Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

pj29tb5.jpg

இது உண்மையாக இருக்குமா???????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று

Posted

இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று

இதற்கு தான் சொல்லுறது தூயவன் மாதிரி அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று

:P

Posted

காசு கொடுத்து பேப்பர் வாங்கிற ஆக்கள் இப்படியான பேப்பருக்குக்; கொடுக்கிற காசை வேறு ஒரு பேப்பருக்கு(கனடாவிலை) கொடுத்தால் கொஞ்சமாவது நன்மையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரபரப்பில் வரும் உள்ளே நடந்த கதை தொடருக்கு பலர் இரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா அகிய நாடுகளின் இலங்கைத்திவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் எமதுதமிழர்களின் போராட்டம் எவ்வாறு இழுபட்டுப் போகிறது என்பதனை அறியக்கூடியதாக இருக்கிறது.

Posted

பரபரப்புக் கனவு

:icon_idea:

சிலசமயங்களில் கனவுகள்கூட நிஜமாகவும்மிருக்கலாம் ஏனெனில் இன்று தமிழர்கள் தான் உலகிற்கு போர்கலைகளை கற்பித்துக்கொண்டுள்ளார்கள்..

......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.

Posted

இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.

இது என்ன நம்ம நாட்டு ஈபீடீபீயின் தினமுரசு மாதிரி வண்ணப்பதிப்பா? பேசாமல் பரபரப்புக்குப் பதிலாக புரளி என வைத்தால் நல்லாய் இருக்கும். விடுதலைப்புலிகளே சுடப்பட்டதை உறுதி செய்யும்போது இது யாரப்பா இப்படி கதை கட்டுவது?

விது என்ன இந்த பத்திகையின் முகவர் நீரோ?

Posted

ரிஸி மீண்டும் கற்பனை குதிரையை தட்ட விட்டு எழுதிவிட்டார் வாங்குங்கள் ஜேர்னலை பெருக்குங்கள் உங்கள் அறிவை :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புளுகு என்று சொல்ல வெளிக்கிட்டால் எல்லாவற்றையும் புளுகு என்று சொல்ல முடியும். பரபப்பில் சில எதிர்வுகூறல்கள் உண்மையனா போது அதைப்புரளி என்று சொல்ல நீங்கள் யாரும் வரவில்லை. குறிப்பிட்டு சொன்னால், புலனாய்வாளர் முத்தாலிப் தொடக்கம் தானியங்கி விமான எதிர்பு கருவிகள் வரை அவர்கள் ஏற்கனவே ஊகித்து எழுதியவையே, அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை. அதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சல விசயங்களில் அவசரப்பட்டு, கருத்து வைப்பதே சிலருக்கு தொழிலாகி விட்டது. தங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்யும் போது தன்னிச்சையாக வரும் ஈகோவாக கூட இருக்கலாம்.

தினமுரசுடன், பரபரப்பை ஒப்பீடு செய்வது பொருந்துமா? தெரியாது ஆனால், ஒன்று மட்டும் சொல்ல முடியும் பரபரப்பு மேல் பலருக்கு ரொம்ப தான் எரிச்சல். பரப்பு ஜேர்னலை வாங்கி போருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார் என்ன "இந்தியன்ஸ் சிட புத்தகம் எல்லாம் படிக்கிறீங்க என்று" அவர் பெயரைப்பார்க்கல புத்தக வடிவை பாத்திட்டார் போல, மொத்தத்தில், இந்தியாவுக்கு வெளியே தரமான ஈழத்தமிழர்களது சஞ்சிகையாக வெளிவருது பரபரப்பு ஜேர்னல். அதை விட பரபரப்பின் விற்பனையை அதிகரிக்க, இப்பிடி செய்திகளை போட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் அவர்களது வாசகர்கள், எப்போது வாசகர்களாகவே இருப்பார்கள்...

இச் செய்தி உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புலிகள் சுடப்பட்டது என்று அறிவித்தமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். என்னும் பரபரப்பின் வாதம் சரியாக கூட இருக்கலாம்.

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய....

