Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதாவுல்லா மீது குடிநீரை வீசிய மனோ கணேசன்! காரணம் என்ன?

Featured Replies

On 11/25/2019 at 8:51 PM, குமாரசாமி said:

யாழ்கள உறுப்பினர்களில் ஓரிருவர் இங்கே திரிகள் திறந்து அல்லோலகல்லோலப்பட்டிருப்பர். மனோகணேசனுக்கு கடிதம் எழுதுவர்.முடிந்தால் தந்தியும் அடிப்பர்.தங்கள் பழைய புராதன முஸ்லீம் சகோரத்துவ வரலாறுகளை ரீல் ரீலாக எடுத்து விடுவர் :cool:

அந்தப் பக்கமும் நான் அல்லோலகல்லோலப்படுறனான் என்டு ரீல் ரீலா விடுறவர் இவ்வளவு நாள் போயும் இன்னமும் வலு அமைதியா இருக்கிறார்! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

அந்தப் பக்கமும் நான் அல்லோலகல்லோலப்படுறனான் என்டு ரீல் ரீலா விடுறவர் இவ்வளவு நாள் போயும் இன்னமும் வலு அமைதியா இருக்கிறார்! 🤣

சும்மாவே... கடிதம் எழுதுகிறவர்,
இவ்வளவு அமைதியாக,  பதுங்கி இருப்பதை பார்க்க...
பெரிய பாய்ச்சலுக்கு, தயாராகி கொண்டு இருக்கிறார் போலுள்ளது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அத்தாஉல்லாஹ் அஜீரணங்கள்

78298144_2626840387402277_4827203641934872576_n.jpg?_nc_cat=104&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=j0bPUedSW2MAQlms-K_lLVdOryM9dBLDagOyHDwIfcMXdgsxAYklVM6zA&_nc_ht=scontent-lga3-1.xx&oh=ecca4cff02eefed8490deb4f62243213&oe=5E48DC30

 

 

எப்படா கேப்பு கிடைக்கும் எப்படா அதில் புகுந்து கடா வெட்டலாம் என்று காத்துக் கொண்டிருந்த வாய் அவல் வெயிட்டிங் என்டி அத்தாஉல்லாஹ் புண்ணியவான்களுக்கு கடந்த அ”சத்தி” ய மின்னல் நிகழ்ச்சியில் (2019-11-24) தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அத்தாஉல்லா அவர்கள் மலையக மக்களை இழிவுபடுத்த வேண்டும் அவர்களை தரக்குறைவாக பேச வேண்டுமென்ற எந்த விதமான நோக்கிலுமல்லாமல் அந்த மக்கள் சார்பாக பேசிக் கொண்டிருந்த போது திடீரென உணர்ச்சிவசப்பட்டு உச்சரித்த “தோட்டக்காட்டான்” என்ற ஒரேயொரு சொல் தந்தூரி சிக்கன் பிரணியாணி போட்டு தொண்டை வரை மூக்கு முட்ட வைத்திருக்கின்றது. 
 
நிறையப் பேருக்கு இங்கு நேற்றிலிருந்து டைஜீனாலும் சரிப்படுத்த முடியாத அஜீரண சமியாக் குணம் என்று நினைக்கின்றேன்.
 
முக நூல் வாசிகள் முடிந்தளவுக்கு அம்பானி குழுமத்தின் பங்குச் சந்தை வீழ்ச்சி அதானி குழுமத்தின் பங்கச் சந்தை விழ்ச்சி டாட்டா பிர்லா பங்கச் சந்தை விழ்ச்சி ஏன் எப்படி என்று காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு அத்தாவின் தோட்டக்காட்டான் மேட்டரை துருவித்துருவி தோண்டியெடுத்து களைத்து சலித்து அப்பாடா என்று படுக்கையில் அஞ்சால் அலுப்பு மருந்து பூசிக் கொண்டு இப்போதைக்கு கபால மோட்சம் அடைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில் எல்லாம் முடிந்து காலியாகிப் போன கல்யாண மண்டபத்தில் அந்த தோட்டக்காடு சப்ஜெக்ட் வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றது. 
 
மின்னல் நிகழ்ச்சியை முழுசாக பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும் அத்தாஉல்லா “தோட்டக்காட்டான்” என்ற சொல்லை பயன்படுத்திய இடம் பயன்படுத்திய கனம் என்பனவெல்லாம். அவர் உணர்ச்சிவசப்பட்டு உச்சரித்த அந்த ஒற்றை சொல்லை அவர் பொது வெளியில் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும். 
 
