Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)

Featured Replies

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில்  பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.

2lj52l1.jpg 

2nbvi1l.jpg 

fc5ymq.jpg 

  • தொடங்கியவர்

14dhi4p.jpg 

24l4r9e.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதைய வெள்ளி விழா கண்ட படத்திற்கு இப்பொழுது கட்-அவுட், மாலை, பால் எல்லாமே.. ஆனால் ரசிகர்கள் மட்டும் அப்போதைய இளைஞர்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திருப்பத்தில் அமைந்துள்ள 'ஆல்பெர்ட்' திரையரங்கில் இந்தக் காட்சி..! 

  • கருத்துக்கள உறவுகள்

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

4K இல் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் பார்ப்பேன்!😀

  • தொடங்கியவர்

2mp0cx3.jpg 

72u35k.jpg 

1599xi.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

Bildergebnis für à®à®¿à®´à®µà®©à¯

அக்கால இளைஞர்களுக்கு.... வசந்த மாளிகை  படம்  மீண்டும்  திரையில் ஓடுது என்ற செய்தி தெரிந்திருக்குமோ தெரியவில்லை.
அத்துடன் படத்தை பார்ப்பதற்கு... பார்வையும், காதும் கேட்க வேணுமே....

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

2004fts.jpg 

2d9s28w.jpg 

213j1bt.jpg 

  • தொடங்கியவர்

21o2fcj.jpg 

24ky653.jpg 

  • தொடங்கியவர்

nq4qc9.jpg 

dlgo5f.jpg 

2a608cg.jpg 

  • தொடங்கியவர்

29gilhh.jpg 

vr82yq.jpg 

ji2hpx.jpg 

  • தொடங்கியவர்

288v5mp.jpg 

  • தொடங்கியவர்

fk2xr4.jpg 

  • தொடங்கியவர்

9add7q.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2019 at 10:04 PM, ராசவன்னியன் said:

