Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

1. இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றமா? ஆம், இல்லை.

2. ஆம் எனில் - குற்றம் இழைத்தவரை போலீசில் ஆதாரத்தோடு பிடித்து கொடுத்து, மீண்டும் இது நிகழா வண்ணம் செய்திருக்க வேண்டும் இந்த பிக்கு/பொன்னாலை இந்து சிங்கங்கள்.

இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றம். தண்டனைக்குரியது.

தான் சார்ந்த மதத்தை, பிறருக்கு ஏத்தி வைப்பது, போதிப்பது - இலங்கையில் குற்றமல்ல.

பிறருக்கு ஏத்தி வைப்பது, போதிப்பது என்ற பெயரில், திணிப்பு, வற்புறுத்தல் செய்வது இலங்கையில் பாரிய குற்றம்

அந்த அடிப்படையில், இந்த கிறிஸ்தவ பாதிரியாருக்கு எதிராக எடுக்கும் எந்த சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் நீதிமன்றம் தலை சாய்க்காது.

என் பார்வையில், இந்த கிறிஸ்தவ பாதிரியார் - அவரின் மதத்தைப்பற்றிய திணிப்பு, வற்புறுத்தலைச் செய்யவில்லை.

அப்படி செய்திருந்தால், அவர் கம்பி எண்ணுவார்.

  • Replies 232
  • Views 22.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, tulpen said:

உங்களது இந்த தெளிவும் புரிதலும் இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களில் இரு பகுதியினரிலும்   குறைந்தது 35% - 40% மக்களிடம் இருந்திருத்தால்

இலங்கை கோஷான் சேயின் ஜனநாயக பண்பு பற்றிய புரிதலும் தெளிவும் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள மக்களிடம் இருக்கிறதா என்பதற்கு முதல் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்களிடம் 35% மானவர்களிடம்மாவது இருக்கின்றதா? இந்தியா பொலிசு என்கவுண்டர் செய்ததை விசில் அடித்து  கொண்டாடினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

தெரிந்ததை அல்லது உங்கள் அனுமானத்தை பகிர்வதில் பிழை இல்லையே. ஏனென்றால் நானும் சில அவதானிப்புக்களை கொண்டுள்ளேன். 

உண்மைதான். முயற்சிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

உங்கள் பதில் உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. அபிவிருத்தி குறைந்த, எழுத்தறிவு குறைந்த , சட்டமும் ஒழுங்கும் குறைந்த ஒரு நாட்டிலிருந்துகொண்டு ஒருவர் இவ்வாறான பதிலை அல்லது கருத்தை கூறூவாரானால் , அவர் வாழும் சூழலை புரிந்கொண்டு அவரது கருத்துக்களுக்கு தொடர்ச்சியாக விளக்கமளிக்கலாம், வாதிடலாம்.

ஆனால் அபிவிருத்தியடைந்த, சட்டமும் ஒழுங்கும் சீராக நடைமுறைப்படுத்தும் மேற்குலகில் பல பத்தாண்டுகள் வாழும் ஒருவர், யார்வேண்டுமானாலும் சரி பிழையை தட்டிக் கேட்கலாம் என்று கூறுவது ஆச்சரியமளிப்பதுடன் சற்று கவலையையும் ஏற்படுத்துகிறது. 
 
இங்கே இரண்டு விடயங்களை அனுமானிக்க முடிகிறது.

சட்டத்தையும் அதனை நடைமுறைப் படுத்துவதில் காவல் துறையினரின் பங்கு தொடர்பில் உங்களுக்கு போதிய விளக்கமில்லை என்பது ஒன்று. அல்லது சட்டமும் ஒழுங்கும் தொடர்பில் உங்களுக்கு அக்கறை இல்லை என்பது இரண்டாவது.

நீங்கள் உங்கள் சகோதரிகளோடு வீதியில் நடந்து போகிறீர்கள் .. ஒருத்தன் வந்து உங்கள் சகோதரியின் கையை பிடித்து இழுத்தால்  நீங்கள் ஊரில் இருந்தாலோ அல்லது லண்டனில் இருந்தாலோ போலீசுக்கு அடிச்சு போட்டு  பொலீஸ் வரும்  மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பீங்களா?
 
5 hours ago, goshan_che said:

1. இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றமா? ஆம், இல்லை.

