Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.

November 10, 2019

tmk1.png?zoom=3&resize=335%2C112

ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான சந்திப்புகளுக்கான நேர ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை திரு.சுமந்திரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். தபால் மூல வாக்கெடுப்புக்கு மிகக்குறுகிய காலமே இருந்த காரணத்தால் மேற்படி பணிகள் இரண்டும் விரைவாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும் துரதிஷ;ட வசமாக குறித்த பணிகள் உரிய காலத்தில் நடைபெற எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலம் கடத்துவதிலேயே சிலர் கண்ணாக இருந்தார்கள். ஒக்டோபர் 28ந் திகதி ஐந்து கட்சிகளும் கூடிய போது திரு.மாவை சேனாதிராசா அவர்கள் 30ந் திகதிக்கு ஒத்தி வைக்கக்கோரி 30ந் திகதிக்கு ஐந்து கட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒக்டோபர் 28ந் திகதி வரை 13 கோரிக்கைகளை ஆங்கில மொழிக்கு மாற்றக் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

காலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் அன்றிருந்த நிலையையும் தபால்மூல வாக்களிப்பு தொடங்குவதற்கு ஒரு சில தினங்களே இருந்த நிலையையும் கருத்திற்கொண்டு உடனே 13 தமிழ் மூல கோரிக்கைகளை ஆங்கிலத்திற்குத் தாமே மொழிபெயர்த்து மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேரடியாகவே தமது கட்சி சார்ந்த ஒருவரால் கையளித்து குறித்த 13 கோரிக்கைகளையும் பற்றி நேரடியாக வேட்பாளர்களுடன் பேச சந்திப்பை வேண்டியிருந்தார். இருவர் 13 கோரிக்கைகளையும் நிராகரித்து பத்திரிகையில் செய்தி அனுப்பினர்.

மூன்றாமவர் எதுவுமே பேசாதிருந்துவிட்டு பின்னர் 13 கோரிக்கைகளையும் நிராகரிப்பதாகப் பத்திரிகை மூலம் அறிவித்தார். இந்த நிலையில்த் தான் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு சில வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் முயற்சியிலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் துரதிஷ;டவசமானது. எமது கட்சி எல்லா சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றே கடுமையாக உழைத்து வந்தது. இதற்கு ஆதாரமாக திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னைத் தனியாகச் சந்திக்கும்படி இரு தடவைகள் அழைப்பு விடுத்த போதும் கூட எமது கட்சியின் செயலாளர் நாயகம் அதனை நிராகரித்ததுடன் 5 கட்சிகளையும் அழைத்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்படி அவரிடம் கோரியிருந்தார். அத்துடன் பகிரங்கமாக வெளியிட்;ட அவரின் அறிக்கையிலும் எக்காரணம் கொண்டும் தனியாக சந்திக்கப்போவதில்லை எனவும் 5 கட்சிகளும் இணைந்தே சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்துவோம் எனவும் எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.

மேலும் 5 கட்சிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னருங் கூட சில கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடந்த சில அரச, அரசியல் கூட்டங்களில் பங்குபற்றியதும் ஐ.தே.க வேட்பாளரின் தேர்தல் பரப்புரைத் துண்டுப்பிரசுரங்களை ஏந்தியிருந்ததும் தனிப்பட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த பின்னணியில்த்தான் திரு.சுமந்திரன் அவர்கள் தானாகவே வலியவந்து பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்களை செய்யாதிருந்தமை பார்க்கப்பட வேண்டும்.

எது எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணியின் அறிக்கையைப் பல்கலைக்கழக மாணவர்களோடு பகிர முடியாமல் போனதற்குக் காரணம் நேரமின்மையே. அவ்வாறான இக்கட்டுக்குள் நாம் தள்ளப்பட்டோம் என்பதை சூழலை ஒட்டி யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.

மேலும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பக்கச்சார்பற்ற முயற்சி மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் கூட்டணி பாராட்டுகின்றது. அவர்கள் முயற்சி காலத்தின் தேவை கருதி எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எமது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.

ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
யாழ்ப்பாணம்

 

http://globaltamilnews.net/2019/133007/

2 hours ago, கிருபன் said:

தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் ஐயா படிச்ச, தெளிந்த சிந்தனை உடைய ஆள் என்று நினைச்சுக் கொண்டிருந்த எல்லாருக்கும் பேரிடியாக இருந்தது மாணவர்கள் செய்த முயற்சியை பலவீனப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கை.

முந்திரிக்கொட்டை மாதிரி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டு ஐயா ஒற்றுமையை சிதறிடித்தமை வரலாற்றில் இடம்பெற்றே ஆகும். ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் விக்னேஸ்வரன் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறை தெளிவுபடுத்தியிருந்தனர்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்ற ஆட்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றி பேரினவாதிகளுக்கு முட்டாட்களாக (முட்டு கொடுக்கும் ஆட்கள்), அடிமைகளாக சேவகம் செய்யும் சாக்கடை அரசியலை பல வருடங்களாக செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக காலத்துக்கு காலம் காலை வாரும், ஒற்றுமையைக் குலைக்கும் சாக்கடை அரசியலிவாதிகளில் விக்னேஸ்வரனும் ஒருவர் என்று அவர் இந்த அறிக்கையில் தன்னை நியாயப்படுத்தியதன் மூலம் உறுதிசெய்துள்ளார்.

