Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல்  - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும்.

ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. 

.

 

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டு ரீதியில் அவரை எதிர்த்தவர்கள் அரசியல் காடைகள் என்றால்.. ஈழத்தில் 1987 இலும் சரி.. 2006 தொடக்கம் 2009 வரையான பெரும் இனப்படுகொலை காலத்திலும் சரி.. பல ஆயிரம் அப்பாவி மக்களின் சாவுக்கு காரணமான ராஜீவ் சோனியா காந்தியை மன்னிக்க இவர் யார்...??! தமிழ் மக்களின் பிரதிநிதியா அல்லது.. தமிழ் மக்கள் மத்தியில் வாழும் அந்தச் சில காடைகளின் இன்னொரு வடிவமா..??! என்ற கேள்வி தான் இந்தக் காணொளியை காண்கையில் எழுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லனும் தாங்கள் ராஜீவை சோனியாவை காங்கிரஸை திமுக வை மன்னித்துவிட்டதாக. இவர் போன்ற ஹிந்திய ****** ******* அல்ல...! 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் பாதிப்பை உண்டு பண்ணியவர்களுக்கு தண்டனையும் தான் உலக நியதி. ஆனால்.. அதனை நிராகரித்து..  பாதிக்கபடாத நபர் மன்னிப்பு என்ற வார்த்தையூடு எதை தேட விளைகிறார்...??!

ராஜீவ் சோனியா காங்கிரஸ் தி முக தண்டிக்கப்பட வேண்டும் என்பது.. இந்தியா தண்டிக்கப்பட வேண்டும் என்றாகாது.

விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட்டதை அதன் தலைமை அழிக்கப்பட்டதின் தார்ப்பரியத்தை தான் புரிந்து கொள்வதாகச் சொல்லும் இந்த நபர்.. அந்த விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க முனைந்த ராஜீவ் காந்திக்கு இவர் முன்மொழியும் தீர்வென்ன.

புத்திசாலித்தனமாகக் கதைப்பதாக நினைத்துக் கொண்டு வரதராஜப் பெருமாள் மாதிரி கதை அளக்கக் கூடாது.

நீதி.. எந்த வடிவத்திலும் சாகடிக்க இடமளித்து ஒரு அரசியல் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை.

100 பேர் எதிர்ப்புத் தெரிவிக்காத சபையில் இருவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால்.. அந்த எதிர்ப்பை உள்வாங்கிக் கொள்வதும்  புரிந்து கொண்டு செயற்படுவதும்.. தான் சனநாயகம். அவர்களைக் காடைகளாகக் காட்டுவது பாசிசமாகும். 

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  நட்புக்கள்  எமக்குள் இருக்காவிட்டால்.......

பெரிய  அழிவுகளை நாம்  சந்தித்திருப்போம்?????

நிதானமாகத்தான்  பேசுகிறீர்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nedukkalapoovan திரும்பவும் உங்கள் பழையபாணி எழுத்துக்கு திரும்பவேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய நீங்கள் யாரோ அதுபோலத்தான் என் கருத்துக்களை பதிவு செய்ய நானும் உரித்துள்ளவன். நான் முக்கிய தமிழ் கவிஞன் அரசியல் ஆர்வலன் என நினைத்ததால் முன்னர் என் சில ராஜதந்திரபணிகளை தமிழக பத்திரிகையாளர்கள் சிலர் அறிந்திருந்ததால்  என் கருத்தை கேட்டார்கள். என் கருத்தை நான் பதிவு செய்தேன். உங்கள் பதிலை இங்கும் எங்கும் நீங்கள் பதிவு செய்யுங்கள். வரவேற்பேன். அவ்வளவுதான்.

பாரி மன்னன்போல வீரத்தை முன்னிலைப்படுத்தி எல்லோரையும் பகைப்பது புலம்பெயர் நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும்  சாத்தியமானது. நிச்சயமாக ஈழத்தில் வாழும் மக்களுக்கு அது நல்லதல்ல. எதிரியை தனிமைப் படுத்துவதா நம்மை/ குறிப்பாக  ஈழத்தில் வாழும் மக்களின் நலன்களை தனிமைப்படுத்துவதா? என்கிற கேழ்வி பழயது. முதல் எதிரியை தனிமைபடுத்தும் இராசதந்திர அணுகுமுறையை 1987ல் இருந்தே முன்னிலைப்படுத்தி வருகிறேன். நான் வன்னியில் விவாதிக்க எந்த நிலைபாட்டையும் நான் ஒருபோதும் பொதுவெளியில் முன்வைப்பதிலை. உங்கள் மறுப்பு கருத்துக்கள் என் சிந்தனைக்கு அவசியம். நீங்கள் விமர்சிப்பதை வரவேற்கிறேன். ஆனால் முன்னைய பாணியில் எழுதுவது வேண்டாம். நன்றி   

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இந்த  நட்புக்கள்  எமக்குள் இருக்காவிட்டால்.......

