Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்? இலங்கையில் இருந்து இது குறித்து ஆராய்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.

காணொளிப் பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

https://www.bbc.com/tamil/sri-lanka-50369034

55 minutes ago, ஏராளன் said:

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து தான் போன முறை மைத்திரியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் புதிய அரசும் வந்தவுடன் சீனாவின் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தி போக்கு காட்டி விட்டு பின் அதை தானே முன்னின்று செய்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்த போது அதற்கெதிராக நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்குமளவுக்கு நிலைமை போச்சுது. 🤣

Edited by Lara

1 hour ago, ஏராளன் said:

இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்?

யார் வந்தாலும் சீனாவின் உதவியை பெறுவார்கள்.

சஜித் ஏற்றுமதிகளை அதிகரித்தல், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளல், அனைத்து மாகாணங்களிலும் சிறப்பு பொருளாதார வலயங்களை உருவாக்குதல், பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கூறியுள்ளார். அனைத்தையும் செய்வார் என்றில்லை. ஆனால் செய்ய முற்படுபவற்றில் சீனாவின் உதவியை எப்படியும் பெறுவார். அதே போல் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இதில் பங்கிருக்கும்.

கோத்தா வந்தால் அவரை தனது puppet ஆக வைத்திருக்க அமெரிக்கா முயலும். ஆனால் அவர் அதை தாண்டி சீனாவின் உதவிகளை பெறுவார். ஏனைய நாடுகளுக்கும் இடமளிப்பார்.

Edited by Lara

வெளிநாட்டு கொள்கை பற்றி சஜித் கூறுவது இது.

வலுவான வெளிநாட்டு கொள்கை

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள இலங்கையின் புவியியல் வரலாற்று ரீதியாக வர்த்தக மற்றும் சர்வதேச பயணங்களின் குறுக்கு வழியில் நம்மை நிறுத்தியுள்ளது. இப்புவியியல் நிலையம் பெரும்பாலும் நன்மைகள் மற்றும் பிரச்சினைகளையும் ஒருங்கே கொண்டு வந்தாலும், இன்று அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் நமது உடனடி அண்டை நாடுகளாக இருந்தாலும் அல்லது பரந்து விரிந்த பல உலகச் சமூகமாக இருந்தாலும் சரி, இலங்கையை இந்தியப் பெருங்கடலின் மையமாக மாற்ற அனைத்து நாடுகளுடனும், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும் பங்காளிகளாக பணியாற்றுவதற்காக நமது புவியியல் இருப்பிடத்தையும் வரலாற்று தொடர்புகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.

இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு அதை வலுப்படுத்த, திறந்த வர்த்தகம், வழிசெலுத்தல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்கு நாங்கள் உறுதியுடன் இருப்போம். சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களுக்கான எங்கள் தன்னார்வ கடமைகளை நாங்கள் செயற்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் எங்கள் சர்வதேச நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்குவோம். இந்தியப் பெருங்கடலில் வழிசெலுத்தல் சுதந்திரத்தையும் உறுதி செய்வோம்.

எங்கள் சர்வதேச உறவுகள் “அனைவருடனும் நட்பு, யாருடனும் பகையில்லை” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும்.

இந்தியப் பெருங்கடலின் மையமாக எங்கள் பங்கைக் காட்ட, நமது அண்டை நாடுகளுடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு பிராந்தியங்களில் உள்ள நாடுகளின் மேல் குறிப்பான கவனம் செலுத்தப்படும்.

எங்கள் வெளியுறவுக் கொள்கை மூலோபாயத்தின் படி நமது வெளிநாட்டுப் பணிகள் பகுத்தறிவு செய்யப்படும். மேலும் பொருளாதார இராஜதந்திரத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக நமது வெளியுறவு சேவை மறுசீரமைக்கப்படும்.

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், முதலீட்டை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் முதலீட்டு வாரியம், பொருளாதார அபிவிருத்தி வாரியம் மற்றும் வர்த்தகத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் குழுக்களை பொருத்தமான பணிகளில் நிறுத்துவோம். அனைத்து வெளிநாட்டு தூதரகங்களினதும் எமது தேசிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கான பங்களிப்பு குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும்.

