Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி- விமான- ஆட்டிலறி தாக்குதல்களால் அதிர்கின்றது வடசிரியா

Featured Replies

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.

சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.

ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும்புகைமண்டலம் எழுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

துருக்கியின் விமானதாக்குதல் காரணமாக மிசராவா என்ற கிராமத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என எஸ்டிஎவ் அமைப்பு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்களிற்கு நீரினை வழங்கும் அணைக்கட்டு ஒன்றினை இலக்குவைத்து துருக்கி படையினர் ஆட்டிலரி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் எஸ்டிஎவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

kurdis_vill.jpg

சிக்காரா என்ற கிராமத்தில் துருக்கியின் தாக்குதல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

kurds2.jpg

இதேவேளை துருக்கியின் தாக்குதலை தொடர்ந்து வடசிரியாவில் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சிஎன்என் ஆயிரக்கணக்கில் மக்கள் தப்பியோடிக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

தப்பியோடும் மக்களால் வீதிகள் மூச்சுதிணறுகின்றன,மோட்டார் சைக்கிள்களில் ஆறு ஏழு பேரை காணமுடிகின்றது,கார்களில் மெத்தைகள் உட்பட பல பொருட்களை அடுக்கியவாறு மக்கள் வெளியேறுகின்றனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

kurds4.jpg

பல பகுதிகளில் இருந்து கரும்புகைமண்டலம் எழுவதை காணமுடிகின்றது எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/66560

  • தொடங்கியவர்

சிரியா மீது துருக்கி போர்: வடக்கு சிரியாவில் தாக்குதலை தொடங்கிவிட்டோம் - எர்துவான்

வடக்கு சிரியாவின் மீது துருக்கி தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார் துருக்கி அதிபர் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.

இதன் மூலம் வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது.

குர்து படையினரை அகற்றப்பட்ட ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 லட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் திரும்பப் பெற்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஆனால், துருக்கி பின் விளைவுகளை சந்திக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாக செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் புறத்தில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைப் பின்வாங்கியதை முதுகில் குத்தும் செயலாக கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.

அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இந்த அணுகு முறைக்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆனால், மனிதத் தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால், அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று கூறி விமர்சகர்களுக்குப் பதில் அளித்தார் டிரம்ப்.

ஐ.எஸ். படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆயிரக் கணக்கில் சிரியாவின் சிறைகளில் உள்ளனர். அந்த சிறைகளை குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை காத்து வருகிறது. தாக்குதல் தொடங்கிவிட்டதாக துருக்கி அறிவித்துள்ள நிலையில் அந்த சிறைவாசிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சிரியா

https://www.bbc.com/tamil/global-49990947

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தாக்குதல் உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதாக எனது நண்பன் சொன்னான்.

  • தொடங்கியவர்

துருக்கியில் அதிகமாக வாழும் குர்திஸ் இன மக்கள், அண்டைய நாடுகளான ஈராக், சிரியா, ஆர்மினியா, ஈரான் உட்பட பல நாடுகளில் நாடு என்று ஒன்று தமக்கு இல்லாமல் உள்ளார்கள். 

துருக்கியில் அதிகமாக வாழும் இவர்கள், இவர்களின் குர்திஸ்தான் தனிநாடு கேட்கும் போராட்டம் என்பன துருக்கி தனக்கு ஆபத்து என பார்க்கின்றது.     

ஒரு சபிக்கப்பட்ட இனம் !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

துருக்கியில் அதிகமாக வாழும் குர்திஸ் இன மக்கள், அண்டைய நாடுகளான ஈராக், சிரியா, ஆர்மினியா, ஈரான் உட்பட பல நாடுகளில் நாடு என்று ஒன்று தமக்கு இல்லாமல் உள்ளார்கள். 

துருக்கியில் அதிகமாக வாழும் இவர்கள், இவர்களின் குர்திஸ்தான் தனிநாடு கேட்கும் போராட்டம் என்பன துருக்கி தனக்கு ஆபத்து என பார்க்கின்றது.     

ஒரு சபிக்கப்பட்ட இனம் !

