Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

(முகநூல் வழி)

  • Replies 62
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். ஆண்வழி சமூகம் ஆண்கள் செய்யும் அநீதிகளை மறைத்து மறந்து அவர்களைத் தெய்வமாக்கும். என்னைப் பொறுத்தவரை புத்தர் ஒரு கோழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஓடியதால் 
அரசாளும் பாக்கியம் ரகுலனுக்குத்தான் இருந்தது 
உள்ளுக்கு இருந்தவர்கள் இதை தெரிந்து கொண்டு கொண்டு 
யசோதாவையும் ராகுலனையும் தள்ள தொடங்கினார்கள் என்பதுதான்  உண்மை. 

புத்தன் திரும்பிய போது எதுவும் இன்றி அவர்கள் வெறும் வீட்டில் இருந்தார்கள் 

யசோதா இன்னொன்றும் புத்தனை கேட்டாள் 
எனக்கு உங்களிடம் இருந்து எதுவும் வேண்டாம் 
உங்கள் மகனுக்கு ஒரு தந்தையாக எதை கொடுக்க போகிறீர்கள் என்று?

புத்தன் "முழு புத்தன்" ஆகியதே அப்போதுதான் 
சிரித்துக்கொண்டே ஊர்முழுதும் தண்டி சாப்பிடும் தட்டைதான் தன் மகனிடம் கொடுத்தான். 

46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். ஆண்வழி சமூகம் ஆண்கள் செய்யும் அநீதிகளை மறைத்து மறந்து அவர்களைத் தெய்வமாக்கும். என்னைப் பொறுத்தவரை புத்தர் ஒரு கோழைதான்.

ஒரு 10 வருசுமாவது தனியாக சென்று காட்டில் இருந்துவிட்டு வந்து சொன்னால் 
ஏற்றுக்கொள்ளலாம் ... லண்டன் சிட்டிக்குள்ளே இருந்துகொண்டு இப்படி சொல்வதை 
எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தர் ஒரு சுயநலவாதி. எல்லாவற்றையும் அனுபவித்த பின்னர் ஞானோதயம் கிடைத்ததாம்.
இப்படிப்பட்டவரின் மதவழியை பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். ஆண்வழி சமூகம் ஆண்கள் செய்யும் அநீதிகளை மறைத்து மறந்து அவர்களைத் தெய்வமாக்கும். என்னைப் பொறுத்தவரை புத்தர் ஒரு கோழைதான்.

புத்தர் ஒரு கோழை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது.

ஆனால் பெண்வழிச் சமூகங்களில் ஆண்களின் வலியை யார் பேசுவது ?

  • கருத்துக்கள உறவுகள்

"கொக்கென்று நினைத்தாயோ கொங் கணவா"

இதுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

புத்தர் ஒரு சுயநலவாதி. எல்லாவற்றையும் அனுபவித்த பின்னர் ஞானோதயம் கிடைத்ததாம்.
இப்படிப்பட்டவரின் மதவழியை பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

காட்டிற்குப் போய் தவம் இருப்பவர்கள் யாரும் ஞானோதயம் அடைய முடியாது.  

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 1 person

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

யசோதரா துறவியாய் வாழ்ந்தாள் என்று யார்  உங்களுக்குத் சொன்னது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

காட்டிற்குப் போய் தவம் இருப்பவர்கள் யாரும் ஞானோதயம் அடைய முடியாது.  

ஞானோதயம் எப்படி நிகழ்கிறது?
முக்தியை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்? ஞானோதயம் எப்படி நிகழ்கிறது? ஞானோதயம் நிகழும்போது கர்மா இருக்குமா? ஞானோதயம் அடைந்த பின்னர் உடலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்தப் பகுதி அமைகிறது. 

40623-gnanodayam-eppadi-nigalgirathu.jpg

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/gnanodayam-eppadi-nigalgirathu

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

புத்தர் ஒரு சுயநலவாதி. எல்லாவற்றையும் அனுபவித்த பின்னர் ஞானோதயம் கிடைத்ததாம்.
இப்படிப்பட்டவரின் மதவழியை பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

புத்தன் அங்கேயே இருந்து இருந்தால் இன்னமும் அனுபவித்து இருக்கலாம் 
எல்லவற்றையும் அவன் விரும்பி அனுபவிக்கவில்லை ... அவன் துறவம் கொள்ளக்கூடாது 
என்பதனால் அவனை இன்பத்துக்கு அடிமையாக்க அவர்கள் செய்தது. 
அதையும் மீறி ஒருவன் இந்த உலகில் சென்று இருக்கிறான் என்றால் ...

அவன் கடவுளுக்கு சமம்தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

காட்டிற்குப் போய் தவம் இருப்பவர்கள் யாரும் ஞானோதயம் அடைய முடியாது.  

