Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

Featured Replies

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

et.jpg

 

https://www.virakesari.lk/article/62932

  • தொடங்கியவர்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை 

(நா.தனுஜா)

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

 இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்.

குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/62946

  • தொடங்கியவர்

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை -  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை எனவும் அதேவேளை, அவரின் நியமனத்தினால் மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 

இந்நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தனிநபரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமையானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் அவமரியாதையாகும். சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தினால் நாங்கள் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறோம் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/62952

  • தொடங்கியவர்
5 hours ago, ampanai said:

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்

அமெரிக்க தன் வசம் ஆதாரங்களை  வைத்துள்ளது, ஆனால் தண்டிக்க இன்றும் விரும்பவில்லை. காரணம், அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் இலங்கை பற்றிய மாற்றம் வரவில்லை.

அம்மையாரின் கவலை முதலைக்கண்ணீரே !

  • தொடங்கியவர்

ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போர்க்குற்றப் புகார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

 

ஷவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், ஷவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஷவேந்திர சில்வா தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

படத்தின் காப்புரிமை Twitter

 

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதன்படி, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது, தமிழர்களை அவமதிக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

படத்தின் காப்புரிமை Twitter

 

யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதானது, தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த நியமனம் வழங்கப்பட்டமையினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அமெரிக்காவின் பதில்

இலங்கை இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும், நம்பகமானதும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அம்னெஸ்ட்டி இன்டர்நெஷனல் எதிர்ப்பு

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இராணுவ தளபதியாக நியமித்தமையானது, யுத்தத்தின் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையாக குறைபாடாகவே கருதுவதாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை தெரிவிக்கிறது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எதிர்ப்பு

"யுத்த குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக" அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

இந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் பி.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிடும்போது இதனைக் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகியுள்ள நிலையில், ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒற்றுமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை, சர்வதேசத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி மகிந்தவின் இன்னொரு வடிவம் என்று 2015 இலேயே சொல்லிட்டம். அப்ப எல்லாம் நல்லவர் வல்லவர்.. நல்லாட்சி என்று குடுகுடுப்பை அடிச்சவை இப்ப..?! 😲

  • தொடங்கியவர்

தெரிந்தோ  தெரியாமலோ மைத்திரி ஒரு நன்மை செய்துள்ளார். மீண்டும் சர்வதேசத்திற்கு போர்க்குற்றம் பற்றிய நினைவுகளை மீட்க வைத்துள்ளார். 

யார் புதியாய்  மகேஷின் இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களும் தமிழின அழிப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து இருப்பார்கள். 

ஷவேந்திர சில்வாவை நியமித்தது மூலம் சர்வதேசத்திற்கு இங்கு நல்லெண்ணமும் இல்லை நம்பகத்தன்மையும் இல்லை என்பதை மீண்டும் கூற முடிகின்றது.  

  • தொடங்கியவர்
#சவேந்திரசில்வா
சவீந்திர சில்வா மீது பயணத்தடை வேண்டும் – அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு
 

US embassy statement.jpg

  • தொடங்கியவர்


அமெரிக்காவில் உள்ள ஒரு சட்டப்படி, போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் எந்த உறவுகளையும் வைக்க முடியாது என்கிறது,
இதன் மூலம் மைத்திரி 'சோபா' உடன்படிக்கைக்கு ஆப்பு வைத்துள்ளாரா? 


Under Leahy Law, US troops can’t cooperate with foreign forces facing war crimes allegations.

http://www.ft.lk/top-story/Storm-of-controversy-over-new-Army-Chief-appointment/26-684244

  • தொடங்கியவர்

ஐக்கிய நாடுகள் சபை கவலை

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இல்ஙகையின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த நியமனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவுக்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் போது, இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கையானது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மோசமாக பாதிப்பதுடன், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின், அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222576/ஐக்கிய-நாடுகள்-சபை-கவலை

Appointment of alleged war criminal to head of Sri Lanka army ‘deeply troubling’, says UN human rights chief

https://news.un.org/en/story/2019/08/1044501

 

  • தொடங்கியவர்

சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக  கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/63011

  • தொடங்கியவர்

’இராணுவ தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது’

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி நியமனமானது, ஜனாதிபதியின் சுயாதீனமான தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது, 

அரச சேவையின் நியமனங்கள் மற்றும் அரச சேவை செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுவது சிறப்பான ஒன்று அல்லவென்றும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இராணுவ-தளபதி-நியமனத்தில்-வெளிநாடுகள்-தலையிட-முடியாது/150-237077

‘ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவர்’

ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:55

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவரெனத் தெரிவித்த பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மூலமே அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவித்தார்.

