Jump to content

சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகிறார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Lara said:

2010 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை பெற்றார்.

இவர் தனித்து களமிறங்குவது வாக்குகளை பிரிக்க மட்டுமே உதவும். 😀

யார் யாருக்கு போக வேண்டிய வாக்குகள் பிரியும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே,

சிவாஜி எடுக்கப்போற 9000 வோட்டுக்கு இந்த திரிய 2 பக்கத்துக்கு நீட்டி, டிரம்பை எல்லாம் சந்தடி சாக்கில இழுத்து விடுறது உங்களுக்கே அநியாயமாக படவில்லையா? 😂.

தெற்காசிய சினிமா என்றால் ஹீரோ, வில்லன், காமெடியன் மூன்றும் அவசியம்தானே. அதுதான் யாரோ காசக்கொடுத்து சிவாஜிய இறக்கியுள்ளார்கள்.

தமிழினத்தின் மிக நேர்த்தியான தலைவனும், அதி கோமாளியான மனிதனும் ஒரே ஊரில் இருந்து வந்தவர்கள்.

#முரண்நகை

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

தெற்காசிய சினிமா என்றால் ஹீரோ, வில்லன், காமெடியன் மூன்றும் அவசியம்தானே. அதுதான் யாரோ காசக்கொடுத்து சிவாஜிய இறக்கியுள்ளார்கள்.

கீரோக்களும் வில்லன்களும் கூட யாரோவின் பணத்தை வேண்டி காட்சியில் இறங்கி இருப்பார்கள்.

எனவே, இந்த படமும் யாழ் களம் போன்றதே, எல்லோருக்கும் சக உரிமை உண்டு, கள வரையறைகளுக்குள்.  

யாரும், ஆடலாம்; பாடலாம், இரசிக்கலாம், தூற்றலாம், பாராட்டலாம், நக்கலடிக்கலாம் - வெல்கம் டு சனநாயகம் 🙂 

Link to comment
Share on other sites

17 minutes ago, குமாரசாமி said:

யார் யாருக்கு போக வேண்டிய வாக்குகள் பிரியும்? :cool:

இத்தேர்தலை கருத்தில் கொண்டால் முக்கியமாக சஜித்துக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரியும். அது கோத்தாவுக்கு சாதகம். இம்முறை மும்முனைப்போட்டி என்பதால் சிறுதொகை வாக்குகளையும் வீணாக்காமல் இருப்பது நல்லது.

முஸ்லிம்கள் பேரம் பேசுவது போல் கூட்டமைப்பினர் பேரம் பேசுவதில்லை. கடந்தகாலங்களில் கண்ணை மூடிக்கொண்டு ஐதேக பக்கம் நின்றார்கள்.

கூட்டமைப்பு நினைத்தால் இம்முறை சஜித் தமக்கு எழுத்து மூலம் உறுதிமொழிகளை தராவிட்டால் தாம் அநுரவுக்கு வாக்களிப்போம் என கூறிப்பார்க்கலாம். அதற்காக அநுரவுக்கு வாக்களிக்க வேண்டுமென்றில்லை. அது ஒரு அழுத்தத்திற்காக கூறுவது.

கோத்தா ஜனாதிபதி வேட்பாளராக உள்ள போது தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தமிழர்களுக்கே பாதகமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

கீரோக்களும் வில்லன்களும் கூட யாரோவின் பணத்தை வேண்டி காட்சியில் இறங்கி இருப்பார்கள்.

எனவே, இந்த படமும் யாழ் களம் போன்றதே, எல்லோருக்கும் சக உரிமை உண்டு, கள வரையறைகளுக்குள்.  

யாரும், ஆடலாம்; பாடலாம், இரசிக்கலாம், தூற்றலாம், பாராட்டலாம், நக்கலடிக்கலாம் - வெல்கம் டு சனநாயகம் 🙂 

ஐ ஆம் ஆல்ரெடி இன் ஜனநாயகம் - மேலே “உங்களுக்கே அநியாயாமாக படவில்லையா” என்றே கேட்டுள்ளேன். எழுத வேண்டாம் எனக்கூறவில்லை. எனவே சிவாஜிக்கு காவடி தூக்க விரும்புபவர்கள் தாராளமாக தூக்கலாம்.