2. ஆம் எனில் - குற்றம் இழைத்தவரை போலீசில் ஆதாரத்தோடு பிடித்து கொடுத்து, மீண்டும் இது நிகழா வண்ணம் செய்திருக்க வேண்டும் இந்த பிக்கு/பொன்னாலை இந்து சிங்கங்கள்.

3. இல்லை எனில் - என்னை மதம் மாற்றாதீர்கள் - உங்கள் போதனையை எனக்கு பிடிக்கவில்லை என கூறி அவர்களை விரட்டலாம். தொடரும் போது, religious harassment பண்ணுவதாக பொலிசில் முறையிடலாம்.

4. மாறாக பேசிக் கொண்டிருக்கும் மனிதருக்கு அறைவதில்/ கும்பலாக சென்று அச்சுறுத்துவதில் எந்த நியாமும் இல்லை.

லண்டனில் உங்களை ஒரு யேசு ஜீவிக்கிறார் கோஸ்டி கதவை தட்டி, இறந்த பின் நாமரிவரும் எங்கே போவோம்? என கேட்டால் “சப்” என்று அறைவீர்களா? நீங்கள் விரும்பினாலும் சட்டத்துக்கு பயந்து செய்யமாட்டீர்கள்.

இதுதான் சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயகத்தின் பண்பு. 

1} மத மாற்றம் செய்வது பிழை ....இங்கே சில பேர் அடித்தது பிக்கு என்ற படியால் பிக்குவிற்கு எதிராய் இருக்கிறார்கள்...என்னை பொறுத்த வரை பிக்குவின் இடத்தில்  பாதிரியாரும் ,  பாதிரியாரின் இடத்தின் பிக்கு இருந்தாலும் அவர்கள் செய்தது சரி என்று தான் சொல்லுவேன்.

2]  போலீசும் அவ்விடத்தில் நிற்கிறார்கள் தானே...அவர்கள் தலையிட்டு பிரச்சனை பெரிசாகமல்  அனுப்பி வைத்தார்கள் ...அவர்களுக்கு கோபம் வந்தது  பாதிரியார் நின்ற தோரணை...இருவரும் சிங்களவர்கள்...இருவரும் மதகுருமார் ....இருவரும் ஒருவரை ,ஒருவர் மதிக்கவில்லை  ...அந்த பாதிரியாரின் சபையே அவர் செய்தது பிழை என்று மன்னிப்பு கேட்டு உள்ளார்கள் ...இந்த பிக்கு ரவுடி தான் ...ஆனால் அதேயளவிற்கு இந்த பாதிரியார் மீதும் முறை கேடாய் நடந்து கொண்டமையால் கத்தோலிக்க திருச் சபை இவரை தள்ளி வைத்திருக்குது ...உண்மையான பாதிரியார் என்றால் இப்படி நிக்க மாட்டினம்.

3] அரைவாசி காணொளி தான் நாங்கள் பார்த்தது...நீண்ட நேரமாய் அங்கு பிரச்ச்சாரம் நடந்து கொண்டு இருந்தது...பிக்கு முதலில் வந்தார் பின்னர் பொலீஸ் வந்தது ...ஒரு மதகுருவிற்கு எதிராய் கதைக்கும் தகுதி இன்னொரு மதகுருவிற்கு தான் உண்டு என்று நினைத்து அந்த மக்கள் பிக்குவை முதலில் கூப்பிட்டு இருக்கலாம் ...இங்கே மத பிரசாரம் செய்ய வேண்டாம் என்று சொன்னவுடன் பேசாமல் கலைந்து போயிருந்தால்  இது இவ்வளவிற்கு  நீண்டு இருக்காது.

லண்டனில் கதவை தட்டி பிரச்சாரம் செய்தால் முதலில் கதை திறக்க மாட்டேன் ...அப்படி தெரியாத தனமாய் திறந்தால் முதலில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பேன்...பிறகு என் கருத்தை சொல்லுவேன்...என்னுடைய கருத்தை சொல்ல விடாமல் விதண்டாவாதம் செய்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு கன்னத்தில் அறையேலாது தான் ஆனால் கதவுக்கு அறையலாம்...அடிச்சு சாத்திட்டு பேசாமல் இருப்பன் .