பெரிய  அழிவுகளை நாம்  சந்தித்திருப்போம்?????

நிதானமாகத்தான்  பேசுகிறீர்களா??

அன்புள்ள விசுக்கு, நண்பா. அரசியல் ரீதியாகவும் பின்தள ஆதரவு அடிப்படையில்  இராணுவ ரீதியாகவும் நம் இந்திய தமிழக நண்பர்கள் முக்கியமானவர்கள்.  நம் தமிழக நண்பர்களும் நாம் விசுவரூபம் எடுக்க பங்களிப்புச் செய்த   FORCE MULTIPLIERS , வலுபெருக்கிகளுள் முக்கியமானவர்கள் என்பதை  மிக தெளிவாக பேட்டியில்  சொல்லிவிருக்கிறேன். இது எடிற்பண்ணி பாதியாக குறைத்த பேட்டி. விசுக்கு உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஐயா... நீங்கள் அந்தப் பேட்டியில் பாவித்த அதே பதத்தை தான் நானும் பாவித்திருக்கிறேன். அதனை உங்களால் தாங்க முடியவில்லை என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.

அதேபோல் தான்.. திருமாவளவன் மீதும் எதிர் விமர்சனங்கள் உள்ள மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய சகல உரித்தும் உடையவர்கள். அதனை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம்.. திருமாவளவனுக்கு அவசியம். அதேபோல் அவர்களை அரசியல் காடைகள்.. தீவிரவாதிகள் என்று பொதுவெளியில் விமர்சிக்க விளையும் உங்களுக்கும் அவசியம்.

அந்த இருவரும்.. மக்களைக் காட்டிக்கொடுக்கவில்லை. போராளிகளை காட்டிக்கொடுத்து அழிக்கவில்லை. தேசத்தை எதிரிக்கு கூறுபோட்டு பிழைக்கவில்லை. எதிரிகளின் அநியாயங்களுக்கு வக்காளத்து வாங்கிப் பிழைக்கவில்லை. எதிரிகளுக்கு சேவகம் செய்து தம் பிழைப்பை பொக்கட்டை நிரப்புவர்களாகவும் தெரியவில்லை. மக்களின் சாவுகளுக்கு வேதனைகளுக்கு உரிமை இழப்புக்கு உடமை இழப்புக்கு நில இழப்புக்கு நீதி கோராது மறப்போம் மன்னிப்போம் என்று பசப்பும் பேசவில்லை.

ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்குக் காரணமானவர்களோடு எந்த நிபந்தனையின் கீழ் திருமாவளவன் கூட்டு வைத்து அரசியல் செய்து கொண்டு.. ஈழத்தமிழர்களை சந்திக்க வந்தார் என்ற ஆதங்கமே அந்த இருவரிடமும் இருந்தது. அது ஈழத்தமிழர்கள் பலரிடமும் இருந்தது. இதே குற்றச்சாட்டு ராகுலை தூக்கிப் பிடித்து மேடையில் பேசித்திருந்த வைகோ மீதும் உள்ளது.  இவை எல்லாம் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியலாகத் தெரியாது.. அசிங்கமாக தங்கள் வேதனைகள் சோதனைகள் மீது நடாத்தப்படும் அடாத்தாகவே தெரியும். தெரிகிறது.

அதற்கான விளைவை அந்த மக்கள் தம்மிடம் வருவோரிடம் காட்டும் உரிமை அல்லது அவர்களுக்கு தமது உணர்வை வெளிக்காட்டும் உரிமை உள்ளது. அதனை நீங்கள் எப்படி காடைத்தனம் என்று சொல்வீர்கள்.

