Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நாங்கள்தான் இந்து, கத்தோலிக்கன் என்று பிடுங்குப் படுவது. அவர்கள் நாமெல்லோரும் தமிழர் என்பதில் தெளிவாககவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

நாங்கள்தான் இந்து, கத்தோலிக்கன் என்று பிடுங்குப் படுவது. அவர்கள் நாமெல்லோரும் தமிழர் என்பதில் தெளிவாககவே இருக்கிறார்கள்.

இங்கே குத்தி முறிவோரே, 

உங்கள் முகங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் பின்னும் பிடுங்குப்படுவீர்களானால் உங்களைப் பார்த்து கா........... துப்.........வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Kapithan said:

இங்கே குத்தி முறிவோரே, 

உங்கள் முகங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் பின்னும் பிடுங்குப்படுவீர்களானால் உங்களைப் பார்த்து கா........... துப்.........வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.

நன்றி.

பிரதர் கோஷானிற்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.

நமக்குள் ஏற்பட்டது, வெறும் கருத்துப் பரிமாற்றமே!

வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மாங்குயில் said:

எனது பின்னூட்டம் மத வெறுப்பை உமிழ்வோருக்கானது.  தமிழர் என்கின்ற ஒரு நோக்கில் ஒன்றுபடுவோர் இதனை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

எனது பின்னூட்டம் மத வெறுப்பை உமிழ்வோருக்கானது.  தமிழர் என்கின்ற ஒரு நோக்கில் ஒன்றுபடுவோர் இதனை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

எனது பின்னூட்டங்கள், மத  வெறுப்பை உமிழும் நாத்திகர்களுக்கானது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மாங்குயில் said:

அதே நேரத்தில், தன் சிந்தனையை, பகுத்தறிவைப் பாவித்து, தன் சொந்த  மதத்தை விட்டு இன்னொன்றை நாடிச் செல்வது தப்பல்ல.

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ஆனால் தன் மதத்தை முழுமையாக படித்து அறிந்த பின்.,.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ஆனால் தன் மதத்தை முழுமையாக படித்து அறிந்த பின்.,.....

ஒருவர் தன் மதத்தை முழுமையாக படித்து ஆய்வு செய்யும்போது, சரி, பிழை  காணும் நிலைக்கு வருகிறார்.

தன் மதம் பிழை என்று கண்டு  கொண்டாலும், பலர் அந்த மதத்தில் தொடர்வதற்குத்தான் விரும்புவர்.

வெகு சில  மக்கள்தான், பிற மதங்களையும் முழுமையாகப் படித்து, தான் விரும்பும் பிற மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம்  அல்லது புத்த மதங்களைத் தழுவுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ஆனால் தன் மதத்தை முழுமையாக படித்து அறிந்த பின்.,.....

அண்ணை,

நாங்கள் இங்கே பல விடயங்களை போட்டு குழப்பி, ஒரே சட்டியில் போட்டு சாம்பாரக்குகின்றோம்.

1. மதங்களை நம்பாதோர் எல்லாரும் கடவுள் மறுப்பாளர் இல்லை. கடவுள் உண்டா இல்லையா என என்னை கேட்டால் என் பதில் - தெரியாது என்பதே. ஆனால் மதங்கள் எல்லாம் மனிதர் உருவாக்கியவையே என்பதில் எனக்கு அசராத நம்பிக்கை உளது. தவிரவும் நாம் சமூக வளர்சி அடையாத காலங்களில் மதம் சமூக ஒழுங்கை பேண அமைக்கப்பட்ட ஓர் சாதனமாயிருப்பினும், கடந்த 500 வருடங்களை எடுத்துப் பார்த்தால், மதங்களால் விளைந்த நன்மையை விட தீமையே அதிகம் என்பது என் கருத்து. எனவே நிலவுடமை பிரபுதுவம் போல, அடிமைகள் முறையை போல, மதங்களும் அற்று போனால் நல்லது என்பதே என் நிலைப்பாடு. அது சாத்தியமா இல்லையா என்பது வேறு விடயம். 