அவரது நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ள அவரது விக்னேஸ்வரனின் ஈகோ இடம்கொடுக்காது என்று அவரது இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வாங்கள். விக்னேஸ்வரனும் அப்பிடி ஒரு தவறை செய்துபோட்டாரோ என்று நாங்க எல்லாம் யோசிச்ச வேளையில, இல்ல இல்ல நான் மிக நல்லா திட்டமிட்டுத் தான் காலை வாரினனான் என்று இந்த அறிக்கையில விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார்.

பெரிய மனிதர்கள் தெரியாமல் தவறு செய்திருந்தால் அதற்காக வருந்துவதும், தவறுகளை திருத்த முயற்சிகளை எடுப்பதுவும் அவர்களின் பண்பு. விக்னேஸ்வரனிடம் அந்த உயர்ந்த பண்பு அறவே இல்லை என்று தனது தவறை நியாப்படுத்தியதன் மூலம் விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார்.

அவர் மட்டுமில்லை அவர்றை கொள்கை பரப்பு செயலாளரான அருந்தவபாலன் என்ற சந்தர்ப்பவாதியும் நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் கூறி தன்னிடமும் எந்த நல்ல பண்புகளும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார். உண்மைகளை மறைக்கும் இவர்களது ஏமாற்றல் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மீது மக்கள் வைச்சிருந்த மதிப்பு, மரியாதை குறைஞ்சு கொண்டே போகுது.

இதில பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் விக்னேஸ்வரன் ஐயா தான்.  

4 hours ago, கிருபன் said:

காலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன.

இப்பொழுதும் யாருக்கும் வாக்களிக்குமாறு மக்களிடம் கோர முடியாது என மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை தமிழ் மக்கள் கூட்டணி தட்டிக் கழித்து விட்டு தானே உள்ளது.

இதை விட கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்கது. என்ன தான் அவர்கள் முன்கூட்டியே சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களை கோர தீர்மானித்திருந்தாலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

 

இதில பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் விக்னேஸ்வரன் ஐயா தான்

உண்மைதான். அத்துடன் 13 அம்சக்கோரிக்கைகளை தயாரித்து அவற்றை வேட்பாளர்களுக்கு கையளிக்குமாறு சுமந்திரனிடம் ஒப்படைத்த பேயர்களாகிய பல்கலைக்கழக மாணவர்களும்,  இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

https://yarl.com/forum3/topic/234041-வழிஞ்சோடி-வாக்குகள்-நிலாந்தன்/

Edited by கிருபன்

மாணவர்களின் முயற்சி காலத்தின் கடமை. பாராட்டுக்கள். 

கட்சிகள், மக்களின் நலன்களை விடவும் தமது அரசியல் எதிர்காலங்களின் மீது மட்டுமே குறியாக இருக்கும்வரை இல்லை மக்களால் நிராகரிக்கப்படும் வரை இவர்கள் மாறப்போவதும் இல்லை. 

ஆனால், அந்த மாற்றம் ஒருநாள் வந்தே தீரும்,    

22 hours ago, Gowin said:

அவர் மட்டுமில்லை அவர்றை கொள்கை பரப்பு செயலாளரான அருந்தவபாலன் என்ற சந்தர்ப்பவாதியும் நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் கூறி தன்னிடமும் எந்த நல்ல பண்புகளும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்.

அருந்தவபாலன் மாவையோட ஒரு டீல் செய்திருக்கார் என்டு ஆட்கள் பரவலா சொல்லீனம். விக்கியரை வைச்சு ஏதாவது ஒருதேர்தல்ல வென்று போட்டு, பிறகு எங்க கூட வருமானம் கிடைக்குதோ அங்க தாவுற திட்டத்தில ஆள் இருக்கிறாராம்!

அருந்தவபாலன் எப்பிடியாவது விக்கியரின் தமிழ் மக்கள் கூட்டணியை வலுவிழக்கச் செய்வன் என்டு ஒற்றைக்காலில் நிக்கிறார் போலத் தெரிகிறது.    

 

இதிலையும் விக்கியர் நிறைய்ய பாடம் படிக்க வேண்டி இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையும் தமிழரும் என்பது எப்பவுமே ஒத்துவராதவை.  அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்.. இன்று நாம் தமிழீழத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்போமே. 

5 minutes ago, nedukkalapoovan said:

ஒற்றுமையும் தமிழரும் என்பது எப்பவுமே ஒத்துவராதவை.  அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்.. இன்று நாம் தமிழீழத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்போமே. 