காமெடியனுக்கும் அல்லகை வைப்பதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட் 😂

5 minutes ago, Lara said:

இத்தேர்தலை கருத்தில் கொண்டால் முக்கியமாக சஜித்துக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரியும். அது கோத்தாவுக்கு சாதகம். இம்முறை மும்முனைப்போட்டி என்பதால் சிறுதொகை வாக்குகளையும் வீணாக்காமல் இருப்பது நல்லது.

முஸ்லிம்கள் பேரம் பேசுவது போல் கூட்டமைப்பினர் பேரம் பேசுவதில்லை. கடந்தகாலங்களில் கண்ணை மூடிக்கொண்டு ஐதேக பக்கம் நின்றார்கள்.

கூட்டமைப்பு நினைத்தால் இம்முறை சஜித் தமக்கு எழுத்து மூலம் உறுதிமொழிகளை தராவிட்டால் தாம் அநுரவுக்கு வாக்களிப்போம் என கூறிப்பார்க்கலாம். அதற்காக அநுரவுக்கு வாக்களிக்க வேண்டுமென்றில்லை. அது ஒரு அழுத்தத்திற்காக கூறுவது.

கோத்தா ஜனாதிபதி வேட்பாளராக உள்ள போது தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தமிழர்களுக்கே பாதகமானது.

ஆனால் முஸ்லீம்களின் பேரம் வேறு வகையானது. அவர்கள் அமைச்சு, இத்தனை பேருக்கு வேலை, இத்தனை பேருக்கு குடியேற்றம், இன்ன ஊருக்கு இன்ன வசதி, இன்ன ஊருக்கு மாநராட்சி இப்படி டீல் பண்ணி அதை தம்மக்களுக்கு கொடுப்பார்கள்.

நாம் வட-கிழக்கு இணைப்பு, சமஸ்டி இப்படி கேட்ப்போம்.

முஸ்லீம்கள் கேட்பதை இலகுவில் சிங்கள தலைவர்கள் கொடுக்க முடியும். எதிர்ப்பும் பெரிதாக இராது.

நாம் கேட்பதை கொடுப்பதாக சொன்னால், அந்த வேட்பாளர் தேர்தலில் நிக்கவே வேண்டியதில்லை. அப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும்.

இங்கேதான் பிரச்சினையே.

உரிமைக்கும் சலுகைக்கும் இடையே அல்லாடுகிறது எமது அரசியல்.

Link to comment
Share on other sites

8 minutes ago, goshan_che said:

ஐ ஆம் ஆல்ரெடி இன் ஜனநாயகம் - மேலே “உங்களுக்கே அநியாயாமாக படவில்லையா” என்றே கேட்டுள்ளேன். எழுத வேண்டாம் எனக்கூறவில்லை. எனவே சிவாஜிக்கு காவடி தூக்க விரும்புபவர்கள் தாராளமாக தூக்கலாம்.

காமெடியனுக்கும் அல்லகை வைப்பதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட் 😂

சனநாயகத்தின் அழகு என்னவென்றால் ஒருவரின் கண்ணுக்கு கீரோவாக தெரிபவர் இன்னொருவரின் கண்ணுக்கு வில்லனாகவும் தெரிவது தான். அந்த அழகை இரசிப்போம், போற்றுவோம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

சனநாயகத்தின் அழகு என்னவென்றால் ஒருவரின் கண்ணுக்கு கீரோவாக தெரிபவர் இன்னொருவரின் கண்ணுக்கு வில்லனாகவும் தெரிவது தான். அந்த அழகை இரசிப்போம், போற்றுவோம் . 

இது அல்ல ஜனநாயகத்தின் அழகு. சர்வாதிகாரத்திலும், மன்னாராட்சியிலும் கூட வேறுபட்ட பார்வைகள் இருக்கும். ஆனால் அங்கீகரிக்கப் பட்ட பார்வையை பற்றி மட்டுமே பேச முடியும்.

ஜனநாயகத்தின் அழகு வேறுபட்ட பார்வைகளை வெளியே சொல்ல முடிவது. சொல்லப்படும் பார்வைகளை மறுத்துரைக்க, நக்கலடிக்க முடிவது.

உலகம் உருண்டை என்று சொல்வதும், உலகம் தட்டை என்று சொல்வதும் மட்டுமல்ல, 

உலகம் தட்டை என்று சொல்பவர்களுக்கு மண்டைப்பிழை என சொல்ல கூடியதாக இருப்பதும் கூட ஜனநாயக்கதில் ஒரு அங்கம்தான்.

