Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

சென்னை - மே 14, 2007: திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி.

தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்குவது என்றும், கட்சியிலிருந்தும் நீக்குவது எனவும், இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவம் தீர்மானிக்கப்பட்டு அதை அமலாக்கும் முடிவை கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

நிர்வாகக் குழுக் கூட்டம் சுமார் இரண்டே கால் மணி நேரம் நடந்தது. இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை நீக்குவது உள்ளிட்ட ஐந்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகக் குழு முடிவு தெரிய வந்தவுடன் இரவு பத்து மணியளவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார் தயாநிதி மாறன்.

முன்னதாக பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன் பின்னர் பேக்ஸ் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/14/dayanidhi.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒருவேளை றோ சதியாகக்கூட இருக்கலாம்..

எங்கே ஒருவேளை கருணாநிதி புலிகளுக்கும் சப்போர்ட் பண்னி விடுவாரோ என்று பயந்து,

கருணாநிதி குடும்பத்தில் பிரச்சனை உண்டு பண்ணி

சில நாட்களுக்கும் முன் கூடிய இந்திய... சோரி.. மலையாள பாதுகாப்புகூட்டம் (அந்தோணி,மேனன்,நாராயணன்) எடுத்த சதி முடிவாகக்கூட இருக்கலாம்...

வாய்ப்புக்கள் இருக்கின்றன. தமிழ் தளிர்.

எமக்கு எதிராக இந்தியா செயற்பட முனைந்தால் தமிழகம் கொந்தளிக்கும். இந்த கொந்தளிப்பைத் தடுக்க தமிழகத்தை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கும் நோக்குடன் கூட புலனாய்வு அமைப்புக்கள் செயற்படலாம்.

என்ன இருந்தாலும் ஒரு சிறந்த துடிப்பான ஒரு திரமைமிக்க அமைச்சரை இழந்துவிட்டது இந்தியா.பல்வேறு முதலீட்டுக்கு காரணமாக இருந்தவர்.அவரும் அரசியல் சாக்கடைகுள்ளும் குடும்ப அரசியலிலும் சிக்குண்டது வேதனையான விடயம்

களைஞன் கரிநாநிதியை றோ வளைத்துப் போடுகிறது என்று சமாளிப்பதை விட உண்மையில் றோவின் செயற்பாடுகள் மூலம் புலிகள்அழிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய அரசியல் விளையாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்பதால் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட கசப்பை அகற்றுவதற்கு அவர் தயாராயில்லை.

எனவே தயாநிதி மாறனின் பிரிவையிட்டு தமிழர்களாகிய நாங்கள சந்தோசப்படலாம்.

துரதிஸ்டவசமாக மறுமுனையில் ஜெயலலிதாவே இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழுணர்வுள்ள மூன்றாவது தலைமை உருவாக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும்

ஆடிய ஆட்டம் என்ன? :P

இதுக்கெல்லாம் காரணம் கலைஞர் தான். தள்ளாத வயதிலும் முதல்வர் பதவி வேண்டு மென்று அடம் பிடித்து இருப்பதுதான். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஸ்டாலினை முதல்வர் பதவிக்கு அமர்த்தி இருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது.

இந்தியாவில் தமிழகம் தான் புதிய அரசியல் முறைகளை கொண்டுவருவது. அண்மையில் இந்தியாவில் இளம் சந்ததியினர் அரசியல் பலம் பெறும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தயாநிதிமாறன். அன்புமணி. ஸ்டாலின் இப்படி பலர்.

இதை மத்திய அரசோ உளவு நிறுவனங்களோ விரும்புவதில்லை. வயதானவரின் பலவீனத்தை வைத்து தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வடமாநில சிந்தினாவாதிகள் செயற்படுகிறார்கள்.

ஸ்டாலின் தமிழகத்தை பொறுப்பேற்றால் இளம்வயது மாநில முதல்வர் என்ற பெயரையும் தமிழகம் பெறும். பல தரமான இளம் மத்திய அமைச்சர்கள் எல்லாம் இருக்கும் போது தமிழகம் முன்னேற்றத்தை கண்டிருக்கும். ஆனால் வயது போன ஆசை யின் விளைவு தமிழகம் கண்டுண்டு கிடக்கிறது.