நீங்க சொன்னமாதிரி கணிசமான தமிழர்டை ஜீன்ல ஒரு பெருங்குறைபாடு இருக்குது!   

நிதானமா எழுதிவைச்சு வாசிக்கும் விக்கியரே மிக நிதானமா ஒற்றுமையைக் குலைப்பதற்கான சூழ்நிலையை தேவையற்ற அறிக்கைகளால் ஏற்படுத்திவிட்டு இப்ப தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் தான் என்டு ஒற்றைக்காலில நிக்கிறார் விக்கியர்.

 

 

விக்கி ஐயா ஒரு உயர் பதவி வகித்த படித்த பண்புள்ளவர். இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அவருக்கு அரசியல் சரிவராது. இவரை ஒரு பதவியில் அமர்த்தி மக்களுக்கு எதாவது செய்வார் எண்டு எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் அவரோ கேள்வி பதில் எண்டு எழுதிக்கொண்டிருந்தாரே தவிர தனது கடமைகளை செய்யவில்லை. அதிகார துஸ்பிரயோகம் , பிரச்சனைகளை உருவாக்கினார் தவிர வேறு ஒன்றுமே சொல்லும்படியாக செய்யவில்லை.

பிள்ளையான் கிழக்கிலே முதலமைச்சராக இருந்த போது தமிழ் மக்களுக்கு செய்த சேவையில் பத்து வீதமாவது செய்யவில்லை. பிள்ளையானை நல்லவன் என்றோ , வக்காலத்து வாங்கவோ இதை எழுதவில்லை. அவன் படியாதவனாக இருந்தபோதும் அதிகாரிகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு தன்னால் முடிந்தவரியும் சேவை செய்தான். இங்கு எப்போதும் குழப்படிகளும் , அடிதடியும் சண்டையும்தான் நடந்தது.

இறுதியாக விக்கி அவர்களுக்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து அவரது தீர்ப்பு பிழை என்று கூறியது. இது எல்லாம் இவருக்கு தேவையா?

இப்போது அறிக்கைவிட்டு என்ன பிரயோசனம். அதட்கு முதலே பல்கலைக்கழக மாணவர்கள் இவருக்கு கண்டன அறிக்கை விட்டிருக்கிறார்கள். இவர் எங்களுக்கு தெளிவான பதிலை தர வேண்டும். உங்களுக்கு வாக்களித்தால் சமஷடி அல்லது ஈழம் பெற்று தருவீர்களா? அதட்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அதட்கு இன்னுமொரு ஐம்பது வருடம் பொறுத்திருக்க வேண்டுமா? நாட்டின் கள நிவாரங்களை அறிந்தவரையில் இது எல்லாம் இலவு காத்த கிளியின் கதைதான். வடக்கு கிழக்கையே இணைக்க முடியாத நிலைமை. பாவம் மக்கள். எவ்வளவு காலத்துக்குத்தான் ஏமாறப்போகிறார்களோ தெரியவில்லை. 

On 11/11/2019 at 4:55 PM, கிருபன் said:

உண்மைதான். அத்துடன் 13 அம்சக்கோரிக்கைகளை தயாரித்து அவற்றை வேட்பாளர்களுக்கு கையளிக்குமாறு சுமந்திரனிடம் ஒப்படைத்த பேயர்களாகிய பல்கலைக்கழக மாணவர்களும்,  இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதை முடிவு செய்தது பல்கலைக்கழக மாணவர்கள் இல்லையாம். 5 அரசியல் கட்சிகளும் தானாம். பல்கலைக்கழக மாணவர்கள் 5 கட்சிகள் எடுத்த எந்த முடிவிலும் தலையிடவில்லையாம். மாணவர்கள் சிலர் என்னிடம் கூறியது.

மேலும் நீங்க சொன்னபடி விக்கியரோட தமிழ் மக்களும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஊடகவியலாளர்களைக் கண்டால் மாரித்தவக்கை போலக் கத்தியும், ஊடக அறிக்கைகளை விட்டும் சிற்றின்பம் காணும்  வழக்கத்தை உடைய விக்கினேஸ்வரன் தனது கேவலமான மறுபக்கத்தை அவ்வப்போது காட்டத் தவறுவதில்லை.

இம்முறை ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தனது ஊடக அறிக்கைப் பைத்தியத்தின் மூலம் குலைத்து ஒரு நம்பிக்கைத் துரோகியாக விக்கினேஸ்வரன் தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.  

இது அவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியே  தீரும். அவரது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை யாருமே ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நம்பிக்கைத் துரோகியாக தன்னை வெளிப்படுத்தியுள்ள விக்கினேஸ்வரன் தனது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை நம்பி மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே முடியும்!

On 11/11/2019 at 4:55 PM, கிருபன் said:

இந்த கோரிக்கைகளை எல்லாம் தட்டிக்கழித்து தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்கும் கூட்டமைப்பை இன்னும் நம்பும் விடுபேயர்களான தமிழர்களும் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

சபாஷ்
சரியா சொன்னீங்க அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.