மறு தினம் 36 பாகை வரை செல்லும்  என்று, சொல்லியுள்ளார்கள்.
சிலோனில்... இருந்த ஆட்களுக்கு.. 36 பாகை பெரிசா என்று, சிலர் புறு புறுக்கக்  கூடும் என்பதால்....
சில காரணங்களை சொல்லியே ஆக  வேண்டும். :grin:

இங்கு கட்டப்  பட்டுள்ள வீடுகள், கடும் குளிரை... தாக்குப் பிடிப்பதற்காக,
வீட்டின்  வெளிச் சுவருக்கு இடையில்,  Regiform போன்றும், பஞ்சு போன்றும் உள்ள பொருட்களை..
வைத்து கட்டிடம் கட்டினால்; குளிர் உள்ளே வராது. அத்துடன்... வீ ட் டை  சூடு படுத்த,
ஏற்படும்  எரிபொருள் செலவும், குறையும்.

ஆனால்  என்றுமில்லாதவாறு... பூமி  வெப்ப மயமாகுவதால்,
வீட்டின் உள்ளேயும்... இரவில் குளிர்மையான நேரங்களில் கூட, 
வீட்டின்  சுவர் எல்லாம்  வெப்பமாகவே, இருக்கும்.

அதுக்கு... மின் விசிறி, பாவிக்கலாம் தானே... என்று, நீங்கள் கேட்பீர்கள்.
நிலத்துக்கு, கம்பளம் (கார்பெற்) விரித்த வீட்டில்... மின் விசிறி பாவிப்பது, ஆரோக்கியமானதல்ல.
அப்ப... "எயார் கண்டிஷன்" பூட்டுங்கோவன்.. என்றும் நீங்கள்  சொல்லலாம்... 😝

வருசத்தில்... ஆக மிஞ்சிப் போனால்,  ஆறு கிழமை மட்டுமே...
இந்த  அதி கூடிய வெப்பம் இருக்கும். அதற்காக.. அதிக பணத்தை, ஏன்  செலவழிப்பான் என்ற
சாதாரண  தமிழனின், நிலையில்... பல்லை கடித்துக் கொண்டு... 
சாரத்தை... போர்த்துக் கொண்டு.... படுப்பதே... தனி சுகம். :)

7 minutes ago, தமிழ் சிறி said:

 

வருசத்தில்... ஆக மிஞ்சிப் போனால்,  ஆறு கிழமை மட்டுமே...
இந்த  அதி கூடிய வெப்பம் இருக்கும். அதற்காக.. அதிக பணத்தை, ஏன்  செலவழிப்பான் என்ற
சாதாரண  தமிழனின், நிலையில்... பல்லை கடித்துக் கொண்டு... 
சாரத்தை... போர்த்துக் கொண்டு.... படுப்பதே... தனி சுகம். :)

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

அதையும் செய்து பாத்தனான்... :grin:
மனிசி... *** டையை காட்டிக் கொண்டு, குறட்டை  விட்டுப் படுக்க,
உங்களுக்கு.... வெக்கம், மானம், ரோசம் ஒண்டும்... இல்லையோ...
எண்டு... அறம்  புறமாய்... பேசுது.

என்னத்துக்கு... வில்லங்கம் எண்டுட்டு, சாரத்தை போத்து படுத்து விட்டு...
மனிசி.. கொறட்டை  விட்டு, நித்திரை கொள்ளும் போது...
என்னுடைய சாரத்தை... நானே உருவி, கமக்கட்டுக்குள்  வைத்து விட்டு படுத்து விடுவேன். 😝

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

சாரத்தை களட்டிப் போட்டு தனியப் படுத்தால் சரி.அது சிறிக்கு தெரியாதாக்கும்.வந்திடார் விமோசனம் சொல்ல.அவனவன் படுகிற அவஸ்த்தையில்.😁😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

ஓம் இப்ப நாலைஞ்சுநாளாய்  சாரத்தை தலைமாட்டிலை வைச்சுக்கொண்டு கூலாய் இருக்கிறம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

சாரத்தை களட்டிப் போட்டு தனியப் படுத்தால் சரி.அது சிறிக்கு தெரியாதாக்கும்.வந்திடார் விமோசனம் சொல்ல.அவனவன் படுகிற அவஸ்த்தையில்.😁😁

சாரத்தைக் கழற்றிப்போட்டுப் படுக்கலாம் சுவைப்பிரியன், அது சுகம்தான்.... ஆனால் நாய் அதைக்கண்டு கொட் டோக் (Hot dog)என எண்ணிக் கெளவிவிட்டால்........  😲

Hot-Dogs_8-to-1_470x500.jpg?width=&height=810

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.