நேசன் சொல்வது முற்றிலும் உண்மை தகவல் தொழில்நுட்பம் அமச்சு பதவியை மென்பொருள் என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நபர்கள் அலங்கரித்த இந்திய மத்திய அமைச்சு பதவியை தயாநிதி மாறன் போன்ற இளம் தகுதியான இளைஞர்கள் மூலமே உலக சவாலுக்கு முகம் கொடுக்க முடியும்.இதை சாதித்து காட்டினார் தயாநிதி மாறன் மைக்ரோ சொப்ட் முதல் நொக்கியா வரை அத்தனை பெரிய முதலீட்டை இந்தியாவின் பக்கம் சீனா இருக்க திருப்பியதன் பங்கு இவருக்கு அதிகம்.அதே போல இன்னொரு இளைய அமைச்சரான அன்புமணி [ராமதாஸ் அவர்களின் புதல்வர்] சிறப்பாக செயல்படுகொண்டு இருகின்றார் பல சவால்களை சந்தித்து நிமிர்ந்து நிற்கும் இப்படியான அமைச்சர்களால் தமிழகம் அதிக நன்மைகளை பெற்றது.எல்லா வேலைக்கும் ஓய்வு பெற வயது எல்லை இருக்கு அரசியலில் மட்டும் இல்லை அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால்தான் இளைய சமுதாயத்தின்மீது ஆட்சி பொறுப்பு சுமத்தப்படும் அதன் மூலமே இந்தியா அனைத்து நாடுகளுக்கும் சவால் மிக்க நாடாக உருவாகும்.

அதை விடுத்து குடும்ப அரசியல் என்னும் சாக்கடைகளுக்குள் இப்படியான திறமையான மனிதர்கள் சிக்கு பட்டு தவிப்பது இந்திய அரசியலின் சாபக்கேடு எனத்தான் நான் நினைகின்றேன்

தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.

இது கலைஞரைப் பொறுத்த வரை உண்மை முது மொழி.

தி.மு.க வளர்சிக்கு வை.கோ செய்த தொண்டை யாரும் மறுக்க முடியாது. அவரை ஸ்டாலினுக்காக எவ்வளவு அவமானப்படுத்தி கட்சியை விட்டு நீக்கினார்.

இப்போ அதை தானே கலைஞர் அனுபவிக்கிறார்.. முரசொலிமாறன் இன்னும் இருக்ககூடிய வயது இருந்தும் தீடீரென போய்விட்டார். மு.க அழகிரி அரசியலை விட்டு ஓட வேண்டிய கட்டம் வந்து விட்டது. சுறுசுறுப்பான தனது பேரனை மத்திய அமைச்சர் பதவி, கட்சியில் இருந்து எல்லாம் தானே விலக்க வேண்டிய நிலைக்கு கலைஞர் வந்து விட்டார்.

இவை எல்லாம் நாம் கண்முன்னால் காண்கின்ற சில உண்மைச்சம்பவங்கள்.

பட்டினத்தார் நீங்கள் இன்னும் தமிழர் மத்தியில் வாழ்கின்றீர்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் சரியான நேரத்தில எடுத்த முடிவு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்த தயாநிதி சாதானர தொன்டர்களுடன் பழகுவதில்லை மற்றும் தி மு க வின் ழூத்த மத்திய அமைச்சாகளை மதிக்காமல் அவருடைய செயல் பாடுகள் இருந்தன் மாறன் குடும்பத்தினருக்கு கலைஞருக்கு அப்பால் தி மு க வை பனப்பலத்தால் கைப்பற்று கின்ற என்னம் மாவட்ட செயலர்களுக்கு எல்லாம் அந்த அந்த மாவட்டடத்தில் கேபிள்வர்த்தகத்தை வழங்கி அவர்களை கைக்குள் போடுகின்ற ஒரு செற்பதஷாட்டில் இருந்தார்கள் அது மட்டும் அல்ல எந்த விதமான கட்சி பனிகளுமே செய்யாத அவரi அமைச்சர் ஈக்கியது தவரு ஆக மொத்தம் சரியான நேரத்தில் கலைஞர் எடுத்த சரியான முடிவு...அரசியல் இராஜதந்திரத்தில் கலைஞரை வெல்ல எவரும் இல்லை...

dayanidhi-maran2.jpg

சென்னை: கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

மற்ற அரசியல்வாதிகளைப் போல என்னை நினைக்க வேண்டாம். கட்சி தலைமைக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ பேச மாட்டேன். எனவே அது போன்ற தர்மசங்கடமான கேள்விகளை கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டாலும் பதில் கிடைக்காது.

தலைவரே விரும்பவில்லை என்ற பிறகு மந்திரி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. கடந்த 26 மாதத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினேன். எனது துைறயில் 2.66 லட்சம் கோடி முதலீடு வந்தது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 47,000 கோடி ரூபாயை கொண்டு வந்தேன்.