அப்படி நீங்கள் சொல்ல முடியும் என்றால்.. எம் மக்களை அழித்தவர்களோடு.. எம் நிலத்தை எதிரிக்கு அடிமையாக்கி வழங்கிவர்களோடு.. எம் மக்களை திறந்த வெளிச் சிறையில் அடிமைப்படுத்தியோரோடு..  எம் தேசத்தின் மீது சிங்கள பெளத்த.. இஸ்லாமிய மதவெறி ஆதிக்கத்தை பரவ விட்டவர்களோடு தாங்கள் பாராட்டும் நட்புரிமையின் கீழ்.. தங்களை எப்படி அழைப்பது..??!

இத்தனை கோடி இந்திய மக்கள் இருக்க ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்ற ஒரு நபருக்காக.. எத்தனை இந்திய மக்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எவரும் இல்லை. அவருடைய குடும்பத்தை தவிர. அவருடைய குடும்பம் கூட அவர் இல்லை என்று இந்த உலகில் வாழாமலும் இல்லை. ஆனால்.. ஒரு தலைவன் என்பதற்காக மொத்தக் குடும்பத்தை இழந்த சொந்த மக்களில் இலட்சம் பேரை இழந்த தேசிய தலைவரின் இழப்பை எப்படி.. சோனியாவின் எண்ணங்களோடு புரிந்து கொண்டீர்கள் என்று விளக்க முடியுமா..?!

சும்மா கண்டபடிக்கு எமக்கு வசதியான இடத்தில் எம்மை வைத்துக் கொள்வதற்காக சமன்பாடுகளைப் போடக் கூடாது. நீதிக்கு நியாயத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள். யாரையும் பசப்புக்கு நண்பர்களாக்கி நாம் வாழ முடியாது. அதேபோல் உண்மையான நண்பர்கள் எம் அழிவை பார்த்துக் கொண்டும் இருந்திருக்கமாட்டார்கள். இருக்கவும் மாட்டார்கள். எமக்கான நீதி வரை அவர்கள் தொடர்ந்து செயற்படவே செய்வார்கள். நீங்கள் அவர்களை தூசிக்க வேண்டாம்... என்பதே எமது வேண்டுகோள். மக்கள் தமது வேதனையை வெளிப்படுத்த விடுங்கள்.

ஹிந்தியா எமது நட்பு நாடு என்ற போலிக் கோசம் எனியும் எம் மக்களிடம் எடுபடாது.  கொசவாவை எடுத்துப் பாருங்கள்.. ரஷ்சிய பின்னணி கொண்ட பலமான நாடுகள் சுற்றி இருந்தும்.. அந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்தது என்றால்.. அந்த மக்கள் தம் மீதான அடக்குமுறையை இனப்படுகொலையை உலகின் முன் நீதிக்காக முன்னிறுத்தியது மட்டும் தான். 

இதையும் பாருங்கள்..

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, poet said:

அன்புள்ள விசுக்கு, நண்பா. அரசியல் ரீதியாகவும் பின்தள ஆதரவு அடிப்படையில்  இராணுவ ரீதியாகவும் நம் இந்திய தமிழக நண்பர்கள் முக்கியமானவர்கள்.  நம் தமிழக நண்பர்களும் நாம் விசுவரூபம் எடுக்க பங்களிப்புச் செய்த   FORCE MULTIPLIERS , வலுபெருக்கிகளுள் முக்கியமானவர்கள் என்பதை  மிக தெளிவாக பேட்டியில்  சொல்லிவிருக்கிறேன். இது எடிற்பண்ணி பாதியாக குறைத்த பேட்டி. விசுக்கு உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

தோழர்

எனது  கேள்வி  உங்களுக்கு  புரியவில்லைப்போலும்

அரைகுறையான  பேட்டி

எமக்கு  பாதகமானது  எனத்தெரிந்தும் நீங்களே அதை இங்கு பகிர்ந்துள்ளீர்கள்?

எனக்கு  எப்பொழுதுமே  ஒரு  பயமுண்டு

உங்கள் போன்றவர்களின் குரலைத்தான்   

பலரும்  எமது  குரலாக  எடுத்துக்கொள்கிறார்கள்.😥

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தோழர்

எனது  கேள்வி  உங்களுக்கு  புரியவில்லைப்போலும்

அரைகுறையான  பேட்டி

எமக்கு  பாதகமானது  எனத்தெரிந்தும் நீங்களே அதை இங்கு பகிர்ந்துள்ளீர்கள்?

