Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!

Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST]

மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

எங்கு இருக்கிறது

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

எத்தனை வருடம்

இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

என்ன எல்லாம் கிடைத்தது

இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது.

குறிப்பு என்ன

இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அறிக்கை

இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கையை வழிபாடு

அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை!

https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

அது மட்டுமா? முகமதூர் ரசூலல்லாஹ் எனவும் சொல்கிறாரகள். அதாவது அல்லாஹ்வின் கடைசி தூதர் நபி (ஸல்) மட்டுமாம்!

அளவற்ற ஆற்றல் உள்ளவர் ஏன் நேரடியாக கதைக்காமல் தூதர் வைக்கிறார்? 😂

3 hours ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

நான் அங்கை கீழடியிலை ஐயர்மார்ரை மந்திர தந்திரங்களும் பெரியாரை போலை ஆக்களின்ரை காட்டுமிராண்டி கொள்கைகளும்  இல்லையெண்டு சொல்ல வந்தனான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

பலதடவை சொன்னதுதான். மீளவும் சுருக்கமாக. இந்த பதிவாளர் திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற படங்களை தமிழ் வரலாற்று ஆவணங்கள் என ஊண்டி படித்திருப்பார் போலும் 😂.

1. நக்கீரனை மட்டுமில்லை - இன்னும் பல தமிழ் அறிஞர்களை, தமிழ் குறுநில மரபுகளை,  மூதாதைகளை, கண்ணகியை, ஓளவையை கபளீகரம் செய்து எம்மை சிறுக சிறுக ஆக்கிரமித்ததே இந்து சமயம் (சைவம், வைஸ்ணவம் எக்செட்றா). இதை பற்றி முன்னைய திரியில் விளக்கமாக எழுதினேன். நீங்கள் பிறகு வரவே இல்லை.

2. வள்ளுவனுக்கும் இந்து சமயதுக்கும் என்ன தொடர்பு? 

3. பக்தி இலக்கியம் இந்த ஆக்கிரமிப்பின் பின், ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்க எழுந்த ஆக்கிரமிப்பாளரின் பிரச்சார இலக்கியம். மூவர் தமிழும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் இவ்வகையே. இவற்றை ரசிக்கலாம். ஆனால் இவை எம்மினத்தின் வரலாற்றை சொல்லும் ஆவணங்கள் அல்ல.

4. கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் என்ற வடமொழிக் கதையின், தமிழ் ரீமேக். இதை கம்பரே சொல்லித்தான் தொடங்குகிறார். ஆகவே இதிலும் எம் வரலாறு இல்லை.

5. இது உங்களிடம் நான் முன்பே கேட்ட விடை வராத கேள்விகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் அல்லது அகழ்வாராச்சி சான்றில் “சிவன்” என்ற பதம் முதலில் எங்கே தோன்றிற்று? உங்கள் முகப்புத்தக நண்பரிடம் கேட்டும் சொல்லலாம்.

பிகு: அவரின் நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இப்போதே சொல்லிவிடுகிரேன், கேள்விக்கான பதில் தமிழ்த் கடவுள் படங்கள் எதிலும் இல்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

product-250x250.jpeg

எடுபுடி ஆட்சியில்..  அவையள் JCB  வைத்து மண்ணள்ளி போட வேண்டியது .. ஆரண்ட புண்ணியமோ தப்பி போட்டுது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.