1 hour ago, குமாரசாமி said:

யார் யாருக்கு போக வேண்டிய வாக்குகள் பிரியும்? :cool:

சரியாக கணக்கிட்டு சொல்வதாயின் சஜித்துக்கு போக வேண்டிய 9000 வாக்குகள் பிரியும் 😂

Link to comment
Share on other sites

30 minutes ago, goshan_che said:

ஆனால் முஸ்லீம்களின் பேரம் வேறு வகையானது. அவர்கள் அமைச்சு, இத்தனை பேருக்கு வேலை, இத்தனை பேருக்கு குடியேற்றம், இன்ன ஊருக்கு இன்ன வசதி, இன்ன ஊருக்கு மாநராட்சி இப்படி டீல் பண்ணி அதை தம்மக்களுக்கு கொடுப்பார்கள்.

நாம் வட-கிழக்கு இணைப்பு, சமஸ்டி இப்படி கேட்ப்போம்.

முஸ்லீம்கள் கேட்பதை இலகுவில் சிங்கள தலைவர்கள் கொடுக்க முடியும். எதிர்ப்பும் பெரிதாக இராது.

நாம் கேட்பதை கொடுப்பதாக சொன்னால், அந்த வேட்பாளர் தேர்தலில் நிக்கவே வேண்டியதில்லை. அப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும்.

இங்கேதான் பிரச்சினையே.

உரிமைக்கும் சலுகைக்கும் இடையே அல்லாடுகிறது எமது அரசியல்.

வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி பற்றி எழுத்தில் தர மாட்டார்கள். (இதில் வடகிழக்கு இணைப்பு பற்றிய பேச்சு தேவையில்லை என்பது என் கருத்து).

ஆனால் தமிழர்கள் பகுதியில் அபிவிருத்தி, தமிழ் கைதிகள் விடுதலை, காணிகளை விடுவித்தல் உட்பட பல விடயங்களை எழுத்தில் தருமாறு கேட்கலாம். எழுத்தில் தரப்படுவதை பகிரங்கப்படுத்தி சஜித்துக்கு கிடைக்கவிருக்கும் சிங்கள வாக்குகளை தடுக்க தேவையில்லை. முஸ்லிம்கள் பலர் இரகசிய ஒப்பந்தங்களை போட்டு தமது மக்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

கூட்டமைப்பினர் தமது வாழ்வை முன்னேற்றும் அளவுக்கு மக்கள் வாழ்வை முன்னேற்ற அக்கறை கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Lara said:

இத்தேர்தலை கருத்தில் கொண்டால் முக்கியமாக சஜித்துக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரியும். அது கோத்தாவுக்கு சாதகம். இம்முறை மும்முனைப்போட்டி என்பதால் சிறுதொகை வாக்குகளையும் வீணாக்காமல் இருப்பது நல்லது.

முஸ்லிம்கள் பேரம் பேசுவது போல் கூட்டமைப்பினர் பேரம் பேசுவதில்லை. கடந்தகாலங்களில் கண்ணை மூடிக்கொண்டு ஐதேக பக்கம் நின்றார்கள்.

கூட்டமைப்பு நினைத்தால் இம்முறை சஜித் தமக்கு எழுத்து மூலம் உறுதிமொழிகளை தராவிட்டால் தாம் அநுரவுக்கு வாக்களிப்போம் என கூறிப்பார்க்கலாம். அதற்காக அநுரவுக்கு வாக்களிக்க வேண்டுமென்றில்லை. அது ஒரு அழுத்தத்திற்காக கூறுவது.

கோத்தா ஜனாதிபதி வேட்பாளராக உள்ள போது தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தமிழர்களுக்கே பாதகமானது.

எழுத்து மூலம் உத்தரவாதம் இல்லை என்று ஒட்டுமொத்த சிங்கள அரசியல்வாதிகள் நிற்கும் போது.........அவர்களிடமிருந்து ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது என்றே தோன்றுகின்றது.
தமிழரை விட முஸ்லீம்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்வது சிங்களவருக்கு பலமடங்கு லாபமும் தலையிடியும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி பற்றி எழுத்தில் தர மாட்டார்கள். (இதில் வடகிழக்கு இணைப்பு பற்றிய பேச்சு தேவையில்லை என்பது என் கருத்து).

