Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பாராளுமன்ற ஒத்திவைப்பு சட்டவிரோதமானது - தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் ஒக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற நாட்குறிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பை ராணியிடம் பெற்றுக் கொண்டார்.

அந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்... பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் செய்த பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பானது என பிரித்தானிய உச்சநீதிமன்றின் 11 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.

இதனால்.. நாளைய தினம்.. (25.09.2019) பிரிட்டனின் பாராளுமன்றம்.. மீளக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் பெரும்பான்மை இன்றி இயங்கும் ஆளும் பழமைவாதக் கட்சியை எதிர்கட்சிகள் எந்த உருப்படியான திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்பதோடு.. பிரக்சிட் விடயத்திலும் பல்வேறு நெருக்கடிகளை.. 2016 மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் இங்கு.. ஆங்கில மொழியில்..

https://www.bbc.co.uk/news/uk-politics-49810261

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் அடாவடித்தனம் செய்த இங்கிலாந்தில் பிரச்சனை என்றால் எனக்கு எப்போதுமே சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

உலகம் முழுவதும் அடாவடித்தனம் செய்த இங்கிலாந்தில் பிரச்சனை என்றால் எனக்கு எப்போதுமே சந்தோசம்.

அண்ணை, இது போலவே அமெரிக்காவில் பிரச்சினையென்றால் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மக்கள் மகிழ்வர்! உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏனெனில் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரமும் பாதுகாப்பும் தான் உங்கள் வீட்டின் பாதுகாப்புக்கு முக்கியம்.

ஜோன்சன் நீதிமன்றிடம் தோற்றது சந்தோசமே! ஏனென்றால் அவரது வெளியேற்ற அணுகுமுறை இங்கிலாந்து மக்களுக்குப் பாதகமே!

ஐரோப்பாவிடமிருந்து பிரிவதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியை ஒவ்வொரு முறையும் தள்ளிப் போடும்படி பிரித்தானியா கேட்பதால்தான் பிரக்சிட் இழுபடுகிறது. இன்னொரு தடவையும் தள்ளிப் போடாமல் இருந்தால் சுலபமாகப் பிரிந்து விடலாமே ? 

ஜோன்சனிடம் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்டும் அவரிடமிருந்து மழுப்பலான பதிலே வருகிறது. எந்தத் திட்டமும் இல்லை. அமெரிக்காவை மட்டுமே நம்பியுருக்கிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உலகம் முழுவதும் அடாவடித்தனம் செய்த இங்கிலாந்தில் பிரச்சனை என்றால் எனக்கு எப்போதுமே சந்தோசம்.

இவ‌ர்க‌ளால் தானே இந்தியா என்ற‌ நாடு உருவான‌து , அடிமை இந்தியாவில் த‌மிழ‌ர்க‌ள் வாழுகிறார்க‌ள் இப்போது/ 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ முறையில் கேக்கிறேன் , இங்லாந் நாட்ட‌வ‌ர் எங்க‌ள் நாட்டை விட்டு வெளியேறும் போது எம் முன்னோர்க‌ளிட‌ம் கேட்ட‌வையாம் நாட்டை பிரித்து த‌ர‌வா என்று , அதுக்கு எம் முன்னோர்க‌ள் சொல்லிச்சின‌மாம் நாங்க‌ள் சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுகிறோம் என்று ( இது உண்மையா )  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இணையவன் said:

ஜோன்சனிடம் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்டும் அவரிடமிருந்து மழுப்பலான பதிலே வருகிறது. எந்தத் திட்டமும் இல்லை. அமெரிக்காவை மட்டுமே நம்பியுருக்கிறார் போலுள்ளது.

இல்லையே. திட்டம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரக்செட் பேச்சுவாத்தையாளர் அறிவித்திருந்தாரே. 

ஆனால்.. இந்த முறை மே அம்மையார் கையாண்டது போல் அன்றி விடயங்களை இரு தரப்பும் பகிரங்கப்படுத்தாமல் கையாள நினைக்கிறார்கள்.

காரணம்.. மக்களின் விருப்பை.. மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட பிரித்தானிய எம் பிக்கள் செயற்படுத்தாமல்... மே அம்மையாரின் திட்டம் உட்பட எல்லாத்தையும் குழப்பி அடித்து வருகிறார்கள். 

எதிர்க்கட்சிகள் இதுகாள் வரை தமது வரைபை முன்வைக்கவில்லை. மாறாக மக்களின் 2016 தீர்ப்பையே நிராகரிக்கக் கேட்கிறார்கள். இவர்கள் யாருக்கும் மக்கள் அந்த அதிகாரத்தை வழங்கி வாக்குப்போட்டதாகத் தெரியவில்லை.

மக்களின் விருப்பை செயற்படுத்த முடியாதவர்கள் மீண்டும் பொதுத்தேர்தலை சந்திக்க மக்கள் முன் வர வேண்டும். ஆனால்.. பிரதமர் ஜோன்சன் கொண்டு வந்த இரண்டு பொதுத்தேர்தல் சம்பந்தப்பட்ட பிரேரணைகளையும் எதிர்கட்சிகள் தோற்கடித்துவிட்டன. காரணம் கருத்துக்கணிப்புகளின் படி.. ஜோன்சனுக்கு எதிர்கட்சிகளை விட ஆதரவு அதிகரித்திருப்பதுதான். குறிப்பாக பிரித்தானிய சொந்த மக்களிடம்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பும் எதிர்கட்சிகளின் அரசியலுக்கு சாதகமாக அமைந்துள்ளதே தவிர.. சரியான நீதியா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. ஏனெனில்.. ஆளும் கட்சியின் அரசியல் தடுக்கப்பட்டு.. எதிர்கட்சிகளின் அரசியலுக்கு வடிகால் அமைத்துக்கொடுத்துள்ளது தீர்ப்பு. அதனால் தான்.. பிரித்தானிய உயர் நீதிமன்றம்.. இது நீதித்துறைக்குரிய வழக்கு அல்ல என்று முன்னர் தீர்ப்பளித்திருந்தது. ஆனால்.. உச்ச நீதிமன்றம் அதைப் புரட்டிப்போட்டு.. பிரக்சிட் நிலைமையை இன்னும் இன்னும் சிக்கலாக்கி உள்ளது.