கலைஞர் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. நிறைய திட்டங்கள் வந்தன. தொடர்ந்து வர வேண்டும்.

மந்திரி பதவியில் இருந்து என்னை நீக்கியதற்காக வருத்தப்படவில்லை. ஆனால், கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட்டதாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டதும், தலைவரே என் மீது சந்தேகப்பட்டதும் தான் எனக்கு மிக வேதனையைத் தந்துவிட்டது.

கனவில் கூட கட்சிக்கும் தலைமைக்கும் நான் துரோகம் நினைத்ததில்லை. என்னைப் பற்றி யாரோ தவறான தகவல்களை தந்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பக்கம் சென்று பார்த்தால் எனது துறை மூலமாக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புரியும். ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் பேசும் வசதி கொண்டு வந்தேன். கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தைய ரத்து செய்ய திட்டமிட்டிருந்தேன்.

மதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க ஒருவர் முயன்றுள்ளர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளார்.

அது யார் என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.

அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

எனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.

விரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.

ஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.

எங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.

கட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.

கட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தயாநிதி தந்த பதில்கள்:

உங்களுக்கும் ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்கிறார்களே?

தயாநிதி: எங்களுக்கிடையே உறவு நன்றாகவே இருக்கிறது.

கருணாநிதி மனம் இறங்கி உங்களை சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சர் பதவி தந்தால் ஏற்பீர்களா

தயாநிதி: ஏற்க மாட்டேன்.

நீங்கள் காங்கிரசில் சேரப் போவதாக சொல்கிறார்களே...

தயாநிதி: (பலமாக சிரித்தபடி) யார் சொன்னது

மதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே?

தயாநிதி: இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.

முன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.

என் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.

இந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

மற்ற அரசியல்வாதிகளைப் போல என்னை நினைக்க வேண்டாம். கட்சி தலைமைக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ பேச மாட்டேன். எனவே அது போன்ற தர்மசங்கடமான கேள்விகளை கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டாலும் பதில் கிடைக்காது.

தலைவரே விரும்பவில்லை என்ற பிறகு மந்திரி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. கடந்த 26 மாதத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினேன். எனது துைறயில் 2.66 லட்சம் கோடி முதலீடு வந்தது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 47,000 கோடி ரூபாயை கொண்டு வந்தேன்.

கலைஞர் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. நிறைய திட்டங்கள் வந்தன. தொடர்ந்து வர ேவண்டும்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/14/maran.html

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் குடும்ப அரசியலுக்கு

அன்று வை.கோ

இன்று அவரது அடுத்த வாரிசே பலி

கலைஞரே இது என்ன திருவிளையாடல்....

சன் டீவீ தினகரன் இரண்டையும் விட்டு விட்டு தீமூகாவால செயல்படமுடியாது என்பதே பலரின் கருத்தும். தீமூகாவிற்க்கு சன் டீவீ செய்த உதவிகள் மிகுதிதான்.

சன் டீவீ தினகரன் இரண்டையும் விட்டு விட்டு தீமூகாவால செயல்படமுடியாது என்பதே பலரின் கருத்தும். தீமூகாவிற்க்கு சன் டீவீ செய்த உதவிகள் மிகுதிதான்.

திமுகாவும் சண்டிவியும் வேறு வேறா.............? குழந்தைக்கே தெரிந்த விடயம் :rolleyes::lol::lol:

திமுகாவும் சண்டிவியும் வேறு வேறா.............? குழந்தைக்கே தெரிந்த விடயம் :rolleyes::lol::lol:

:P

கட்சியில் மு.க. ஸ்டாலினுக்கு நிகராக எவரும் வளர்வதை கருணாநிதி எப்பொழுதுமே விரும்பியதில்லை. அப்படி யாராவது வளர்வார்களானால் சதி செய்து வெளியேற்றி விடுவார்.

அந்த வகையில் தான் வை.கோ வெளியேற்றப்பட்டார்.

வெளியாரை நம்பாத காரணத்தால் தான் அரசியலுக்கு தயாநிதி மாறனை கொண்டு வந்து கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர் இருக்க தயாநிதியை மத்திய அமைச்சராக்கினார்.

ஆனால் தனது செயற்பாடுகளால் மிகக் குறுகிய காலத்தில் செல்வாக்கு மிக்கவராக தயாநிதி வளர்வது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை.

ஆக கட்சிக்கு (ஸ்டாலினின் தலைமைப் பதவிக்கு) துரோகம் இழைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ரவுடி போல் செயற்பட்டு வரும் கருணாநிதியின் மகன் அழகிரி கட்சியின் புகழை செல்வாக்கை உடைத்து வருவதைக் கண்டும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்.