ஆனால் தமிழர்கள் பகுதியில் அபிவிருத்தி, தமிழ் கைதிகள் விடுதலை, காணிகளை விடுவித்தல் உட்பட பல விடயங்களை எழுத்தில் தருமாறு கேட்கலாம். எழுத்தில் தரப்படுவதை பகிரங்கப்படுத்தி சஜித்துக்கு கிடைக்கவிருக்கும் சிங்கள வாக்குகளை தடுக்க தேவையில்லை. முஸ்லிம்கள் பலர் இரகசிய ஒப்பந்தங்களை போட்டு தமது மக்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

கூட்டமைப்பினர் தமது வாழ்வை முன்னேற்றும் அளவுக்கு மக்கள் வாழ்வை முன்னேற்ற அக்கறை கொள்வதில்லை.

கட்டம் கட்டப் பட்டதில் 2ம் பந்தியோடு 100% உடன்படுகிறேன்.

ஆனால் 1ம் பந்தியோடு நான் தனிப்பட்டு உடன்பட்டாலும், இப்படியான ரகசிய ஒப்பந்தங்களுக்கு தமிழர் மத்தியில் இருந்து எப்படி பட்ட எதிர்வினை வரும் எனவும் யோசிக்க வேண்டும்.

1. ஐயகோ ரகசிய ஒப்பந்தம் போட்டு எம் உரிமையை காவு கொடுத்து விட்டார்கள்

2. ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். நல்ல பூச்சுத்தல் கதை இது

3. இதை எல்லாம் கேட்காமல், எங்கள் சம்ஸ்டியை அல்லவா கேட்க வேண்டும்? ரோடு போடவும், பாலம் கட்டவுமா நாம் போராடினோம்?

இப்படி எதிர்ப்புகள் கிளம்புமா இல்லையா?

நான் முன்பும் இங்கே இதை பற்றி எழுதியுள்ளேன். அபிவிருத்தி அரசியலா? உரிமை அரசியலா? என்பதில் இப்போ நமது மக்களுக்கே பெரிய குழப்பம். அதைத்தான் அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கிறார்கள்.

இரெண்டையும் சேர்த்து இரெட்டை குதிரை சவாரி செய்யும் லாவகம் வாய்த்த அஷ்ரப் போன்ற ஒரு  தலைவர் ஒருவர் நம்மத்தியில் இல்லை. சொல்லப்போனால் ஒரு போதும் இருந்ததில்லை. 

சலுகையின் மூலம் சிறுகச் சிறுக உரிமையை கைவசப் படுத்தலாம். கிழக்கில் முஸ்லீம்கள் கடந்த 40 வருடத்தில் செய்தது இதைத்தான்.

ஆனல் இதற்கு நாம் தயாரில்லை.

Link to comment
Share on other sites

30 minutes ago, goshan_che said:

கட்டம் கட்டப் பட்டதில் 2ம் பந்தியோடு 100% உடன்படுகிறேன்.

ஆனால் 1ம் பந்தியோடு நான் தனிப்பட்டு உடன்பட்டாலும், இப்படியான ரகசிய ஒப்பந்தங்களுக்கு தமிழர் மத்தியில் இருந்து எப்படி பட்ட எதிர்வினை வரும் எனவும் யோசிக்க வேண்டும்.

1. ஐயகோ ரகசிய ஒப்பந்தம் போட்டு எம் உரிமையை காவு கொடுத்து விட்டார்கள்

2. ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். நல்ல பூச்சுத்தல் கதை இது

3. இதை எல்லாம் கேட்காமல், எங்கள் சம்ஸ்டியை அல்லவா கேட்க வேண்டும்? ரோடு போடவும், பாலம் கட்டவுமா நாம் போராடினோம்?

இப்படி எதிர்ப்புகள் கிளம்புமா இல்லையா?

ஏனைய விடயங்களை உள்ளடக்கி இரகசிய ஒப்பந்தம் செய்தாலும் சமஸ்டி பற்றிய பேச்சுகளை தொடரலாம். அதை இலகுவில் சிங்கள அரசு தந்து விடாது.

பல நல்லவற்றை செய்ய முடியுமாக இருந்தால் மக்கள் எதிர்ப்பை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

2010 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை பெற்றார்.