அது அவர் அவர் அறிவை பொறுத்தது 
எனது அறிவுக்கு உட்பட்துதான் எனது பார்வை 
அதுக்காக எல்லோர் அறிவும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை.

எமது முன்னோர்கள் நான்காம் பரிமாணம் பற்றி 3000-4000 வருடம் முன்பு 
பேசுகிறார்கள் நான்முகன் என்றெல்லாம் இருக்கிறது 

3000-4000 வருடம் பின்பு வந்த எனக்கு நான்காம் பரிமாணம் புரியவில்லை தெரியவில்லை 
அமேசான் காடுகளில் வாழ்பவர்களுக்கு  மூன்றாம் பரிணாமமே தெரியாது 
அவர்களிடம் ஒரு இன்ஜினியரிங் வரைவை கொடுத்தால் அவர்களுக்கு வெறும் கோடுகள் 
மட்டுமே தெரியும். 

அதுக்காக நான்காம் பரிமாணம் இல்லை என்று ஆகிவிடுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

புத்தன் அங்கேயே இருந்து இருந்தால் இன்னமும் அனுபவித்து இருக்கலாம் 
எல்லவற்றையும் அவன் விரும்பி அனுபவிக்கவில்லை ... அவன் துறவம் கொள்ளக்கூடாது 
என்பதனால் அவனை இன்பத்துக்கு அடிமையாக்க அவர்கள் செய்தது. 
அதையும் மீறி ஒருவன் இந்த உலகில் சென்று இருக்கிறான் என்றால் ...

அவன் கடவுளுக்கு சமம்தான்! 

அறம் என்றால் என்ன ? 

தனக்குரிய கடமையைச் செவதுதானே அறம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

புத்தர் ஒரு கோழை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது.

ஆனால் பெண்வழிச் சமூகங்களில் ஆண்களின் வலியை யார் பேசுவது ?

ஆண்களின் வலியை அவர்கள் தான் பேச வேண்டும்.

10 hours ago, Maruthankerny said:

புத்தன் ஓடியதால் 
அரசாளும் பாக்கியம் ரகுலனுக்குத்தான் இருந்தது 
உள்ளுக்கு இருந்தவர்கள் இதை தெரிந்து கொண்டு கொண்டு 
யசோதாவையும் ராகுலனையும் தள்ள தொடங்கினார்கள் என்பதுதான்  உண்மை. 

புத்தன் திரும்பிய போது எதுவும் இன்றி அவர்கள் வெறும் வீட்டில் இருந்தார்கள் 

யசோதா இன்னொன்றும் புத்தனை கேட்டாள் 
எனக்கு உங்களிடம் இருந்து எதுவும் வேண்டாம் 
உங்கள் மகனுக்கு ஒரு தந்தையாக எதை கொடுக்க போகிறீர்கள் என்று?

புத்தன் "முழு புத்தன்" ஆகியதே அப்போதுதான் 
சிரித்துக்கொண்டே ஊர்முழுதும் தண்டி சாப்பிடும் தட்டைதான் தன் மகனிடம் கொடுத்தான். 

ஒரு 10 வருசுமாவது தனியாக சென்று காட்டில் இருந்துவிட்டு வந்து சொன்னால் 
ஏற்றுக்கொள்ளலாம் ... லண்டன் சிட்டிக்குள்ளே இருந்துகொண்டு இப்படி சொல்வதை 
எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது? 

நான் என்ன ஞானமடைந்துவிட்டேன். என்னை வழிபடுங்கள் என்றா சொல்கிறேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் என்ன ஞானமடைந்துவிட்டேன். என்னை வழிபடுங்கள் என்றா சொல்கிறேன்.😎

நான் கடவுள் அல்ல, என்று புத்தர் சொன்னதாகவும் தெரிகிறது, ஆனாலும் புத்தரைக் கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

அது அவர் அவர் அறிவை பொறுத்தது 
எனது அறிவுக்கு உட்பட்துதான் எனது பார்வை 
அதுக்காக எல்லோர் அறிவும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை.

எமது முன்னோர்கள் நான்காம் பரிமாணம் பற்றி 3000-4000 வருடம் முன்பு 
பேசுகிறார்கள் நான்முகன் என்றெல்லாம் இருக்கிறது 

3000-4000 வருடம் பின்பு வந்த எனக்கு நான்காம் பரிமாணம் புரியவில்லை தெரியவில்லை 
அமேசான் காடுகளில் வாழ்பவர்களுக்கு  மூன்றாம் பரிணாமமே தெரியாது 
அவர்களிடம் ஒரு இன்ஜினியரிங் வரைவை கொடுத்தால் அவர்களுக்கு வெறும் கோடுகள் 
மட்டுமே தெரியும். 

அதுக்காக நான்காம் பரிமாணம் இல்லை என்று ஆகிவிடுமா? 

