Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை.

இதுதான் உண்மை. 

எனக்கும்  உங்களைப்போல  கனவு  காண ஆசை  தான்

ஆனால்  களமோ

நிஐமோ 

அதுவன்று........

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

எனக்கும்  உங்களைப்போல  கனவு  காண ஆசை  தான்

ஆனால்  களமோ

நிஐமோ 

அதுவன்று........

புலத்திலுள்ளவர்களைக் குறிப்பிட்டேன். நாட்டு நிலவரம் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் நிலைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

புலத்திலுள்ளவர்களைக் குறிப்பிட்டேன். நாட்டு நிலவரம் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் நிலைதான். 

உண்மைதான்  சகோ

எங்கிருந்து இவை  அகற்றப்படணும்

வேரறுக்கப்படணும் என்று  ஏங்கினோமோ

உயிரையே  கொடுத்தார்களோ

அங்கு???

எனக்குத்தெரிந்த  ஒரு  குடும்பத்தில்  யாழில்  காதல்த்திருமணம்

பெண்  வேறொரு சாதி என்பதால் அவரது  பெற்றோர்கள்

தமது  மகளின் திருமணத்துக்கு  வரத்தடை

மணமகள்  அன்றிலிருந்து  அவரது  குடும்பத்திலிருந்து  துண்டிப்பு

இப்ப  3  வருடமாச்சு

அப்படியே  தான்  குடும்பம் போகுது

இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டார் சைவர்களல்ல......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சாதி என்று வரும்போது சமயம் எங்களுக்கு தூசாக்கும் .

ஆனால் எல்லாமே மாறும். 

கல்வியும் பொருளாதார வளமும் பெருகும்போது இவைகள் மாறித்தான் ஆகவேண்டும். என்ன இவைகளை காண நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. அம்புட்டுதேஏ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வாழ்க்கை ஒரு வட்டம்.
நீங்கள் சொல்லும் அசிங்கங்களை தாங்கி வாழ்கையை நேர்த்தியாக கொண்டு செல்பவர்கள் தான் ஆண்கள்.
அதாவது ஆண்சிங்கங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்.

நான் கூறவந்தது அழகானவர்கள் கூட ஒரு கட்டத்தில் அழகெல்லாம் வற்றி அசிங்கமாவதுதான் என்பதை.
ஆண்கள் மட்டும் எதோ கடைசிவரை அழகாகவே இருப்பதுபோலல்லா உங்கள் கதை. பெண்களும் கட்டினத்துக்காகச் சகிச்சுக்கொண்டுதான் இருப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஜி,

உங்கள மாரி எல்லாரும் வயது கூட கூட, வெயிட்டையும் கூட்ட மாட்டங்க ஜி.

அப்படியே வாழ்நாள் பூரா 12-14 மெயிண்டேன் பண்ற ஆக்களும் உண்டு, தாலி ஏறி 3 வருடத்தில் 8-16 போற ஆக்களும் உண்டு.

நல்லாச் சொன்னீர்கள் கோசான். கிருபன் மாமா தன்னைப் பெடியன் என்று நினைக்கிறார் இப்பொழுதும். அவர் நினைப்பது தவறில்லை. ஆனால் நாமும் அவரைக் கண்டுள்ளோம் என்பதை அவர் மறந்துவிட்டார். 🤪

19 hours ago, goshan_che said:

இதை சொல்லும் பருவம் இன்னும் என்ர ஆளுக்கு இல்லை.

ஆனால் நாளைக்கு இன்னொரு ஆணை காட்டி- இவன் தான் என் வாழ்க்கைத்துணை என்று காட்டினாலும் - விதியே என்று ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு நான் இப்பவே வந்து விட்டேன்.

என்ன எமது ஆக்களிடம் இருந்து விலகி போ, நானும் உன்னுடன் வாறேன், நம்மை யாரும் அதிகம் அறியாத ஒரு ஊரில் போய் நீ விரும்பியபடி வாழலாம் ( இது என்னால் எனது சமூகத்தில் இதை முகம் கொடுக்க முடியாதமையால் மட்டுமே) என்றுதான் சொல்வேனோ ஒழிய அவரின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை.

அப்படி நிற்பதால் ஒரு சில மனமுறிவுகள், தற்கொலைகளை தவிர வேறு எதையும் நான் சாதிக்க போவதில்லை என்ற தெளிவு எனக்கு உண்டு.

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சாதி என்று வரும்போது சமயம் எங்களுக்கு தூசாக்கும் .

ஆனால் எல்லாமே மாறும். 

கல்வியும் பொருளாதார வளமும் பெருகும்போது இவைகள் மாறித்தான் ஆகவேண்டும். என்ன இவைகளை காண நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. அம்புட்டுதேஏ.