பிரித்தானியாவில்.. பொதுத்தேர்தலில் பிரக்சிட்டை எதிர்க்கும்.. ஐரோப்பிய ஒன்றியக் குடியேறிகள் வாக்களிக்கத் தகுதி இருந்தும்.. பொதுத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தேர்தலில்.. பிரக்சிட் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் பயம் எதிர்கட்சிகளுக்கு இருப்பதால்.. பாராளுமன்றில்.. தமக்குள்ள தற்போதைய பலத்தை பயன்படுத்தி பிரக்சிட்டை குழப்ப நினைக்கிறார்கள். அதற்கு இந்தத் தீர்ப்பு ஊக்கமாக அமைந்துவிட்டது துரதிஷ்டம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற கனவான் தனத்தை உலகிற்கு அறிமுகம் செய்த நாட்டில், அந்த கனவான் தனத்தை புறந்தள்ளி விட்டு ஆளும் கட்சி அரசியல், எதிர்கட்சி அரசியல் என்று பிரித்துப் பேசும் நிலை இருப்பது சுவாரசியமான மாற்றம் தான்! ஜோன்சன் பிள்ளைக்கு நிலாச்சோறு ஊட்டியது போல "நான் ராணியின் பேச்சுக்காக பாரளுமன்றத்தை ஒத்தி வைத்தேன், சத்தியமாக பிறெக்சிற் வாதங்களைத் தடுக்க ஒத்தி வைக்கவில்லை!" என்று சொன்னால் நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கிலாந்தில்!

ஜோன்சன், ட்ரம்ப் போன்ற populist அரசியல் வாதிகள் இனவாதம், தேசியவாதம், உள்ளூர்வாதம் என்று எல்லா வாதங்களையும் கிளப்பிச் செய்யும் அரசியலை நீதித் துறை மூலம் தான் கட்டுப் படுத்த வேண்டியிருக்கிறது!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல மில்லியன் யூரோக்களை எதிர்கட்சிகளுக்கு அன்பளிப்பு என்ற போர்வையில் வழங்கி பிரக்சிட்டை தடுக்க ஐரோப்பிய ஒன்றிய வியாபாரிகள் செயற்படுத்தும் அரசியலை விட ஜோன்சன் செய்யும் அரசியல் ஓரளவு கெத்தானது எனலாம். 

ஜோன்சனின் அரசியல்.. பிரித்தானியாவின் பேரம் பேசும் வலுவை அதிகரிக்கும். எதிர்கட்சிகளின் அரசியல்.. மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணாகதியடையும்.. வியாபார ஆதாய அரசியலாகவே முடியும்.

இன்று பிரித்தானியாவில் வீடில்லாப் பிரச்சனை... முதியோர் வசதி வாய்ப்புப் பிரச்சனை.. வறுமை.. மாணவர் நிதிப்பிரச்சனை.. போதைவஸ்து வியாபாரம் பாவனை அதிகரிக்கும்.. கொலைகளும். என்று பல பிரச்சனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன.  காரணம்.. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்வாங்கி கண்டது கழியதுகளுக்கும் எல்லையை திறந்துவிட்டது தான்.. இந்த நிலைக்குக் காரணம். 

இதனாலேயே பூர்வீக பிரித்தானிய மக்கள்.. பிரக்சிட்டை ஆதரிக்கிறார்கள். எப்படி தேர்தல் வந்தாலும் அந்த மக்களின் வாக்குத்தான் மிகும். பிரக்சிட்.. பாராளுமன்றத்தில் சூழ்ச்சி செய்து முறியடிக்கப்பட்டால் அன்றி.. இன்னொரு வாக்கெடுப்பு.. பொதுத் தேர்தல் என்று போனால்.. எதிர்கட்சிகள்..  தோல்விகளையே சந்திக்கும்.

அந்தப் பயத்தில் தான் நடப்பு அரசின் பலவீனமான பாராளுமன்ற பிரதிநிதித்துவதை பாவித்து பிரக்சிட்டை குழப்பி அடிக்க நினைக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதற்கு.. பிரித்தானிய எதிர்கட்சிகள்.. வால்பிடிக்கின்றன. அவ்வளவே. இதைவிட ஜோன்சனின் அரசியல் பிரித்தானிய மக்களைப் பொறுத்தவரை.. பறவாயில்லை.. என்ற வகைக்குரியது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பாராளுமன்ற ஒத்திவைப்பு சட்டவிரோதமானது - தீர்ப்பு

g

இந்த நிலைமையில்தான் சில நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள் 
யாழில் நடந்த ஒரு பாலியல் பலத்தகார விடயத்துக்கு  லண்டனில் போலீசிடம் சொன்னால் 
நீதி கிடைக்குமாம். 
நான் நினைக்கிறேன் ஜோன்சனை பற்றி இன்னமும் போலீசுக்கு தெரியவில்லை என்று .....
யாரவது போய் செல்லும்போதுதான் இருக்கு விளையாட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெளிவந்திருப்பது ஒரு அரசியலமைப்பு சட்ட தீர்ப்பு. இதன் பின் புலமாக பிரெக்சிற் இருந்தாலும் இந்த தீர்ப்பு பிரெக்சிற் பற்றியதல்ல.

இந்த விசாரணையின் ஆரம்பத்திலேயே லேடி ஹேல்ஸ் இதை தெளிவாக கூறினார். மட்டுமில்லாமல், பிரெக்சிற் பற்றி கதைக்க வெளிகிட்ட வடாயர்லாந்து வக்கீல் ஒருவருக்கும் செம டோசும் விழுந்தது.

பிரித்தானியாவில் அரசியலமைப்பு இருக்கிறது ஆனால் அது எழுதப்படாதா அரசியல் அமைப்பு.

பிரித்தானிய அரசியலமைப்பு என்பது சட்டமூலங்கள், வழக்கங்கள் (conventions), உடன்படிக்கைகள் (treaty), சட்டத் தீர்ப்புகள் என்பனவற்றின் கூட்டுக் கலவையாக அமைந்துளது. அமெரிக்கா, பிரான்ஸ் போல இங்கே ஒரு எழுதபட்ட ஒற்றை ஆவணம், பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை ஆகியவற்றிக்கிடையான வலுச்சமன்பாட்டை தெளிவுற வகுக்கவில்லை.

இங்கே வரலாற்று வழக்கங்கள் முக்கியத்துவம் பெறுகிறன. இந்த வழக்கங்களை பொதுவாக யாரும் மீற மாட்டார்கள். ஆனால் ஒரு போதும் மீற மாட்டார்கள் என்பதில்லை. வழக்கங்களை மீறும் போது, அரசியலமைப்பு சிக்கல் வரும்.

Royal Prerogative  என்பது ஒரு ராஜா/அல்லது ராணிக்கு இருக்கும் சிறப்புரிமை. இதை நடை முறையில் அரசே (பிரதமரே) பயன்படுத்துவார். ஆனால் அறிவிப்பு ராணியிடம் இருந்தே வரும்.

இரெண்டு தேர்தல்களுக்கிடையே இருக்கும் காலத்தில் பல பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடக்கும். ஒவ்வொரு தொடரின் ஆரம்பத்திலும் அரசின் நிகழ்சி/சட்ட வேலைத் திட்டத்தை அரசு எழுதி கொடுக்க ராணி வாசிப்பார். இது ராணி உரை எனப்படும். ஒரு கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு. இது ஒரு Royal Prerogative . 

