Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை கோட்டாபய பெற்று தருவார்”: சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்

மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்நாட்டில் இனப் பிரச்சினை ஒன்றிருப்பதை தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் தமிழ் மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் இன்னமும் மறக்கவில்லை என்பதையும் அவர்கள் பாதுகாப்பான ஒரு ஜனநாயக சூழலை விரும்புகின்றார்கள் என்பதையும் வாக்களிப்புப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்று எடுத்துக் காட்டியிருக்கும் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் நாட்டில் உள்ள எல்லா இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம்பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும்.

ஒரு தரப்பாரின் வாக்குகளால் பதவி கிடைத்தாலும் ஜனாதிபதிப் பதவிப் பொறுப்பு என்பது நாட்டின் சகல இன மக்களையும் அவர்களின் பிரச்சினைகள், பொறுப்புக்கள், நலன்களையும் தம்மால் கொண்டுள்ளது என்பதை நாம் மறத்தல் ஆகாது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந்நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50451791

"அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்." 

 

 

  • தொடங்கியவர்

பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவார் -புதிய ஜனாதிபதிக்கு வடக்கின் முன்னாள் முதலமைச்சர் வாழ்த்து

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய இராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந் நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந் நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதை தெட்டத் தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் தமிழ் மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் இன்னமும் மறக்கவில்லை என்பதையும் அவர்கள் பாதுகாப்பான ஒரு ஜனநாயக சூழலை விரும்புகின்றார்கள் என்பதையும் வாக்களிப்புப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்று எடுத்துக் காட்டியிருக்கும் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவுத் செய்யப்பட்டுள்ள கௌரவ நந்தசேன கோட்டாபய இராஜபக்ச அவர்கள் நாட்டில் உள்ள எல்லா இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம்பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும். ஒரு தரப்பாரின் வாக்குகளால் பதவி கிடைத்தாலும் ஜனாதிபதிப் பதவிப் பொறுப்பு என்பது நாட்டின் சகல இன மக்களையும் அவர்களின் பிரச்சினைகள், பொறுப்புக்கள், நலன்களையும் தம்மால் கொண்டுள்ளது என்பதை நாம் மறத்தல் ஆகாது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமுகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/131437

விக்கியும் மனோவும் வாழ்த்தி உள்ளார்கள். மற்றைய தமிழ் தலைவர்கள், கோத்தாவை எதிர்த்தவர்கள் கூட வாழ்த்தியாக வேண்டும். வாழ்த்தினால் தானே அரசியல்.  சம்பந்தரும் வாழ்த்துவார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாயவின் மறைமுக ஆதரவாளன்தான், இந்த விக்கி 

விக்கியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்!

சம்மந்தன், சுமந்திரன் எப்போது வாய் திறக்க போகிறார்கள்?  அல்லது இரகசியமாக முடிந்ததோ தெரியவில்லை. இல்லையென்றால் அவர்கள் பிழைப்பு என்னாகிறது?

 

625.0.560.320.160.600.053.800.700.160.90

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா மகிந்த முன்னிலையில்.. பதவியேற்ற போதும்.. அந்தந்த தகுதி நிலைக்குரியவர்களுக்கு சட்டத்துக்கு அமைய மதிப்பளித்தே வந்திருக்கிறார்.

இப்போதும் அதே. 

அதற்காக கோத்தாவின் கடந்த காலச் செயற்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்துபவராக இல்லை என்றே தெரிகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

விக்கி ஐயா மகிந்த முன்னிலையில்.. பதவியேற்ற போதும்.. அந்தந்த தகுதி நிலைக்குரியவர்களுக்கு சட்டத்துக்கு அமைய மதிப்பளித்தே வந்திருக்கிறார்.

இப்போதும் அதே. 

அதற்காக கோத்தாவின் கடந்த காலச் செயற்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்துபவராக இல்லை என்றே தெரிகிறது. 

தமிழன் அதுவும் இலங்கைத் தமிழன் இன்று யாரையும் நம்புவனாக இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு அவன் ஆரியனாலும், பிராமணனாலும், இந்தியனாலும், சிங்களவனாலும் மட்டுமல்ல, தனது சொந்தத் தமிழ் அரசியல் தலைவர்களாலும்.... நிறையவே அடிவாங்கிக் களைத்துவிட்டான்.   

Edited by Paanch

10 hours ago, nedukkalapoovan said:

அதற்காக கோத்தாவின் கடந்த காலச் செயற்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்துபவராக இல்லை என்றே தெரிகிறது. 

இதில் உண்மைகள் இருப்பினும், விக்னேஸ்வரன் மாணவர் முயற்சிகளின் போது செய்த நம்பிக்கைத் துரோகத்திலிருந்து வெளிவருவது சுலபமானது அல்ல.

மேலே பாஞ் சொன்னது போல விக்னேஸ்வரனும் தன்னை நம்பிய தமிழ் மக்களுக்கு செய்யவேண்டியதை செய்யாமல் ஏமாற்றங்களை வழங்கிய ஒருவராக இருக்கிறார்.

அருந்தவபாலன் என்ற சுயநலவாதியை / சந்தர்ப்பவாதியைக் கவனமாக கையாலாமையாலே விக்னேஸ்வரன் ஒரு நம்பிக்கைத் துரோகியாக மாறியுள்ளார் / மாற்றப்பட்டுள்ளார் என்று விசயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

விக்னேஸ்வரன் தனது கட்சியை மேலும் பலப்படுத்த விருப்பினால் தான் தான்தோன்றித்தனமாக நடப்பதையும், அருந்தவபாலன், சித்பரன் போன்ற சிலரின் ஆலோசனைகளை மட்டும் கேட்பதையும் நிறுத்தி, கட்சியின் மத்திய குழுவின் ஆலோசனைகளையும் பெற்று ஒரு ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலரும் கூறுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.