Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

தொடருங்கள் சுமோ  
 

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி

  • Replies 136
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2020 at 6:21 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த சுவி அண்ணா, ஏராளன், குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

கவி அருணாச்சலம் அண்ணா, நீங்களும் குமாரசாமியும் கூறுவதைக் கேட்டால் படங்களுக்கு தனித்தனியான விளக்கம் கொடுப்பது நல்லது என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் போட்டவற்றுக்கு இனி எழுத முடியாது. ஏனெனில் எடிட் செய்ய முடியாது. இனிப்பு போடுவதற்கு முயற்சி செய்கிறேன்.  

அவ்வளவு தான் கு சா அண்ணாக்கு ம‌தி‌ப்பு. 😂😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

அவ்வளவு தான் கு சா அண்ணாக்கு ம‌தி‌ப்பு. 😂😉

ஏன் நீங்கள் கண்ணாடியைத் துலைச்சிட்டியளோ ????? சபேஷ்


😃🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளுக்கு  நன்றி தமிழினி,நுணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது தூரத்தில் உணவகங்கள் உள்ள ஒரு தொகுதி தெரிய அங்கே நிறுத்துமாறு கூறி இறங்கிக்கொண்டோம். ஓரிடத்தைத்தெரிவு செய்து அங்குள்ள உணவுகளின் அட்டவணையைப் பார்த்ததும் சரி இங்கேயே உண்ணலாம் என முடிவெடுத்து ஓட்டுனரையும் எம்முடன் உணவருந்த வருமாறு அழைக்க இரு தடவைகள் மறுத்துவிட்டு வந்து ஒரு பக்கமாக அமர்ந்தான். எம்முடன் வந்து அமர்ந்துகொள் என்றவுடன் எழுந்து மூன்று தடவைகள் நன்றி சொல்லி உடலை வளைத்துக் கும்பிட்டான். எமக்கு ஒருமாதிரியாகிவிட்டது. ஏன் இப்படிச் செய்கிறாய் இயல்பாய் இரு என்றதற்கு தன்னை இதுவரை யாரும் இப்படி தம்மோடு இருத்தி உண்டதில்லை என்றான். அதன்பின் மூவரும் உணவைத் தெரிவுசெய்துவிட்டு அவனுடன் உரையாட ஆரம்பித்தோம்.

அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் ஆறு சகோதரர்களுடன் கஷ்டப்பட்டதாகவும் தன் பதின்மூன்றாவது வயதில் வேறு வழியின்றி பெளத்த மடத்தில் சேர்ந்ததாகவும், அங்கு பத்து ஆண்டுகள் இருந்து படித்து பின் வெளியே வந்ததாகவும் அதன்பின் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இப்ப மூன்று வயதில் குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் ஓட்டோ ஓடி வரும் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும் கூறினான். பல சிறுவர்கள் வறுமையினால் பெளத்த மடத்தில் சேர்ந்து ஐந்து பத்து ஆண்டுகள் அங்கிருந்துவிட்டு சிலர் தொடர்ந்தும் இறுக்கப் பலர் வெளியே வந்து தம் அலுவளைப்பார்ப்பது சாதாரணவிடயம் என்று கூறி தன் பேசில் வைத்திருந்த மனைவி மகனின் படத்தைக் காட்டி தனக்கு சொந்தமாக ஒரு ஓட்டோ  வைத்திருக்கத்தான் ஆசை ஆனால் அது எப்ப நிறைவேறுமா தெரியவில்லை என்று கூறிக்கொண்டிருக்க உணவுகளும் எமது மேசைக்கு வந்துவிட்டது.

