Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே! | Tamil Page

By admin -
74274130_2415192845363433_44878473967257

தமிழில் பேச முடியாதென ஊழியர்களிற்கு அராஜக கட்டுப்பாடு விதித்த கொழும்பு பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மும்மொழியிலும் மன்னிப்புக்கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரையின் பேரில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவர், இந்நிறுவனத்திடம் இச்சம்பவம் தொடர்பில் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

இக்கடிதத்துக்கு பதிலாக குறிப்பிட்ட நிறுவனத்தினர் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான விளக்க கடிதங்களில், இந்த அறிவிப்பு பலகையில் காணப்பட்ட வாசகங்கள் தொடர்பில் மன்னிப்பு கோரி, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

http://www.pagetamil.com/85582/

" அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு "

ஒரு பாடமாக தமிழர் தரப்பு எடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

" அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு "

ஒரு பாடமாக தமிழர் தரப்பு எடுக்கலாம்.

ஆற அமர இவ்வளவு நாள் போய் மன்னிப்பு கடிதம்  இதே முஸ்லீம்கள் உடையுடன் வந்தால் உள்ளே விடமாட்டம் என்று அறிவித்தல் பலகை வைத்து பார்க்கட்டும் அந்த உணவகமே மூடவேண்டிய நிலைக்கு போகும் இரண்டு நாளில் .

இல்லை புத்தரை தரிசித்து விட்டு இந்த உணவகத்துக்கு வருகை தரவேண்டாம் என்று அறிவிப்பு வைத்து 24 மணிநேரத்த்துக்குள்  அந்த இடத்தில் சாம்பல் மேடுதான் கிடக்கும் எங்கடயள் கொஞ்சத்துக்கு விளங்கபடுத்தவே நுரை தள்ளி விடும் .

Edited by பெருமாள்

4 minutes ago, பெருமாள் said:

ஆற அமர இவ்வளவு நாள் போய் மன்னிப்பு கடிதம்  இதே முஸ்லீம்கள் உடையுடன் வந்தால் உள்ளே விடமாட்டம் என்று அறிவித்தல் பலகை வைத்து பார்க்கட்டும் அந்த உணவகமே மூடவேண்டிய நிலைக்கு போகும் இரண்டு நாளில் .

இருந்தாலும், இந்த வழி என்றும் பலன் தரும் நல்ல வழி.

காலம் எடுக்கலாம், ஆனால் வெற்றியை என்றும் அடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவன் யார்? அவன் அரசியல் பலம் பொருந்திய மிகப் பெரியாளாக இருக்கவேண்டும்.! இல்லையென்றால் இப்படி ஒரு செய்தி எழுத  பெப்பர்மின்ட் கபேக்கு தைரியம் வந்திராது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

எய்தவன் யார்? அவன் அரசியல் பலம் பொருந்திய மிகப் பெரியாளாக இருக்கவேண்டும்.! இல்லையென்றால் இப்படி ஒரு செய்தி எழுத  பெப்பர்மின்ட் கபேக்கு தைரியம் வந்திராது. 🤔

ஐயா,  

அவர்கள் வியாபாரிகள்,  பிழைக்க தெரிந்த வியாபாரிகள்.  நாங்கள் வரட்டுக் கவ்ரவம் பேசியே எம் இனத்தை அழிய விடுபவர்கள்.

(இப்படி ஒரு கடை  இருந்ததே தெரியாது,  ஆனால் தற்போது தமிழரில் 75% ற்ட்க்கும்  மேல் இப்படி ஒரு கடை இருப்பது தெரியும்.  ஆக மொத்தம் லாபம் அவனுக்குத்தான்.  ( எல்லாம் எனது இயலாமையின் வெளிப்பாடுதான் ))

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Maharajah said:

ஐயா,  

அவர்கள் வியாபாரிகள்,  பிழைக்க தெரிந்த வியாபாரிகள்.  நாங்கள் வரட்டுக் கவ்ரவம் பேசியே எம் இனத்தை அழிய விடுபவர்கள்.

(இப்படி ஒரு கடை  இருந்ததே தெரியாது,  ஆனால் தற்போது தமிழரில் 75% ற்ட்க்கும்  மேல் இப்படி ஒரு கடை இருப்பது தெரியும்.  ஆக மொத்தம் லாபம் அவனுக்குத்தான்.  ( எல்லாம் எனது இயலாமையின் வெளிப்பாடுதான் ))

மிகவும் வலுவான விளம்பர யுக்தி

3 hours ago, பெருமாள் said:

ஆற அமர இவ்வளவு நாள் போய் மன்னிப்பு கடிதம்  இதே முஸ்லீம்கள் உடையுடன் வந்தால் உள்ளே விடமாட்டம் என்று அறிவித்தல் பலகை வைத்து பார்க்கட்டும் அந்த உணவகமே மூடவேண்டிய நிலைக்கு போகும் இரண்டு நாளில் .

கொழும்பிலும் சுற்றியுள்ள சிங்கள பகுதிகளிலும் உணவு விடுதிகள், திரையரங்குகள், அரச அலுவலங்கள், வங்கிகள் அனேகமானவற்றில் (முஸ்லிம் உரிமையாளர் அல்லாத) வாசலிலேயே முகத்தை மூடும் புர்கா / பர்தா போன்றவற்றை அணிந்து உள்ளே வர வேண்டாம் என அறிவித்தல்கள் வைத்துள்ளனர். இது பல மாதங்களாக தொடருகின்றது.

அநியாயங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தால் தவறு செய்றவங்க அடங்கியே ஆகணும் என்டு நிரூபிக்கப்பட்டிருக்கு.

இதுல கண்டனங்களை பதிஞ்சு குரல் கொடுந்தவங்களில் பலர் தமிழ்நாட்டு உறவுகள்!

ஆனா ஒரு மோசமான இனவாத மனநிலை உடைய ஒரு நிர்வாகத்தால மட்டும்தான் இப்பிடி ஒரு அறிவித்தலை வைக்க முடியும்!

5 hours ago, நிழலி said:

கொழும்பிலும் சுற்றியுள்ள சிங்கள பகுதிகளிலும் உணவு விடுதிகள், திரையரங்குகள், அரச அலுவலங்கள், வங்கிகள் அனேகமானவற்றில் (முஸ்லிம் உரிமையாளர் அல்லாத) வாசலிலேயே முகத்தை மூடும் புர்கா / பர்தா போன்றவற்றை அணிந்து உள்ளே வர வேண்டாம் என அறிவித்தல்கள் வைத்துள்ளனர். இது பல மாதங்களாக தொடருகின்றது.

வங்கிகள், ATM இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் வாசலில் ஹெல்மட் அணிந்து உள்ளே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் CCTV கமராக்களில் பயனரின் முகம் பதியப்பட வேண்டும். இது மோசடிகளை தவிர்க்க உதவும்.

அதைப் போல முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதிப்பது சட்டவிரோதம் என்று யாராலும் சொல்ல முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.