ஆனால் ஒரு ராணி உரையில் சொல்லப்பட்டதை தாண்டி அடுத்த உரைக்கு தயாராவதற்காகவே இந்த உரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது வழக்கம் (convention).

ராணிக்கு இதை காரணமாக காட்டியே பிரதமர் தள்ளிவைப்பு கோரிக்கையை சமர்பிப்பார். ராணியும் ஒத்துக்கொண்டு தள்ளிவைப்பு அறிவிப்பை வெளியிடுவார். பொரிசும் எலிசபெத்துக்கு இதையே காரணமாக சொல்லி ராணி அறிவிப்பை வெளியிட்டார்.

வழமையாக ஒரு பிரதமர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து (prorogue) ஒரு கூட்டத்தொடரை முடித்து வைத்து, ஐந்தாறு நாளில் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும். இதுவே வழமை.

பொரிஸ் இம்முறை 5 கிழமை தள்ளி வைத்தார். இங்கே உயர் நீதிமன்றம் முன் இருந்த கேள்விகள்.

1. இது ஒரு அரசியல் விடயமா அல்லது சட்ட விடயமா?

2. சட்ட விடயம் எனில் பொரிஸ் தன்வசம் இருந்த சிறப்புரிமையை தவறாக பயன்பசுத்தினாரா?

இன்று உயர்நீதிமன்றின் 11 நீதிபதிகளும் இது ஒரு சட்ட விடயம் என்றும். பொரிஸ் சிறப்புரிமையை தவறாக பயன்படுத்தினார், அறிவிப்பை வெளியிட ராணியை பிழையாக வழிநடத்தினார், எனவே அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது எனவும் ஏகமனதாக தீர்பளித்தனர்.

இதுதான் இந்த வழக்கின் சாராம்சம். இதன் பின்புலம் பிரெக்சிற்றே ஒழிய. இந்த வழக்கு பிரெக்சிற் பற்றியது அல்ல. பிரெக்சிற் என்பது ஒரு அரசியல் முடிவு, அதில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால் அந்த அரசியல் இலக்கை சட்டவிரோதமாக அடைய முயலின் அதில் நீதிமன்றம் தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை (rule of law) நிலை நிறுத்தும்.

பி.கு: பிரெக்சிற்றுக்கான பிரதான காரணங்களா முன்வைக்கப் படுவன:

1. அளவற்ற ஐரோப்பிய குடிவரவு

2. ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்றத்தின் சுய நிர்ணயத்தை, ஐரோப்பிய ஒன்றியம் அரிக்கிறது.

3. ஐக்கிய ராச்சிய நீதிமன்றின் சுய நிர்ணயத்தை ஐரோப்பிய நீதிமன்று அரிக்கிறது/மீறுகிறது.

Take back control என்பதே பிரெக்சிற்றின் தாரகமந்திரம்.

இன்று வந்த தீர்ப்பு, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் போதே யூகேயின் பாராளுமன்றமும், நீதிமன்றமும் தம் சுய நிர்ணயத்தை இழக்காமல் செயல்படுகிறன என்பதை ஐயம் திரிபுற காட்டி நிற்கிறன.

ஆனால் இது பிரெக்சிற் ஆதரவாளர்களுக்கு விளங்குமா? விளங்காது ஏனென்றால் பிரெக்சிற் என்பது அமேரிக்கா, பிரேசில், பிலிபைன்ஸ். ஹங்கேரி, இத்தாலி எங்கும் எழும்பியாடும் ஜனரஞ்சகவியத்யின் (populism) இன்னொரு பிறவியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இன்று வந்த தீர்ப்பு, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் போதே யூகேயின் பாராளுமன்றமும், நீதிமன்றமும் தம் சுய நிர்ணயத்தை இழக்காமல் செயல்படுகிறன என்பதை ஐயம் திரிபுற காட்டி நிற்கிறன.

இது இந்தச் சந்தர்ப்பத்தில் சிலர் முன்வைக்கும் வாதமே தவிர.. பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்புக்களை புரட்டிப்போட்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புக்கள் பல உள. எம்மவர்கள் பலரின் அசைலத் தீர்ப்புக்கள் உட்பட.

அதனால் தான் மே அம்மையார் உட்பட ஐரோப்பிய ஒன்றிய சார்ப்பாளர்கள் கூட பிரித்தானிய நீதிமன்றங்களே பிரித்தானியாவுக்கான சட்டங்களை கையாளனும் என்று பகிரங்கமாகச் சொல்லி வந்தனர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

இது இந்தச் சந்தர்ப்பத்தில் சிலர் முன்வைக்கும் வாதமே தவிர.. பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்புக்களை புரட்டிப்போட்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புக்கள் பல உள. எம்மவர்கள் பலரின் அசைலத் தீர்ப்புக்கள் உட்பட.

அதனால் தான் மே அம்மையார் உட்பட ஐரோப்பிய ஒன்றிய சார்ப்பாளர்கள் கூட பிரித்தானிய நீதிமன்றங்களே பிரித்தானியாவுக்கான சட்டங்களை கையாளனும் என்று பகிரக்கமாகச் சொல்லி வந்தனர். 

1. மேலே நான் போல்ட் எழுத்தில் போட்டிருப்பது பலருக்கும் European Court of Human Rights (ECHR) ற்கும்  European Court of Justice (ECJ) ற்கும் இடையான வித்தியாசம் விளங்காமையால் ஏற்படுவது. ஈயூவில் இருக்கும் நாடுகளும், இல்லாத நாடுகளும் European Convention on Human Rights இற்கு கையெழுத்திட்டுள்ளனர். இந்த சர்வதேச ஒப்பந்ததை, கையொப்ப நாடுகள் சரிவர கடைப்பிடிக்கிறனவா என்பதை தீர்மானிக்கும் நீதி மன்றே ECHR. இதுவே அசைலம் வழக்குகளில் தலையிடுவது. இது ஒரு சர்வதேச ஒப்பந்ததை பிரித்தானிய பாராளுமன்று ஏற்று. அதை அரசு கையெழுத்திட்டு அமைக்கப்பட்ட பொறிமுறை. இதற்கும், ஈயூவிற்கும் ஒரு சம்பந்தமில்லை. யூகே ஈயூவில் இருந்து விலகியபின்னும், அசைலம் உட்பட்ட, ஐரோபிய மனித உரிமை சாசனத்தின் கீழ் வரும் விடயங்களில் ECHR இன் மேற்பார்வை இருக்கும்.