எனக்கு  எப்பொழுதுமே  ஒரு  பயமுண்டு

உங்கள் போன்றவர்களின் குரலைத்தான்   

பலரும்  எமது  குரலாக  எடுத்துக்கொள்கிறார்கள்.😥

நண்பா விசுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவும் என் கருத்தை என்கருத்தாகவும்தான் எடுப்பார்கள். என் கருத்தை  ஈழ தமிழர் சமூகம் அரசியல் இலக்கியம் தொடர்பான ஆர்வலன் ஒருவரின் கருத்தாக மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் முட்டாள்களின் உலகமல்ல நண்பா. விபரம் தெரிந்த உலகம் நண்பா. பேட்டி நாட்டில் வாழும் மக்களின் நலன்கருதி நண்பர்கள் வட்டத்தை அகலித்து எதிர் அணி வட்டத்தை குறுக்கும் அணுகுமுறையோடு கொடுக்கப்பட்டது. அரைகுறை பேட்டியல்ல. நக்கீரன் எடிற் செய்த பேட்டி.  குறியை மட்டுமே காண் அர்சுணா என்கிற துரோணாச்சாரியாரின் வார்தைகளில் உள்ள ராஜதந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள் நண்பா.  

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தமிழக நண்பர்களின் போட்டி அரசியல் மோதல்களில் ஈழத்தமிழர்கள் விலகி இருக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, poet said:

நண்பா விசுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவும் என் கருத்தை என்கருத்தாகவும்தான் எடுப்பார்கள். என் கருத்தை  ஈழ தமிழர் சமூகம் அரசியல் இலக்கியம் தொடர்பான ஆர்வலன் ஒருவரின் கருத்தாக மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் முட்டாள்களின் உலகமல்ல நண்பா. விபரம் தெரிந்த உலகம் நண்பா. பேட்டி நாட்டில் வாழும் மக்களின் நலன்கருதி நண்பர்கள் வட்டத்தை அகலித்து எதிர் அணி வட்டத்தை குறுக்கும் அணுகுமுறையோடு கொடுக்கப்பட்டது. அரைகுறை பேட்டியல்ல. நக்கீரன் எடிற் செய்த பேட்டி.  குறியை மட்டுமே காண் அர்சுணா என்கிற துரோணாச்சாரியாரின் வார்தைகளில் உள்ள ராஜதந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள் நண்பா.  

தேசியம்  சார்ந்து

எல்லோரும்  பொறுப்புடன்  செயற்படணும்  என்பது  தான்  நிலைப்பாடும்  வேண்டுகோளும்

உடையவன்  இல்லாதது எதுவும்  ஒரு முழம் கட்டைதான் என்பதால்

சிறு  அவதானமும்  எச்சரிக்கை  உணர்வும்  கூடவே.

மற்றும்படி 

உள்ள  கோவணமும் போன  பின்னர்  ......???

எந்த உள்  நோக்கமுமில்லை  தோழர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இப்படி எல்லாம் பேசவேண்டும்

ஆனால் ஒரு விடையத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள்

இவ்வ்வளவுகாலமும் இந்தியாவைத் தூக்கிப்பிடித்து ஏதாவது நல்லது நடந்திருக்கு என்றால் எதுவும் இல்லை. தவிர இந்திய அரசும் டெல்கியும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (சீமான் உட்பட) சேர்ந்தோ அல்லது தனித்தோ எமக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என பொயட் உட்பட அனைவரும் எண்ணுவார்களாகவிருந்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறுஎதுவும் இல்லை.

அதுபோல் தமிழ்நாட்டின் சொந்தங்களது இலங்கைத்தமிழர்கான ஆதரவுத்தளம் என்பது வேறு விடையம் ஆனால் அவர்கள் எமது உரிமைகளை மீட்டெடுத்துக் தருவார்கள் என்பது முட்டாள்தனம்.

இந்தியாவை நாம் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக நம்பி இழந்தவையே அதிகம் அதை எதிர்காலத்தில் இந்தியா நல்லெண்ணத்துடன் செயற்பட்டாலும் திருப்பித்தரமுடியாது அதற்கு இணையாகக்கூட அவர்களால் தரமுடியாது.