பத்தரமுல்ல- சுஹூருபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சவேந்திர-சில்வா-எமக்கு-முக்கியமானவர்/175-237059

  • தொடங்கியவர்

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் நல்லிணக்கம்,  பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நலிவடையும் - கனடா , ஜெர்மன் கண்டனம் 

Published by T Yuwaraj on 2019-08-20 19:20:37

(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கும் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள், இந்நியமனம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நலிவடையச் செய்வதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

Image result for canada and german png

லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச, உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் பலவும் தமது கண்டங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் வெகுவாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒருபகுதியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட், 'உண்மையிலேயே இவ்விடயம் மிகுந்த அவதானத்திற்குரியது' என்றும் பதிவிட்டிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/63043

  • தொடங்கியவர்

 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சவேந்திர டி சில்வா  இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்ததால்::

  1. ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைப்படலாம்.
    1. யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான  அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்
    2.  இதனால் கிடைக்கும் வருமானம் தடைப்படலாம்

      2. இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்

 

On Sri Lanka Shavendra Silva as Army Commander Inner City

UNITED NATIONS GATE, August 19

"January 29-3: On Sri Lanka, given the newly assembled evidence regarding Shavendra Silva, formerly UN Peacekeeping adviser now Sri Lanka Army Chief of Staff, how can the SG and USG Lacroix continue to deploy Silva's troops as peacekeepers? What vetting is taking place? What is the SG's and USG's comment and action on this individual as chief of staff of an army the UN has been taking troops from?" There was no answer then; now the question has been submitted to a wider UN group including Guterres' Global Communicator Melissa Fleming. Watch this site, and see ITJP's dossier.

Now ITJP has said, "the United Nations cannot in good conscience continue to deploy peacekeepers from an Army headed by a man who allegedly repeatedly and knowingly committed war crimes against hundreds of thousands of civilians. Major General Silva of course is not alone in being promoted post-War – there is a pattern of rewarding, honouring and promoting alleged perpetrators, deploying them in prestigious UN jobs, as diplomats and in the former conflict areas to administer the very people they defeated. This is a text book case of impunity.

http://www.innercitypress.com/sri1silvagutflem081919.html

  • தொடங்கியவர்

Colombo based advocacy group the Centre for Policy Alternatives (CPA) has called on the Government to urgently review the appointment in light of the serious allegations levelled against Lt. Gen. Shavendra Silva.

In a statement issued yesterday, the CPA charged that Shavendra Silva’s appointment as Commander of the Army was effectively a “repudiation” of promised security sector reform and accountability by the current Government. “It demonstrates a clear disregard for human rights norms, and will facilitate the further entrenchment of impunity in Sri Lanka,” the CPA statement said.

It also cited that the 2015, the Paranagama Commission, appointed by then President Mahinda Rajapaksa, referred to the ‘white flag’ surrenders and other cases and noted credible allegations of war crimes that required independent investigations.

“Major General Silva’s series of promotions demonstrates how these alleged violations appear to be rewarded,” CPA said.

The advocacy group has also urged the Parliamentary Sectoral Oversight Committees to adopt a more robust role to monitor Silva’s work and the Sri Lanka Army and “take action to prevent Sri Lanka from sliding further towards a state where human rights violations are ignored and impunity thrives”. 

http://www.ft.lk/top-story/Controversy-over-new-Army-Chief/26-684244

  • தொடங்கியவர்

சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது  – ஐரோப்பிய ஒன்றியம் 

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்று  செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.

சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது. 

அத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/63054

  • தொடங்கியவர்

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் -மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா) Published by T Yuwaraj on 2019-08-20 22:15:42

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அதேவேளை, மனித உரிமை மீறல் குற்றங்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களினால் எடுக்கப்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியிருக்கிறது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அறிக்கையில் முழுமையான விபரம் வருமாறு:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தியிருக்கும் அதேவேளை, சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் பின்னணியில் இந்நியமனம் தொடர்பில் உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சவேந்திர சில்வா இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்ட வேளையிலும் நாங்கள் இதனையொத்த கருத்தையே வெளியிட்டிருந்தோம். பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் என்பன குறித்து வாக்களித்த தற்போதைய அரசாங்கம், அவற்றை நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகயையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது. மனித உரிமைகளுக்குச் செய்யப்படும் அவமரியாதையையும், தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களையுமே இந்நியமனம் வெளிக்காட்டி நிற்கிறது.