2. ECJ - பிரித்தானியா- ஈயூவில் இணைந்த போது, ஈயூவின் சில சட்டவிதிகளை மற்றைய ஈயூ நாடுகளை போலவே கடைபிடிப்போம் என ஏற்று கொண்டது. உதாரணதுக்கு ஈயூ பிரஜைகளை தங்கு தடையின்றி வர விடுதல். அல்லது சூழல் மாசாக்கும் வாகனங்களை இந்தியாவில் இருந்து இறக்காது விடுதல். அல்லது குளோரினால் கழுவிய கோழியை அமேரிக்காவில் இருந்து இறக்காமல் விடல். இப்படி பலவிடங்களில் ஈயூ எங்கினும் ஒரே சட்டம் சில குறிப்பிட்ட விடயங்களில் உண்டு. இவற்றை community law. என்பார்கள். இந்த  community law தவிர்ந்த ஏனைய விடயங்களில் இப்போதும் யூகே பாராளுமன்றம் வைத்ததுதான் சட்டம். இதைதான் இன்றைய தீர்ப்பு காட்டி உள்ளது.

ஏன் community law தேவை? ஈயூ பூராவும் ஒரே சந்தை (single market) எனும் போது, சில அடிப்படை விடயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். யுகேயில் அரசு சூழல்மாசக்கும் வாகனக்களை அனுமதித்தால், அது ஏனைய நாடுகளில் இருக்கும் வாகன தயாரிப்பாளரை, விற்பனையாளரை பாதிக்கும். எனவே சில அடிப்படை சட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்து, அவற்றின் மேலாண்மை ஒரு பொது நீதிமன்றில் (ECJ) இருக்கும் போதே, சந்தை பூராவும் சமச்சீர் சாத்தியப்படும்.

ஆனாலும் பெரும்பாலானா community law matters ECJ ற்கு போவதே இல்லை. ECJ யின் தீர்ப்புக்களை ஒரு முன்மாதிரியாக கொண்டு யூகேயின் நீதிமன்றங்களே பெரும்பான்மை முடிவை எறிகிறன ( உதாரணதுக்கு EEA Regulations ஐ யூகேயின் கோர்ட்டுகள் அமல்படுத்தும் முறை). யூகே கோர்ட்டோ, நீதிபதிகளோ, பாராளுமன்றமோ ஒரு போதும் ECJ யுடன் முட்டி மோதி ஒரு Constitutional crisis வந்ததில்லை.

ஆனால், சாதாரண டெய்லிமெயில் வாசிக்கும் நபர்களுக்கு இந்த நீண்ட விளக்கம் புரியாது. ஐரோப்பியர்கள் உன் பாராளுமன்றத்தின் சுயநிர்ணயத்தை, உன் நீதிமன்றின் சுய ஆளுமையை அரிக்கிறார்கள். எல்லாமே பிரசில்சில் இருந்து கட்டுப்படுத்த படுகிறது என்ற பொரிஸ் போன்ற பொய்யர்களின் பிரச்சாரமும், ஜனரஞ்சகவியத்யின் எழுச்சியும், எதையும் ஆராயாமல், பேஸ்புக்கில் வருவதை நம்பும் fake news இன் ஆதிக்கமும், ரஸ்யாவின் மறைமுக, நேரடி பிரசாரங்களும் அவர்களை நன்றாக மூளைச் சலவை செய்து வைத்துள்ளன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியெண்டாலும் கெதியிலை பிரிஞ்சு போங்கப்பா....கையோடை கையாய் இஞ்சை ஜேர்மனியிலையிருந்து உங்கை இங்கிலிஸ் மீடியத்திலை படிக்க வந்த ஆக்களையும்  கொஞ்சம் கவனியுங்கோ 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்று வெளிவந்திருப்பது ஒரு அரசியலமைப்பு சட்ட தீர்ப்பு. இதன் பின் புலமாக பிரெக்சிற் இருந்தாலும் இந்த தீர்ப்பு பிரெக்சிற் பற்றியதல்ல.

இந்த விசாரணையின் ஆரம்பத்திலேயே லேடி ஹேல்ஸ் இதை தெளிவாக கூறினார். மட்டுமில்லாமல், பிரெக்சிற் பற்றி கதைக்க வெளிகிட்ட வடாயர்லாந்து வக்கீல் ஒருவருக்கும் செம டோசும் விழுந்தது.

பிரித்தானியாவில் அரசியலமைப்பு இருக்கிறது ஆனால் அது எழுதப்படாதா அரசியல் அமைப்பு.

பிரித்தானிய அரசியலமைப்பு என்பது சட்டமூலங்கள், வழக்கங்கள் (conventions), உடன்படிக்கைகள் (treaty), சட்டத் தீர்ப்புகள் என்பனவற்றின் கூட்டுக் கலவையாக அமைந்துளது. அமெரிக்கா, பிரான்ஸ் போல இங்கே ஒரு எழுதபட்ட ஒற்றை ஆவணம், பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை ஆகியவற்றிக்கிடையான வலுச்சமன்பாட்டை தெளிவுற வகுக்கவில்லை.

இங்கே வரலாற்று வழக்கங்கள் முக்கியத்துவம் பெறுகிறன. இந்த வழக்கங்களை பொதுவாக யாரும் மீற மாட்டார்கள். ஆனால் ஒரு போதும் மீற மாட்டார்கள் என்பதில்லை. வழக்கங்களை மீறும் போது, அரசியலமைப்பு சிக்கல் வரும்.

Royal Prerogative  என்பது ஒரு ராஜா/அல்லது ராணிக்கு இருக்கும் சிறப்புரிமை. இதை நடை முறையில் அரசே (பிரதமரே) பயன்படுத்துவார். ஆனால் அறிவிப்பு ராணியிடம் இருந்தே வரும்.

இரெண்டு தேர்தல்களுக்கிடையே இருக்கும் காலத்தில் பல பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடக்கும். ஒவ்வொரு தொடரின் ஆரம்பத்திலும் அரசின் நிகழ்சி/சட்ட வேலைத் திட்டத்தை அரசு எழுதி கொடுக்க ராணி வாசிப்பார். இது ராணி உரை எனப்படும். ஒரு கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு. இது ஒரு Royal Prerogative . 

ஆனால் ஒரு ராணி உரையில் சொல்லப்பட்டதை தாண்டி அடுத்த உரைக்கு தயாராவதற்காகவே இந்த உரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது வழக்கம் (convention).

ராணிக்கு இதை காரணமாக காட்டியே பிரதமர் தள்ளிவைப்பு கோரிக்கையை சமர்பிப்பார். ராணியும் ஒத்துக்கொண்டு தள்ளிவைப்பு அறிவிப்பை வெளியிடுவார். பொரிசும் எலிசபெத்துக்கு இதையே காரணமாக சொல்லி ராணி அறிவிப்பை வெளியிட்டார்.

