Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-720x450.jpg

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை!

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், ”தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது.

நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது.

மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட  இந்த கோயில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,  பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு,  தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பெப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  ஏனெனில்,  தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/தஞ்சைப்-பெருவுடையார்-கோய/

  • கருத்துக்கள உறவுகள்

"தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"

 
"தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"படத்தின் காப்புரிமை Getty Images

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள குடமுழுக்கு, ஆகம விதிகளின் படியே நடைபெறுமென அந்தக் கோவிலின் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோவிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தக் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஜி. திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கடைசியாக பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா எப்போது, எந்த மொழியில் நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு மனுதாரர் தரப்பு, "இதற்கு முன்பாக 1997-98ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டது" என்று கூறியது.

ஆனால், அந்த சமயத்தில் தமிழ் அர்ச்சகர்கள் இல்லை என்றும் இப்போது சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிகளை அரசே வழங்கியிருக்கிறது. ஆகவே தமிழில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

"தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கிடையில், பெரிய கோவில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு குறிப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குட முழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், 2002ஆம் ஆண்டு அக்டோபர் 21, 22ஆம் தேதிகளில் அனைத்து உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து ஒரு ஆகம கருத்தரங்கில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஆகம முறைப்படி அமைந்த கோவில்களில் ஆகம முறைப்படியே குடமுழுக்கு நடைபெற வேண்டுமென அத்தீர்மானம் கூறியது. இது தொடர்பாக ஆதீனங்களும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, கோவிலில் உள்ள பழக்கவழக்கத்தின் அடிப்படையிலும் ஆகம வல்லுனர்களின் கருத்துருவின் அடிப்படையிலும் குடமுழுக்கு விழா நடைபெறும் என தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென மனுதாரர் கூறியிருந்த நிலையில், தேவஸ்தானம் சமர்ப்பித்த குறிப்பில் அது தொடர்பாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் தஞ்சைக் கோவிலின் தேவஸ்தானம் இணைக்கப்படவில்லை என்பதால், அவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/sport-51194189

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும்  இலத்தீன் மொழியில் செய்யப்பட்டுவந்த ஆராதனைகளை கிறீஸ்தவர்கள் தங்கள் தாய் மொழியில் செய்யும் வழக்கம் எழுபதுகளின் பின்னர்  நடைமுறையில்  வந்தது.  

தமிழ் மொழியில் பூசை செய்வதில் தவறேதும் உண்டோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

உலகெங்கும்  இலத்தீன் மொழியில் செய்யப்பட்டுவந்த ஆராதனைகளை கிறீஸ்தவர்கள் தங்கள் தாய் மொழியில் செய்யும் வழக்கம் எழுபதுகளின் பின்னர்  நடைமுறையில்  வந்தது.  

தமிழ் மொழியில் பூசை செய்வதில் தவறேதும் உண்டோ ? 

 கோர்வையாக உச்சரிக்கபடும் சில தொடர் ஒலி வடிவங்கள் ஆற்றல் மிகுந்தவை பலன் அளிக்க கூடியன.( சமஸ்கிருதம் ) என்டு அவாள் சொல்லினம் .. தாங்கள் தமிழுக்கு அந்த சக்தி இல்லையா என்டு கேட்பது புரிகிறது.. ☺️

தோழர் , உண்மையில் மனிதன் தொண்டை குழியில் இருந்து வரும் ஓங்காரத்திற்கும் இந்த பிரபஞ்சத்தின் ஓங்காரத்திற்குமே இடையே பாரிய இடைவெளி உண்டு. அப்புறம் மிகுதி எல்லாம் மிலிபன் விசுகோத்து..😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 கோர்வையாக உச்சரிக்கபடும் சில தொடர் ஒலி வடிவங்கள் ஆற்றல் மிகுந்தவை பலன் அளிக்க கூடியன.( சமஸ்கிருதம் ) என்டு அவாள் சொல்லினம் .. தாங்கள் தமிழுக்கு அந்த சக்தி இல்லையா என்டு கேட்பது புரிகிறது.. ☺️

தோழர் , உண்மையில் மனிதன் தொண்டை குழியில் இருந்து வரும் ஓங்காரத்திற்கும் இந்த பிரபஞ்சத்தின் ஓங்காரத்திற்குமே இடையே பாரிய இடைவெளி உண்டு. அப்புறம் மிகுதி எல்லாம் மிலிபன் விசுகோத்து..😊

 

தோழர் இது பிரபஞ்ச ஓங்காரமா (ரொம்ப காரமா இருக்குது) அல்லது அனிருத்தின் இசையா ........இப்பல்லாம் கொப்பி பண்ணி போடுவதில்லை அவரின் தர்பார்தான் நடக்குது.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்

குடமுழுக்கு வழக்கும் அதன் போக்கும்:

தஞ்சைப் பெரிய கோயில் தமிழ் வழி குடமுழுக்கு தொடர்பான வழக்கில் இன்று வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்துள்ளன.

அதன் அடிப்படையில் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வர இருக்கின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கு ஒன்றில் வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன் அவர்கள் தமிழ் வழியில் குடமுழுக்கு வேண்டும் என்று வாதாடி தனது வாதத்தை இன்று முன்வைத்தார். அவருடைய வாதம் சரியாக நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தது. 

அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்கது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு விரிவாக பதிவு செய்கிறேன். 

80 வயதை தொடுகின்ற ஐயா சிகரம் செந்தில்நாதன் அவர்களோடு, அவருடைய வாதத்தை கேட்டிருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 

அரசுத் தரப்பை பொறுத்தவரை ஏற்கனவே மகாமண்டபத்தில் உள்ள நடராஜர் அலங்காரம் இடம், யாகசாலை மேலும் மகாமண்டபம் இவைகளில் தமிழ் முறையில் ஓதப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று வழக்கின் நிறைவில் ஐந்து நிலைகளிலும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து இருக்கின்றது. 

ஐந்து நிலைகள் என்பது கருவறை, கோபுரக் கலசம் மற்றும் ஏற்கனவே உறுதி அளித்திருந்த மூன்று இடங்கள் என்று நினைக்கின்றோம்.

தெளிவான தீர்ப்பு வந்த பிறகு தெளிவாக எழுதுவோம்...

இன்றைய வழக்கானது, வீரத்தமிழர் முன்னணி சார்பாக நாம் தொடுத்திருந்த வழக்கு, தோழர் திருமுருகன் தொடுத்திருந்த வழக்கு மற்றும் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பாக ஐயா மணியரசன் அவர்கள் தொடுத்திருந்த வழக்கு இந்த மூன்று வழக்குகளுடன்,  இணை வழக்குகளாக கரூர் தமிழ் ராஜேந்திரன் தொடுத்திருந்த வழக்கு மற்றும் செந்தமிழ் வேள்விச் சதுரர் ஐயா சத்தியவேல் முருகனார் தொடுத்திருந்த இடையீட்டு மனுக்கள் என ஐந்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டது. 

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், தமிழ் வழி குடமுழுக்கு கூடாது என்று எதிர் தரப்பில் வாதாடிய முன்னாள் திராவிடர் கழக தீவிர உறுப்பினர் இந்நாள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் திரு கருணாநிதி அவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்புப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட குடும்பத்தில் இருந்துவந்த திராவிட பின்னணியில் வளர்ந்த ஐயா யானை ராஜேந்திரன் அவர்கள் இன்று முழு சங்கிகள் ஆகவே மாறி வாதாடியது அருமையிலும் அருமை.

விரிவாக தீர்ப்பு வந்தவுடன் எழுதுகிறேன்.

கருவறையிலும், கலசத்திலும் தமிழ் 

செந்தில்நாதன் துரைராசன்
 

-முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோயில் தமிழ் வழி குடமுழுக்கு கோரிக்கையில் நாம் கண்ட வெற்றி

அரசு தரப்பில் வெறுமனே தமிழிலும் குடமுழக்கு நடத்துவோம் என்று சொன்னதை.., 

பின்னாளில் நீதிமன்றத்தில் அர்த்தமண்டபம் மகா மண்டபம் நடராஜர் அலங்கார மண்டபம் இவைகளில் மட்டுமே தமிழ் பயன்படுத்தப்படும் படும் என்று சொன்னதை...

இந்த மூன்று இடங்களில் மட்டும் இன்றி "கருவறையிலும்",  "கலசத்திலும்" தமிழ்முறை பாராயணம், தேவாரம் பாட வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்திருந்தோம். 

அந்த கோரிக்கைக்கு அரசு அடிபணிந்து ஒத்துக் கொண்டிருக்கின்றது. 

இந்த தீர்ப்பை பொருத்தவரை நமக்கான மிகப்பெரிய வெற்றி... 

மனுக்கள் தள்ளுபடி என்பது நாம் கொடுத்திருந்த வழக்கானது "தமிழில் மட்டுமே" குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தொடுத்து இருந்தோம். இரண்டிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று அரசு முடிவு எடுத்ததனால், நமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. 

நமது மனுக்களின் பெயரில்தான் அரசு ஐந்து நிலைகளிலும் தமிழை பயன்படுத்த ஒத்துக் கொண்டது. அரசு ஒத்துக் கொள்வதை நீதிமன்றம் கண்காணிக்கும் அளவிற்கு சென்று இருக்கின்றது. 

எனவே இது நமக்கான வெற்றி... 

ஊடகங்கள் இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்பதற்காக மனு தள்ளுபடி என்பதையே தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

நமது கோயில் 
நமது சிவன் 
நமது மொழி 

அனைத்து தளங்களிலும் ஒலிக்க இருக்கிறது.

அவசியம் இந்த குடமுழுக்கில் நாம் தமிழர்களாய்  பங்கேற்போம். 

இது நமக்கான வெற்றி கொண்டாடுவோம்...

செந்தில்நாதன் துரைராசன்
 

-முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

தென்னாடுடைய, சிவனே... போற்றி.

 

Image may contain: text

இது சரியான முடிவுதான். தமிழில் அர்ச்சனை செய்தால் காணிக்கை தட்டில் பணம் விழும் என்று தெறிந்தால் தமிழ் தேவபாஷையாகிவிடும். இதை பக்தகோடிகள்தான் முடிவு செய்யவேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - சிறப்பு நேரலை

 

 

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.