83245193_10213627978127351_3469773038986

  84811546_10213628067609588_8301168324188

 

83753762_10213627977807343_7624914401899

 

84721121_10213627978247354_5840322908789

83310904_10213628058409358_2498817813968

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

83316365_10213628089010123_4804811615188

83562872_10213628100010398_2162960030075

81582717_10213628157611838_1541161676009

81698352_10213628180732416_1725007222833

83656848_10213628181332431_1632569914487

83490831_10213628181052424_8766595629200

83718661_10213628182132451_8829996982941

83407018_10213628181812443_7625694221931

83571561_10213628182852469_5193004241303

84403947_10213628183172477_3834789811118

83795498_10213628183452484_7884119483554

84393531_10213628184092500_7400561824506

83606956_10213628184692515_6647280124779

83681345_10213628185092525_1540022839661

83758238_10213628185332531_2462261208418

83599907_10213628185612538_8577985159758

83641952_10213628186452559_6200190019429

83439838_10213628187132576_7692182471747

83611073_10213628187452584_9444866472426

84401098_10213628188172602_7242223607416

 

 

82063712_10213628188332606_5983019937319

83545025_10213628188812618_7539479380599

83659068_10213628189452634_5778341479827

83440784_10213628189852644_8283895456077

83234942_10213628190132651_5629034037067

84295268_10213628190252654_3686479092829

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போடத் தவறிய படங்கள் சிலவற்றைப் போட்டுள்ளேன். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும். சில படங்களிலுள்ள முகங்கள் புதிதாக அவர்கள் செய்து பொருத்தியுள்ளனர். பெரும்பாலான முகங்கள் அப்பிடியே இருக்கின்றன. எல்லா முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை தமிழர்களின் முக அமைப்புக்கு ஒத்தவை அல்ல. இழுபட்டதுபோன்ற நீளமான கண் அமைப்பும் அகன்ற அகலமான வாய்க்கும் உரியவர்கள் தமிழர்கள் அல்லர்.
அங்கு அரசாண்ட மன்னர்களின் பெயர்கள் ன் என்பதில் முடிகின்றபடியால் அவர்களும் தமிழர்களாக இருக்கலாம் என்னும் ஊகம் மட்டும் தான் இருக்கிறது. கட்டியவர்கள் சிலரின் பெயர்கள் தமிழ்ப்பெயராக இருப்பதாகக் சில சான்றுகள் இருந்தாலும் அவை தமிழ் மன்னர்களின் பெயர்களா அல்லது தமிழ்ப்பெயர்களை அவர்கள் வைத்திருந்தார்களா என்னும் குழப்பமும் இன்னும் தீராமலேயே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் ஒரிசா,பீகார்,  மகாராஷ்ட்டிரா போன்ற இடங்களில் தமிழர்களின் ஆட்சி பரந்திருந்தது. அங்கெல்லாம் சாளுக்கியர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தமிழை அங்கு பேசவில்லை. சோழமன்னர்களுடன் திருமண உறவுகளும் நடைபெற்றுள்ளனவாம்.

ஆண்வழியான உறவுமுறைகள் தமிழ் நாட்டினுள்ளே மட்டும் இருக்க பெண்வழி உறவுகள் மட்டும் தமிழர் அட்சிசெய்த பகுதிகளில் எல்லாம் இருந்திருக்கின்றனவாம். இலங்கையைக் கூட பல தமிழ் மன்னர்கள் ஆண்டிருந்தாலும் அவர்கள் அங்கு நிலைகொள்ளவில்லை. அதுபோலவே கடாரம் வென்ற சோழ மன்னர்கள் போனபோது இடங்களில் நிலைகொள்ளவுமில்லை. ஆகவேதான் கம்போடியாக் கோயில்களின் கட்டடக்கலை ஒரிசா, நிப்பூர் போன்ற இடங்களில் உள்ள கட்டடக்ககையை ஒத்திருப்பதாக பல அறிஞர்கள் கருத்துகின்றனர்.