வழமையாக ஒரு பிரதமர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து (prorogue) ஒரு கூட்டத்தொடரை முடித்து வைத்து, ஐந்தாறு நாளில் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும். இதுவே வழமை.

பொரிஸ் இம்முறை 5 கிழமை தள்ளி வைத்தார். இங்கே உயர் நீதிமன்றம் முன் இருந்த கேள்விகள்.

1. இது ஒரு அரசியல் விடயமா அல்லது சட்ட விடயமா?

2. சட்ட விடயம் எனில் பொரிஸ் தன்வசம் இருந்த சிறப்புரிமையை தவறாக பயன்பசுத்தினாரா?

இன்று உயர்நீதிமன்றின் 11 நீதிபதிகளும் இது ஒரு சட்ட விடயம் என்றும். பொரிஸ் சிறப்புரிமையை தவறாக பயன்படுத்தினார், அறிவிப்பை வெளியிட ராணியை பிழையாக வழிநடத்தினார், எனவே அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது எனவும் ஏகமனதாக தீர்பளித்தனர்.

இதுதான் இந்த வழக்கின் சாராம்சம். இதன் பின்புலம் பிரெக்சிற்றே ஒழிய. இந்த வழக்கு பிரெக்சிற் பற்றியது அல்ல. பிரெக்சிற் என்பது ஒரு அரசியல் முடிவு, அதில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால் அந்த அரசியல் இலக்கை சட்டவிரோதமாக அடைய முயலின் அதில் நீதிமன்றம் தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை (rule of law) நிலை நிறுத்தும்.

பி.கு: பிரெக்சிற்றுக்கான பிரதான காரணங்களா முன்வைக்கப் படுவன:

1. அளவற்ற ஐரோப்பிய குடிவரவு

2. ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்றத்தின் சுய நிர்ணயத்தை, ஐரோப்பிய ஒன்றியம் அரிக்கிறது.

3. ஐக்கிய ராச்சிய நீதிமன்றின் சுய நிர்ணயத்தை ஐரோப்பிய நீதிமன்று அரிக்கிறது/மீறுகிறது.

Take back control என்பதே பிரெக்சிற்றின் தாரகமந்திரம்.

இன்று வந்த தீர்ப்பு, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் போதே யூகேயின் பாராளுமன்றமும், நீதிமன்றமும் தம் சுய நிர்ணயத்தை இழக்காமல் செயல்படுகிறன என்பதை ஐயம் திரிபுற காட்டி நிற்கிறன.

ஆனால் இது பிரெக்சிற் ஆதரவாளர்களுக்கு விளங்குமா? விளங்காது ஏனென்றால் பிரெக்சிற் என்பது அமேரிக்கா, பிரேசில், பிலிபைன்ஸ். ஹங்கேரி, இத்தாலி எங்கும் எழும்பியாடும் ஜனரஞ்சகவியத்யின் (populism) இன்னொரு பிறவியே.

அருமையான விளக்கத்திற்கு நன்றி! பிரெக்சிற்றிலும், அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலும் அடியிழையாக ஓடும் இரு ஒற்றுமைகள் உண்டு:

1. வெளியே இருந்து வந்தோர் எங்கள் பிரச்சினைக்குக் காரணம் என்ற தரவுகளால் ஆதரிக்கப் படாத பிரச்சாரம். இந்த வெளியார் என்ற பதம் சட்ட ரீதியான குடியேறிகள் என்பதையும் தாண்டி சட்ட பூர்வமாக வந்தோர், அவர்களின் வாரிசுகள் (அமெரிக்காவில் birthright citizenship உண்டு) ஆகியோரையும் மறைமுகமாக உள்ளடக்குகிறது.

2. குடியேறிகளாக வந்தவர்களில் கணிசமான பகுதியினர் இந்த இரண்டையும் ஆதரித்தார்கள். மேலே இருக்கும் பொயின்ரோடு இது பொருந்தா விட்டாலும், அமெரிக்காவிலும், யு.கேயிலும் இது நடந்தது.  அமெரிக்காவில், இந்திய/சிறிலங்கன் அமெரிக்கர்கள் ட்ரம்பின் முஸ்லிம்  எதிர்ப்பினால் கவரப்பட்டார்கள். யு.கேயில் போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பியர்கள் எங்கள் ஆசியக் குடியேறிகளை விட அதிகம் சலுகை பெறுவதாக நினைத்து வெறுப்படைந்ததால் ஆசியக் குடியேறிகள் பிரெக்சிட்டுக்கு ஆதரவு தந்தார்கள்.

வெறுப்பு, வெஞ்சினம் என்பவை ஒரு அரசியல் கொள்கையாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் ட்ரம்ப், ஜோன்சன், ஒர்பான், பொல்சனாரோ போன்ற ஹிற்லரை விட அதிக வாக்குகள் வெல்லும் தலைவர்கள் (ஹிற்லரின் கட்சிக்கு அவர் வென்ற தேர்தலில் 33% வாக்குகள் தான் கிடைத்தன!) ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது!  

Edited by Justin
corrections

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

என்ன கோதாரியெண்டாலும் கெதியிலை பிரிஞ்சு போங்கப்பா....கையோடை கையாய் இஞ்சை ஜேர்மனியிலையிருந்து உங்கை இங்கிலிஸ் மீடியத்திலை படிக்க வந்த ஆக்களையும்  கொஞ்சம் கவனியுங்கோ 😄

😂 அவயளுக்கெல்லாம் செட்டில்ட், ப்ரீ-செட்டில்ட் ஸ்டேடஸ் கொடுக்கப்படுகிறது. உங்கள் ஆசையில் மண் 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அருமையான விளக்கத்திற்கு நன்றி! பிரெக்சிற்றிலும், அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலும் அடியிழையாக ஓடும் இரு ஒற்றுமைகள் உண்டு:

1. "வெளியே இருந்து வந்தோர் எங்கள் பிரச்சினைக்குக் காரணம்" என்ற தரவுகளால் ஆதரிக்கப் படாத பிரச்சாரம். இந்த "வெளியார்" என்ற பதம்  குடியேறிகள், அவர்களின் வாரிசுகள் (அமெரிக்காவில் birthright citizenship உண்டு) ஆகியோரையும் மறைமுகமாக உள்ளடக்குகிறது.

2. குடியேறிகளாக வந்தவர்களில் கணிசமான பகுதியினர் இந்த இரண்டையும் ஆதரித்தார்கள். மேலே இருக்கும் பொயின்ரோடு இது பொருந்தா விட்டாலும், அமெரிக்காவிலும், யு.கேயிலும் இது நடந்தது.  அமெரிக்காவில், இந்திய/சிறிலங்கன் அமெரிக்கர்கள் ட்ரம்பின் முஸ்லிம்  எதிர்ப்பினால் கவரப்பட்டார்கள். யு.கேயில் போலந்து போன்ற கிழக்காசியர்கள் எங்கள் ஆசியக் குடியேறிகளை விட அதிகம் சலுகை பெறுவதாக நினைத்து வெறுப்படைந்ததால் பிரெக்சிட்டுக்கு ஆதரவு தந்தார்கள்.