2. மதம்மாறுவதை, மாற்றுவதை நான் முற்றாக வெறுக்கிறேன். என்னை பொறுத்தவரை கொக்காகோலா உடம்புக்கு கூடாது ஆகவே நாளை முதல் நான் பெப்சி கோலாதான் குடிப்பேன் என்பவர்களுக்கும் மதம் மாறுபவர்களுக்கும் ஒரு வித்யாசமுமில்லை. ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

3. நான் பல மதம் மாறியோருடன் கதைதுள்ளேன். இதுவரை ஒருவர்தானும் முன்னைய மதத்திலும் புதிய மதம் ஏன் முன்னேறகரமானது  என எனக்கு தர்கரீதியான ஒரு விளக்கத்தை தரவில்லை. பொருளாதார அல்லது மனச்சாந்தி யே காரணங்கள் ஆகிறன. மிகச் சிலர் - புதிய மதம் அன்பை போதிக்கிறது என்பார்கள். ஆனால் பழைய மதத்திலும் அதே போதனை உளதே என்று சுட்டிக்காட்டினால் பதில் இருக்காது. இன்னும் சிலர் கைவிட்ட மதம் வன்முறையானது, கட்டுப்பாடு மிகுந்தது என்பர். அதே வன்முறை, கட்டுப்பாடு புதிய மததின் பெயராலும் நடந்தது என்பதை சுட்டிக் காட்டினாலும் பதில் இல்லை. எல்லா மதங்களையும் முடிந்தளவு ஆராய்ந்த எனக்கு, அவற்றுக்கிடையான பல ஒற்றுமைகளை காண முடிகிறது. ஆதலினால் ஒன்றை விட இன்னொன்று சிறப்பாக எனக்குத்தெரிவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

****மதம்மாறுவதை, மாற்றுவதை நான் முற்றாக வெறுக்கிறேன்*****
 
நீங்கள் வெறுப்பது, நீங்கள் அனுமதியளிக்கும் ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் செயல் அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

எனது பின்னூட்டங்கள், மத  வெறுப்பை உமிழும் நாத்திகர்களுக்கானது.

நான் நேராகவோ  மறைமுகமாகவோ உங்களைச் சுட்டவில்லை. பொதுவாகவே எழுதினேன். பொருத்தமானவர்கள் மட்டும் கண்ணாடியை பார்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

4. இதில் இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டும். மதம் என்பது வேறொன்றுமல்ல.

அரசியல்+வியாபாரம்= நிறுவன மயப்பட்ட மதங்கள்.

இங்கே ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு brand. குருக்கள் அவற்றின் sales reps. 

மேலே போராட்ட காலத்தில் தமிழர்க்கு உறு துணையாக நின்றவர்கள் பாதிரிமார்கள் என்ற கருத்து வைக்கப்பட்டது. இது 100% உண்மை. சிங்கராயர் முதல், கிளிபாதர் வரை.

ஆனால் இதே அளவு உக்கிரத்துடன் சிங்கள கத்தோலிக்க பாதிரிகளும் அவர்கள் பக்கத்துக்கு உதவினார்கள்.

பிலிபன்ஸ் வெரித்தாஸ் வானொலி - அதன் தமிழ் ஒளிபரப்பு முழுக்க முழுக்க புலியாதரவாய் இருக்கும். சிங்கள ஒளிபரப்பு முழுக்க முழுக்க அரச ஆதரவாய் இருக்கும்.

இதுதான் நிறுவன மயப்பட்ட மதங்களின் அரசியல்.

கத்தோலிக்க திருச்சபை ஒரு உதாரணம்தான். எமது பகுதிகளில் கோவில்களை அழித்த போதும், பெளத்தம் இந்து சமயத்தின் ஒரு அங்கமே என கொண்டாடிய இந்து அமைப்புகள் பல இந்தியாவில் உண்டு.

இன்றைக்கும் இலங்கை தமிழ் இந்து அகதிகளுக்கு மட்டும் ஏன் குடியுரிமை மறுப்பு? ஏனென்றால் அவர்கள் 2ம் தர இந்துக்கள்.

ஏன் ஒரு வெள்ளை தோல் அற்றவர் இன்னும் பாப்பரசராகவில்லை?

ஏன் ஒரு கரைநாட்டு சிங்களவர் மல்வத்து பீடாதிபதியாக முடியாது ?

எல்லாம், அதிகாரம், குழுமனநிலை, அரசியல், பணம். 