இந்நிலையில்  சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் வலியுறுத்துவதுடன், மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/63051

  • தொடங்கியவர்

போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை ஜனாதிபதியால், நாட்டின் இராணுவத் தளபதியாக்கப்பட்டுள்ளார். இதை  சனாதிபதி தெரிந்தே செய்துள்ளார். 

கேள்வி இங்கே என்னவென்றால் :
- அமெரிக்க தலைமையிலான மேற்குலத்தின் இரகசிய ஆதரவுடன் தான் செய்தாரா? இல்லை 
- வரும் எந்த சவாலையும் சமாளிக்கலாம் என எண்ணி செய்தாரா?  

இதுவரை வெளிவந்த  செய்திகளின் வைத்து பார்க்கும்பொழுது மேற்குலக ஆதரவுடன் தான் செய்துள்ளார் என நம்பலாம். மேற்குலம், உண்மையிலேயே இந்த நியமனத்தை வாய்ச்சொல்லுக்கும் மேலாக சென்று பொருளாதார தடை இல்லை தூதுவரை மீளழைத்தல் போன்ற இராசதந்திர நகர்வை செய்யலாம். 

இன்னும் சில வாரங்கள் சென்ற பின்னர் அனைவரும் இந்த நியமனத்தை மறந்து விடுவார்கள் என்பதே சிங்களத்தின் கணிப்பு. 

இந்த கணிப்பு வெற்றி தரும் வேளையில், மைத்திரி கூட சனாதிபதி சேர்தலில் குதிக்கலாம். 

On 8/20/2019 at 12:06 AM, ampanai said:

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியக் கயவர்களை, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் கைதேர்ந்த இந்தியப் பயங்கரவாதக் கும்பலை   மலைபோல் நம்பிய அமெரிக்க இராஜதந்திர முட்டாள்களும் இறுதியில் இந்தியாவைப் போல இலங்கையில் அமெரிக்கா பிச்சைப்பாத்திரத்துடன் அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 

கடத்தல், பாலியல்  பலாத்காரம்,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல். கொலைகளில் பிரபலமான ஒரு மிலேச்ச பயங்கரவாதி சவேந்திர சில்வாவை சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளின் தலைவனாக நியமித்ததன் மூலம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுத்துவந்த சர்வதேச முட்டாள்களும் கூட்டமைப்பினரும் தாங்கள் கையாலாகாத பிற்போக்கு அரசியல்வாதிகள் என வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் சுமந்திரன் வகையறாக்கள் விடும் அறிக்கைகள் பயனற்றவை!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

by in செய்திகள்

eagle-flag-usa-300x199.jpg

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி  ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும்,  சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.

இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு  வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.

அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்குவதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு, ஜனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/08/21/news/39651

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன? யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா? இல்லை 

சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா? அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே 

ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.

  • தொடங்கியவர்

சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் இன்னும் வடிகிறது -  ஸ்ரீதரன் எம்.பி. 

Published by R. Kalaichelvan on 2019-08-21 12:00:12

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

sridharan_mp.jpg

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில்,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன  சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார். 

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங்களைக்கொண்டு வருவேன் . மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த , இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன்  என்று சொல்கின்றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

 தமிழ் மக்களின் இரத்தம் குடித்த  சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது. 

அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/63081

On 8/20/2019 at 12:31 AM, ampanai said:

தெரிந்தோ  தெரியாமலோ மைத்திரி ஒரு நன்மை செய்துள்ளார். மீண்டும் சர்வதேசத்திற்கு போர்க்குற்றம் பற்றிய நினைவுகளை மீட்க வைத்துள்ளார். 

யார் புதியாய்  மகேஷின் இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களும் தமிழின அழிப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து இருப்பார்கள். 

ஷவேந்திர சில்வாவை நியமித்தது மூலம் சர்வதேசத்திற்கு இங்கு நல்லெண்ணமும் இல்லை நம்பகத்தன்மையும் இல்லை என்பதை மீண்டும் கூற முடிகின்றது.  

சர்வதேசம் சும்மா பெயருக்கு அறிக்கை விடும். பின்னுக்கு அவர்களே ஆலோசனை கொடுத்திருப்பார்கள்.

  • தொடங்கியவர்

சர்வதேசத்தின் பங்களிப்புடன்  தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்  - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 

(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது. 

hrw.jpg

இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

லெப்டினன் ஜெனரல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுந்தொனியில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கிறது.

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இந்த நியமனம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.  

இந்நிலையில் உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/63114

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…

புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21.08.19) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/129299/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.