ஜனநாயகம், சட்டம் கதைக்கிற லண்டனில் தான் ஒவ்வொரு நாளும்  வாள்  வெட்டும் ,கத்திக் குத்தும் நடக்கிறதை உங்களை போல் சிலர் மறந்து விடுகிறார்கள் ...தவிர இந்த சம்பவம் ஊரில் நடந்தது. இங்கே நாங்கள் இப்படி இருப்பதை கொண்டு அங்கே அவர்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என நாங்கள் சட்டம் போடேலாது ...நாங்கள் அங்கே இருந்திருந்தாலும் அப்படித் தான் இருந்திருப்போம் .

எனக்கு முதல் மத நம்பிக்கை இருந்தது...இப்ப இல்லை ...இப்படி மதம் மாற்றும் செயலை செய்ப்பவர்களை நான் கண்டிக்கிறேன் அது யாராயிருந்தாலும்   
 
  • கருத்துக்கள உறவுகள்

மேலே கற்பிதனிடம்  கேட்ட கேள்விக்கு உங்களிடமும் நியாயமான பதிலை எதிர் பார்க்கிறேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மேலே கற்பிதனிடம்  கேட்ட கேள்விக்கு உங்களிடமும் நியாயமான பதிலை எதிர் பார்க்கிறேன் 
 
மன்னிக்கவும் ரதி,

நீங்கள் சரி பிழை பகுத்துணரக்கூடிய வயதுடையவர் என்பது என் துணிபு. ஆனால் தலைப்புடன் தொடர்புடைய  தொடர்ச்சியான  இருவரினதும் கருத்துப் பரிமாற்றம் எந்தவித பயனை நம் இருவருக்கும் தராது என முடிவுக்கு நான் வந்துள்ளேன். ஆதலினால் இதிலிருந்து (உங்களுடன் மட்டும்) விலகுகிறேன். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மேலே கற்பிதனிடம்  கேட்ட கேள்விக்கு உங்களிடமும் நியாயமான பதிலை எதிர் பார்க்கிறேன் 
 
ரதி அக்கா,

பேச்சு, அதைதாண்டி வன்முறை இரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

வீதியால் போகும் சகோதரி மட்டுமில்லை முகம் தெரியாத பெண்ணாய் இருப்பினும், அவர்கள் மீது உடல் ரீதியாக வன்முறை ஏவப்பட்டால் அதை தடுக்கும் அளவுக்கு நானும் வன்முறையை பிரயோகிப்பேன். சொல்லப் போனால் பிரயோகித்தும் இருக்கிறேன். ஆனால் அது ஒரு உடனடி ஆபத்தை தடுக்க பிரயோகிக்க படும் தற்காப்பு. இந்த நாட்டு சட்டத்தில் கூட necessary and proportionate force ஐ பாவிக்க அனுமதியுண்டு.

மதம் மாற்றுவது அப்படி ஒரு உடனடி ஆபத்தில்லை. இங்கே இந்த பிக்கு வந்து சத்தம் போட்டதை கூட நான் தப்பென கூறவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பது அவர் உரிமை.

இந்த பிக்கு பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். ஒரு கொதிகேஸ். பாதிரி அமைதியா, நக்கல் தொனியில் கேட்டதும் ஆள் செம கேந்தியாகிவிட்டார். 

முதலிலேயே எழுதிவிட்டேன். நான் மதம்மாறிகளையும், மதம்மாற்றிகளையும் அருவருத்து வெறுக்கிரேன். இதுவரை எனக்கு அப்படி ஒரு உந்தல் எழவில்லை. ஆனால் நாளைக்கே மதம் மாற்றலுக்கு எதிராக இந்த பிக்குவை போல காட்டு கத்தல் கத்த வேண்டும் என எனக்கு தோன்றினால் - அந்த உரிமை எனக்கு இருக்க வேண்டும்.

ஆனால் வன்முறையை பாவித்து மதமாற்றத்தை தடுக்க யாருக்கும் உரிமை இருக்க கூடாது.

அதே போல் பாகிஸ்தானில் செய்வது போல கட்டாய, மிரட்டல் மதமாற்றமும் இருக்க கூடாது.

என் மதம் உயர்வானது, அதில் வந்து சேர்ந்து பயனடையுங்கள் என மற்றயவரை கோரும் உரிமை பேச்சு, மத சுதந்திரத்தின் ஓர் அங்கமே. 