இப்படி ஊதிப் பெருத்த ஒரு கொள்ளை அமைப்புக்குக்கு எதிராகவே யேசு எனும் ஏழை யூதன் கிளர்தெழுந்தான்.

ஆனால் முடிவில் அந்த ஏழை யூதனின் பெயரை பாவித்தே, இன்னுமொரு உலகளாவிய சாம்ராஜ்யத்தை நிறுவிக் கொண்டனர்.

இதுதான் முரண்நகை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மாங்குயில் said:

****மதம்மாறுவதை, மாற்றுவதை நான் முற்றாக வெறுக்கிறேன்*****
 
நீங்கள் வெறுப்பது, நீங்கள் அனுமதியளிக்கும் ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் செயல் அல்லவா!

உங்கள் கேள்விக்கு அதே பந்தியில் பதிலுமுண்டு.

ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

நான் வெறுப்பது என் உரிமை. அவர்களுக்கு எப்படி மதம் மாற, மாற்ற உரிமை உள்ளதோ அதே போல் அதை வெறுக்க, தேவைபட்டால் என் வெறுப்பை ஜனநாயக ரீதியில் வெளிபடுத்த எனக்கும் உரிமையுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

உங்கள் கேள்விக்கு அதே பந்தியில் பதிலுமுண்டு.

ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

நான் வெறுப்பது என் உரிமை. அவர்களுக்கு எப்படி மதம் மாற, மாற்ற உரிமை உள்ளதோ அதே போல் அதை வெறுக்க, தேவைபட்டால் என் வெறுப்பை ஜனநாயக ரீதியில் வெளிபடுத்த எனக்கும் உரிமையுண்டு.

மதம் மாறுவதை முற்றாக வெறுக்கும் ஒருவர்,  எப்படி ஒருவர் மதம்  மாற, மாற்ற ஜனநாயக ரீதியில் அனுமதியளிப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மாங்குயில் said:

மதம் மாறுவதை முற்றாக வெறுக்கும் ஒருவர்,  எப்படி ஒருவர் மதம்  மாற, மாற்ற ஜனநாயக ரீதியில் அனுமதியளிப்பார்?

அவர் தன் விருப்பபு/வெறுப்பை மற்றயோர் மீது திணிக்காதவராக இருப்பாராயின் இது சாத்தியம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அவர் தன் விருப்பத்தை மற்றயோர் மீது திணிக்காதவராக இருப்பாராயின் இது சாத்தியம். 

விருப்பு, திணிப்பு அல்ல இங்கு பேசுபொருள்.

நீங்கள் முற்றாக வெறுக்கும் மதம் மாறல், மாற்றல், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது.

ஒருவரின் மதம் மாறல், மாற்றல் என்பது,  ஜனநாயக உரிமை.

அதை முற்றாக வெறுக்கும் உங்கள்  மனோபாவம், தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

ஒரு பிக்கு ஒரு தமிழனை, சிறுபான்மை மதத்தை பின்பற்றுபவரை அடிக்கும் மற்றும் அதனோடிணைந்த சம்பவங்கள் இரண்டு விடயங்களை எங்களுக்கு சொல்லுகின்றது.

சட்டம், அதிகாரம் இரண்டையும் பிக்கு தனது விருப்பம் போல் பயன்படுத்துகிறார்.

அவ்வாறு பயன்படுத்துவதற்கான துணிவை அவருக்கு வழங்கியது எது ?

22 hours ago, மாங்குயில் said:

TRINITY  என்பது, பிதா, மகன், பரிசுத்த ஆவி மூன்றையும் குறிக்கிறது.

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்கு உண்மையான காரணம் விளக்கக்குறைவு.

  1. ஒற்றுமை இல்லாமைக்கு காரணமும் விளக்கக்குறைவு. 
  2. எந்த ஒரு நாட்டின் வெளிப்படையான ஆதரவில்லாததற்கு காரணமும் விளக்கக்குறைவு.
  3. சாத்தியமில்லாத தீர்வுதிட்டங்களை தேடிய முயற்சிகளுக்கு காரணமும் விளக்கக்குறைவு.
  4. மதச்சண்டைக்கு காரணமும் விளக்கக்குறைவு.