வடக்குக் கிழக்கின் அரசியல் தலைமையாக தற்செயலாகவும் காலத்திஙோலமாகவும் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பையே இந்தியப்பிரதர் மோடி இலங்கைப்பிரயாணத்தில் போகிற போக்கில் வானூர்தி நிலையத்தில் சந்திக்கக்கூடிய தகுதிவாந்தவர்களாக மட்டுமே இந்திய அதிகார வர்க்கம் நினைக்குமளவுக்கே எமக்கான அரசியல் தளம் இந்தியாவில் இருக்கு என்பதை பொயட் உட்பட நிறையப்பேர் கவனிக்கத்தவறிவிட்டார்கள் 

அச்சந்திப்பில் மோடி சொன்ன விடையம் என்னை முதலில் சந்தித்தபோதும் இதே கருத்துக்களையும் வேண்டுகோளையும்தான் முன்வைத்தீர்கள் என. அதாவது முதலிலும் இதைத்தான் சொன்னீரிர்கள் அதற்கு நான் எந்தவித நடவடிக்கையையும் இந்தியத்தரப்பில் செய்யவில்லை பிறகும் எதுக்கு இதைப்பற்றிக்கூறுகிறீர்கள் சிங்களம் மகிழ்சிப்படும்படி ஏதாவது பாலாறு தேனாறு ஓடுது எனச்சொல்லுங்கள் என்பதே.
 

அண்மைய காலங்ளில் பார்க்க கிடைத்த  சிறந்த பேட்டிகலில் ஒன்று .

புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துகிற புலி  எதிர்பாளர்களை பார்க்க எரிச்சல் வரும் .
அதைப்போலவே சகோதர படுகொலைகளையும் ஜனநாயக மறுப்புகளையும் நியாப்படுத்துகிற புலி ஆதரவாளார்களை    பார்கிறபோதும் எரிச்சல் வரும் .

உணர்ச்சி அரசியலுக்கு அப்பால் இந்த பிரச்சனையை அணுகிற மிக சில குரல்களையாவது  கேட்பதில் மகிழ்ச்சி .
 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கப் போராடவில்லை. விடுதலைப்புலிகள் ஒரு அடக்கப்பட்டு அழிப்பட்டுக்கொண்டிருந்த இனத்தின் இருப்பையும் உரிமையையும் விடுதலையையும் வேண்டிப் போராடினார்கள்.

அவர்கள் சகோதர யுத்தம் செய்யவில்லை. எவர் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மக்கள் மீது அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அந்நிய உளவுப்படைகளின்.. எதிரிகளின் தேவைகளையும் நிறைவு செய்ய மக்களுக்குள் இருந்தார்களோ அவர்கள் மக்களின் விடுதலைக்கு எதிரான எதிரிகளாக நோக்கப்பட்டார்கள்.

மற்றும்படி சகோதர யுத்தம் என்பது.. ஈழக் களத்தில் நடந்தது என்றால்.. அது தமிழ் மற்றும் முஸ்லீம்.. துணை இராணுவ ஆயுதக் கும்பல்களுக்குள் நடந்தவை தான்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் இரு வேறு வகை யுத்தத்தை எதிர்கொண்டார்கள். ஒன்று நேரடி எதிரிகள். இன்னொன்று சொந்த இனத்துக்குள் இருந்து வந்த மறைமுக எதிரிகள்.. அதாவது துரோகிகள். அவ்வளவே. இதில் நியாயப்படுத்தல் இல்லை. இதுவே யதார்த்தம்.

அதை தரிசிக்க சிலர் தயங்குவது தெரிகிறது. ஆனால்... அந்த உண்மை கடந்த 10 ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கப் போராடவில்லை. விடுதலைப்புலிகள் ஒரு அடக்கப்பட்டு அழிப்பட்டுக்கொண்டிருந்த இனத்தின் இருப்பையும் உரிமையையும் விடுதலையையும் வேண்டிப் போராடினார்கள்.

அவர்கள் சகோதர யுத்தம் செய்யவில்லை. எவர் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மக்கள் மீது அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அந்நிய உளவுப்படைகளின்.. எதிரிகளின் தேவைகளையும் நிறைவு செய்ய மக்களுக்குள் இருந்தார்களோ அவர்கள் மக்களின் விடுதலைக்கு எதிரான எதிரிகளாக நோக்கப்பட்டார்கள்.

மற்றும்படி சகோதர யுத்தம் என்பது.. ஈழக் களத்தில் நடந்தது என்றால்.. அது தமிழ் மற்றும் முஸ்லீம்.. துணை இராணுவ ஆயுதக் கும்பல்களுக்குள் நடந்தவை தான்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் இரு வேறு வகை யுத்தத்தை எதிர்கொண்டார்கள். ஒன்று நேரடி எதிரிகள். இன்னொன்று சொந்த இனத்துக்குள் இருந்து வந்த மறைமுக எதிரிகள்.. அதாவது துரோகிகள். அவ்வளவே. இதில் நியாயப்படுத்தல் இல்லை. இதுவே யதார்த்தம்.