குர்திஷ் இன  மக்கள்.... பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள்.
எமது இனத்தைப்  போல... அவர்களும் சபிக்கப் பட்ட இனம்.  😥

  • தொடங்கியவர்

‘சிரியாவில் தாக்குதல் நடத்த நாங்கள் துருக்கிக்கு ஒப்புதல் தரவில்லை’ - அமெரிக்கா

வடக்கு சிரியாவில் குர்து கிளர்ச்சியார்களுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக தாங்கள் எந்த ஒப்புதலும் தரவில்லை என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திரும்பப் பெற்றதை மைக் பாம்பியோ ஆதரித்து பேசினார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவிலும், சர்வதேச அரங்கிலும் எதிர்ப்பு குரல்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க ஒப்புதல் அளித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையல்ல என்று மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-49995790

முன்னதாக, வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியது.

குர்து படையினரை அகற்றப்பட்ட ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 லட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாக செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் புறத்தில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைப் பின்வாங்கியதை முதுகில் குத்தும் செயலாக கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.

இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் திரும்பப் பெற்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இந்த அணுகு முறைக்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆனால், மனிதத் தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால், அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று கூறி விமர்சகர்களுக்குப் பதில் அளித்தார் டிரம்ப்.

ஐ.எஸ். படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆயிரக் கணக்கில் சிரியாவின் சிறைகளில் உள்ளனர். அந்த சிறைகளை குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை காத்து வருகிறது. தாக்குதல் தொடங்கிவிட்டதாக துருக்கி அறிவித்துள்ள நிலையில் அந்த சிறைவாசிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

 

 

 

  • தொடங்கியவர்

இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், "இரண்டாம் உலக மகா யுத்தத்தில் குர்திஸ் மக்கள் உதவவில்லை ", என்கிறார் ட்ரம்ப். 

அதேவேளை, குர்திஸ் மக்களை துருக்கி அழிக்க விட மாட்டேன் எனவும் கூறுகிறார். 

துருக்கி அதிபர் எர்துவானின் தொலைபேசி அழைப்பை அடுத்து ட்ரம்ப் எடுத்த 'முடிவு', 50000 அமெரிக்க துருப்புக்களை அங்கிருந்து அகற்றினார் .  இதை ட்ரம்ப் பாதுகாப்பு செயலாளர், இராசங்க செயலலாளர் என எவருடனும் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு. 

அதனால், ட்ரம்ப் அமெரிக்க அரசின் வழமையான அணுகுமுறையை மதிக்கவில்லை என்பதால் இவரின் பல ஆதரவாளராக்களையும் இவர் மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளார். 

அதேவேளை, மீண்டும் ஒரு தேவை வரும்பொழுது, குர்திஸ் மக்களின் ஆதரவை பெறுவது கடினமாக இருக்கலாம். 

அத்துடன், உருசியாவின் பூட்டின் ட்ரம்ப்பை அதிபராக்கி உலக ஒழுங்கில் பல மாற்றங்களை செய்துள்ளார்.   

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

துருக்கி - சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள் - எல்லையில் என்ன நடக்கிறது?

வட சிரியாவில் குர்து இன போராட்டக்காரர்கள் மீது துருக்கி எல்லையைத் தாண்டி நடத்தும் தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

 

இதுவரை பொதுமக்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு குர்துக்கள் வழி நடத்தும் சிரிய ஜனநாயகப் படைகள் மற்றும் துருக்கி ஆதரவு பிரிவுகளிலிருந்தும் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கிய படைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

சர்வதேச அளவில் இந்த தாக்குதல் கண்டிக்கப்படும் நிலையில், பத்தாயிரம் பேர் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெற்றதையடுத்து, கடந்த புதன்கிழமை அன்று துருக்கி ராணுவம் வட சிரியாவுக்குள் நுழைந்தது.

அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்த துருக்கிக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது போல் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க குடியரசு கட்சியினர் துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை மசோதாக்களை அறிமுகப்படுத்தப் போவாதாகக் தெரிவித்துள்ளனர்.

