Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

Featured Replies

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு  மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக  என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது  வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/70073

Official Statement by the Embassy of Switzerland

Position, 29.11.2019

On 25 November 2019, a serious security incident involving a local employee of the Embassy of Switzerland in Colombo occurred. The employee was detained against their will in the street, forced to get into a car, seriously threatened at length by unidentified men and forced in order to disclose embassy-related information.

Several false pieces of information are circulating in the reporting of this incident. The Swiss Embassy in Colombo is issuing the following clarifications:

  • The Swiss Embassy immediately lodged a formal complaint and is fully cooperating with the Sri Lanka authorities in order to support police investigation and initiate an inquiry over the case, while duly considering the health condition of the victim and their relatives.
  • Due to a deteriorating health condition, the victim is currently not in a state to testify.
  • It has been alleged that the Swiss government rejected a request for the extradition of an employee of the Sri Lankan Criminal Investigation Department (CID) and his family. No such request has been submitted.

https://www.eda.admin.ch/countries/sri-lanka/en/home/news/news.html/content/countries/sri-lanka/en/meta/news/2019/november/statement

EKjG8PMXYAElL7R?format=png&name=large

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு  மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக  என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது  வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழனை, மிரட்டியது  மாதிரி....
வெளிநாட்டு அரச சேவையில் உள்ளவரை, மிரட்டியதை...
சுவிற்சலாந்து அரசாங்கம்... சும்மா பார்த்துக் கொண்டு இருக்காது.

இதன் விளைவுகள்... மிகக்  கடுமையாக இருக்கும் என நினைக்கின்றேன். 

இந்தச்  சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பு.... சாதுரியமாக,
சுவிஸ் அரசாங்கத்துக்கு, சிங்களவனை பற்றி... போட்டுக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இந்த பிரச்சனையை தமிழ் தலைவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று இலவு காத்த கிளியாக காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த பிரச்சனையை தமிழ் தலைவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று இலவு காத்த கிளியாக காத்திருக்கிறோம்.

Ähnliches Foto

Bildergebnis für இலவு காத்த கிளி

Image may contain: outdoor

Ähnliches Foto

ஈழப் பிரியன்.... படம் பார்த்து, கதை சொல்லவும்.... :grin:

இலவ மரம் (பஞ்சு மரம்)  காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். 
பழம் பழுக்கும்,  உண்ணலாம்... எனக் காத்திருந்தால்,  கிளி... ஏமாந்துபோகும். 😮

:120_speaking_head: இவங்களை... இன்னுமா...?  நீங்கள், நம்புறீங்கள்?  😁

  • கருத்துக்கள உறவுகள்

உப்ப சிங்களவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் தான் பிரச்சனை ..தமிழர்கள் வாயை மூ டிட்டு இருப்பது நல்லம் ...சுவீஸ்சுக்கு ஓடிப் போனவர் மூலம்  போர்க் குற்ற விசாரணை ஏதாவது வருமோ என்று பார்த்திட்டு இருக்க வேண்டியது தான்.
ஓடிப் போனவர் சொல்லித் தான் சர்வதேச நாடுகளுக்கு கோத்தாவின் போர்க் குற்றங்கள் தெரிய வேண்டியதில்லை...எல்லா ஆதாரத்தையும் வேண்டு வைத்திட்டு தங்களுக்கு எப்ப கோத்தா எதிரியாகிறாரோ அப்ப அவர் மேல் விசாரணை ஆரம்பமாகும்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.