இந்த சந்தர்ப்பத்திலே, மதங்களைப் பற்றிய விளக்கத்தை பார்க்கப் போகிறோம். பிறந்த நாளில் இருந்து நாம் எல்லோருமே எமது பெற்றோராலும், உற்றார் உறவினராலும், ஆசிரியர்களாலும் அவர்களின் மதம் பற்றிய அறிவும், கலாச்சாரமும், நம்பிக்கையும் ஊட்டப்பட்டு, தாராளமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். எம்மில் மிகப்பலர் தத்தமது மதங்களின் அறிவு, கலாச்சாரம், நம்பிக்கைகளில்  உண்மையாகவே ஊறி இருப்பதால் மற்ற மதங்களை புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கடினம் வரலாற்றில் பதிவான பொதுவான போக்கு.

16ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் இலங்கையை கைப்பற்றிய பின் ஈழத்தமிழரை பல்வேறு வகைகளில் மதம் மாறுமாறு நிர்ப்பந்தித்தார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க யாழ்ப்பாணம் படுவேகமாக மதம் மாறி விட்டது. மதமாற்றம் 100 வீதம் என போர்த்துக்கேய ஆளுநர்கள் தமது ஆட்சியாளருக்கு அறிவித்தார்கள். எப்படி இது சாத்தியமானது? வேறு ஒன்றுமில்லை - போர்த்துக்கேயரின் விளக்கக்குறைவே இதை சாத்தியமாக்கியது. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்தில் ஒருவர் இணைந்தால் அந்த மத நம்பிக்கைகளின்படி அவர் தனது முன்னைய மதத்தை கைவிட்டு விட்டார் என்பதே அதன் அர்த்தம். ஆனால் யாழ்ப்பாணத்தவரோ சைவர்கள். சைவ சமயத்தை பொறுத்தளவில் இன்னுமொரு கடவுளை கும்பிடுவதனால் சைவர்கள் சைவத்தை கைவிட்டதாக அர்த்தமாகாது. ஆகவே சைவர்கள் அனைவருமே தமது புதிய ஆட்சியாளரின் கடவுள்களையும் சேர்த்துக்கொண்டு கிடைத்த நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

இப்போது புத்த சமயத்துக்கு வருவோம். கத்தோலிக்கருக்கு முப்பரிமாண கடவுள் (TRINITY) இருப்பது போல, பௌத்தர்களுக்கும் முப்பரிமாண கடவுள் (Triple Gem) இருக்கிறது. பௌத்தத்தில் கடவுள் இல்லை என்பது நடைமுறையில் இல்லாத தத்துவம். இந்த பௌத்த முப்பரிமாண கடவுளின் பாகங்கள்:

  1. புத்தர்
  2. தர்மம்
  3. சங்கம் ஆகும்.

புத்தரை நாம் அறிவோம். தர்மம் என்பது பாளி மொழியில் எழுதப்பட்டு பிரித் ஓதப்படும் மந்திரங்கள் ஆகும். இந்த சப்தத்திலும் இராகத்திலும் கடவுளின் பெரும் சக்தி உள்ளதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்த சக்தியை பெறுவதற்காக பிக்குகளை வீட்டுக்கு அழைத்து பௌத்தர்கள் பிரித் ஓதக்கேட்பார்கள். பிக்குகள் புத்தரின் எலும்புகளை கொண்ட பேழையை, பிரித் சக்தியை பெற இருப்பவரின் தலையில் தாங்கி வீட்டுக்கு கொண்டு வருவார்கள். இதுவே கடவுளின் ஒரு பாகமான புத்தர் ஆகும். பிரித் ஓதும் பிக்குகள் முன் பானையில் நீர் நிரப்பி ஒரு உருளை நூலின் முனைகளை நனைய விட்டிருப்பார்கள். பிரித் ஓதும் போது பிக்குகளும் சக்தியை பெற இருப்பவர்களும் நூலை பிடித்தபடி இருப்பர். ஓதி முடித்தபின், நூலை வெட்டி கைகளில் காப்புகளாக கட்டி விடுவர். இது கடவுளின் தர்மம் என்ற பாகமாகும்.