வரலாற்றுச் சான்றுகளை நிறுவ முடியாத இவைபோன்ற எத்தனையோ விடயங்கள் எப்போதும் மனதை அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கும். ஒருசிலர் மாற்றமுடியாத நம்பிக்கைகளோடு நகர்ந்துகொண்டே இருக்க சிலரோ ஏற்க முடியாத காரணங்களுக்காய் விடைகளைத் தேடியபடியே இருப்பது  உலக நியதி. அதனாலேதான் நீண்டகால அசைக்கமுடியாத நம்பிக்கைகொண்டு இறுமாந்திருந்த நான் அங்கோர் வாட்டைப் பார்த்தபின்னர்  கனவுகள் கலைய  ஏமாற்றத்தின் வடுக்களோடு பயணத்தைத் தொடர்ந்தேன் அங்கே

 

பயணம் தொடரும் ......

 

 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரலாற்றுச் சான்றுகளை நிறுவ முடியாத இவைபோன்ற எத்தனையோ விடயங்கள் எப்போதும் மனதை அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கும். ஒருசிலர் மாற்றமுடியாத நம்பிக்கைகளோடு நகர்ந்துகொண்டே இருக்க சிலரோ ஏற்க முடியாத காரணங்களுக்காய் விடைகளைத் தேடியபடியே இருப்பது  உலக நியதி.

அருமையான பயணக்கட்டுரை சுமே அக்கா. படங்களும் பிரம்மிக்கவைக்கின்றன. தொடருங்கள்... வாசிக்க ஆவலாய் உள்ளேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

அருமையான பயணக்கட்டுரை சுமே அக்கா. படங்களும் பிரம்மிக்கவைக்கின்றன. தொடருங்கள்... வாசிக்க ஆவலாய் உள்ளேன்...

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி மல்லிகை வாசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்திருக்கும் தமிழினி ரதி, ஈழப்பிரியன் அண்ணா, சபேஷ் ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சியாம் றீப்பில் இன்னும் பல கோயில்கள் இருந்தாலும் நாம் அங்கோர் வாட், Takeo Temple, Perah Kahn Temple, Neak Pean Temple, Ta Som Temple, Ta Prohm Temple, Kravan Temple, Ankor Tom ஆகிய கோவில்களையும் மியூசியத்தையும் மட்டுமே அந்த ஐந்து நாட்களில்  பார்க்க முடிந்தது. மியூசியம் கூட சிறியதாகத்தான் இருந்தது. அங்கு படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் ஒருசில படங்களே எடுக்கமுடிந்தது. அங்கு பல மன்னர்களின் சிலைகள் சிவன்,பிள்ளையார் சிலைகள் எனப் பலதும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு நேரத்தில் பல மதங்கள் கூட கோலோச்சியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தாலும் தமிழ் மன்னர்கள் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. சில சிலைகள் இந்திய மன்னர்களால் பரிசாக வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் இருந்தன.

 

83767076_10213645420123390_5771177186614

83616734_10213645405283019_6656779879473

84400299_10213645326001037_2686571106722

83761906_10213645325601027_2179636743840

83945135_10213645900415397_1689699761277

84682835_10213645900495399_3854111000672

 

83657553_10213645326081039_3817897584484

83643763_10213645327121065_5962513147813

84462496_10213645327441073_6775971423870

83699251_10213645327681079_6190854950961

83753018_10213645401362921_7289913897773

84028477_10213645421643428_2035107220269

83646985_10213645422963461_5275276087910

83910289_10213645468764606_1833720352698

 