அதை தரிசிக்க சிலர் தயங்குவது தெரிகிறது. ஆனால்... அந்த உண்மை கடந்த 10 ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

அதே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

பொயட் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இப்படி எல்லாம் பேசவேண்டும்

 

Elugnajiru நண்பா, நீங்கள் பேட்டியை மீண்டும் வாசியுங்கள். இந்தியா தொடர்பாக  விமர்சனங்கள் இலையென்று உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்ல முடியுமா? நமக்கென்ன மக்களின் அவலத்தில் புலம்பெயர்ந்த பாதுகாப்பில் இருந்துகொண்டு எல்லா தரப்புக்கும் கல் எறிவோம். ஈழத்தில் அவலப்படும் மக்கள் நலன்கள் எங்களுக்கு முக்கியமல்ல. . எல்லோரையும் பகைக்காமல் தனிமைப் படுத்தவேண்டியவர்களை தனிமைப்படுத்தி சொல்லவேண்டியதை கூர்மையாக சொலிகிற விடுதலை அரசியலுக்கான இராஜதந்திரம் எனக்கு இருக்கு என்பது அங்கீகரிக்கப்பட வேண்டிய இடங்களில் அங்கீகரிக்கபட்டிருக்கு. என் பேட்டி தொடர்பாக ஏற்கனவே நெருக்கடி ஆரம்பித்து விட்டது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?   உங்கள் கருத்தை மதிப்பவன் நான். தயவுசெய்து  உங்கள் கருத்தை உண்மையாகவும் சொல்லுங்கள்.   

நெடுக்ஸ்

நீங்கள் குறிப்பிடுகிற இந்த கருத்தே பெரும்பான்மை தமிழ் சமுகத்தின் கருத்தென்பதை நானறிவேன் .

86 பிறகு ஈழ அரசியலை பார்க்கிர  அல்லது அதட்குள்  இயங்குபவர் இப்படி எண்ணுவதில் தவறேதும் கிடையாது என்பது என்னளவிலான எண்ணம் .

மற்றும்படி உடன்பாடு இல்லை என்றாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்தாயகத்தை வெறித்தனமாக நேசிக்கும் அன்புக்குரிய மதுரைப்பிள்ளை@maduraipillai

அவர்களுக்கு. உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் நாகரீகமான முறைமை ஒன்றுள்ளது. அங்குதான் சிக்கலே உருவாகியது. தான்போக வழியில்லாமல் தவிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் புலம்பெயர்ந்து வசதியாக வாழும் நாங்கள் மேலதிக சுமைகளையும் சிக்கல்களையும் உருவாக்கும் பொழுதுபோக்கை கைவிட வேண்டும். நீங்கள் ஈழம் சென்று மக்களோடு பேசுங்கள். படுபாவிகள் குலநாசம் செய்யும் பாதகமான  இயக்கப்பணத்தில் கொழுத்திருக்க சாப்பிட வழியற்று ஏங்கும் முன்னைநாள் போராளிகளுக்கு உதவுங்கள். தமிழக கட்ச்சிகளின் பிணக்கை தீர்க்க அவர்களுக்குத் தெரியும் நண்பரே. எங்கள் அரசியலை செய்யுங்கள். எங்கள் போர் விதவைகள் முன்னைப் போராளிகளுகாக குரல்கொடுங்கள். ஆதரவாக ஈழம் சென்று உதவுங்கள். நானும் உங்களோடு ஒத்துழைக்கிறேன்.  

மதுரைப் பிள்ளை அவர்களே, நீங்கள் சாதிவாதிகள் இல்லை மதவாதிகள் இல்லையென்றால் மகிழ்ச்சி. பெரும்பாலும் சாதிவாதிகள் மதவாதிகளே தோழர் திருமாவை தனிமைபடுத்தி எதிர்க்கிறார்கள்  என்பதால் பொதுப்படக் கூறினேன்.