லண்டனில் குற்றவியல் சம்பவங்கள் நடக்கவில்லை என நான் எழுதவில்லை. கத்திகுத்து இல்லாத ஊர் இந்த உலகிலேயே இல்லை. ஆனால் ஹரே கிருஸ்ணா, யேசு ஜீவிக்கிறார். அல்லா ரட்சிக்கிறார், அமைதி மார்க்கம் அஹமதியா, இப்படி லண்டனில் ஆள் பிடிக்கும் கோஸ்டிகள் அமோகம்தானே.

இவர்களை எப்படி இங்கே மக்கள் கையாள்கிறார்கள்? சிலர் சொல்வதை கேட்கிறார்கள், பலர் ஒரு முகச் சுழிப்போடு கடந்து செல்கிறார்கள், மிகச்சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள்.

இதை ஏன் எமது நாடுகளில் செய்யமுடிவதில்லை? இந்த அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் கூடப் பொருந்தாத அளவுக்கு காட்டுமிராண்டுகளா நாங்கள்?

இல்லை - எமது நாட்டிலும் பலர் நான் மேலே சொன்னது போலவே உள்ளார்கள்.

ஆனால் என்ன - அரசு காட்டு தர்பார், மருத்துக்கும் சங்ஹாவை எதிர்க்க திராணி அற்ற அரசு என்பதால் இந்த பிக்கு போன்றவர்கள் சட்டத்தை கையில் எடுத்து ஆடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சே,

இரண்டு விதங்களில் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியமுறுகிறேன்.

உங்கள் பொறுமையும், சரி பிழை தெரிந்துகொண்டே விதண்டாவாதம் புரிபவர்களுக்கு (நான் யாரையும் குறிப்பிட்டு கூரவில்லை) தெளிவாக பதிலளிக்கும் தன்மையும் மகிழ்வுக்குரியது.

எனக்கு அந்தப் பொறுமை இல்லை.

வாழ்த்துக்கள்.

இப்படியான பெயர்களையுடைய  கோஷ்டிகள், லண்டனில் இருக்கின்றன என்று ஏன் பொய் சொல்கிறீர்கள்? 

நீங்கள் குறிப்பிட்டதில் ஏதும் இருக்கலாம்.

லண்டனில் யாரும், யாரிடமும் போய் நெருக்கடி தொந்தரவு செய்து, எனது கூட்டத்தில் சேருமாறு வற்புறுத்தல் செய்வதில்லை.

அவனவன் விரும்பிச் சேருகிறான்.  பிடிக்காவிட்டால், வெளியேறுகிறான்.

இது அவனவன் உரிமை. 

 ஒருவரின் உரிமையை வெறுத்தொதுக்கும். உங்களின் செயல் அநாகரீகமானது மட்டுமல்ல, இன்னொருவரின் ஜனநாயக விழுமியங்களை புதைக்கும் செயல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

மதம் மாற்றுவது அப்படி ஒரு உடனடி ஆபத்தில்லை. இங்கே இந்த பிக்கு வந்து சத்தம் போட்டதை கூட நான் தப்பென கூறவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பது அவர் உரிமை.

முதலிலேயே எழுதிவிட்டேன். நான் மதம்மாறிகளையும், மதம்மாற்றிகளையும் அருவருத்து வெறுக்கிரேன். இதுவரை எனக்கு அப்படி ஒரு உந்தல் எழவில்லை. ஆனால் நாளைக்கே மதம் மாற்றலுக்கு எதிராக இந்த பிக்குவை போல காட்டு கத்தல் கத்த வேண்டும் என எனக்கு தோன்றினால் - அந்த உரிமை எனக்கு இருக்க வேண்டும்.

மதம் மாறுவது,  ஒருவனது தனிப்பட்ட கொள்கை, வாழ்வியல் சார்ந்த சமாச்சாரம்.  இது அவனின் உரிமை.

இப்படி மதம் மாறுபவர்களை, அருவருத்து வெறுத்தொதுக்குவது, பிறரின் உரிமைகளில் கைவைக்கிறீர்கள் என்று  நீங்கள் உணரவில்லையா?

ஒருவன் மதம் மாறுவது, ஒருவனின் உரிமை.  அதை வெறுக்குறீர்கள்.

ஒருவன் மதம் மாறுவதற்கு எதிராக, ரவுடிப் பிக்குபோல காட்டுக் கத்தல் செய்யும் உரிமை உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

அந்த ரவுடிப் பிக்குபோல,  நீங்கள் தூஷணத்தில் கத்தினால்,  பாதிக்கப்படுபவர் உங்களுக்கு எதிராக Defamation Law இன்படி, உங்களுக்கு எதிராக வழக்கு போட உரிமை பெறுகிறார்.