வெறுப்பு, வெஞ்சினம் என்பவை ஒரு அரசியல் கொள்கையாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் ட்ரம்ப், ஜோன்சன், ஒர்பான், பொல்சனாரோ போன்ற ஹிற்லரை விட அதிக வாக்குகள் வெல்லும் தலைவர்கள் (ஹிற்லரின் கட்சிக்கு அவர் வென்ற தேர்தலில் 33% வாக்குகள் தான் கிடைத்தன!) ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது!  

பச்சை தீர்ந்து விட்டது அண்ணா. 

இது நிச்சயமாக Xenophobia எனப்படும் வெளியாரின் மீதான வெறுப்பு + மக்களின் அறியாமை+ பயங்காட்டுதல் என்பவற்றிலே கட்டமைக்க படுகிறது.

முஸ்லீம் வெறுப்பால் எப்படி இந்து இந்தியர்கள் டிரெம்பை ஆதரிக்கிறார்களோ, அதே போல் கிழக்கு ஐரோப்பியர்கள் கடும் நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர், அவர்கள் வருவதால் இந்த நாடு இஸ்லாமிய மயமாவது குறைகிறது என்று பல முஸ்லீம்கள் பிரெக்சிற்றை ஆதரிக்கிறார்கள்.

இது தனியே பிரெக்சிற், டிரம்ப் என்பதல்ல, இது நாஜிகளின் எழுச்சி போல ஒரு வரலாற்று பெரு வழு. எப்படி முடியும் என்பதை யாரும் கணிக்க முடியாது/

2 hours ago, nedukkalapoovan said:

இல்லையே. திட்டம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரக்செட் பேச்சுவாத்தையாளர் அறிவித்திருந்தாரே. 

ஆனால்.. இந்த முறை மே அம்மையார் கையாண்டது போல் அன்றி விடயங்களை இரு தரப்பும் பகிரங்கப்படுத்தாமல் கையாள நினைக்கிறார்கள்.

இப்படித்தான் ஜோன்சன் உள்ளூரில் சொல்லிக் கொண்டு திரிகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவர் ஐரோப்பிய அதிகாரிகளைச் சந்தித்தபோதும் ஆக்கபூர்வமாகப் பேசவில்லை. அதன்பின் நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள் ஜோன்சன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்வதாகக் குறிப்பிட்டதோடு பேச்சுவார்த்தைக்குரிய முக்கிய யோசனைகள் எதையும் அவர் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். பிரித்தானியா என்ன விரும்புகிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தியும் வந்தனர்.

இறுதியான சந்திப்பில் ஐரோப்பா தரப்பில் இந்த வாரத்துக்குள் ஜோன்சன் உரிய யோசனைகளை எழுத்து வடிவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்த்து வீறாப்பாகப் பேசியிருந்தார். பிரான்ஸ் அதிபரைச் சந்தித்தபோதும் அவமரியாதையாக நடந்து கொண்டதாகப் பேசப்பட்டது.

emmanuel-macron-et-boris-johnson-a-l-ely

3 hours ago, nedukkalapoovan said:

எதிர்க்கட்சிகள் இதுகாள் வரை தமது வரைபை முன்வைக்கவில்லை. மாறாக மக்களின் 2016 தீர்ப்பையே நிராகரிக்கக் கேட்கிறார்கள். இவர்கள் யாருக்கும் மக்கள் அந்த அதிகாரத்தை வழங்கி வாக்குப்போட்டதாகத் தெரியவில்லை.

வரைபை முன்வைக்க வேண்டியது ஜோன்சன்தான். எதிர்க்கட்சிகள் அல்லவே ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பச்சை தீர்ந்து விட்டது அண்ணா. 

இது நிச்சயமாக Xenophobia எனப்படும் வெளியாரின் மீதான வெறுப்பு + மக்களின் அறியாமை+ பயங்காட்டுதல் என்பவற்றிலே கட்டமைக்க படுகிறது.

முஸ்லீம் வெறுப்பால் எப்படி இந்து இந்தியர்கள் டிரெம்பை ஆதரிக்கிறார்களோ, அதே போல் கிழக்கு ஐரோப்பியர்கள் கடும் நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர், அவர்கள் வருவதால் இந்த நாடு இஸ்லாமிய மயமாவது குறைகிறது என்று பல முஸ்லீம்கள் பிரெக்சிற்றை ஆதரிக்கிறார்கள்.

இது தனியே பிரெக்சிற், டிரம்ப் என்பதல்ல, இது நாஜிகளின் எழுச்சி போல ஒரு வரலாற்று பெரு வழு. எப்படி முடியும் என்பதை யாரும் கணிக்க முடியாது/

ட்ரம்பின் தெரிவு, பல்லினத்தன்மைக்கெதிரான போக்குப் பற்றி அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியான றுத் பேடர் கின்ஸ்பேர்க் கருத்துச் சொல்லும் போது, "உலக அரசியல் வரலாறு  ஒரு ஊசலாடும் பெண்டுலம் போன்றது" என்று சொல்லியிருக்கிறார். அது நம்பிக்கையை ஊட்டுவதாலும், கொஞ்சம் உண்மை போலத் தெரிவதாலும் நான் நம்பத் தலைப் படுகிறேன்! 1918 இல் இடதுசாரிப் புரட்சி, 1930 களில் ஹிற்லர், முசோலினிகளின் வரவு! 1948 இல் மீண்டும் நம்பிக்கை ஒளி, 1960 களில் ஹிப்பிகளும், இனஒதுக்கலின் தோல்வியும், பிறகு 2008 இல் முதல் கறுப்பின ஜனாதிபதி அமெரிக்காவில், 2016 இல் ட்ரம்ப். பெண்டுலம் தான்!

எனக்கு நம்பிக்கை தரும் இன்னொரு விடயம்: பெண்களும் (லேடி ஹேல் உட்பட!) இளம்வயதினரும் உலக அரங்கில் காட்டும் செயற்பாட்டுத் தீவிரமும் ஆர்வமும்! நிலைமை மோசமாக முதல் பெண்டுலம் நல்ல திசை நோக்கி நகரத்தான் போகுது!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யூகே ஈயூவில் இருந்து விலகியபின்னும், அசைலம் உட்பட்ட, ஐரோபிய மனித உரிமை சாசனத்தின் கீழ் வரும் விடயங்களில் ECHR இன் மேற்பார்வை இருக்கும்.