உண்மைதான்  சகோ

ஆனால்  எமது தலைமுறையின் கடமையை எம்மால்  செய்யமுடியுமல்லவா???

அதிலும்   போராட்டத்தையும்  அதன் அதி  உட்ச  தியாகங்களையும்  பார்த்து வளர்ந்த எம்மால்  முடியாதுவிட்டால்??????

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

🤪

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

என்ன சுமே

அவர் ஆணும் ஆணும் கட்டினாலே ஓகே  என்கின்ற  நிலைமைக்கு வந்திட்டேன் என்கிறார்

அவரிடம்  ஆபிரிக்கா சீனா என்கிறீர்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

இடம் லண்டன்:  பெண், லண்டனுக்கு 3 வயதில் வந்தவர். ஒரு இளைய சகோதரன். இள வயதில் தாயை இழந்து விட்டார்.  படிப்பு,  அழகு ,பணம் என அனைத்தும் சராசரிக்கு மேல்.  சகல சுதந்திரமும் அவருக்கு இருந்தது.  யாரையும் பிடிக்கவில்லை என  கூறி  விட்டு தனியாக இருக்கிறார். தந்தையும் அண்மையில் இறந்து விட்டார். சகோதரன் வெள்ளை இன பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டார்.

இடம் கனடா: அதே மாதிரி படிப்பு, அழகு என அனைத்தும் உண்டு.  இவர் குடும்பத்தில் மூத்தவர். இளைய சகோதரன்  தமிழ் பெண் நண்பியுடன் சுத்தி திரிகிறார். இப் பெண் சரியான ஆண் கிடைக்கும் வரை  பெற்றோருடன் இருக்க போவதாக சொல்கிறார். பெற்றோர் திருமணம் பற்றி பேசினால் நீங்கள் என்னை வீட்டை விட்டு கலைக்க நினைக்கிறீர்கள் என மிகுந்த கோபப்படுகிறார். கனடாவில் பிறந்தவர். இற்றை வரை ஒரு ஆண் நண்பர் இருக்கவில்லை. பெற்றோர்  ஏனைய  பெற்றோரை போல எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

ஏன் இந்த தலைமுறை  இப்படி இருக்கிறது?

வாழும் நாடுகளிலுள்ள காலாச்சார விழுமியங்கள் ஏற்படுத்திய தாக்கமொன்று. தன் சுய காலில் நிற்பதனால் ஆண்களின் தேவை அவர்களுக்கு இல்லை. எம் நாட்டில்தான் திருமணம்செய்யாவிடடாள் எதோ குறைபாடு என்று ஆளாளுக்குப் பேசும் பிரச்சனை. இங்கு அவர்கள் யாருக்கும் அஞ்சவேண்டிய தேவை இல்லை.

6 minutes ago, விசுகு said:

என்ன சுமே

அவர் ஆணும் ஆணும் கட்டினாலே ஓகே  என்கின்ற  நிலைமைக்கு வந்திட்டேன் என்கிறார்

அவரிடம்  ஆபிரிக்கா சீனா என்கிறீர்கள்???

அவசரத்தில் சரியாக வாசிக்காத தவறின் விளைவு அண்ணா 😀

7 hours ago, விசுகு said:

சரி விடுங்க  சுமே

உங்களுக்கு  பொறாமை  என்று நினைக்கப்போகினம்🤣🤣

இவை நினைத்தால் எனக்கு குறையவா போகுது 🤪🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை.

இதுதான் உண்மை. 

அது உண்மைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாவீரர் தினத்தில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். யேர்மனியில் அவர்கள் இருந்ததால் கண்டவுடன் மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது என் மகனுக்கு 27 வயது ஆறும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளை  இருந்தால் கூறுங்கள் என்றவுடன் மகனென்ன படித்துள்ளார் என்றேன். எலெக்ரோனிக் என்ஜினியர் ...இவ்வளவு சம்பளம் எடுக்கிறார் என்கிறார். என் மக்களும் சிவில் என்ஜினியர்தான். சாதகம் இருந்தால் தாங்கோ பொருத்தம் பார்ப்போம் என்றேன். நீங்கள் எங்களுக்குள் செய்வீங்களோ என்கிறார். எனக்கு முதலில் புரியவில்லை. ஏன் உங்களுக்கு என்ன என்றேன். இவர் வல்வெட்டித்துறை  நான் இவரை காதலித்து மணந்தது. என் அம்மா இதுவரை என்னோடு கதை பேச்சில்லை  அதுதான்.......என்று இழுத்தார். அதனால் என்ன உங்களை முன்பே எனக்குத் தெரியும்தானே. உங்களுக்கும் எங்களை பற்றித் தெரியும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றேன். உடனே வற்சப்பில் தன் மகனின் சாதகத்தை அனுப்ப நான் என் ஒன்றுவிட்ட அண்ணாவிடம் அனுப்பினால் இரண்டு சாதகங்களும் பொருந்தவில்லை.