ஆனால் அவர் மலையக உழைப்பாள மக்களை மாசுபடுத்த வெண்டுமென்ற நோக்கில் வேண்டுமென்றோ திட்டமிட்டோ அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்பது நிகழ்ச்சியை முழுசாக பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.. கிழக்கில் அரசியல் செய்தாலும் தொடர்ந்தும் மிக நீண்ட காலமாக மலையக மக்கள் பற்றி கரிசனை செலுத்தி வருகின்றவர் அவர். அதற்கு ஏகப்பட்ட ஆதாரங்களிருக்கின்றன. 
 
மலையக மக்களின் நலன்சார்பாக பேசிக் கொண்டிருந்தவர் எப்படி உணர்ச்சிவசப்பட்டு அந்த சொல்லை உச்சரித்தார் என்பதன் பின்புலத்தை பார்க்கின்ற போது அப்படியொரு நிலைக்கு அவர் அந்த இடத்தில் தள்ளப்பட்டிருந்தார். 
 
அத்தாஉல்லாவை தொடர்ந்து பதிலளிக்க விடாமல் காண்டீபன் என்ற சத்தி டீவி கண்றாவியும், அதே போல மனோ கணேசனும் Cullusion in Concert ல் தொடர்ந்து அவரை குறுக்கறுத்துக் கொண்டிருந்தார்கள். அர்களிருவரும் சேர்ந்து கொண்டு நடாத்திய கூத்துப்பட்டறையின் பின்னால் ஏதோ ஒரு மறை முக நிகழ்ச்சி நிரல் ஒளிந்து கொண்டிருந்ததனை நாம் காணலாம்.
 
மலையக மக்கள் மலையக மக்கள் என்று தொடர்ந்து மரியாதையோடு பேசிக் கொண்டிருந்தவர் “மலையக மக்களுக்கு இது வரை எதை உருப்படியாய் செய்திருக்கின்றீர்கள்” என்ற கேள்வியோடு மனோ கணேஷன் சூடான சுள்ளளானாக “பிச்சைக்காரனின் புண் போ……………….” என்று கோபத்தோடு அத்தா “உங்களுக்கு தோட்டக்காட்டான்….” என்று உணர்ச்சிவசபப்டுகின்றார். அதன் பின்னர் பேசி எதையோ அவர் அதன் பின்புலத்தில் தொடர்ந்து விளக்க வர அவரை மனோவும் காண்டீபனும் திட்டமிட்டு செயற்படுகின்றார்கள்.
 
அத்தாஉல்லா அவர்களின் அந்த சொல்லாடல் வெகு கேசுவலாகவே அங்கு வந்திருந்தது. அதில் மலையக மக்களை மட்டந்தட்டுகின்ற மனோ நிலையோ அல்லது அவர்களை அவமரியாதை செய்கின்ற உள்நோகக்மே எதுவே இருக்கவில்லை என்பதே பேருண்மை. ஆனால் சற்று உணர்ச்சிவசப்படுகின்ற போது சில நேரம் நம்மை அறியாமல் நமக்கு வழக்கத்தில் பேச்சு வாக்கில் பழக்கப்பட்டுப்போன பிராந்திய Slang வந்து விடும். அதுதான் அத்தாஉல்லாவுக்கும் நடந்தது. 
 
அந்த இடத்தை மனோ கணேஷன் மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அதள பாதாளத்தில் சரிந்து கிடக்கின்ற தனது அரசியலை மறுபடி கட்டி நிமிர்த்துவதற்கான ஒரு கேடயமாக அந்தச் சொல்லை அவர் தூக்கிப் பிடித்து பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் நடந்ததெல்லாம் வாந்தி வள்ளல் சக்தி எடிட் செய்து எறிய வேண்டிய சமாச்சாரத்தை பெரிதாக்கி ஒரு வனத்தைப் பற்ற வைத்து பற்ற வைத்த வனத்தில் நெட்டிச மகா ஜனங்கள் வைரல் வாஸ்து பார்த்த என்று ஜகஜ்ஜால ரகளை. 
 