மூன்றாவது கடவுளின் பாகம் சங்கம். இந்த சங்கம் தான் பிக்குகள். ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

புத்தரின் எலும்புகளும், பிரித் ஓதலும், குடிப்பதற்கு பிரித் நீரும், கட்டுவதற்கு பிரித் நூலும் , பிக்குகளும் வீட்டுக்கு வராவிட்டால் பௌத்தர்கள் கடவுளின் ஆசியை பெற முடியாது.

மேலும், பேச்சுவழக்கில் இருந்த பௌத்த மந்திரங்களை எழுதி வைத்தவர்கள் (பாளியில்) சிங்களவர்களே. இலங்கையில் இருந்துதான் இந்த பாளி சுவடிகள், தாய்லாந்துக்கும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பிரதி செய்து கொண்டு செல்லப்பட்டன. பௌத்தம் இந்தியாவில் அழிக்கப்ட்டபோது அதை சிங்களவர்களே பாதுகாத்து உலகெங்கும் பரப்பினர். ஆகவே பிக்குகள் சிங்களவர்களுக்கு கடவுள்கள். பௌத்தம் இன்றும் உலகில் வாழ்வது சிங்கள பிக்குகளால்தான். இந்த கடவுள்களுக்கு கிறீஸ்தவம் போதிக்கும் போதகரை அறையாமல் வேறு என்ன செய்வார்கள்?

பிக்குவை கண்டால் குனிந்து கும்பிடுங்கள் - கடவுளின் தரிசனம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

image_9374aa11ef.jpg

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

நாங்கள் இங்கே பல விடயங்களை போட்டு குழப்பி, ஒரே சட்டியில் போட்டு சாம்பாரக்குகின்றோம்.

1. மதங்களை நம்பாதோர் எல்லாரும் கடவுள் மறுப்பாளர் இல்லை. கடவுள் உண்டா இல்லையா என என்னை கேட்டால் என் பதில் - தெரியாது என்பதே. ஆனால் மதங்கள் எல்லாம் மனிதர் உருவாக்கியவையே என்பதில் எனக்கு அசராத நம்பிக்கை உளது. தவிரவும் நாம் சமூக வளர்சி அடையாத காலங்களில் மதம் சமூக ஒழுங்கை பேண அமைக்கப்பட்ட ஓர் சாதனமாயிருப்பினும், கடந்த 500 வருடங்களை எடுத்துப் பார்த்தால், மதங்களால் விளைந்த நன்மையை விட தீமையே அதிகம் என்பது என் கருத்து. எனவே நிலவுடமை பிரபுதுவம் போல, அடிமைகள் முறையை போல, மதங்களும் அற்று போனால் நல்லது என்பதே என் நிலைப்பாடு. அது சாத்தியமா இல்லையா என்பது வேறு விடயம். 

2. மதம்மாறுவதை, மாற்றுவதை நான் முற்றாக வெறுக்கிறேன். என்னை பொறுத்தவரை கொக்காகோலா உடம்புக்கு கூடாது ஆகவே நாளை முதல் நான் பெப்சி கோலாதான் குடிப்பேன் என்பவர்களுக்கும் மதம் மாறுபவர்களுக்கும் ஒரு வித்யாசமுமில்லை. ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

3. நான் பல மதம் மாறியோருடன் கதைதுள்ளேன். இதுவரை ஒருவர்தானும் முன்னைய மதத்திலும் புதிய மதம் ஏன் முன்னேறகரமானது  என எனக்கு தர்கரீதியான ஒரு விளக்கத்தை தரவில்லை. பொருளாதார அல்லது மனச்சாந்தி யே காரணங்கள் ஆகிறன. மிகச் சிலர் - புதிய மதம் அன்பை போதிக்கிறது என்பார்கள். ஆனால் பழைய மதத்திலும் அதே போதனை உளதே என்று சுட்டிக்காட்டினால் பதில் இருக்காது. இன்னும் சிலர் கைவிட்ட மதம் வன்முறையானது, கட்டுப்பாடு மிகுந்தது என்பர். அதே வன்முறை, கட்டுப்பாடு புதிய மததின் பெயராலும் நடந்தது என்பதை சுட்டிக் காட்டினாலும் பதில் இல்லை. எல்லா மதங்களையும் முடிந்தளவு ஆராய்ந்த எனக்கு, அவற்றுக்கிடையான பல ஒற்றுமைகளை காண முடிகிறது. ஆதலினால் ஒன்றை விட இன்னொன்று சிறப்பாக எனக்குத்தெரிவதில்லை. 