3 hours ago, விசுகு said:

இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டார் சைவர்களல்ல......

அவர்கள் கிறித்தவர்கள் என்று சொல்லப் பயப்படுகிறீர்களோ?? எங்கும் சாதி பார்ப்பது உண்டண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அன்றி 80 களில் இங்கே வந்தவர்கள்...இரு பொம்பிளை பிள்ளைகள் இங்கே தான் பிறந்தவர்கள்...மூத்தவ தமிழ் கலாச்சாரம்,தமிழ் சாப்பாடு விருப்பம் ...இரண்டாவது பெண் அவவுக்கு ஒப்பசிட்...ஆனால் மூத்தவ ஒரு வெள்ளையின வாலிபரை காதலித்து கல்யாணம் கட்டி இருக்கிறார்....இரண்டாவது பெண் எல்லோருடனும் பிரன்சிப்பாப் கதைப்பார்,சோசலாய் பழகுவார் ..ஆனால் இவரால் தனக்கு ஏத்த துணையை தேடிக் கொள்ள முடியவில்லை ...பெற்றோரிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கார்.
எவ்வளவு தான் வடிவாய் இருந்தாலும்,,சோசலாய் பழகினாலும் மற்றவரை கவர்வதற்கு ஒரு முக அமைப்பு வேண்டும் 
இதைத் தான் எமது சமயத்தில் வசிய பொருத்தம் என்று சொல்கிறவர்கள்.
 
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைத்துப் பேசி மூன்று மாதத்தில் ஆறு மாதங்களில் ஒரு ஆண்டின்பின் கூடக் குழம்பியும் இருக்கு.

கல்யாணம் கட்டிப் போட்டு பிரியாமல்,கட்ட முதல் பழகிப் பார்த்து சரி வராமல் பிரிந்து போவது நல்லது தானே 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்கள் கிறித்தவர்கள் என்று சொல்லப் பயப்படுகிறீர்களோ?? எங்கும் சாதி பார்ப்பது உண்டண்ணா 

இல்லை சுமே

இத்திரியை வேறு பக்கம் திருப்ப விரும்பவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

என்னுடைய அன்றி 80 களில் இங்கே வந்தவர்கள்...இரு பொம்பிளை பிள்ளைகள் இங்கே தான் பிறந்தவர்கள்...மூத்தவ தமிழ் கலாச்சாரம்,தமிழ் சாப்பாடு விருப்பம் ...இரண்டாவது பெண் அவவுக்கு ஒப்பசிட்...ஆனால் மூத்தவ ஒரு வெள்ளையின வாலிபரை காதலித்து கல்யாணம் கட்டி இருக்கிறார்....இரண்டாவது பெண் எல்லோருடனும் பிரன்சிப்பாப் கதைப்பார்,சோசலாய் பழகுவார் ..ஆனால் இவரால் தனக்கு ஏத்த துணையை தேடிக் கொள்ள முடியவில்லை ...பெற்றோரிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கார்.
எவ்வளவு தான் வடிவாய் இருந்தாலும்,,சோசலாய் பழகினாலும் மற்றவரை கவர்வதற்கு ஒரு முக அமைப்பு வேண்டும் 
இதைத் தான் எமது சமயத்தில் வசிய பொருத்தம் என்று சொல்கிறவர்கள்.
 
கல்யாணம் கட்டிப் போட்டு பிரியாமல்,கட்ட முதல் பழகிப் பார்த்து சரி வராமல் பிரிந்து போவது நல்லது தானே 

அது நல்லதுதான் ஆனால் இங்குள்ள பிள்ளைகள் விட்டுக்கொடுப்புக்குத் தயாராயிலை. நாமும் இவர்கள் போல் அன்று நினைத்திருந்தால் நாமும் தனியாகவல்லோ வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன்

இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன்

ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும்

எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன்.

இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன்

அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ?????

ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது

செய்யும்.

தமிழர் வேற்று நாட்டினரை திருமணம் செய்யும் போது சாதியும் இல்லை,மதமும் இல்லை ...இதே தமிழர் தங்களுக்கு  கட்டுகிறது என்றால் மட்டும் சாதியும்,மதமும் :57_cry:

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது நல்லதுதான் ஆனால் இங்குள்ள பிள்ளைகள் விட்டுக்கொடுப்புக்குத் தயாராயிலை. நாமும் இவர்கள் போல் அன்று நினைத்திருந்தால் நாமும் தனியாகவல்லோ வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்.