முடிந்தவரை, எங்கள் தூதர்கள் அனைவரும் வெளிநாட்டு சேவை அதிகாரிகள் என்பதை உறுதி செய்வோம். பொருத்தமான வெளிநாட்டு சேவை அதிகாரிகள் கிடைக்காத இடங்களில், வெளிப்படையான அளவுகோல்களின் படி தகுதியான மாற்று உத்தியோகத்தவர்களை நாங்கள் நியமிப்போம்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/11/2019 at 11:21 AM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

சிங்கள சிறிலங்காவுக்கு யார் காசு கூட குடுக்கினமோ அவையள்  வைச்சிருக்கலாம்.
வருசக்கணக்கிலும் வைச்சிருக்கலாம்....மாதக்கணக்கிலும் வைச்சிருக்கலாம் அது அவரவர் குடுக்கிற தொகையை பொறுத்திருக்குtw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்... ☺️

10438978_1501366006748083_34154075629156

50 minutes ago, குமாரசாமி said:

சிங்கள சிறிலங்காவுக்கு யார் காசு கூட குடுக்கினமோ அவையள்  வைச்சிருக்கலாம்.
வருசக்கணக்கிலும் வைச்சிருக்கலாம்....மாதக்கணக்கிலும் வைச்சிருக்கலாம் அது அவரவர் குடுக்கிற தொகையை பொறுத்திருக்குtw_glasses:

அப்ப சீனாவிற்கு தான். அவர்கள், இன்னும் ஒரு பத்து இல்லை இருப்பது ஆண்டுகளில் உலகின் பொருளாதார வல்லரசாகி விடுவார்கள். அமெரிக்க நாடு அன்று பிரித்தானியா போன்று அஸ்தமிக்க தொடங்கி விட்டது.

 

10 minutes ago, ampanai said:

அப்ப சீனாவிற்கு தான். அவர்கள், இன்னும் ஒரு பத்து இல்லை இருப்பது ஆண்டுகளில் உலகின் பொருளாதார வல்லரசாகி விடுவார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முதலில் இந்தியாவின் உதவி தான் கேட்கப்பட்டது. அதை அபிவிருத்தி செய்வதால் எந்த நன்மையும் இல்லை, இலாபம் இல்லை, அது, இது என கூறி இந்தியா உதவி செய்ய மறுத்து விட்டது. அதன் பின் தான் சீனா அதை தான் பெற்றுக்கொள்ள முயற்சித்து பெற்றது. 

கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கும் மேற்குலகின் உதவி தான் முதலில் கேட்கப்பட்டது. அது கைவிரித்த பின் சீனா அதையும் தான் பெற்றது.

சீனா கையில் போன பின் இந்நாடுகள் குய்யோ முய்யோ என்று கத்தி என்ன பிரயோசனம்? 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2019 at 5:21 AM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

பணம் கொடுக்கும் நாடுகளுக்கெல்லாம் முந்தானை விரிக்கும்.

கிந்தியா, இளநகை தீவை மீண்டும் இரண்டாக இன்று பிரித்தால் மட்டுமே சீனாவிடம் இருந்து தம்மை பாதுகாக்கலாம். 

ஆனால், தனக்கு இல்லாவிட்டாலும்  தமிழர்கள் மீது கொண்ட வெறுப்பு இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கண்ணை மறைத்துவிடுகின்றது. 

இங்கே, தமிழக உறவுகள், தலைமைகள் டில்லியில் இன்றும் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளனர். அங்கே தான் திறப்பு உள்ளது, ஒப்பீட்டளவில் இலகுவான திறப்பு. 

On 11/13/2019 at 12:17 PM, ampanai said:

கிந்தியா, இளநகை தீவை மீண்டும் இரண்டாக இன்று பிரித்தால் மட்டுமே சீனாவிடம் இருந்து தம்மை பாதுகாக்கலாம். 

இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுகிறது. இலங்கை அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளில் கையெழுத்து போட்டால் பின் அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்.

இலங்கையை இரண்டாக பிரிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ இல்லை.

Edited by Lara

On 11/11/2019 at 3:51 PM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

இலங்கை எங்க உதவி கிடைக்குதோ அங்க நிக்கும்.

ஆனா சம்பந்தன், சுமந்திரன் தமிழரசுக்கட்சி யார் தமிழரை கொல்லினமோ அவங்களிட்டை இருந்து ஏதாவது கிடைச்சா அவர்கள் பின்னாடியே நிப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.