என்னிடம் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் ஆலோசனை கூறலாம். ஆனால் ”ஜெயபாலனுக்கு நல்லது” என்பது மிரட்டலானால் உங்களுக்கு என்னை தெரியாது என்று அர்த்தம். 17 வயசில் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் ஈஇடுபட்டதில் இருந்து விடுதலைப் போராட்டமென குறைந்தது 28 கொலை முயற்சிகளுக்கு தலை நிமிர்ந்து முகம் கொடுத்தவன், 29 முயற்சி ஏற்பட்டாலும்கூட நான் தலை பணிய மாட்டேன்.

என்னை மிரட்டும்தொனியில் பேசியதுபோல தொனித்தமை நகைப்பு தருகிறது. திரும்ப அதை அன்பான கோரிக்கையாக முன்வையுங்கள். நண்பரே ஒன்று தெரியுமா? நான் 17 வயசில் இருந்தே சாவுக்கு சவாலாகவே வாழ்ந்து வருகிறேன்.   இந்த மிரட்டும் தொனியைத்தான் நான் அரசியல் காடைத் தனம் என்றேன்.  அது அன்பான கோரிக்கையென்றால் பரிசீலிக்கிறேன்.

நமக்கு நட்ப்பான நம்மை ஆதரிக்கிற தமிழக அமைப்புகளில் உங்களுக்கு பிடித்தவர்களை ஆதரிப்பது பத்திரிகை விற்பது பாராட்டுக்குரியது. ஆனால் ஏனைய தமிழக நண்பர்களை இழிவுபடுத்துவதை எனது நண்பரான உங்கள் ஆதரவுக் கட்ச்சியின் தலைவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் அரசியல் நாகரீகம் தெரிந்தவர். இப்படி ஆர்வக்கோளாற்றால் அனாகரிகமாக நடக்காதீர்கள் பேசாதீர்கள். நீங்கள் யாரை நம்பி “ஜெயபாலனுக்கு நல்லது” என்கிறீர்கள்?  அவர்களும் எனது நண்பர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒருபோதும் உங்கள் அடியாட்க்களாகமாட்டார்கள். அதனால் மிரட்டலை விடுத்து அன்பான வேண்டுகோள் வையுங்கள் பரிசீலிக்கிறேன்.

வேண்டுகோள்

எங்களுக்கு எல்லோரும் தேவை. எங்கள் தமிழக நண்பர்களின் போட்டி அரசியல் மோதல்களில் ஈழத்தமிழர்கள் விலகி இருக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.ஈழத் தமிழர் அமைப்புகளின் முரண்பாடுகளில் தமிழக கட்ச்சிகளும் அரசியல் ஆர்வலர்களும் , தமிழக நட்ப்பு கட்ச்சிகளிடை ஏற்படும் கருத்து முரண்ப்பாடுகளில் ஈழ கட்ச்சிகளும் ஆர்வலர்களும் தலையிடும் ஆபத்தான போக்கு வளர ஒருபோதும் இடம் தர வேண்டாம், இந்த ஆபத்தான போக்கு ஈழத் தமிழர்களை தமிழக கட்ச்சிகளும் சில அரசியல் ஆர்வலர்களும், தமிழக தமிழர்களை ஈழ அமைப்புகளும் சில அரசியல் ஆர்வலர்களும் அடியாட்க்களாக பயன்படுத்தும் எத்தணங்களுக்கு ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் பலியாகிவிடக்கூடாது என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

2009 ல் முள்ளிவாய்காலில் இனஅழிப்பை தலமை தாங்கி முடித்த ராணுவத்தளபதி சரத்பொன்சேகவுக்கு 2010 தேர்தலில் தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த லட்சணத்தில திருமா திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு எதிர்ப்பா ?  

அதே நேரம் இன அழிப்புக்கு துணைபோன திமுக  காங்கிரசுடன்  கூட்டணி போடும் திருமாவுக்கு எதிரான கருத்தை கூறும உரிமை சம்மந்தப்பட்டவருக்கு உண்டு. அக்கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாமே தவிர காடையர்கள் சாதியவாதிகள் என்ற முத்திரையை அவர்கள் மீது குத்த முடியாது. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்ப்புக்குரிய சண்டமாருதன்,

நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் அன்று கேழ்விநேரம்வரை காத்திருந்து  கருத்தை கருத்தால் எதிர்கொண்டிருந்தால் தோழர் திருமாவுக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டிருக்காது. நானும் அரசியல் காடைத்தனம் என குறிப்பிட நேர்ந்திருக்காது.  