இருக்காது என்பதே.. பிரக்செட் தொடர்பான விவாதிகளின் கருத்து. பிரித்தானிய மனித உரிமை சட்டங்கள் தான்.. முதன்மை பெறும். பிரக்செட் கோட்பாடுகளில்.. முக்கியமான விடயங்களில்.. ஐரோப்பிய ஒன்றிய நீதிச் செயற்பாடுகளில் இருந்து பிரித்தானியாவை விடுவித்துக் கொள்வதும் ஒன்று.

இது தொடர்பாக.. உரையாட சட்ட நிபுணத்துவம் அவசியமில்லை. அலசப்படும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்தாலே போதும். 

So if the government failed to agree post-transition terms with the EU and the UK ended up with a "no deal" Brexit, then the UK could leave ECJ jurisdiction in October (before March) 2019.

https://www.bbc.co.uk/news/uk-44737092

What is the British Bill of Rights?

We do not currently have a British Bill of Rights. This was included in the Conservative government’s 2015 election manifesto. It was planned as new legislation to replace the Human Rights Act.

The ECHR protects the human rights of people in countries that belong to the Council of Europe, which is a completely different organisation to the EU. The UK will still be signed up to the ECHR when it leaves the EU.

In Britain our human rights under the ECHR are protected by the Human Rights Act 1998.

https://www.equalityhumanrights.com/en/our-human-rights-work/what-does-brexit-mean-equality-and-human-rights-uk

23 minutes ago, இணையவன் said:

வரைபை முன்வைக்க வேண்டியது ஜோன்சன்தான். எதிர்க்கட்சிகள் அல்லவே ?

அவர்கள் தான் மே அம்மையாரின் மொழிவுகளை முன்னின்று எதிர்த்தார்கள். இப்போது அதை வரவேற்கிறார்கள். மேலும் ஜோன்சனின் நோ டீலை எதிர்ப்பவர்கள் தான் அதற்கு மாற்றீட்டை தரனும். ஜோன்சனைப் பொறுத்தவரை.. நோ டீல் ஓகே. 

Edited by nedukkalapoovan

10 minutes ago, nedukkalapoovan said:

நோ டீல் ஓகே. 

அப்படியானால் என்னதான் பிரச்சனை ? 😀

நோ டீல் வேண்டாம் என்று ஐரோப்பாவா தடுக்கிறது ?  நோ டீலை ஜோன்சனால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அயர்லாந்து, மீன்பிடி, விவசாயம் என்று பிரச்சனைக்குரிய நீண்ட பட்டியலே உள்ளது. இங்கிலாந்தில் பிரக்சிட் இன் தாக்கம் பற்றிய அறிக்கையைக் கூட மறைக்கப்பட்டு இப்போதுதான் வர வெளிக்கிடுகிறது. 

இன்னொரு தடவை ஜோன்சன் பிரக்சிட் திகதியைத் தள்ளிப் போடுமாறு கேட்கிறாரா இல்லையா பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

அப்படியானால் என்னதான் பிரச்சனை ? 😀

நோ டீல் வேண்டாம் என்று ஐரோப்பாவா தடுக்கிறது ?  நோ டீலை ஜோன்சனால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அயர்லாந்து, மீன்பிடி, விவசாயம் என்று பிரச்சனைக்குரிய நீண்ட பட்டியலே உள்ளது. இங்கிலாந்தில் பிரக்சிட் இன் தாக்கம் பற்றிய அறிக்கையைக் கூட மறைக்கப்பட்டு இப்போதுதான் வர வெளிக்கிடுகிறது. 

இன்னொரு தடவை ஜோன்சன் பிரக்சிட் திகதியைத் தள்ளிப் போடுமாறு கேட்கிறாரா இல்லையா பாருங்கள்.

ஆம். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரிந்து செல்வதில் உடன்பாடில்லை. அதனால்.. பிரக்சிட்டை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையே அது அதிகம் செய்கிறது.

பிரிட்டன் பிரிந்து போகனும் என்பதை விரும்பி இருந்தால்.. மார்ச் 31 இல் கால நீட்டிப்பு வழங்காமல்.. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை பிரிந்து போகச் செய்திருக்கலாம்.. நோ டீலோடு.  ஆனால் செய்யவில்லை.

மாறாக.. பிரக்சிட்டையே இல்லாமல் செய்யும் நகர்வுகளை தான் எதிர்கட்சிகளை மற்றும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களை வைத்துச் செய்து வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சனின் நிலை, இ.யூவின் கட்டுப் பாடுகளில் இருந்து அறுத்துக் கொண்டு போக வேண்டும்! ஆனால் , சில சலுகைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தான்!ஒரு நாட்டின் தலைவராக தன் நாட்டிற்கு அதிக பட்ச சலுகைகளைப் பெறப் போராடுவதில் தவறில்லை! ஆனால், அதற்காக சில கட்டுப் பாடுகளைச் சுமக்க வேண்டுமென்ற புரிதல் இல்லை! இது சின்னப் பிள்ளை நிலத்தில் குந்தியிருந்து மிட்டாய்க்கு அடம்பிடிக்கிற மாதிரியான நிலைமை!

தூர இருந்து பார்க்கும் எங்களுக்கே இது புரியும் போது, இ.யூ விற்குப் புரியாதா? அதனால் அவர்கள் இறங்கி வரப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

The UK's highest court rules Boris Johnson's decision to suspend Parliament for five weeks was unlawful.

பிரித்தானிய பிரதமர் பாராளுமன்றத்தை 5கிழமைகளுக்கு மேல் தள்ளிவைத்து சட்டத்திற்கு விரோதமானது என லண்டன் உச்ச நீதிமன்றம் தீர்பளித்து உள்ளது.பிரெசிட் சிக்கலோடு மீள முடியாமல் தவிக்கும் பிரதமர் இனி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.பதவி விலகுவாரா ,பாராளுமன்றத்தை கூட்டு வார ,இன்னும் ஒரு தேர்தலை சந்திப்பாரா,இப்படி பல நாடகங்கள் எதிர் வரும்  தினங்களில் நடக்கவிருக்கிறது.பாராளுமன்றம் மீண்டும் ஒரு யுத்த களமாக மாறவிருக்கிறது .பிருத்தானிய ஐரோப்பிய யூனியனோடு ஒரு ஒப்பத்துடன் விலக வேண்டும் என்று நினைத்தவர்கழுக்கு இது ஒரு சாதகமான தீர்ப்பாக அமையலாம் .பாராளுமன்றமே அதி உச்ச இறைமை(Sovereignty of Parliament )கொண்ட ஒரு இஸ்தாபனம்(institution )என்பதையும் சட்டத்திற்கு புறம்பான முறையில் பாராளுமன்றத்தின் அமர்வுகளை தள்ளிவைக்க முடியாது என்பதையும் உச்சி நீதி மன்றம் தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.பிறேஸிட்க்கு அரசியலுக்கு அப்பால் பாராளுமன்றத்தின் இறைமை பற்றியே உச்ச நீதி மன்றம் கவனம் செலுத்தி இருக்கிறது என்பதை இதன் தீர்ப்பில் இருந்து தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இருக்காது என்பதே.. பிரக்செட் தொடர்பான விவாதிகளின் கருத்து. பிரித்தானிய மனித உரிமை சட்டங்கள் தான்.. முதன்மை பெறும். பிரக்செட் கோட்பாடுகளில்.. முக்கியமான விடயங்களில்.. ஐரோப்பிய ஒன்றிய நீதிச் செயற்பாடுகளில் இருந்து பிரித்தானியாவை விடுவித்துக் கொள்வதும் ஒன்று.