பொது வாக மிக் ரக விமானங்கள் தாங்குதலுக்கு உள்ளாகும் போது விமானி பாது காப்பாக தப்பித்துக்கொள்ள வழியிருக்கின்றது. எனவே குறிப்பிட்ட விமானத்தில் இருந்த விமானி எங்கே வந்திறங்கினார்? தாக்கப்பட்டது இரணைமடுவில் எனில் அவர் எந்த இடத்தில் இறங்க கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை பொதுவா யோசித்து பாருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Hi Guys,

You are wrong about Rishi. He is a very good Air Traffic controller. He knows very well about Air defense Technology. got it. Ningka ninaippathu poola Paraparappu Gosip paper illai.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறிலங்கா விமானப்படைக்கு ஈடாக தமிழ் மக்களிடமும் ஒரு மிக் விமானம் இல்லையே என்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் குறையைப் போக்க, அரசின் மிக் விமானத்தையே இறக்கி புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பரிசளித்த ரிசி அவர்களின் பெருந்தன்மையை என்ன வென்று புகழ்வது.

கற்பனையின் உச்சத்தை தொட்ட இவர் ஒரு நவீன பூசலார் நாயனார்.

இவரை 64 ஆவது 'நாய'னாராக சேர்த்து இனிமேல் தொழுவோமாக.

Posted

வீரவெலவில் 2வது விமான நிலையம் அமைக்கத் திட்டம்

சிறீலங்கா அரசாங்கம் அதிஸ்டலாபச் சீட்டு விற்பனை செய்வதன் மூலம் கொழும்பிற்கு தெற்காக 160 மைல் தொலைவில் வீரவெல பகுதியில் இரண்டாவது விமானநிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி அதிஸ்ரலாப சீட்டுகளின் விலை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் இருந்து இரட்டிப்பு மடங்காக்கப்படும் என தெரியவருகிறது.

இதன்படி இவ்வாறான அதிஸ்ரலாப சீட்டுகள் யூன்மாதத்தில் இருந்து கைத்தொலைபேசியூடாகவும் மற்றும் தொலைபேசியூடாகவும் விற்பனை செய்வதற்குரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/

Posted

நவீனரக ராடர்கள் தொடர்பான இலங்கையின் கோரிக்கையை இந்தியா தீவிர பரிசீலனை

இலங்கைக்கு நவீன ரக ராடர் கருவிகளை வழங்குவது தொடர்பாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட ராடர் கருவிகளை பரிசீலிப்பதற்கு நிபுணர்களை அனுப்புவது தொடர்பாகவும் இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக த ரெலிகிறாப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தரெலிகிறாப் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் முப்படை தளபதிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியா முன்னதாக இந்திரா 2 டி ரக ராடர்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்நிலையில் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் தமக்கு இந்திரா 3 டி ரக ராடர் கருவிகளை தருமாறு இலங்கை பாதுகாப்புத்துறை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும் முன்னர் வழங்கப்பட்ட ராடர்களின் செயற்படுநிலை, வினைத்திறன் தொடர்பாக ஆராய உயர்மட்ட குழுவை அனுப்புமாறு இலங்கை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு ரக ராடர்களும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்டு பாரத் எலக்ட்றோனிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் ராடர் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை விமானப் படைக்கு இந்தியா பயிற்சியளித்து வருகின்றது.

மேற்படி விடயங்களை பாதுகாப்பு அதிகாரிகள் இக்கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லையென பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/

இவ்வளவும் இருந்தும் என்ன பிரயோசனம்

Posted

அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை.

நிதர்சன்

பரபரப்புக்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக நீர் கதையளக்காதையும். கிபிரைச் சுட்டது என்று புலிகள் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை. கிபிர் இரணைமடுவில் வைத்து சுடப்பட்டதாகவும், அது புகையைக் கக்கியவாறு தென்பகுதி நோக்கிச் சென்றதைப் பொது மக்கள் பார்த்ததாகவும் தமிழ்நெட் இணையமே செய்தி வெளியிட்டது. அச்செய்தி வந்து சில மணி நேரத்தின் பின்னர் புலிகளின் படைத்துறைப் போச்சாளர் இளந்திரையன் மிக் விமானம் சுட்டுவிழ்த்தப்பட்ட ஊடகங்களிற்கு உறுதிப்படுத்தினார். இளந்திரையனோ அல்லது புலிகளின் வேறு எந்த பிரமுகரோ கிபிர் சுட்டு விழுத்தப்பட்டதாகத் தெரிவிக்க வில்லை.

