Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது

Featured Replies

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

thumb_nadesh_priya_au22.jpg

இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு  தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றன  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/63673

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

thumb_nadesh_priya_au22.jpg

இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியான செய்தி. போராடினால்... வெற்றி கிடைக்கும். என்பதற்கு நல்ல சான்று. :)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டே வயதான அவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது...
அத்துடன் பெற்றோருக்கு அவுஸ்திரேலிய அரசு பாதுகாப்பு தர வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை என்று ஒத்துக்க கொள்ளுமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அரசு ஒன்றின் இறையாண்மையின் மீது தனிப்பட்டவர்களின் நலன்கள் எப்போதுமே ஒரு கேள்விக்குறி தான் …


 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

What's good for the goose is good for the gander.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதனால், இவ்வாறு அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ் திருப்பி அனுப்ப கூடாது !

What's good for the goose is good for the gander.

  • தொடங்கியவர்

தமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம் 

ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

920191104259385680635.jpg

அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். 

விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா என்ற தம்பதியினர் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடக்கிய மேற்படி குடும்பம் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. 

தற்போது குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கும் மெல்போர்ன் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. 

_108549232_ediqxmnueaacsgp.jpg

இந் நிலையில் அவர்கள் வாழ்ந்த குயின்ஸ் தீவிலிருந்து மேற்படி  குடும்பத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் கொடுமை செய்ததாக அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் ரிச்சர்ட் டி நடேல் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேல்வேறு இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/63822

 

On 8/30/2019 at 8:07 AM, nedukkalapoovan said:

தமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும். 

இவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;

 

 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2019 at 5:01 PM, Dash said:

இவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;

 

 

இல்லையாம் முதல் தீர்வுதானாம்.பு.பெ .சனம் தெளிவாய்த்தான் இருக்குதுகள்.😉

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் பொருளாதார வளர்ச்சிக்காக அன்று அமைச்சராக இருந்த யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் முயற்சியினால் நிறுவப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இன்று எங்கே...? எந்த ஆண்டிகள் போட்டுடைத்தார்கள்...?? 🤨

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.jpg

தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலிய அரசாங்கம்

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று இவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குறித்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தினை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

குறித்த தடை தொடருமா என்பது நாளைய தினமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்-குடும்பத்துக்கு-வி/

  • தொடங்கியவர்

இன்னும் நூறு / இருநூறு  வருடங்களில் அவுசில் வெள்ளை இனத்தவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை அலுவலகம் வரும் போது, வானொலியில் qld / Sydney க்கான   இலங்கைக்கான கோன்சுலரை  ( ஒரு சிங்கள ஆள் )  ஒரு ஐந்து நிமிடம் லைவ் பேட்டி கண்டார்கள் 

கேள்விகள்

1) தற்சமயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா ?

2) இந்த குடும்பம் இலங்கை வந்திறங்கினால்  உடனடியாக என்ன நடக்கும் ?

3)தமிழ் மக்களுக்கான கல்வி , பொருளாதார நிலவரங்கள் எப்படி இருக்கின்றன ?

 பதில்கள்

1) எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லை , இதனை பாராளுமன்றில் இருக்கும் இரண்டு தமிழ் கட்சிகளே categorikallaka வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன , தேவைப்படுவது devolution மட்டுமே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன .

2) உள்ளூர் குடியகல்வு  சட்டங்களை மீறி    வெளியே சென்றதனால் அவர்கள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப் படுவார்கள்       ( இதனை விபரிக்குமாறு அறிவிப்பாளர் கேட்க எங்கட ஆள் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுப் போய்  இங்கே உள்ளூர் தடுப்பு முகாம்களில் பலர் தற்கொலை செய்து , இங்கேயே இறுதிச்சடங்குக்குள்     செய்து  சாம்பலை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று சொல்கிறான் பாவி ( இரவு  கூடக் குறைய விஸ்கி அடிச்சுப் போட்டான் போல) , கேட்டவர் சரியாக குழம்பிப் போய் , நான் கேட்டதற்கும் நீ சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் என்று  கேட்க , ஒரு மாதிரி எதோ சொல்லி சமாளிக்ஸ்து ஆள் ) .

3) 1ம் வகுப்பு தொடக்கம் பல்கலை வரை இலவச கல்வி , இலவச மருத்துவம் , எல்லோர் போலவும் வேலை வாய்ப்பு  .

 

இவர்கள் பற்றிய உயர்நீதிமன்றத்தின் முடிவு இன்று தெரிய வரும் என்று தெரிகிறது 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் மேலும்  பனிரெண்டு நாட்கள்   வழங்கியிருக்கின்றது , இளைய மகளுக்கு குடியுரிமை விண்ணப்பித்திருக்கிறார்கள் , அதே திகதியில் ( இரவோடிரவாக ?) அச்சிறுமியின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து விட்டோம் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் சொல்கிறது ।        நீதிவான் மேலதிக விபரங்களை கோரியிருக்கிறார்
Lawyers for the family have questioned the assessment process, which happened quickly and on the same day citizenship was sought for the toddler.
ஒரு technical  பாயிண்ட் இல் அவுஸ்திரேலிய அரசு தவற விட்டிருப்பதற்காக தெரிகிறது , தமிழ் குடும்பத்தினருக்கு இது சாதமாக திரும்ப வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.