காரணம் பிறகு அவர்கள் மீது கட்சித் (கருணாநிதி குடும்ப) துரோகக் குற்றச்சாட்டு வந்து விடும் என்ற பயம்.

தமிழக மீனவர்களைக் கொன்றவர்களைக் காப்பாற்றி ஈழத் தமிழர்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்திய கருணாநிதிக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!

வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநிதி

மே 14, 2007

சென்னை: மின்னல் வேகத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதி வேகமாக உச்சத்திற்குச் சென்ற தயாநிதி மாறனின் அரசியல் வாழ்க்கை, மூன்றே ஆண்டுகளில் தரைமட்டமாகியுள்ளது.

கருணாநிதியின் நிழலாக, அவரது மனக் குரலாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன்தான் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் திமுகவின் குரலாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த சமயத்தில் திடீரென உதயமானவர் தயாநிதி மாறன். தந்தையின் இடத்தில் தயாநிதியை உட்கார வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி.

மத்திய சென்னை எம்.பி. தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, மாறன் குடும்பம் விரும்பிய முக்கியத் துறையை அவருக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.

ஆனால் கருணாநிதியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனது பாணியில் இதை அமைதிப்படுத்தி, அடக்கினார் கருணாநிதி.

2004ம் ஆண்டு மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். அதற்கு முன்பு தயாநிதி மாறன் அதிகம் அறியப்படாதவர். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தார் தயாநிதி மாறன்.

ஆனால் மத்திய அமைச்சரான பின்னர் தனது செயல்பாடுகளால் டெல்லியில் பலரின் நட்பைப் பிடித்தார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், பிரதமரிடமும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் தயாநிதி மாறன். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். சன் டிவியை வளர்ப்பதில் மட்டும்தான் அவர் அக்கறை காட்டுகிறார். மற்ற தமிழ் சானல்களை அழிக்கும் வேலையில் அவர் ஈடுபடுகிறார் என்று முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.

ராஜ் டிவியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயாநிதி மாறன் கடுமையாக முயல்வதாகவும் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஜெயா டிவிக்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார் தயாநிதி மாறன் என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஒரு செய்தி சானலுக்கான உரிமத்தை வழங்கவும் தயாநிதியின் துறை தாமதம் செய்தது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து உரிமம் வழங்கப்பட்டது.

சமீபத்தில் விஜய் டிவியுடனும் மோதினார் தயாநிதி மாறன். அந்த டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூனிட்டை அப்படியே சன் டிவிக்கு ஹைஜாக் செய்ததில் தயாநிதி மாறன் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவிக்கு பல ரூபங்களில் நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உச்சமாக இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற சர்ச்சைதான். நான் மிரட்ட வில்லை என்று தயாநிதி மாறன் அதற்கு விளக்கம் கூறினார். ஆனால் அதுகுறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, விளக்கவும் இல்லை.

இந்த நிலையில்தான் தேவையில்லாத ஒரு கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிடப் போக தயாநிதியின் தலை உருண்டுள்ளது.

அடுத்து தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து திமுக தரப்பிலும் எந்த சத்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளில் பதவியிழக்கும் தயாநிதி மாறன்

பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பதவியை இழக்கிறார்.

சன் டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க்கான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன இயக்குனராக இருந்த தயாநிதி மாறன், கடந்த 2004ல் முரசொலி மாறன் மறைவிற்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதலாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவருக்கு மத்தியில் அமைந்த கூட்டணியில் முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். டெல்லி அரசியலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தினார்.

தொலைத் தொடர்புத்துறை அைமச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் மதிப்பையும் பெற்றார். தொலைபேசி கட்டணங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அவருடைய மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது இந்தியா முழுவதும் 1 ரூபாயில் பேசும் ஒன் இந்தியா திட்டம்.

ஆனால் தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு, அழகிரி கும்பல் தாக்குதல், அழகிரியை ரவுடி என சன் டிவி விமர்சித்தது, முதல்வர் கருணாநிதியை புறக்கணித்தது என திடீரென நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளால் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டு பதவியை இழந்து நிற்கிறார் தயாநிதி.

இதனால் யாருக்கு லாபமோ நஷ்டமோ தொலைத் தொடர்புத்துறையும் சாப்ட்வேர் துறையும் ஒரு இளம், எனர்ஜடிக் அமைச்சரை இழந்துவிட்டது.

நன்றி தற்ஸ்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.