இதில் முதலாவது படமும் கடைசி இரண்டு படங்களும் இணையத்தில் எடுத்தவை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில கோவில்களும் ஆயிரம் லிங்கங்கள் தண்ணீரில் இருப்பதாகக் கூறினார்கள். அது சிறிது தூரம் என்பதாலும்  நேரம் இல்லாததாலும் செல்லவில்லை.சியாம் றீப்பில் பெரிதாக சுற்றுலாத் தலங்களைத் தவிர வெளிநாட்டினர் பொருட்களை வாங்கக்கூடிய பெரிய கடைகளோ கட்டடங்களோ பெரிதாக்கத் தென்படவில்லை. கால், கை நகங்களை அழகுபடுத்துதல், மசாச் போன்றவையே எக்கச்சக்கம்.  நாம் இருந்த விடுதியில் நீச்சல் குளம் இருந்தாலும் போவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அன்று மாலை வெளியே போய்விட்டு வந்ததும் மாலை ஆறு மணி இருக்கும் அம்மா நீச்சலடிப்போமா என்றாள் மகள். பலர் இருந்தால் கூச்சமாக இருக்கும். ஆனால் யாருமில்லாமல் இருட்டுக்குள் நீச்சல் என்றதும் ஒருமாதிரித்தான் இருந்தது. நாம் நீந்தப்போகிறோம் என்றதும் வேலையாள் வந்து லைற்றைப் போட்டுவிட்டுப் போக யாருமில்லாமல் அந்த அரைகுறை வெளிச்சத்தில் நீந்துவதுகூட நன்றாக இருக்க ஒரு பதினைந்து நிமிடத்தில் அந்த மகிழ்வை அனுபவிக்க விடாது இடியும் மின்னலும் தோன்ற எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அம்மா இடி ஒன்றும் உங்களுக்கு மேல் விழாது. இன்னும் சிறிது நேரம் நீந்துவோம் என்று மகள் கூறியும் கேக்காது இத்தனை தூரம் வந்து இங்கா உயிர் போகவேண்டும் என்று கூறியபடி  மீண்டும் அறையில் வந்து உடைமாற்றி அடுத்தநாள் phnom Penh (நம் பென்) என்னும் கம்போடியத் தலைநகருக்குச் செல்வதற்கு எமது பொருட்களை அடுக்கத் தொடங்கினோம்.

83521735_10213645636728805_4387683120090

  • கருத்துக்கள உறவுகள்

1000 லிங்கம் பார்க்க போகாமல் விட்டதில் நீங்கள் பெரிதாக ஒன்றும் இழக்கவில்லை.  அது குட்டி குட்டி லிங்கம் ஓடும் ஆற்றில் இருக்கிறது.  தேடினாலும் தெரியாது.  நாங்கள் போகும் போது ஒரு 9 வயது பெடி தானாகவே guide ah வந்து.... அந்தா இருக்கு, இந்தா இருக்கு என்று காட்டியதால் கண்டோம். 

நீங்கள் மிதக்கும் நகருக்கு (floating village) போயிருந்தால் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலர் இருந்தால் கூச்சமாக இருக்கும். ஆனால் யாருமில்லாமல் இருட்டுக்குள் நீச்சல் என்றதும் ஒருமாதிரித்தான் இருந்தது. நாம் நீந்தப்போகிறோம் என்றதும் வேலையாள் வந்து லைற்றைப் போட்டுவிட்டுப் போக யாருமில்லாமல் அந்த அரைகுறை வெளிச்சத்தில் நீந்துவதுகூட நன்றாக இருக்க ஒரு பதினைந்து நிமிடத்தில் அந்த மகிழ்வை அனுபவிக்க விடாது இடியும் மின்னலும் தோன்ற எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அம்மா இடி ஒன்றும் உங்களுக்கு மேல் விழாது. இன்னும் சிறிது நேரம் நீந்துவோம் என்று மகள் கூறியும் கேக்காது இத்தனை தூரம் வந்து இங்கா உயிர் போகவேண்டும் என்று கூறியபடி

அந்த நாடுகளிலையெல்லாம் நீச்சல் குளத்திலை பாம்புகள் இருக்குமாமே....... அதை விட அரை இருட்டிலை நீந்தப்போயிருக்கிறிங்கள்.....பயமாய் இல்லை?????:cool:

Bildergebnis für swimming pool schlanga"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sabesh said:

1000 லிங்கம் பார்க்க போகாமல் விட்டதில் நீங்கள் பெரிதாக ஒன்றும் இழக்கவில்லை.  அது குட்டி குட்டி லிங்கம் ஓடும் ஆற்றில் இருக்கிறது.  தேடினாலும் தெரியாது.  நாங்கள் போகும் போது ஒரு 9 வயது பெடி தானாகவே guide ah வந்து.... அந்தா இருக்கு, இந்தா இருக்கு என்று காட்டியதால் கண்டோம். 