நான் கேட்டது, புத்தர் ஞானோதயம் அடைந்ததைப்பற்றி.

பரிணாமங்களைப்பற்றிக் கேட்கவில்லை. 

இந்த நவீன காலத்தில்கூட,  நீங்கள் சொல்லும் பரிணாமங்கள் என்றால் என்னவென்று  தெரியாமல் இருக்கிறார்கள் -  பெரும்பாலான மக்கள்.

8 hours ago, குமாரசாமி said:

ஞானோதயம் எப்படி நிகழ்கிறது?
முக்தியை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்? ஞானோதயம் எப்படி நிகழ்கிறது? ஞானோதயம் நிகழும்போது கர்மா இருக்குமா? ஞானோதயம் அடைந்த பின்னர் உடலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்தப் பகுதி அமைகிறது. 

40623-gnanodayam-eppadi-nigalgirathu.jpg

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/gnanodayam-eppadi-nigalgirathu

ஞானோதயம், கர்மா என்பதெல்லாம் ஒரு பிதற்றல்.

ஒருவர் காட்டிலோ, வீட்டிலோ தவம் செய்தால் ஒருபோதும் ஞானோதயம் பெற முடியாது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Paanch said:

நான் கடவுள் அல்ல, என்று புத்தர் சொன்னதாகவும் தெரிகிறது, ஆனாலும் புத்தரைக் கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். 

புத்த மத கிரந்தங்களில், புத்தர் கடவுள் என்று சொன்னதாக இல்லை.

புத்தரின் சீடர்கள், கடவுளைப்பற்றிக் கேட்கும்போது அவர் அமைதியாக இருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

புத்தர் போதித்த அநேக விடயங்கள் புத்த மதக் கிரந்தங்களில் இல்லை என்றும், அவர் ஒரு கடவுளை வணங்கி வழிபட்ட ஒரு மனிதர் என்றும், தற்போது இலங்கையில் உள்ள சிரேஷ்ட புத்த பிக்குகள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

அது அவர் அவர் அறிவை பொறுத்தது 
எனது அறிவுக்கு உட்பட்துதான் எனது பார்வை 
அதுக்காக எல்லோர் அறிவும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை

ஒரு 10 வருசுமாவது தனியாக சென்று காட்டில் இருந்துவிட்டு வந்து சொன்னால் 
ஏற்றுக்கொள்ளலாம் ... லண்டன் சிட்டிக்குள்ளே இருந்துகொண்டு இப்படி சொல்வதை 
எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது? 

நீங்கள் கூறுவது சரிதான்.

பெரும்பாலானவர்கள் யாரோ ஒருவர் எழுதிவைத்ததை தமக்குப் புரியாத விடயங்களாக இருந்தால் அதை உண்மை பொய் என்பதையெல்லாம் பார்க்காது ஏற்றுக்கொண்டுவிடுகிறனர் . அதை பயன்படுத்தி ஒருசிலரே குழுவோ மனித குலத்தை வழிப்படுத்துகிறோம் என்று தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். நல்லவற்றை யேசுவை, புத்தரை, நபியை விட யாருமே உலகத்தில் சொன்னதில்லையா??? எதோ இவர்களின் நல்ல காலம் இவர்களைத்தூக்கி உயரத்தில் வைத்திருக்கிறது அவ்வளவே.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

அறம் என்றால் என்ன ? 

தனக்குரிய கடமையைச் செவதுதானே அறம். 

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ... அது பூமிக்கு வந்த ஒரு பொறுப்புள்ள மனிதனின் கடமை இல்லையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நல்லவற்றை யேசுவை, புத்தரை, நபியை விட யாருமே உலகத்தில் சொன்னதில்லையா??? எதோ இவர்களின் நல்ல காலம் இவர்களைத்தூக்கி உயரத்தில் வைத்திருக்கிறது அவ்வளவே.

நல்லவற்றை யாரும் எளிதில் யாருக்கும் சொல்லி விடலாம்.  

வாழ்க்கையில் நடந்து காட்டுவதுதான், கஷ்டம். 

நன்னெறிகளை போதித்து,  அதன்பால் தானும் நடந்து,  பிறரும் அந்த நன்னெறிகளின்படி வாழ வேண்டும் என்று உளமார விரும்புபவர்கள் இந்தப் பூவுலகத்தில் மிகவும் அரிது.

அப்படிப்பட்ட  மிகவும் விரல் விட்டு எண்ணக்  கூடியவர்கள்தான் மக்கள் உள்ளங்களில் வீற்றிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் என்ன ஞானமடைந்துவிட்டேன். என்னை வழிபடுங்கள் என்றா சொல்கிறேன்.😎

ஆனால் புத்தன் கோழை என்று சொல்கிறீர்களே?
அவன் செய்ததில் ஒரு பத்து வீதமாவது செய்துவிட்டு சொன்னால் கூட 
பரவாயில்லை நீங்கள் லண்டன் சிட்டிக்குள் இருந்து சொல்வது நியாயமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ... அது பூமிக்கு வந்த ஒரு பொறுப்புள்ள மனிதனின் கடமை இல்லையா? 