இந்த இடத்தில் சமூக அக்கறை இக்கறை உடுப்புக் கறை என்ற பெயரில் அத்தாஉல்லா என்ற தனி நபர் மீதும் அவரது அரசியல் மீதும் அவரது நீட்சிமிக்க அரசியல் பயணத்தின் மீதும் சேறு பூசுகின்ற சேனையை வழி நடாத்தியவர்களில் பெரும்பாலானோர் மாற்றுக் கட்சி மைந்தர்கள்தான். இந்த சமாச்சாரத்தில் ஒரு சில நடுச்சென்டர் நியூட்டல்கள் தவிர மற்றெல்லா பெரும்பாலானோர் அதனை வைத்துக் கொண்டு அத்தாஉல்லாஹ் என்கின்ற தனி நபரை மிக மோசமானவராக சித்தரிப்பதற்கு (character assassination) எடுத்த பகீரதப்பிரயத்தனங்களைப்பார்த்த போது அட அத்தா என்ற தனி அரசியல் மீது இத்தனை நாளாய் எத்தனை காண்டுகள் தெருத்தெருவாய் அலைந்து திரிந்திருக்கின்றன என்பதனை கண்டு கொண்டேன்.
 
அத்தாஉல்லா பயன்படுத்திய அந்த ஒற்றைச் சொல் ஒரு உன்னதமான சமூகத்தை பழித்திருக்கின்றது…..மிக மோசமாக விளித்திருக்கின்றது என்ற சமூக அக்கறைக்கப்பால் அதனை வைத்துக் கொண்டு அரசியல் செய்தவர்களும் அவரை முழுசாய் சேறு பூசப்பார்த்தவர்களுதான் அதிகம். சேறடிக்க தெருவில் இறங்கியவர்களில் மெஜாரிட்டி நம்ம சோனகப் பசங்கதான் என்பதனை புள்ளி விபரத்தோடு சொல்லி விடலாம். பெரும்பாலானவர்கள் விமர்சனம் என்ற பெயரில் தமது காழ்ப்புணர்ச்சியையும் அவர் மீதான தனிப்பட்ட கசப்பையுமே கொட்டித் தீர்த்திருத்திருந்தார்கள் என்பதனை அவற்றை வாசிக்கின்ற முன் பள்ளிக் குழந்தைகளும் புரிந்து கொள்ளும். நேர்மையான விமர்சனங்களை ஆங்காங்கே பூதக் கண்ணாடி வைத்து தேடி பொறுக்கியெடுக்க வேண்டியிருந்தது.
 
நம்மிடையே எத்தனை நாட்டாமைகள்…எவ்வளவு ஆற்றாமைகள். 
 
எண்ணங்களே வாழ்வு…..
 
பெருச்சாளிகள் கத்தி கடலின் பேரலைகள் ஒரு போதும் அடங்கிப் போவதில்லை
 
கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-27
On 11/25/2019 at 3:45 PM, colomban said:
AHMY MBM-UK
LLB(Hons),LLM,MPhil
Solicitor @ Asian Political Researcher 

சஹாரான் மனநிலையிலுள்ள இன்னொரு தீவிரவாதியா இவர் இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

5 hours ago, colomban said:

கிண்ணியா சபருள்ளாஹ் 

சஹாரான் மனநிலையிலுள்ள இன்னொரு தீவிரவாதியா இவர் இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா முட்டு கொடுக்கிறாங்கள்!

இவன் அதாவுல்லா ஒரு படிப்பறிவில்லாதவன். ஒரு இனத்தை எவாறு விளிக்கவேண்டுமென்று தெரியவில்லை. இவன் எல்லாம் அரசியல் செய்யாமல் வியாபாரம் செய்வது மேல். 

இதுக்குள்ள சபருல்லா என்ற சொலிசிட்டரும் (?) புகுந்து விளையாட பார்க்கிறார். இவர்களெல்லாம் இஸ்லாமிய இனவாதிகள் , அம்பாறை தமிழர்களின் ஊர்களை கொள்ளையடித்தவர்கள். புதிய ஜனாதிபதி இவர்களை எல்லாம் அள்ளிகொண்டுபோய் சிறையில் விரைவாக அடைப்பர் எண்டு எதிர்பார்க்கலாம். புதியவிசாரணைக்குழுவில் இந்த ஸஹ்ரான் கூடடத்தையும் விசாரிக்க வேண்டும். 

19 hours ago, ஏராளன் said:

என்னமா முட்டு கொடுக்கிறாங்கள்!

இன்னும் சரியான பாடம் படிக்கேலை!
கிடைக்காமலா போய்டும்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.