ஆக, கண்டதற்கெல்லாம்  உரிமை கோரி, அதன் பின்விளைவுகளை சந்திக்க நாடாதீர்கள் - அதுவும் லண்டனில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, goshan_che said:

லண்டனில் உங்களை ஒரு யேசு ஜீவிக்கிறார் கோஸ்டி கதவை தட்டி, இறந்த பின் நாமரிவரும் எங்கே போவோம்? என கேட்டால் “சப்” என்று அறைவீர்களா? நீங்கள் விரும்பினாலும் சட்டத்துக்கு பயந்து செய்யமாட்டீர்கள்.

இயேசு ஜீவிக்கிறார் கூட்டம் வந்து கதவைத் தட்டினால், நான் ஒருபோதும் கதவைத் திறக்காமல் இருப்பதில்லை.

நாமெல்லாரும், இறந்தபின் எங்கே போவோம் என்று கேட்டால், மண்ணறையைக் காட்டவேண்டியதுதான்.  

அதற்காக யாரையும் அறைய வேண்டிய அவசியமில்லை.  

அன்புடன் அவர்களுடன் உரையாடி, கிறிஸ்தவம் என்பது ஒரு பொய்யான மார்க்கம், பைபிளுக்கும் இயேசுவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று, அவர்கள் கொண்டுவரும் பைபிளை வாசித்து அவர்களுக்கு விளக்கி இருக்கிறேன். 

அதன்பின், என் வீட்டு வாசற்படியை மிதித்ததே இல்லை. எதேச்சையாக  அந்தக் கோஷ்டியை தெருவில் கண்டால், நானே போய் பேச்சுக் கொடுப்பேன்.

என்னை விழுங்குவதுபோல பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

பவுத்த கொள்கை, நாத்திகம் என்பது பெரும்பாலான சிங்களவருக்குத் தெரியாது.

நான் எழுதியது எல்லாம் பெரும்பாலான சிங்களவரும் அவர்களது பிக்குகளும் பின்பற்றும் மதத்தை பற்றியுது, பௌத்த கொள்கைகள் பற்றியோ நாத்திகம் பற்றியோ நான் எழுதவில்லை. பெரும்பாலான சிங்களவர் ( நீங்கள் சொல்வது போல. பவுத்த கொள்கை, நாத்திகம் என்பது தெரியாத) மேல் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளை விளக்குவதே எனது ஆக்கத்தின் நோக்கம். நான் ஏற்கனவே எழுதயது போல, இது விளங்குவதற்கு கடினமானது. 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தபின் எமது பிரதேசங்களில் பலவிதமான வியாபாரிகள் கதவைத் தட்டி விலை மலிவு, தரமானது. என்று சொல்லிக்கொண்டு  ஒவ்வொருநாளும் வருவார்கள். சிலர் கதவை திறக்காமல் விட்டால், வீட்டில் யாரும் இல்லை என நினைத்து மறுநாளும் தட்டுவார்கள். ஒரு நாள் கதவைத் திறந்து இது நமக்குத் தேவை இல்லை. என்று சொன்னால் மறுபடியும் வராமல் போய் உள்ளார்கள். என்ன கொண்டு வந்து இருக்கிறார்கள் பாப்போமே? என்று பாத்தவர்கள் வீட்டிற்கும் மலிவாக இருக்கிறதே, என்று அழைத்தவர் வீட்டிற்கும் ஒவ்வொரு முறை அதைவிட இது மலிவானது. இது தரமானது என்று புதுசு புதுசாய் கொண்டு வருவார்கள். இந்த வியாபாரிகளுக்கு இராணுவமே வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீடுகளையும், தமது கைக்கூலிகளின் வீடுகளில் ஒரு பகுதியையும் கொடுத்து, தங்கி இருந்து வியாபாரம் செய்யவும், வேறு பல வேலைகளை செய்யவும் உதவினார்கள். மதம் மாறுபவர்களுக்கும் மாற்றுபவர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் பலாத்காரமாய் இந்நாளில், இலங்கையில் தமிழர்கள் மதம் மாற்றுவதை நான் அறியவில்லை. இப்போது இலங்கையில் அவசரமாக தேவைப்படுவது புத்த மதம் முதன்மையாக்கப்பட வேண்டும் என்பதே. முதலில் கிறிஸ்தவ மதம் அழிப்பது என்பது சவாலானது. சிங்களவரும் கிறிஸ்தவர்களாக இருப்பதே காரணம். சர்வதேசத்தின் கண்டனமும் கட்டாயம் உருவாகும். சில குறுகிய மனப்பான்மை உடைய நம் தமிழ்  இந்து கிறிஸ்தவ உறவுகள் மூலம் தமிழ் கிறிஸ்தவத்தை இலகுவாக அழித்து பின் சிங்கள கிறித்தவத்தை அழிக்க கனவு காண்பது போல் தெரிகிறது. தேவாலய குண்டு வெடிப்பு, இந்து ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்ததற்காக சுமந்திரன் நீதிமன்றத்தை நாடியபோது ஞானசார தேரர் வெளியிட்ட  கருத்து, நம்மிடையே வெளிவரும் ஆவேசக்கருத்துகள் அப்படித்தானிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. சவாலான மதத்தை இன்னோரு மதவாதத்தை ஊக்குவித்து அழித்து எல்லோரின் ஆதரவையும் இழக்க வைத்தபின் எஞ்சிய மதத்தை சத்தம் இல்லாமல் அழித்து விடலாம். நன்றாகவே நம் இனத்தையும், அதன்  பெலவீனங்களையும்  அறிந்து காய் நகர்த்தி வெற்றி கண்ட அனுபவம்.   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