மறுக்க எதுவும் இல்லை. 💯 வீதம் உடன்படுகிறேன். எனது நிலைப்பாடும் இதுவே.  நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, கற்பகதரு said:

இப்போது புத்த சமயத்துக்கு வருவோம். கத்தோலிக்கருக்கு முப்பரிமாண கடவுள் (TRINITY) இருப்பது போல, பௌத்தர்களுக்கும் முப்பரிமாண கடவுள் (Triple Gem) இருக்கிறது. பௌத்தத்தில் கடவுள் இல்லை என்பது நடைமுறையில் இல்லாத தத்துவம். இந்த பௌத்த முப்பரிமாண கடவுளின் பாகங்கள்:

  1. புத்தர்
  2. தர்மம்
  3. சங்கம் ஆகும்.

கடவுள் இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம் என்பதுதான், புத்த மதம்.

புத்தரின் சீடர்கள் ஒருமுறை, புத்தரிடம் கடவுளைப்பற்றி வினவ, அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாராம்.

இப்படி பாளி மொழியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், சிங்களவர்கள் புத்தரை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துதான், வணங்கி வழிபடுகிறார்கள்.

எந்தவொரு மனிதனையும் அளவுக்கு மீறிப் புகழ்ந்தால், அவன் இறந்தபின் கடவுளாக மாற்றுவார்கள், மனிதர்கள்.

இது நடைமுறை வரலாறு.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, மாங்குயில் said:

விருப்பு, திணிப்பு அல்ல இங்கு பேசுபொருள்.

நீங்கள் முற்றாக வெறுக்கும் மதம் மாறல், மாற்றல், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது.

ஒருவரின் மதம் மாறல், மாற்றல் என்பது,  ஜனநாயக உரிமை.

அதை முற்றாக வெறுக்கும் உங்கள்  மனோபாவம், தவறானது.

அப்படியே ஆகட்டும். திருத்திக் கொள்ள முனைகிறேன்.

அட்வைசுக்கு நன்றி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்கு உண்மையான காரணம் விளக்கக்குறைவு.

  1. ஒற்றுமை இல்லாமைக்கு காரணமும் விளக்கக்குறைவு. 
  2. எந்த ஒரு நாட்டின் வெளிப்படையான ஆதரவில்லாததற்கு காரணமும் விளக்கக்குறைவு.
  3. சாத்தியமில்லாத தீர்வுதிட்டங்களை தேடிய முயற்சிகளுக்கு காரணமும் விளக்கக்குறைவு.
  4. மதச்சண்டைக்கு காரணமும் விளக்கக்குறைவு.

இந்த சந்தர்ப்பத்திலே, மதங்களைப் பற்றிய விளக்கத்தை பார்க்கப் போகிறோம். பிறந்த நாளில் இருந்து நாம் எல்லோருமே எமது பெற்றோராலும், உற்றார் உறவினராலும், ஆசிரியர்களாலும் அவர்களின் மதம் பற்றிய அறிவும், கலாச்சாரமும், நம்பிக்கையும் ஊட்டப்பட்டு, தாராளமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். எம்மில் மிகப்பலர் தத்தமது மதங்களின் அறிவு, கலாச்சாரம், நம்பிக்கைகளில்  உண்மையாகவே ஊறி இருப்பதால் மற்ற மதங்களை புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கடினம் வரலாற்றில் பதிவான பொதுவான போக்கு.

16ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் இலங்கையை கைப்பற்றிய பின் ஈழத்தமிழரை பல்வேறு வகைகளில் மதம் மாறுமாறு நிர்ப்பந்தித்தார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க யாழ்ப்பாணம் படுவேகமாக மதம் மாறி விட்டது. மதமாற்றம் 100 வீதம் என போர்த்துக்கேய ஆளுநர்கள் தமது ஆட்சியாளருக்கு அறிவித்தார்கள். எப்படி இது சாத்தியமானது? வேறு ஒன்றுமில்லை - போர்த்துக்கேயரின் விளக்கக்குறைவே இதை சாத்தியமாக்கியது. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்தில் ஒருவர் இணைந்தால் அந்த மத நம்பிக்கைகளின்படி அவர் தனது முன்னைய மதத்தை கைவிட்டு விட்டார் என்பதே அதன் அர்த்தம். ஆனால் யாழ்ப்பாணத்தவரோ சைவர்கள். சைவ சமயத்தை பொறுத்தளவில் இன்னுமொரு கடவுளை கும்பிடுவதனால் சைவர்கள் சைவத்தை கைவிட்டதாக அர்த்தமாகாது. ஆகவே சைவர்கள் அனைவருமே தமது புதிய ஆட்சியாளரின் கடவுள்களையும் சேர்த்துக்கொண்டு கிடைத்த நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

இப்போது புத்த சமயத்துக்கு வருவோம். கத்தோலிக்கருக்கு முப்பரிமாண கடவுள் (TRINITY) இருப்பது போல, பௌத்தர்களுக்கும் முப்பரிமாண கடவுள் (Triple Gem) இருக்கிறது. பௌத்தத்தில் கடவுள் இல்லை என்பது நடைமுறையில் இல்லாத தத்துவம். இந்த பௌத்த முப்பரிமாண கடவுளின் பாகங்கள்:

  1. புத்தர்
  2. தர்மம்
  3. சங்கம் ஆகும்.

புத்தரை நாம் அறிவோம். தர்மம் என்பது பாளி மொழியில் எழுதப்பட்டு பிரித் ஓதப்படும் மந்திரங்கள் ஆகும். இந்த சப்தத்திலும் இராகத்திலும் கடவுளின் பெரும் சக்தி உள்ளதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்த சக்தியை பெறுவதற்காக பிக்குகளை வீட்டுக்கு அழைத்து பௌத்தர்கள் பிரித் ஓதக்கேட்பார்கள். பிக்குகள் புத்தரின் எலும்புகளை கொண்ட பேழையை, பிரித் சக்தியை பெற இருப்பவரின் தலையில் தாங்கி வீட்டுக்கு கொண்டு வருவார்கள். இதுவே கடவுளின் ஒரு பாகமான புத்தர் ஆகும். பிரித் ஓதும் பிக்குகள் முன் பானையில் நீர் நிரப்பி ஒரு உருளை நூலின் முனைகளை நனைய விட்டிருப்பார்கள். பிரித் ஓதும் போது பிக்குகளும் சக்தியை பெற இருப்பவர்களும் நூலை பிடித்தபடி இருப்பர். ஓதி முடித்தபின், நூலை வெட்டி கைகளில் காப்புகளாக கட்டி விடுவர். இது கடவுளின் தர்மம் என்ற பாகமாகும்.

மூன்றாவது கடவுளின் பாகம் சங்கம். இந்த சங்கம் தான் பிக்குகள். ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

புத்தரின் எலும்புகளும், பிரித் ஓதலும், குடிப்பதற்கு பிரித் நீரும், கட்டுவதற்கு பிரித் நூலும் , பிக்குகளும் வீட்டுக்கு வராவிட்டால் பௌத்தர்கள் கடவுளின் ஆசியை பெற முடியாது.

மேலும், பேச்சுவழக்கில் இருந்த பௌத்த மந்திரங்களை எழுதி வைத்தவர்கள் (பாளியில்) சிங்களவர்களே. இலங்கையில் இருந்துதான் இந்த பாளி சுவடிகள், தாய்லாந்துக்கும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பிரதி செய்து கொண்டு செல்லப்பட்டன. பௌத்தம் இந்தியாவில் அழிக்கப்ட்டபோது அதை சிங்களவர்களே பாதுகாத்து உலகெங்கும் பரப்பினர். ஆகவே பிக்குகள் சிங்களவர்களுக்கு கடவுள்கள். பௌத்தம் இன்றும் உலகில் வாழ்வது சிங்கள பிக்குகளால்தான். இந்த கடவுள்களுக்கு கிறீஸ்தவம் போதிக்கும் போதகரை அறையாமல் வேறு என்ன செய்வார்கள்?