இது தொடர்பாக.. உரையாட சட்ட நிபுணத்துவம் அவசியமில்லை. அலசப்படும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்தாலே போதும். 

So if the government failed to agree post-transition terms with the EU and the UK ended up with a "no deal" Brexit, then the UK could leave ECJ jurisdiction in October (before March) 2019.

https://www.bbc.co.uk/news/uk-44737092

What is the British Bill of Rights?

We do not currently have a British Bill of Rights. This was included in the Conservative government’s 2015 election manifesto. It was planned as new legislation to replace the Human Rights Act.

The ECHR protects the human rights of people in countries that belong to the Council of Europe, which is a completely different organisation to the EU. The UK will still be signed up to the ECHR when it leaves the EU.

In Britain our human rights under the ECHR are protected by the Human Rights Act 1998.

https://www.equalityhumanrights.com/en/our-human-rights-work/what-does-brexit-mean-equality-and-human-rights-uk

அவர்கள் தான் மே அம்மையாரின் மொழிவுகளை முன்னின்று எதிர்த்தார்கள். இப்போது அதை வரவேற்கிறார்கள். மேலும் ஜோன்சனின் நோ டீலை எதிர்ப்பவர்கள் தான் அதற்கு மாற்றீட்டை தரனும். ஜோன்சனைப் பொறுத்தவரை.. நோ டீல் ஓகே. 

உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லையா, அல்லது வேணுமெண்டே 3 கால் என அடம்பிடிகிரீகளா தெரியவில்லை.

கடைசியாக ஒரு தடவை எழுதுகிறேன்.

1. ECJ யும் ECHR ரும் வேறு வேறு. நீங்கள் மேலே தந்த பிபிசி குறிப்பு பிரெக்சிற்றின் பின் ECJ யின் ஆளுகையில் இருந்து யூகே விலகிவிடும் என்கிறது. இதைத்தான் நானும் எழுதியுள்ளேன்.

2. ECHR இல் இருந்து வெளியே வந்து British Bill of Rights ஐ ஏற்படுத்த வேண்டும் என்பது, மே உள்நாட்டமைச்சரகா இருந்த சமயத்யில் வேகம் எடுத்த ஒரு பரீட்சார்த்த கொள்கை முனைப்பு (policy initiative). ஆனால் பலரின் எதிர்ப்பால் இது கைகூடவில்லை. மே பிரதமராக இருந்த போதே இன்நிலைப்பாடு கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் ECHR is a multilateral international treaty. It has nothing to do with EU. பிரெக்சிற் நடப்பதால் யூகேயின் ECHR அங்கத்துவத்தில் ஒரு மாற்றமும் வராது. அதேபோல் பிரிட்டன் விரும்பும் பட்சத்தில் எப்போதும் ECHR இல் இருந்து வெளிவரலாம். ஆனா இப்படி செய்வதாயின் அரசு முதலில் பாராளுமன்றில் Human Rights Act 1998 ஐ இல்லாமல் செய்ய வேணும் (repeal). கம்ரனின் அரசு இந்த வகையில் சிந்தித்தாலும், மே பிரதமராகிய பின் இப்படி செய்ய மாட்டோம் என அரசு அறிவித்துளது.

3. சுருங்க சொல்லின் The status of Human Rights Act 1998 in UK law is in no way altered by Brexit. If UK wants to leave the ECHR, it will have to repeal the HRA 1998 and get out of the multilateral international treaty of ECHR. Again this is entirely separate process that has nothing to do with Brexit.

4. பிரெக்சிற்றும் ECHR இல் இருந்து வெளிவருவதும் இரு வேறுபட்ட விடயங்கள். யூகேயானது ECHR இல் இருந்தும் வெளியேறினால், ஐரோப்பிய கண்டத்திலேயே யூகேயும், பெலரூசும் மட்டுமே ECHR இல் இல்லாத நாடுகளாக இருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ட்ரம்பின் தெரிவு, பல்லினத்தன்மைக்கெதிரான போக்குப் பற்றி அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியான றுத் பேடர் கின்ஸ்பேர்க் கருத்துச் சொல்லும் போது, "உலக அரசியல் வரலாறு  ஒரு ஊசலாடும் பெண்டுலம் போன்றது" என்று சொல்லியிருக்கிறார். அது நம்பிக்கையை ஊட்டுவதாலும், கொஞ்சம் உண்மை போலத் தெரிவதாலும் நான் நம்பத் தலைப் படுகிறேன்! 1918 இல் இடதுசாரிப் புரட்சி, 1930 களில் ஹிற்லர், முசோலினிகளின் வரவு! 1948 இல் மீண்டும் நம்பிக்கை ஒளி, 1960 களில் ஹிப்பிகளும், இனஒதுக்கலின் தோல்வியும், பிறகு 2008 இல் முதல் கறுப்பின ஜனாதிபதி அமெரிக்காவில், 2016 இல் ட்ரம்ப். பெண்டுலம் தான்!

எனக்கு நம்பிக்கை தரும் இன்னொரு விடயம்: பெண்களும் (லேடி ஹேல் உட்பட!) இளம்வயதினரும் உலக அரங்கில் காட்டும் செயற்பாட்டுத் தீவிரமும் ஆர்வமும்! நிலைமை மோசமாக முதல் பெண்டுலம் நல்ல திசை நோக்கி நகரத்தான் போகுது!  

லேடி ஹேல் - பலதடவை என் தொழிலில் அம்மையாரின் தீர்புக்களை பார்த்து மனதுக்குள் திட்டியுள்ளேன், வேலைப்பளுவை கூட்டுவதால் 😂 .  ஆனால் இன்றைக்கு இவர்தான் (+10) நாட்டின் இறைமையையையே ஒரு பொய்யனிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்.

பிரிட்டனில் பெண்டுலம் திரும்பிய நாள் இதுவாக இருக்கட்டும்🙏🏾

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.