எனவே ஊடக விபச்சாரிகளிற்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக இங்கை வந்து கதையளக்காதையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்கள் சொல்வது போல பரபரப்புக்கு வக்காளத்து வாங்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. ஆனாலும், ஊடகங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் விமர்சன எல்லைகள் கடந்து, பிரதிகளை அதிகம் விற்க வேண்டும் என்பத்காக பரபரப்பு அப்படி செய்திகளை வெளியிடுகின்றது என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அ, ஆ. தெரியாமல் இணையம் நடத்துவது போலவோ, இல்லை பத்திரிகையில், 3/4 பங்கு விளம்பரத்தை அள்ளி வரும் கனடிய பத்திரிகைக்குள பரபரப்புக்கு வித்தியாசப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறும் போது விசமத்தனமான விமர்சனங்களை, குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டது போன்று " ஊடக விபச்சாரிகள்" என்று விமர்சிப்பதன் மூலம் விமர்சனம் செய்யும் உங்களையும், செய்யும் விதத்தையும் என்னால் உணர முடிகின்றது.

இப்படி விமர்சனங்களை முன் வைக்கும் நீங்கள் அது தொடர்பான அல்லது ஊடகம் தொடர்பாக விமர்சனத்தை எழுதும் மனநிலையை உடையவரா? என்பது கேள்விக்குறியே!

பரபரப்பை நீங்கள் எத்தனை தடவை வாசித்தீர்களே தெரியாது. ஆனால், தமிழில், அல்லது நாட்டு நடப்பு தெரியாத கிணற்று தவளைகள் அதை வெளியிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பத்திரிகைகள், இணையம் போல அல்ல, விரும்பியதை எழுதி விட்டுப்போக, அல்லது ம்றவனதை பிரதி செய்து எழுத,

நீங்கள் செய்திகளை, முதலில் பார்ப்பவராக, இருந்தால், முதலில் விமானம் சுடப்பட்டவுடன் வந்த தமிழ் நெற் செய்தியை பார்த்திருக்க வேண்டும். கிபிர் விமானம் இரனைமடுவில் சுடப்பட்டது. அது புகைந்து கொண்டு, சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். தமது தானியங்கி விமான எதிர்ப்பு கருவி இயங்கியே கிபிரை சுட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர் என்றே செய்தி வந்தது. அவ்வேளை இளந்திரையன் அண்ணா எந்த அறிவித்தலையும் ஊடகங்களுக்கு வழங்க வில்லை.

வக்காளத்து பக்கச்சார்வு. இவை எனக்கு ஒவ்வாதவை...!

Posted

நிதர்சன்

பரபரப்பு சொன்ன மாதிரியே புலிகள் மிக் விமானத்தை வன்னியில் தரையிறக்கிறது உண்மையென்று வைத்துக் கொண்டால், அதனை வெளியே தெரியாது விடவேண்டுமென்பதற்காகவே சுட்டுவிழ்த்தப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு.

புலிகள் மறைக்க முயன்ற விடயத்தை (போராட்ட ரகசியத்தை) கிணற்றுத் தவளை அல்லாதோரால் நடத்தப்படும் பரபரப்பு பரகசியப் படுத்துவது எதற்கு? போராட்டத்தின் நலனிலும் விட தமது பத்திரிகையின் விற்பனையிலேயே அவர்கள் கரிசனை காட்டுகிறார்கள்; என்பது உங்களிற்கு விளங்கவில்லையா?

இப்படி எழுதுபவர்களை ஊடகவிபச்சாரிகள் என்று சொல்வதில் தப்பில்லை.