சிரிய அகதிகளுக்கான பாதுகாப்பு பகுதியை உருவாக்குவதற்கே இந்தத் தாக்குதல் என துருக்கி தன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.

துருக்கிக்கு எதிரான கிளர்ச்சியை சிரிய ஜனநாயக படைகளின் குர்து இன கிளர்ச்சியாளர்கள் கிளப்புவதாக அந்நாடு குற்றம் சாட்டுகிறது. மேலும் இதனால் இந்த கிளர்ச்சியாளார்களை துருக்கி பயங்கரவாதிகள் என குறிப்பிடுகின்றது.

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்க நடத்தி வரும் போரில், சிரிய ஜனநாயக படைகள் ஒரு முக்கிய பங்கை வகித்தது.

மேலும் அப்பகுதியில் குர்து படைகள் பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் உள்பட பல சந்தேகத்துக்குட்பட்ட ஐஎஸ் கைதிகளின் நிலை குறித்து சர்வதேச அமைப்புகளுக்கு ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது.

இந்த தாக்குதலில் குர்து இன கிளர்ச்சியாளர்கள் துருக்கிய சார்பு படைகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இறந்துள்ளனர். பொதுமக்களில் சுமார் 11 பேர் இறந்துள்ளனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் குழந்தைகள்.

துருக்கி எல்லை பகுதிகளில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கி ராணுவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி உறுதிபடுத்தியுள்ளது.

துருக்கி இந்த பாதுகாப்பு பகுதிக்காக சிரியாவின் எல்லைப்பகுதியை நோக்கி 480 கிலோமீட்டர் வந்துள்ளது. ஆனால் திட்டமிடப்பட்ட 32 கிலோமீட்டருக்கு மேல் உள்ளே செல்ல மாட்டோம் என கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-50016172

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பல் மீது ராக்கெட் தாக்குதல்?

iran-ship-attack.png

சவுதி அரேபியாவின் கடல் பகுதியான செங்கடலில் ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்ட தாக்குதலில் அக்கப்பல் தீ பிடித்து எரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் National Iranian Tanker Co என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பல் மீதான தாக்குதலை தொடர்ந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் செங்கடலில் கலந்து வருகிறது. ஜெத்தா நகரில் இருந்து சுமார் 96கிமீ தொலைவில் இந்த கப்பல் இருந்துள்ளது.

வளைகுடா பகுதி நாடுகளில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மாறியுள்ளது.

கப்பல் மீதான தாக்குதல் குறித்து சவுதி அரேபிய அரசு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், இந்த தாக்குதல் மூலம் ஈரான், சவுதி இடையிலான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாக சர்வதேச சமூகம் கருதுகிறது.

கடந்த மே, ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது இருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலின் பெயர் Sabiti என்றும் இதன் இருப்பிடத்தை அறியும் சாதனங்கள் கடந்த 2 மாதமாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கியுள்ளது.

தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 2% அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

https://ns7.tv/ta/tamil-news/world-important-editors-pick-newsslider/11/10/2019/explosion-reported-iranian-oil-tanker?fbclid=IwAR0KRF97ScOsSk5wLEK_f-w2k0Z3TMbAcjk8Sy8RsMQriH7YbAnD6S5UAhA

  • தொடங்கியவர்

உலக யுத்தம் ஆரம்பம் இங்குதான் 😞 

Saudi Arabia oil attacks: US to deploy thousands of extra troops

The Pentagon has announced the deployment of thousands of additional troops to "enhance the defence of Saudi Arabia".

US Secretary of Defence Mark Esper says he has authorised the deployment of additional forces, including fighter jets and a defence system.

He said it was in response to "threats in the region", amid efforts to protect the kingdom from "Iranian aggression".

The move comes after an attack on Saudi Arabia's oil facilities in September.

"Taken together with other deployments, this constitutes an additional 3,000 forces that have been extended or authorised within the last month," Pentagon spokesman Jonathan Hoffman said.

The US has increased the deployment of forces in the region by 14,000 since May, according to CNN. Saudi Crown Prince Mohammed bin Salman had requested additional support, Mr Esper said.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.