நீங்கள் மிதக்கும் நகருக்கு (floating village) போயிருந்தால் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். 

 

அதற்குப் போவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் உடனே போய்விட்டு வரமுடியாது ஒருநாள் அதனுடன் போய்விடும் என்பதனால் போகவில்லை. அத்தோடு ஏற்கனவே வேறு ஒரு நாட்டிலும் அதுபோல் ஒன்றைப் பார்த்திருந்ததால் பெரிதாகஆர்வம் எழவில்லை.

 

10 hours ago, குமாரசாமி said:

அந்த நாடுகளிலையெல்லாம் நீச்சல் குளத்திலை பாம்புகள் இருக்குமாமே....... அதை விட அரை இருட்டிலை நீந்தப்போயிருக்கிறிங்கள்.....பயமாய் இல்லை?????:cool:

Bildergebnis für swimming pool schlanga"

என்ர ஐயோ. உந்தக் கோதாரியை எனக்கு கண்ணிலையும் காட்டக் கூடாது. முருகா எங்களைக் காப்பாத்தினாய்.😧😟

பயத்தில நான் முதல்ல தண்ணியில இறங்கேல்ல . மகள் இறங்கி நீந்தத் தொடங்கின பிறகுதான் இறங்கினது. உப்பிடியான படத்தைப் பார்த்திருந்தால் நீச்சல் குளப்பக்கம் போயே இருக்கமாட்டன் .🙈

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கு நன்றி உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் ஒன்பது மணிக்கு விமான நிலையம் செல்லக் கிளம்பினால் அன்றும் நல்ல மழை. என்னடா இது நாம்வரும் போதும் போகும்போதும் மழை பெய்கிறதே. இதுக்கும் எமக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ என்ற ஒரு குருட்டு ஆசை மனதில் ஓட என்னுள்ளேயே சிரித்துக்கொண்டேன். அங்கு நான் நான்கு நாட்கள் திரிந்தும் கண்ணில் படாத ரம்புட்டான் பழம் விமான நிலையம் செல்லும் வழியில் குவித்திருந்தது. வாங்கவேண்டும் போல் ஆசை எழுந்தாலும் அந்த மழையில் இறங்கி வாங்குவதற்கு மனம் இடம்தராமையால் ஏமாற்றத்தையும் சுமந்தபடி விமானத்தில் ஏறி ஒரு மணி நேர விமானப் பயணத்தின் பின் phnom Penh (நம் பென்) இல் இறங்கி அங்கும் தங்குவிடுதியினர் இலவசமாக அனுப்பும் வாகனத்துக்காகக் காத்திருக்க, ஒரு ஓட்டோ போன்ற ஒன்றிற்கு அருகே எம் பொதிகளை வைத்தபடி எம்மை உள்ளே ஏறும்படி ஓட்டுநர் கூற ஏறிஅமர்ந்தோம். ஓட்டோவாக இருந்தாலும் இது சிறிது பெரிதாக சுற்றிவர மூடப்பட்டு ஓட்டுனருக்கு எமக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவருடன் இருந்தது. மேலே விசிறியும் ஏசியும்கூட இருந்தன. புதிய மொடலில் இப்படி வடிவமைத்துள்ளனராக்கும்.