இவர் தனித்து களமிறங்குவது வாக்குகளை பிரிக்க மட்டுமே உதவும். 😀

அதை விட குறைய எடுக்கிற ஆட் களும் போட்டியிடுகிறார்கள். அத்தோடு மிச்ச 34 பேரும் வாக்குகளை பிரிக்கிறார்கள் தானே.

Quote

ஆனால் 1ம் பந்தியோடு நான் தனிப்பட்டு உடன்பட்டாலும், இப்படியான ரகசிய ஒப்பந்தங்களுக்கு தமிழர் மத்தியில் இருந்து எப்படி பட்ட எதிர்வினை வரும் எனவும் யோசிக்க வேண்டும்.

1. ஐயகோ ரகசிய ஒப்பந்தம் போட்டு எம் உரிமையை காவு கொடுத்து விட்டார்கள்

2. ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். நல்ல பூச்சுத்தல் கதை இது

3. இதை எல்லாம் கேட்காமல், எங்கள் சம்ஸ்டியை அல்லவா கேட்க வேண்டும்? ரோடு போடவும், பாலம் கட்டவுமா நாம் போராடினோம்?

இப்படி எதிர்ப்புகள் கிளம்புமா இல்லையா?

மகிந்தவோடு சம்பந்தர் எத்தனை சுற்று இரகசிய பேச்சு வார்த்தைகள் நடாத்தியவர்கள்.  என்ன பேசினார்கள் என்பது மக்களுக்கு இன்று வரை தெரியாது. நீங்கள் வேறை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று....

Link to comment
Share on other sites

Just now, nunavilan said:

அதை விட குறைய எடுக்கிற ஆட் களும் போட்டியிடுகிறார்கள். அத்தோடு மிச்ச 34 பேரும் வாக்குகளை பிரிக்கிறார்கள் தானே.

35 வேட்பாளர்கள். இதில் சிலர் இறுதி நேரம் விலகி தாம் கூறும் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோரலாம்.

இத்தேர்தலில் சஜித், கோத்தா, அநுர ஆகிய மூவரும் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதில் சஜித், கோத்தா இருவருக்குமிடையில் தான் போட்டி. அநுர மூன்றாம் இடத்தில் இருப்பார்.

இவர்களை தவிர போட்டியிடும் அனைவரும் வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

அதை விட குறைய எடுக்கிற ஆட் களும் போட்டியிடுகிறார்கள். அத்தோடு மிச்ச 34 பேரும் வாக்குகளை பிரிக்கிறார்கள் தானே.

மகிந்தவோடு சம்பந்தர் எத்தனை சுற்று இரகசிய பேச்சு வார்த்தைகள் நடாத்தியவர்கள்.  என்ன பேசினார்கள் என்பது மக்களுக்கு இன்று வரை தெரியாது. நீங்கள் வேறை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று....

மக்கள் எப்போதைய்யா கேட்டார்கள் இப்போ கேட்க? கஜேஸ், பேரவை, புலம் பெயர் அமைப்புகள் இவை எல்லாம் கேட்கும். வலம்புரி ஒருக்காய் ஆசிரியர் தலையங்கத்தில் நீட்டி முளக்கும். யாழ்களத்தில் பொறி கிளம்பும். ஈற்றில் மக்கள் முன்னால், இவர்கள் எம்மை காட்டிக் கொடுத்து விட்டார்கள், எட்டப்பர்கள் என்று எடுத்துச் சொல்லப்பட்டு, அந்த கதை ஏற்றும் கொள்ளப்படும்.

இதை கூட்டமைப்பல்ல, பேரவையோ, கஜேசோ செய்தாலும் இதுதான் நிலை.

ஒரு காலத்தில் தமிழ் அரசியலுக்கு பொன்னம்பலம், செல்வா என இரட்டைத் தலைமை. பின் அது செல்வா-அமிர் என ஒற்றை தலைமையாகி, பிரபாகரனின் ஏக தலைமை வரை வந்தது.

இப்போ தமிழர் ஏக தலைமையில் இருந்து ஏகப்பட்ட தலைமைக்கு வந்துள்ளர்கள். அரசியலில் பல்லினதுவம் வேண்டும் ஆனால் யார் தலைமை என்பதில், தெளிவு வேண்டும். தலைமை, போட்டிக்கு எதிர் தலைமை இருக்கலாம். ஆனால் எல்லாரும் தலைமை எனும் நிலை மோசமானது.