நிதர்சன் இதே மிக் சுடப்பட்டது தொடர்பாக புலிகளின் இராணுவ அதிகாரிகள் சொன்னதாக தமிழ்நெட்டில் வெளியிட்பட்ட செய்தி

Military officials of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Ira'naimadu area

இதில் கிபிர் எண்ட சொல் பயன்படுத்தப்படவில்லை. பரபரப்பு மீதான விமர்சனத்தை வேண்டாத விமர்சனமாக கருதும் நீர் நீர் புலிகளின் (தவறில்லாத) அறிவிப்பை தவறு எண்டு சொல்கிறீரே?

Posted

நீங்கள் சொல்வது சரி மின்னல். இவைகளும் ஒரு துரோகச் செயகளாக தான் கணிக்கப்படும் என நினைக்கிறேன்

Posted

நான் நினைக்கிறேன் இந்தத்தலைப்பில் தொடர்ந்து விவாதிப்பது எமது இயக்கத்திற்கு பல பாதகங்கள் இருக்கிறது.

அதாவது தலைப்பிற்கும் எங்கள் விவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

நாம் கருத்துக்களை முன்வைக்கின்றபோது தமிழ்த்தேசியத்திற்கும், விடுதலை இயக்கத்தின் ராணுவ சம்பந்தமாகவும் பாதிப்புக்கள் இல்லாது இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது எனது கருத்து.

Posted

உங்கள் பிரச்சனைகளின் மத்தியில் எனக்கு ஒரு கேள்வி? இலங்கை இல்லை சிறீலங்கா அரசிடம் கிபீர் விமானங்கள் தற்போது இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Falling for your own propaganda

சிங்கள அரசின் பரப்புரை யந்திரங்கள்

கிழக்கில் புலிகளை தோற்கடித்து விட்டோம்

95% புலிகள் பலம் அழிக்கப்பட்டு விட்டது

விமானத் தாக்குதல்களால் புலிகள் பலமிழப்பு

போன்ற பொய்யான பரப்புரைகளை சிங்கள மக்களுக்கும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் ராசதந்திரிகளுக்கும் சொல்லிச்சொல்லி, கடைசியில் தாமே உண்மை நிலைய மறந்து சிங்கள மக்களும் மறந்து திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறார்கள். அதே தவறை நாமும் செய்ய முடியாது.

பணம் உழைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

  • பிச்சை எடுப்பது
  • களவு எடுப்பது
  • வழிப்பறி
  • கொள்ளை
  • தாலிக்கொடி அறுத்தல்
  • கள்ளக் காட் அடித்தல்

இப்படிப் பல.

ஆனால்

போராட்டத்தை விற்றல்

என்பது அதில் ஒன்றல்ல :mellow::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம். நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை. நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் சொல்வது போல விடுதலையை விற்று பிழைப்பு நடாத்த வேண்டிய அவசியம், ரிஷிக்கோ பரபரப்பு நிர்வாகத்துக்கோ இல்லை. ஏனெனில், எனக்கு தெரிந்தவரை ரிஷி அவர்களுக்கு பரபரப்பைபில் வரும் வருமானத்தை விட அதிக வருமானம் அவரது தொழில் கிடைக்கிறது.

பண்டிதர், (பெயரில மட்டும்) சொல்வது போல பணம் சேர்க்க, போய் பிச்சை எடுக்கலாம். ஏன் விரும்பினால் விபச்சாரமும் செய்யலாம். (அந்தளவுக்கு தமிழர் இன்னும் கீழ்த்தரமாகவில்லை என்று நினைக்கின்றேன்) ஆனால் குறிப்பிட்ட ஊடகங்களை தாக்குதை தொழிலாக கொண்டு கருத்து வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இணையத்தில் இலவசமாய், பரபரப்பு வராததால சிலருக்கு கோபம் தான் என்ன செய்வது. இலவசமாய் கொடுத்த குப்பையில எல்லா போடுகின்றீர்கள். அதனால் தான் காசுக்கு விற்பனை செய்கின்றார்கள் போல!

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.