இது தலைநகர் என்பதால் அதிகமான கட்டடங்கள் வீதியெங்கணும் காணப்பட்டன. வீதிகள் சியாம் றீப்பிலும் பார்க்கப் பெரிதாகவும் சிறிதாகவும் இருந்தன. ஆனாலும் வீதியெங்கும் தொலைபேசி இணைப்புகளுக்கான வயர்கள் அதிகளவில் கறுப்பாகத் தொங்கியபடி  வீதியின் ,கட்டடங்களின்  அழகைக் கெடுத்தன. சில வீதிகளின் மூலைகளில் குப்பைகளும் குவித்து கிடந்தன. சியாம் றீப்பில் அனுபவித்துவிட்டுவந்த அமைதிக்கும் இயற்கைக் காற்றுக்கும் எதிர்மாறாக இங்கேயெல்லாம் தெரிந்தன. தங்குவிடுதியை அண்மித்தவுடன் வீதி சிறிதாக இருக்க ஏன் இங்கு தங்குவிடுதியைத் தெரிவுசெய்தாள் மகள் என மனதில் எண்ணியபடி ஓட்டோவிலிருந்து  இறங்க மிக்க அழகோடு தெரிந்தது விடுதி. ஆனால் அதற்கு முன்பாக நான் கூறிய கறுப்பு நிற வயர்களும் தொங்கிக்கொண்டிருந்தன.

வாசலிலே பெரிய புத்தர் நிட்டையிலிருக்க இருபக்கமும் நல்ல வேலைப்பாட்டுடன் பூஞ்செடிகள் வைத்திருந்தமை என் மனத்தைக் கவர்ந்தது. தாமரைப் பூக்கள் ஒரு சிறு பித்தளைக் குடம் போன்ற ஒன்றுள்  நடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தண்டுகள் நீருக்கு மேலே ஒரு அடிக்குமேல் வளர்ந்து பூத்திருந்தன. நான் அச்சரியத்துடன்  பார்த்தால் தண்ணீருக்குள் சிறிய இன மீன்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அம்மா முதலில் உள்ளே வாருங்கள் என்று மகள் அழைக்க உள்ளே சென்றால் மிகப் பெரிய விநாயகர் சிலை ஒன்று வழிமறித்து நிற்கிறது. சிறிய பித்தளை பாத்திரங்களில் தாமரைப்பூவை அழகாக அடுக்கி வைத்திருக்கும் அழகே தனிதான்.

தங்குவிடுதியின் வரவேற்பிடத்தின் வேலைப்பாடு மனதை மயக்க நான் சுற்றிவர பார்த்தபடி மகளைப் பின் தொடர்ந்து செல்கிறேன்.  

85045868_10213652581662424_8031811859696

84646651_10213652582102435_2502457609773

83752614_10213652581422418_5403017232861

84137302_10213652579382367_4905245229222

83754813_10213652579702375_2523513089941

84177489_10213652582982457_7858654519377

83653525_10213652998352841_7514256579563

84109378_10213652630223638_3610608413941

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் பச்சைகளுக்கும் நன்றி தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2020 at 11:06 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லா முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை தமிழர்களின் முக அமைப்புக்கு ஒத்தவை அல்ல.

 

On 1/28/2020 at 10:11 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

82063712_10213628188332606_5983019937319

இந்தப் படத்திலுள்ள சிலைகளைப் பார்த்தால் முக அமைப்பு, தமிழ் பெண்களைப்போல், அதுவும் யாழ்ப்பாணத் தமிழிச்சிகள்போல் தெரிகிறதே....🤔

  • கருத்துக்கள உறவுகள்

 

On 1/29/2020 at 3:36 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லா முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை தமிழர்களின் முக அமைப்புக்கு ஒத்தவை அல்ல. இழுபட்டதுபோன்ற நீளமான கண் அமைப்பும் அகன்ற அகலமான வாய்க்கும் உரியவர்கள் தமிழர்கள் அல்லர்.

தமிழ் பெயர்களாக இருந்தாலும் தமிழர்களுடையதாக இருக்கக்கூடாது ஏனென்றால் இதற்கும் உரிமை கோரி சண்டை போடுவாங்கள் 😎😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

 

இந்தப் படத்திலுள்ள சிலைகளைப் பார்த்தால் முக அமைப்பு, தமிழ் பெண்களைப்போல், அதுவும் யாழ்ப்பாணத் தமிழிச்சிகள்போல் தெரிகிறதே....🤔