மன்னிக்கவும் ரதி,

நீங்கள் சரி பிழை பகுத்துணரக்கூடிய வயதுடையவர் என்பது என் துணிபு. ஆனால் தலைப்புடன் தொடர்புடைய  தொடர்ச்சியான  இருவரினதும் கருத்துப் பரிமாற்றம் எந்தவித பயனை நம் இருவருக்கும் தராது என முடிவுக்கு நான் வந்துள்ளேன். ஆதலினால் இதிலிருந்து (உங்களுடன் மட்டும்) விலகுகிறேன். நன்றிகள்.

நன்றி போய் வாருங்கள்... எனக்கு  உங்கள் பதில் ஆச்சரியம் அளிக்கவில்லை... நான் தலைப்போடு ஒட்டித் தான் உரையாடுகிறேன் ...உங்களுக்கு விதண்டாவாதமாய் தெரிந்தால் நான் ஒன்றும் செய்யேலாது...இனி மேல் தேவையில்லாமல் என்னோடு உரையாற்ற மாட்டீர்கள் ர்கள் என நம்புகிறேன் 
 
10 hours ago, goshan_che said:

ரதி அக்கா,

பேச்சு, அதைதாண்டி வன்முறை இரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

வீதியால் போகும் சகோதரி மட்டுமில்லை முகம் தெரியாத பெண்ணாய் இருப்பினும், அவர்கள் மீது உடல் ரீதியாக வன்முறை ஏவப்பட்டால் அதை தடுக்கும் அளவுக்கு நானும் வன்முறையை பிரயோகிப்பேன். சொல்லப் போனால் பிரயோகித்தும் இருக்கிறேன். ஆனால் அது ஒரு உடனடி ஆபத்தை தடுக்க பிரயோகிக்க படும் தற்காப்பு. இந்த நாட்டு சட்டத்தில் கூட necessary and proportionate force ஐ பாவிக்க அனுமதியுண்டு.

மதம் மாற்றுவது அப்படி ஒரு உடனடி ஆபத்தில்லை. இங்கே இந்த பிக்கு வந்து சத்தம் போட்டதை கூட நான் தப்பென கூறவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பது அவர் உரிமை.

இந்த பிக்கு பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். ஒரு கொதிகேஸ். பாதிரி அமைதியா, நக்கல் தொனியில் கேட்டதும் ஆள் செம கேந்தியாகிவிட்டார். 

முதலிலேயே எழுதிவிட்டேன். நான் மதம்மாறிகளையும், மதம்மாற்றிகளையும் அருவருத்து வெறுக்கிரேன். இதுவரை எனக்கு அப்படி ஒரு உந்தல் எழவில்லை. ஆனால் நாளைக்கே மதம் மாற்றலுக்கு எதிராக இந்த பிக்குவை போல காட்டு கத்தல் கத்த வேண்டும் என எனக்கு தோன்றினால் - அந்த உரிமை எனக்கு இருக்க வேண்டும்.