 புலம் பெயர் தமிழர்களும், கஜேந்திரன்களும், விக்கியும் கூட அபிவிருத்தியை ஒதுக்கி, உரிமையே முதல் எனும் அரசியலை முன் வைக்கிறனர்.

டக்லஸ், வியாழேந்திரன் போன்றோர் உரிமையை தூக்கி பரணில் போடு, சலுகை மட்டும் போதும் எனும் அரசியல் செய்கிறனர்.

கூட்டமைப்பு பாம்புக்கு வாலையும் கீரிக்கு தலையையும் காட்டியபடி, தத்தம் சுய முன்னேற்றத்தை கவனிக்கிறனர்.

இதில் மக்களின் (ஊரில் உள்ள வாக்காளரின்) அபிலாசை என்ன என்பதே இப்போ கேள்வி குறி. 77 இல் கொடுத்த தனிநாட்டு ஆதரவை இன்னும் கொடுக்கிறார்களா? யாருக்கு தெரியும்? 77 இல் வாக்கு போட்டோரில் முக்கால்வாசிப்பேர் உயிருடன் இல்லை அல்லது ஊரில் இல்லை.

எந்த கட்சியும் எப்படி எமது இலக்கை அடைவோம் என சொல்லி வாக்கு கேட்பதில்லை. தேர்தல் வரும் போது வீரவசனம். பிரபாவை புகழ்வது. பின்னர் அடுத்த தேர்தல் வரை கும்பகர்ணத்தூக்கம்.

எல்லா கட்சியும். சம்பந்தர், சுமந்திரன், கஜேஸ், விக்கி, ஒருவருரிடமும் ஆளுமை இல்லை. ஈகோ மட்டும் வானளாவ இருக்கிறது. ஒரு ஆமான காரியத்தை செய்ய முடியவில்லை அதற்குள் விக்கி-சுமந்திரன், விக்கி-சுரேஸ்-கஜேஸ் என ஈகோ மோதல்.

விக்கி வடமாகாண முதல்வர். எம்பிகள் அரசியல் தீர்வு நோக்கி நகர (உரிமை அரசியல்), விக்கி தன் தெற்கு தொடர்புகளை, நற்பெயரை பயன்படுத்தி - முடிந்தளவு முஸ்லீம் அரசியல்வாதிகள் போல் எம்மக்களுக்கான சலுகைகளை பெறும் அரசியலை செய்வார் எனவே நான் எதிர்பார்த்தேன்.

நடந்தது என்ன? விக்கி உரிமை அரசியலை கையில் எடுத்து, வடமாகாண சபையை ஒண்டும் இல்லாதது ஆக்கி, தானும் கதிரைக்கு பாரமாய் காலத்தை ஓட்டினார். மறுவழமாய், உரிமை அரசியல் செய்ய வேண்டிய சுமந்திரனும் சம்பந்தனும்- எதிர்கட்சி தலைவர், ரணிலின் ஆலோசகர் என சலுகை அரசியலில் இறங்கி, அதையும் ஒழுங்காக செய்யாமல், அதனாலும் மக்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

இப்படி ஒரு இரெண்டும்கெட்டான் நிலையில்தான் இப்போது நிற்கிறது எமது மக்களின் அரசியலும், வாழ்வும்.

Link to comment
Share on other sites

தமிழக நாம் தமிழர் கட்சியை போன்று ( கொள்கையை பற்றி சொல்லவில்லை) , ஊர் ஊராக பிரச்சாரம், அரசியல் விழிப்புணர்வு, இளையோர் இணைப்பு போன்றவற்றை ஒரு ஈழ தாயக அரசியல் கட்சி செய்யவேண்டும் (so called grass root level activism) .

அவை, சமூகம் சார்ந்த பணிகள், அவை சார்ந்த அமைப்புடன் இணைந்து அந்தந்த ஊர்களில் உருவாக்கப்பட்டால் அது மக்களுக்கு அரசியல், சமூக மற்றும் பொருளாதார அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு வித்திட்டு வேர் விடும். எந்த புயல் அடித்தாலும் எழுந்து செல்லும். 

அவ்வாறான ஒரு அரசியல் தலைவனை தாயகம் எதிர்பார்த்து உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.