இந்தச் சிலை மட்டும்தான் ஆதாரம் அண்ணா தமிழர்களது என்பதற்கு. ☺️😂

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தமிழ் பெயர்களாக இருந்தாலும் தமிழர்களுடையதாக இருக்கக்கூடாது ஏனென்றால் இதற்கும் உரிமை கோரி சண்டை போடுவாங்கள் 😎😎

உருப்படியா ஒண்டும் செய்யாமல் சண்டைமட்டும் போடுவாங்கள் 🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு கிடைத்தது நான்காம் மாடி. மேலே செல்வதற்கு இரண்டு தானியங்கு தூக்கிகள் இருந்தன. விடுதி வேலையாள் எம் பயணப்பொதிகளைக் கொண்டுசென்று அதற்கு அருகே வைத்துவிட்டுக் காத்திருக்க அதன் இருபுறமும் கூட இரு பெரும் கூசா போன்ற உயரமான பாத்திரத்தில் தாமைரைப்பூக்கள் அலங்கரிக்க உள்ளே நீரில் சிறிய அழகிய மீன்கள் ஓடித்திருந்தன. மேலே சென்று எம் அறையைத் திறந்து உள்ளே சென்றால் நான்குபேர் தங்கக் கூடிய பெரிய அறை. அந்த அறை  ஒரு நாளுக்கு $ 40 மட்டும்தான். பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு முதல் வேலையாக போனை சாச்சில் போடுவோமென்று தேடினால் ஆக ஒரே ஒரு சொக்கெற் மட்டுமே கட்டிலுக்கு அருகாமையில் இருந்தது. மற்றது எதிர்ப்பக்கமாக தூரத்தில் இருக்க இந்தப் பெரிய அறை இருந்து என்ன பிரயோசனம். பக்கத்திலேயே இன்னுமிரண்டு சொக்கற்றைப் போட்டிருக்கலாம் என்று சொல்ல இது என்ன புதிய கட்டடமா அம்மா. முன்னர் கட்டும்போது தொலைபேசிப் பயன்பாடு பெரிதாக இருந்திருக்காது என்று கூற நான் வாய் மூடிக்கொண்டேன்.

மேலே எட்டாம் மாடிவரை தானியங்கு தூக்கிகள் இருக்கின்றன. ஒன்பதாம் மாடியில் தான் உணவகமும் நீச்சல் குளமும் இருக்கின்றன. ஒன்பதாம் மாடிக்குப் படிகளில் தான் செல்லவேண்டும் எனவும்  வரவேற்புப் பெண் கூறியிருந்தாள். சரி மேலே சென்று பார்த்து வருவோம் என எண்ணியபடி கிளம்பினோம். எட்டாம் மாடியை அடைந்ததும் ஒரு பணியாளர் நின்று ஒன்பதாம் மாடிக்கு காலணிகளை அணிந்துகொண்டு போக முடியாது என்று கூறி காலணிகள் வைக்கும் இடத்தைக் காட்டுகிறார். உணவகம் அழகாக இருக்கிறது வெளியே சென்றால் நீச்சல் குளமும் அழகாய்த்தான் இருக்கின்றது. அங்கிருந்து வெளியே பார்த்தால் கட்டடங்கள் ஒழுங்கற்றுத் தெரிகின்றன. ஒருபக்கம் மட்டும் அழகிய கட்டடங்கள் தெரிய அது என்ன என்று கேட்கிறோம். அதுதான் அரச மாளிகை என்கிறார். அதுவும் எமது லிஸ்ட் இல் இருக்கு அம்மா என்கிறாள் மகள். இங்கு நாம் பார்க்கவேண்டிய சில இடங்கள்  அண்மையிலேயே அமைந்துள்ளன. இரண்டு இடங்களுக்குத்தான் வாகனத்தில் செல்ல வேண்டும். ஓட்டோவில் ஏறித்திரிந்தால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. எனவே நடப்பதற்கு மனத்தைத் தயார் செய்யுங்கள் என்று மகள் முதலே எச்சரிக்கை விடுத்துவிட்டாள்.