ஆனால் வன்முறையை பாவித்து மதமாற்றத்தை தடுக்க யாருக்கும் உரிமை இருக்க கூடாது.

அதே போல் பாகிஸ்தானில் செய்வது போல கட்டாய, மிரட்டல் மதமாற்றமும் இருக்க கூடாது.

என் மதம் உயர்வானது, அதில் வந்து சேர்ந்து பயனடையுங்கள் என மற்றயவரை கோரும் உரிமை பேச்சு, மத சுதந்திரத்தின் ஓர் அங்கமே. 

லண்டனில் குற்றவியல் சம்பவங்கள் நடக்கவில்லை என நான் எழுதவில்லை. கத்திகுத்து இல்லாத ஊர் இந்த உலகிலேயே இல்லை. ஆனால் ஹரே கிருஸ்ணா, யேசு ஜீவிக்கிறார். அல்லா ரட்சிக்கிறார், அமைதி மார்க்கம் அஹமதியா, இப்படி லண்டனில் ஆள் பிடிக்கும் கோஸ்டிகள் அமோகம்தானே.

இவர்களை எப்படி இங்கே மக்கள் கையாள்கிறார்கள்? சிலர் சொல்வதை கேட்கிறார்கள், பலர் ஒரு முகச் சுழிப்போடு கடந்து செல்கிறார்கள், மிகச்சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள்.

இதை ஏன் எமது நாடுகளில் செய்யமுடிவதில்லை? இந்த அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் கூடப் பொருந்தாத அளவுக்கு காட்டுமிராண்டுகளா நாங்கள்?

இல்லை - எமது நாட்டிலும் பலர் நான் மேலே சொன்னது போலவே உள்ளார்கள்.

ஆனால் என்ன - அரசு காட்டு தர்பார், மருத்துக்கும் சங்ஹாவை எதிர்க்க திராணி அற்ற அரசு என்பதால் இந்த பிக்கு போன்றவர்கள் சட்டத்தை கையில் எடுத்து ஆடுகிறார்கள்.

பதிலுக்கு நன்றி கோசான் ...லண்டன்  போன்ற நாடுகளை போல எங்கள் நாடு மாறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்....பத்து வருடத்திற்கு முன்பு இருந்த இலங்கைக்கும் இப்ப இருக்கும் இலங்கைமே வித்தியாசம் இருக்கு.... மற்றப்  படி  இரு மதகுருமாரிலும் பிழை என்று நான் முதலே எழுதி விட்டேன் 

எதுவும் எங்க வீட்டு  கதவை தட்டும் வரை நாங்களும் நல்லவர் தான் 😐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கற்பகதரு said:

நான் எழுதியது எல்லாம் பெரும்பாலான சிங்களவரும் அவர்களது பிக்குகளும் பின்பற்றும் மதத்தை பற்றியுது, 

மேற்படி மதத்தில், பிக்குகளை கடவுளாக வணங்குகிறார்கள் என்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மாங்குயில் said:

எதேச்சையாக  அந்தக் கோஷ்டியை தெருவில் கண்டால், நானே போய் பேச்சுக் கொடுப்பேன்.

என்னை விழுங்குவதுபோல பார்ப்பார்கள்.

என்னதான் ஊழியகாரர்கள் என்றாலும் அவர்களுக்கும் மரண பயம் இருக்கும்தானே😷.

யேசு சீவிப்பார் பாஸ், அவருக்கென்ன ராஜா வூட்டுக் கன்னு குட்டி, பாவப்பட்ட ஊழியக்காரர்கள் - அவங்களுக்கு புள்ளை குட்டி எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுமா இல்லையா😂.

அவர்களின் நிலைதான் யாழில் உங்களோடு உரையாடும் போது எனக்கும். 

ஒவ்வொரு விவாதத்தையும், பொயிட்ன் பை பொயிட்ன், லொஜிக்கலாக,  நீங்க அடிச்சு நொருக்கும் விதமே தனி.

அதனால்தான் இப்போ நான் உங்களுக்கு பதில் எழுதுவதில்லை. என்ன எழுதி என்ன, நீங்கள் கூறும் கருத்துத்தான் வெல்லும் - ஏன்னா உங்க ஞானம் அப்படி.

12 hours ago, Kapithan said:

சே,

இரண்டு விதங்களில் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியமுறுகிறேன்.