நமது தமிழக நண்பர்களின் மோதல்களில் சமரசம் செய்யமுடியாவிட்டால்  நாம் விலகி நிற்க்க வேண்டும். பிழவுகளில் பக்கம் சார்ந்து  தமிழக தமிழர்கள் கேட்க்க வேண்டிய கேழ்விகளை நாங்கள் கேட்க்கலாமா? அதுவும் நம்மிடத்தில் வைத்து. . எங்களுக்கு இதை விட முக்கியமான எங்கள் பணிகள் உள்ளன.

.

இப்ப சம்பந்தபட்ட ஜீவன் முதலாளி நான் சொல்வதைக் கேட்டால்  “ஜெயபாலனுக்கு நல்லது” என மிரட்டல் தொனியில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவரது ஓரிரு தமிழக நண்பர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று  அவரது வீடியோவை பகிர்ந்து சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் தோரணையில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான் போலும். நான் கும்பிட்டு வாழ்ந்ததில்லை. ஏறக்குறைய 28 கொலை முயற்சிகளில் தப்பியிருக்கிறேன். சங்ககாலப் புலவர்கள்போல நானும்   நாடுகள் தனிநபர்கள் அமைப்புகள் உட்பட  யாருக்கும் அஞ்சுகிறவன் அல்ல என்பதை நாடுகளும் அறியும் நமது போராளிகளும் அறிவார்கள். கட்டிலில் கிடந்து இயற்கையாக மரணிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அகாலமரணத்தை ஒரு பாக்கியமாகவே எதிர்பார்த்திருக்கிறேன். 

தமிழகத்தில் நமது பல்வேறு நட்ப்பு சக்திகள் பிழவுபட்டு பதட்டமான சூழல் உள்ளது. நாங்கள் யாருக்கும் அடியாட்கள் ஆக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதே என் கவலை.

நிதானமான தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எங்கள் மக்களும் எங்கள் இளையவர்களும் அரசியல் ஆர்வலர்களும் ஆண் பெண் சமத்துவத்தையும் உணற்சிகளை மேவும் சமநிலையையும் நன்மை தீமை கோவ சூழல்களில் தம்மக்குள்ளும் பிறருடனும்உட்கார்ந்துபேசும் நாகரீகத்தையும் வரித்துகொள்ளும் பெரும் பேறு அருள வேண்டிப் பிரார்திக்கிறேன். எங்கள் மக்கள் அதி தீவிரத்தில் இருந்து விவேகத்துக்கு மேம்பட அருள வேண்டி பிரார்திக்கிறேன். எமது மக்கள் பெருங்கோபத்தில் இருந்து ராஜதந்திர அணுகுமுறை வல்லமை பெற அருள பிறார்திக்கிறேன். போராளிகளின் பணத்தை கையாடியவர்கள் குலநாசம் ஏற்படுமுன்னம் இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த பணத்தை நாட்டில் அல்லலுறும் முன்னைநாள் போராளிள் போராளிகளின் விதவைகள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு உதவி உய்யவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

தாய் மண்ணிலும் உலகடங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்கள் சாதி பால் சமய ஏற்றத்தாழ்வும் வெறுப்பும் இன்றி ஐக்கியப்பட அருள வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

இந்து சமுத்திரத்திலும் உலகடங்கிலும் எளிற்ச்சிபெறும் மானுடத்தின் நேசத்தில் எங்கள் மக்கள் முன்னணிவகுக்க அருள்க என பிரார்த்திக்கிறேன்.

.

மீண்டும் எமது மக்கள் மனித நேயத்துடன் மாவீரர் கனவு கண்டதுபோல வளம்மிக்க இனமாக நிமிர்வதை கண்டு மகிழ்ந்து மாகவிதை பாடும்வரை உயிவாழும் பாக்கியத்தை வேண்டி பிரார்திக்கிறேன்.

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

திரு.பொயட் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி

தென் பகுதிகளில் இருந்த குளங்களை தாக்கும் படி புலிகளிடம் ஆலோசனை கூறினீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மீரா,  தயவு செய்து உங்கள் பதிவை நீக்கிவிடும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, poet said:

அன்புக்குரிய மீரா,  தயவு செய்து உங்கள் பதிவை நீக்கிவிடும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

ஆம் அல்லது இல்லை என்ற ஓர் பதிலை கூறுவதைவிடுத்து ஏன் இப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா ,மிகுந்த பணிவுடன் உங்கள் பதிவை நீக்குமாறு வேண்டுகிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.