உங்களுக்கு இப்ப உணவு வேண்டுமா? அல்லது வெளியே போய் உண்போமா என்றதற்கு இங்கேயே உண்ணுவோம் இப்போது. உணவகமும் பார்க்க நன்றாக இருக்கிறது என்றபடி உள்ளே நுழைந்தால் அழகிய வேலைப்பாட்டுடன் அமைத்திருந்தனர் உணவகத்தை. கீழே அமர்ந்து உண்பதற்கும்  வசதிசெய்திருக்கின்றனர். பணியாளர் வணக்கம் கூறி வரவேற்று ஓரிடத்தைக் காட்ட சென்று அமர்ந்தோம். உணவுகளின் படத்தைப் பார்க்க அழகாக இருந்தாலும் சில உணவுகளின் உள்ளடக்கம் பிடிக்காததாக இருக்க ஒரு பத்து நிமிடமாகியும் உணவைத்த தெரிவுசெய்ய முடியவில்லை.

சரி அம்மா முதலில் குடிப்பதற்கு ஓடர் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து பார்க்கலாம் என்றவுடன் அந்தப் பக்கத்தை திருப்பிப் பார்த்துக்கொண்டு போனால் கண்ணில் படைத்து 'பீனா கொலடா' என்ற பெயர். எங்கோ பார்த்த சொல்லாக இருக்கிறதே என்று பார்த்தால் பட் என்று நினைவில் வந்தது சாத்திரி எழுதிய கதையின் பெயர் அதுவென்று. சரி அதையும் ஒருக்கால் குடித்துப் பார்த்திடுவோம் என்று எண்ணியபடி இதை ஓடர் செய்யும்படி கூறினால் அதற்குள் ரம்மும் போட்டிருக்கம்மா அதையா குடிக்கப் போகிறீர்கள் என்கிறாள் மகள். அதில் நின்ற பணியாளைக் கூப்பிட்டு இது வெறிக்குமா என்று கேட்க அவள் சிரித்துவிட்டு இல்லை மாம் என்கிறாள். இதை மொக்டெய்ல் என்று கூறுவது. தேங்காய்ப் பால், சிறிது ரம், அன்னாசிப்பழம்,செரி இவற்றோடு ஐசும் சேர்த்து  
 அடித்துத் தருவார்கள். எண்றுவிட்டுச் செல்கிறாள்.

அதன் பின் உணவுகளை ஒருவாறு தெரிவு செய்ய பானங்கள் வந்து சேர்கின்றன. நான் ஒருவாய் உறிஞ்சிப் பார்த்துவிட்டு சுவையாகத்தான் இருக்கிறது என்று கூறுகிறேன். என்றாலும் நீங்கள் கம்போடியா வந்து அல்ககோல் குடித்துவிட்டீர்களே. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று மகள் என்னைக் காலாக்கிறாள். உணவுகள் வருகின்றன. பார்க்க அழகாகவும் சுவையாகவும் இருக்கின்றன. உண்டு முடித்ததும் பணியாளர் கணக்குச் சிட்டையைக் கொண்டுவருகிறார்.  $ 27 வருகிறது. நாம் பணத்தை எடுத்து வைக்க இங்கு நீங்கள் பணம் செலுத்த முடியாது. நீங்கள் தான் வெளியே செல்லும்போது பணத்தையும் செலுத்திவிட்டுச் செல்லலாம் என்று சொல்ல எழுந்து வருகிறோம்.

84937182_10213665045614015_2567338184610

84957665_10213665048734093_2828128053362

85071425_10213665049014100_2710399379121

85061338_10213665049174104_1111888203104

 

85203460_10213665047294057_3145631492084

83793035_10213665045894022_7050129103453

84962944_10213665048374084_8900564193262

 

83755542_10213665152536688_5382949848574

84415199_10213665069254606_4543897901054

84337692_10213665056174279_6312627697688

83766003_10213665043613965_3396232439985

83809572_10213665043773969_3522332447867

83845289_10213665044613990_3884515804305

83797980_10213665045014000_9075168057092

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி சுவி அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி தமிழினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.