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

  • கருத்துக்கள உறவுகள்

```வசந்தமாளிகை'யை ஏன் இன்னமும் கொண்டாடுகிறார்கள்?!'' - தியேட்டர் விசிட்

47 ஆண்டுகள் கழித்தும், சிவாஜி கணேசன் நடிப்பில் புதுப்பொலிவோடு வெளியாகியிருக்கும் 'வசந்தமாளிகை' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரீ-ரிலீஸில் இப்படத்தைப் பார்த்த அனுபவம் இது.

வசந்தமாளிகை

வசந்தமாளிகை

"லைலாவைப் பார்க்கவேண்டுமானால் மஜ்னுவின் கண்களால்தான் பார்க்கவேண்டும்'' என்பார்கள். அப்படித்தான், 'வசந்தமாளிகை'யைப் பார்க்கவேண்டுமானால், சிவாஜி ரசிகனாக இருந்து பார்த்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத அந்தக் காவியத்தை முழுமையாக ரசிக்க முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் படத்தைப் பார்க்க வந்த பலர், தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிப் போனவர்கள். காலத்தின் வேகம், குடும்பச் சூழல், பிள்ளைகளின் கல்வி, திருமணம், பணத் தேவை எனப் பலதிசைகளில் பயணித்து வறட்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களுக்குச் சோலைவனமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. டிஜிட்டலில் வந்து மெருகு குலையாத புத்தம் புதிய காப்பியாக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

படம் வெளியாகி பத்து நாள்கள் ஆன நிலையில், ஒரு சாதாரண நாளில்தான் ஆல்பர்ட் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றோம். ஆனாலும், ஆறரை மணிக் காட்சிக்கு ஐந்தரை மணியிலிருந்தே ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். ஏனென்றால், இவர்களின் மனோபாவம் எப்படியென்றால் எழுத்துப் பிக்சரிலிருந்து வணக்கம் போட்டுத் திரை மூடும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் இருக்கையைவிட்டு எழுந்திருப்பார்கள்.

சரி அப்படி என்னதான் இருக்கிறது 'வசந்தமாளிகை'யில்?!

வசந்தமாளிகை வசந்தமாளிகை

சிங்கிள் டீ குடிக்கக் காசில்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்மகனுமே தன்னை அழகாபுரி ஜமீனாகத்தான் நினைப்பான். ஆனால், வாணிஶ்ரீயைப் போன்ற ஒரு அழகு தேவதை தன் வாழ்க்கையை வந்து மாற்றுவாள் என்று எதிர்பார்ப்பான். சிலருக்கு அந்தத் தேவதை கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்த தேவதையோடுதான் மனத்தளவில் வாழ்வான், இதுதான் ஆணின் மனநிலை. இதுவே இந்தப் படம் ஆண்களால் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம்.

காட்சிப்பொருளாகத் தன்னை நினைப்பதைவிட, சுயமரியாதையும் நேர்மையுமே ஒருபெண்ணின் அழகு என்பதை நிரூபித்து, வறுமையிலிருந்தாலும் வைராக்கியத்துடன் வாழும் பெண்ணாக வாணிஶ்ரீயைக் காண்பித்ததால், பெண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.

சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

படம் வெளிவந்த 1972-ஆம் ஆண்டு எல்லாப் பத்திரிகைகளிலும் பின் அட்டை மற்றும் நடுப்பக்கத்தில் ஆரஞ்சு வண்ணப் பட்டுப் புடவையில் வாணிஶ்ரீயும், வெளிர்நீல கோட்டில் சிவாஜியும் அரவணைத்துக்கொள்ளும் படம்தான் இடம்பெற்றது. இன்றைக்கு அறுபது வயதிலிருக்கும் பலரின் ஞாபக மலராக இந்தப் புகைப்படம்தான் சினிமா ஸ்டில்லாக இருந்து வருகிறது.

தமிழக நகரங்களிலிருந்த பழைய ஜவுளிக் கடைகளெல்லாம் ரங்கசாமி அன் சன்ஸ், குமாரசாமி அன் கோ என்ற பெயர்களிலிருந்து விடுபட்டு, 'கீதா சில்க்ஸ்', 'ராதா சில்க்ஸ்' என மாடர்ன் பெயராக மாறியது இந்தப் படத்தின் வருகைக்குப் பிறகுதான். அதிலும் குறிப்பாக, கண்ணாடி ஷோ கேஸ்களில் வாணிஶ்ரீயின் எழில்மிக்க பெரிய கொண்டை ஊசி சிகை அலங்காரத்துடன் கூடிய பொம்மைகள் பட்டுப் புடவையுடன் வாடிக்கையாளரை வரவேற்கத் தொடங்கியது, 'வசந்தமாளிகை'யின் வருகைக்குப் பிறகுதான்.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

இதன் காரணமாகத்தான் மதுரை அண்ணாமலை தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகைகளைக் குலுக்கல் முறையில் தேர்வுசெய்து பட்டுப் புடவையை இப்போது பரிசளிக்கிறார்கள்.

இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

ராமா நாயுடுவின் தயாரிப்பு என்பதால், கே.பாலாஜி, நாகேஷ், வி.கே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், ஶ்ரீகாந்த், டி.கே.பகவதி, எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா, குமாரி பத்மினி எனப் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் சிறிய சிறிய பாத்திரங்கள். ஆனால், கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்களைப்போல் அநாயசாமக் கையாண்டு அத்தனைபேரும் அசத்தியிருப்பார்கள்.

'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.

இவை மட்டும்தான் காரணமா என்ன? ஒரு திரைப்படம் உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் கைதேர்ந்த கலைஞர்களிடம் கிடைக்கும்போது அதைச் சிற்பமாகச் செதுக்கிவிடுவார்கள்.

படத்தில் இடம்பெற்ற வசனங்கள்

''லதா விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுனு சொன்ன... விஷத்தைக் குடிக்கக்கூடாதுனு சொல்லலையே...''
''நான் பொறந்தது யாருக்காகன்னு தெரியாது...! ஆனா, நீ பொறந்தது எனக்காகத்தான்...''
வசந்தமாளிகை வசந்தமாளிகை
“இது இறந்துபோன காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடு இருக்கும் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல. சந்நிதி. ஆண்டவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால், அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழப்போகும் வீட்டுக்கு வண்ணத் தோரணங்களாகத் தொங்க விட்டிருப்பேன்.''

இவையெல்லாம் வசனத் துளிகளின் சாம்பிள். காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.

''என் இதய மாளிகையில் என்றும் குடியிருப்பவர் 'வசந்தமாளிகை' சிவாஜி. என் அனுபவத்தில் நான் 'வசந்த மாளிகை' திரைப்படத்தை 40 முறைக்குமேல் பார்த்திருப்பேன். முதல் முறை மட்டுமே சிவாஜிக்காகப் பார்த்தேன். மீதம் 39 முறைகளிலும் நான் சிவாஜியாகிவிட்டேன். உணர்வு ரீதியாக நானும் சிவாஜியும் ஒன்றாகவே பயணித்தோம்.''
இது சிவாஜி ரசிகர் ஒருவரின் கருத்து.

இது அவரின் கருத்து மட்டுமல்ல. 40 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பிறகும் இன்னமும் இதைக் கொண்டாடும் அத்தனை ரசிகர்களின் கருத்தும் இதுதான்.

''புதிய படங்களே ஒரு வாரங்களுக்குமேல் ஓடுவதில்லை. 47 வருடங்களுக்கு முன்பு வெளியான 'வசந்தமாளிகை' படம் இன்றும் மூன்று வாரங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது!"

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் இப்படிச் சொல்கிறார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/vasantha-maligai-movie-experience-after-47-years

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

1972 இல் வெளியான வசந்த மாளிகை இலங்கையில் கேபிடல், யாழ் வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல்   ஓடி சாதனை படைத்தது. இரு தடைவைகள் 70 களில் பார்த்தேன். இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெரும் பங்கு இலங்கை வானொலிக்கு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

என்னுடன் 70களில் படித்த கல்லூரி அறைத்தோழன் |(ஐயர்மார்தான்) எப்பொழுதாவது மாமிசமும் சாப்பிடுவான். இப்பொழுது பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக உள்ளான். இப்பொழுதும் சாப்பிடுகிறானா..? என தெரியவில்லை.

காலத்திற்கேற்ப நகரங்களில் அவர்கள் மாறுகிறார்கள், கிராமங்களில் இன்னமும் பழமை அடிப்படைவாதிகளாக இருப்பதைக் காணலாம்.

  • தொடங்கியவர்

fkzbk0.jpg 

  • தொடங்கியவர்

25s09hs.jpg 

  • தொடங்கியவர்

14vpwnt.jpg 

தமிழகம் திண்டுக்கல் என்ற ஊரில்280s4yo.jpg 

Edited by காரணிகன்

  • தொடங்கியவர்

20axm5y.jpg 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.