உங்கள் பொறுமையும், சரி பிழை தெரிந்துகொண்டே விதண்டாவாதம் புரிபவர்களுக்கு (நான் யாரையும் குறிப்பிட்டு கூரவில்லை) தெளிவாக பதிலளிக்கும் தன்மையும் மகிழ்வுக்குரியது.

எனக்கு அந்தப் பொறுமை இல்லை.

வாழ்த்துக்கள்.

எல்லாம் யாழில் “வாங்கிய” அனுபவம்தான்😂.

ஆனால் நானும் troll பண்ணுபவர்களை கவனத்தில் எடுக்காமல் விடுவதுண்டு😂.

  • கருத்துக்கள உறவுகள்

குழவி மாதிரி கோவிக்கிறீர்கள் ரதி. ஓர் விடயத்தில் இருவரது கருத்தும் ஒத்துவரவில்லை என்றால் அதனை மேற்கொண்டு விவாதிப்பதில் பயனில்லை. அதனால்தான் இந்த திரியில் மட்டும் மேற்கொண்டு விவாதிப்பதில்லை என கூறினேன். இதில் கோவிக்க என்ன இருக்கிறது. நீங்கள் விலகினாலும் நான் உங்களை விடமாட்டேன்.

அதுசரி வீட்டில் நீங்கள் என்ன கடைசிப் பிள்ளையா ? வெடுக்கென்று கோபிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மாங்குயில் said:

மேற்படி மதத்தில், பிக்குகளை கடவுளாக வணங்குகிறார்கள் என்றில்லை.

எந்த மதத்தில்? 

 எப்படி வணங்குகிறார்கள்?

On 1/2/2020 at 11:42 AM, Vankalayan said:

கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை.

உண்மையான கிறிஸ்தவர்கள் மிகமிக மோசமான கடமைகளை செய்ய வேண்டும், உண்மையான கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் உரிமைகளை மதிக்கத்தெரியாதவர்களாக, நல்ல பண்புகள் அற்றவர்களாக இருக்க வேணும் என்டு சொல்லுறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, கற்பகதரு said:

எந்த மதத்தில்? 

 எப்படி வணங்குகிறார்கள்?

உங்களது பின்னூட்டத்தில், எந்த மதம் என்று இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

அதனால்தான் இப்போ நான் உங்களுக்கு பதில் எழுதுவதில்லை. என்ன எழுதி என்ன, நீங்கள் கூறும் கருத்துத்தான் வெல்லும் - ஏன்னா உங்க ஞானம் அப்படி.

கருத்துக்களை எழுதுவது, வெல்லுவதற்காகவா?

எனது பாமரத்தனமான கருத்துக்கள், உங்களை போன்ற பகுத்தறிவுப் பகலவன்களுக்கு முன்னால் எடுபடும் என்றால், சந்தோஷப்பட  வேண்டியதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மாங்குயில் said:

கருத்துக்களை எழுதுவது, வெல்லுவதற்காகவா?

எனது பாமரத்தனமான கருத்துக்கள், உங்களை போன்ற பகுத்தறிவுப் பகலவன்களுக்கு முன்னால் எடுபடும் என்றால், சந்தோஷப்பட  வேண்டியதுதான்!

முதுகில் தட்டியும் கொள்ளுங்களேன். காசா பணமா 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, goshan_che said:

முதுகில் தட்டியும் கொள்ளுங்களேன். காசா பணமா 😂

முதுகில் தட்டி, பப்பாளி மரத்திற்கும் ஏற்றியாச்சு, உங்களை போன்ற புண்ணியவான்களால்.

இனியென்ன எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி என்ற தோரணைதான் பாக்கி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

முதுகில் தட்டி, பப்பாளி மரத்திற்கும் ஏற்றியாச்சு, உங்களை போன்ற புண்ணியவான்களால்.

இனியென்ன எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி என்ற தோரணைதான் பாக்கி.

அதென்ன “இனியென்ன”?

நீங்க எப்பவுமே வெற்றியாளர்தானே?

எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, goshan_che said:

அதென்ன “இனியென்ன”?

நீங்க எப்பவுமே வெற்றியாளர்தானே?

எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி.

மனிதன், எப்போதும் வெற்றியாளனாக இருந்ததில்லை -  வரலாற்றில்.

அதனால்தான், என்னைப்போன்ற சாதாரண மனிதப் பிறவிகளை நான் ஒருபோதும், கும்பிடுவதில்லை. வணங்குவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.