பிக்குவை கண்டால் குனிந்து கும்பிடுங்கள் - கடவுளின் தரிசனம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஜூட்,

கற்பகதரு இல்லை ஐயா நீர் -போதி மரம். அவ்வளவு ஞானம் இந்த பின்னூட்டத்தில் 👏🏿.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

3. நான் பல மதம் மாறியோருடன் கதைதுள்ளேன். இதுவரை ஒருவர்தானும் முன்னைய மதத்திலும் புதிய மதம் ஏன் முன்னேறகரமானது  என எனக்கு தர்கரீதியான ஒரு விளக்கத்தை தரவில்லை. பொருளாதார அல்லது மனச்சாந்தி யே காரணங்கள் ஆகிறன. மிகச் சிலர் - புதிய மதம் அன்பை போதிக்கிறது என்பார்கள். ஆனால் பழைய மதத்திலும் அதே போதனை உளதே என்று சுட்டிக்காட்டினால் பதில் இருக்காது. இன்னும் சிலர் கைவிட்ட மதம் வன்முறையானது, கட்டுப்பாடு மிகுந்தது என்பர். அதே வன்முறை, கட்டுப்பாடு புதிய மததின் பெயராலும் நடந்தது என்பதை சுட்டிக் காட்டினாலும் பதில் இல்லை. எல்லா மதங்களையும் முடிந்தளவு ஆராய்ந்த எனக்கு, அவற்றுக்கிடையான பல ஒற்றுமைகளை காண முடிகிறது. ஆதலினால் ஒன்றை விட இன்னொன்று சிறப்பாக எனக்குத்தெரிவதில்லை. 

மதம் மாற என்ன காரணமாக அமைந்தது என்று தர்க்கரீதியிலான விளக்கத்தை எல்லாராலும் விளக்க முடியாது.

எல்லா மதங்களும் அன்பை, நன்னெறிகளை போதிக்கின்றன. அன்பு, நன்னெறிகள் பார்த்து, யாரும் மதம் மாறுவதில்லை.

பெரும்பாலும் கடவுள் கோட்பாடு, மரணத்தின் பின்னால் ஏற்படும் வாழ்வு போன்றவற்றினால்தான் பெரும்பாலானவர்கள்  ஈர்க்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஜூட்,

கற்பகதரு இல்லை ஐயா நீர் -போதி மரம். அவ்வளவு ஞானம் இந்த பின்னூட்டத்தில் 👏🏿.

"இந்த பின்னூட்டத்தில் "

இகழ்வு நெகிழ்ச்சியா ? அல்லது உயர்வு நவிர்ச்சியா ? 😜

Just now, Kapithan said:

"இந்த பின்னூட்டத்தில் "

இகழ்வு நெகிழ்ச்சியா ? அல்லது உயர்வு நவிர்ச்சியா ? 😜

பிழை இருப்பின் திருத்தலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, கற்பகதரு said:

ஐயகோ!! 😫எனது மத நம்பிக்கையை மீண்டும் மீண்டும் புண்படுத்துகிறார்களே 😩

எங்கள் அருமை மட்டுருதுனர்களே, யாராவது எங்களை பாதுகாக்க மாட்டீர்களா?

ஜெய் நித்தியானந்தம் :100_pray:

அத்தான்! கூப்பிட்டீர்களா அத்தான்? 💘

Image may contain: 1 person, standing and outdoor

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 2:47 AM, கற்பகதரு said:

ஐயகோ!! 😫எனது மத நம்பிக்கையை மீண்டும் மீண்டும் புண்படுத்துகிறார்களே 😩

கற்பகதரு அவர்கள் நித்தியானந்தாவின் மதத்திற்கு மாறியதை நான் முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன்.அவர் நித்தியானந்தா ரஞ்சிதாவின் கடவுள் கோட்பாடுகளை தன் சொந்த சிந்தனையை பாவித்து பகுத்தறிந்து, கற்றுணர்ந்து மதம் மாறி உள்ளார். மற்றவர்கள் மதம் மாறுவது போல் பேராசையினாலோ, அல்லது வந்த நோய் மாற வேண்டும் என்பதிற்காகவோ நோயால் இறந்து விடுவேன் என்ற பயத்தினாலோ  இறந்த பின்னர் சுவர்க்கத்தில் வாழலாம் என்ற ஆசையினால் அவர் மதம் மாறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.