சொர்க்கம், நரகம் என்பது, புனைக் கதைகள் அல்ல.

'எதுவுமே வெளியில் இல்லை,  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது'  -  என்ற கற்பிதமும் பிழையானது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மாங்குயில் said:

நான் கேட்டது, புத்தர் ஞானோதயம் அடைந்ததைப்பற்றி.

பரிணாமங்களைப்பற்றிக் கேட்கவில்லை. 

இந்த நவீன காலத்தில்கூட,  நீங்கள் சொல்லும் பரிணாமங்கள் என்றால் என்னவென்று  தெரியாமல் இருக்கிறார்கள் -  பெரும்பாலான மக்கள்.

ஓரளவுக்கு அந்த அளவில் அறிவை பெறாது 
ஞானோதயம் இருக்க இல்லையா என்று எப்படி முடிவுகொள்வது?

ஞானத்தை தேடி ஒரு ஐம்பது  வருடமாவது முயற்சித்து விட்டு 
அது பற்றி பேசலாம் 

1 minute ago, மாங்குயில் said:

சொர்க்கம், நரகம் என்பது, புனைக் கதைகள் அல்ல.

'எதுவுமே வெளியில் இல்லை,  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது'  -  என்ற கற்பிதமும் பிழையானது.

அப்போ அது என்ன கதைகள்?

ஏன் பிழையானது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Maruthankerny said:

ஆனால் புத்தன் கோழை என்று சொல்கிறீர்களே?
அவன் செய்ததில் ஒரு பத்து வீதமாவது செய்துவிட்டு சொன்னால் கூட 
பரவாயில்லை நீங்கள் லண்டன் சிட்டிக்குள் இருந்து சொல்வது நியாயமா? 

இல்லறம்தான் வாழ்க்கையில் இன்றியமையாத வாழ்வுநெறி.

அதை விட்டு விட்டு, புத்தர் தனது மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டு காட்டிற்கு வருடக் கணக்கில் தவம் செய்யப் போனது, ஒரு மகாப் பிழை.

புத்தர் ஒரு கோழை என்பது தப்பல்ல.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Maruthankerny said:

ஓரளவுக்கு அந்த அளவில் அறிவை பெறாது 
ஞானோதயம் இருக்க இல்லையா என்று எப்படி முடிவுகொள்வது?

ஞானத்தை தேடி ஒரு ஐம்பது  வருடமாவது முயற்சித்து விட்டு 
அது பற்றி பேசலாம் 

அப்போ அது என்ன கதைகள்?

ஏன் பிழையானது? 

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ  தவம் இருந்தால், யாருக்கும் எந்த ஞானமும் வராது.

ஞானம் என்பது, பிறர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அல்லது, அனுபவ அறிவால் பெறப்பட வேண்டும். 

அல்லது இறைவனால், அறிவுறுத்தப் பட வேண்டும்.

அல்லது, தானாக ஒன்றைச் சிந்தித்து முடிவு பெற வேண்டும்.  இந்த சிந்தனை முடிவுகள், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும்.

இவை தவிர்ந்த எந்த ஞானத்தையும் புத்தர் அடைந்ததாக நான் கருதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

இல்லறம்தான் வாழ்க்கையில் இன்றியமையாத வாழ்வுநெறி.

அதை விட்டு விட்டு, புத்தர் தனது மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டு காட்டிற்கு வருடக் கணக்கில் தவம் செய்யப் போனது, ஒரு மகாப் பிழை.

புத்தர் ஒரு கோழை என்பது தப்பல்ல.  

அது உங்கள் பார்வை ...
உங்கள் உயிர் என்று வரும்போது...
நீங்கள் தனித்தவர்தான்  .. உங்களோடு யாரும் வரவும் இல்லை யாரும் வரப்போவதும் இல்லை 
மனைவி பிள்ளை என்பதெல்லாம் நாம் இடையில் உருவாக்கியதுதான்.

உங்கள் மனைவி பிள்ளைகள் என்றால்கூட ...
இப்போது நீங்கள் பார்ததுக்கொள்ளலாம் .. உங்கள் மரணத்துக்கு பின்பு?
அவர்களை எங்கு சேர்ப்பது? யாரிடம் கையளிப்பது என்பது கூட 
ஒரு தேடல்தான். 

உங்களுக்கு கோழையாக தெரியலாம் ...
என்னைப்பொறுத்தவரை அமைதிக்குத்தான் அதிக பலமும் தைரியமும் வேண்டும். 
புத்தரிடம் அது நிறையவே இருந்து இருக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.