பெண் என்பதால் எல்லாத்துக்கும் அவள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பதில்லை....உங்கட காலத்தில் நீங்கள் கட்டும் போது பெரும்பாலும் ஆணை நம்பியே பெண் இருந்தார்...இந்த காலத்தில் ஊரிலையும் சரி,இங்கேயும் சரி ஆணுக்கு சமமாய் பெண்ணும் உழைக்கிறார்...பின்னர் எதற்காக தான் மட்டும் எல்லாத்துக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்...சிலதுகளுக்கு பெண் விட்டுக் கொடுத்து போகலாம் ...இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டால் அவர்களில் இருக்கும் குறைகள்,பிழைகள் பெரிதாய் தெரியாது....பிடிக்காட்டில் ஒரு சின்ன பிரச்சனையும் பூதாகாரமாய் தெரியும் ...திருமணத்திற்கு மனப் பொருத்தம் மிக முக்கியம் என்றே நிலைக்கிறேன் .

அந்த காலத்தில் சமூதாயத்திற்கு பயந்து பிடிக்குதோ/பிடிக்கவில்லையோ சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ...இந்த காலத்திற்கு பிள்ளைகளுக்கு அப்படி ஏதும் கடப்பாடு இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

வெளிநாடுகளில் பிறந்தாலும் பல ஆண்பிள்ளிகளில் மனோநிலை எம் தாயகத்து ஆண்களின் மனநிலையில் தான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மைதான்  சகோ

ஆனால்  எமது தலைமுறையின் கடமையை எம்மால்  செய்யமுடியுமல்லவா???

அதிலும்   போராட்டத்தையும்  அதன் அதி  உட்ச  தியாகங்களையும்  பார்த்து வளர்ந்த எம்மால்  முடியாதுவிட்டால்??????

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாச் சொன்னீர்கள் கோசான். கிருபன் மாமா தன்னைப் பெடியன் என்று நினைக்கிறார் இப்பொழுதும். அவர் நினைப்பது தவறில்லை. ஆனால் நாமும் அவரைக் கண்டுள்ளோம் என்பதை அவர் மறந்துவிட்டார். 🤪

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

அன்ரி,

வடிவாய் மீண்டும் ஒருதரம் வாசியுங்கோ, எனது மகன், எதிர்காலத்தில் இன்னொரு ஆணை காட்டி, இவரே என் வாழ்க்கைதுணை எனச் சொன்னா அதை ஏற்கும் பக்குவத்துக்கு நான் வந்து விட்டேன் என்று எழுதியுள்ளேன்.

அதன் பிறகு சீனர் என்றால் என்ன மொங்கோலியர் என்றால் என்ன 🤣

தலைக்குமேல் போய்விட்டால் சாண் என்ன முழம் என்ன🤣

3 hours ago, colomban said:

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

அட இன்னொரு மைண்ட்வாய்ஸ்.😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

நானும் முன்பு இப்படி நினைப்பது உண்டு, ஆனால் தனது 2 வயதில் இந்த நாட்டுக்கு வந்த என் மனைவியிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதில் ஒன்று:

ஊரில் வளர்ந்த எமக்கு தமிழர்களிடையே சாதி பார்ப்பது எப்படியோ அப்படித்தான் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தமக்கிடையே இனம் பார்ப்பதையும் கருதுகிறார்கள்.

நாம் எமது பெற்றோர் சாதி பார்க்கும் போது அடைந்த விசனத்தையே இங்கே வளரும் பிள்ளைகள் நாம் இனம் பார்க்கும் போது அடைகிறார்கள்.

நிழலி, விசுகு தம் பிள்ளைகளின் கூற்றுக்கள் என கூறியவற்றை பார்த்தால் இது புரியும்.

இதனால் தம் இனத்தின் பெருமை, வராலாறு அறியாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல -ஆனால் அதுக்காக கலியாணம் கட்டாயம் அதே இனத்தில்தான் செய்ய வேண்டும் என்பதை அவர்களில் பலர் பிற்போக்குத்தனமாகவே பார்கிறார்கள்.

தவிரவும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்படித்தான், காப்பிலியை எப்படி முடிப்பது, வெள்ளைகாரன் ஒவ்வொரு நாளும் குளிக்கமாட்டன் இப்படி நாம் காவித் திரியும் பலதை அவர்கள், stereotyping என்றே பார்கிறார்கள். உண்மையும் அதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

நானும் அதைத்தான் செய்தேன். ஆனாலும் என் மகள் கூறுவாள் மற்றைய இனத்துடன் பழகிப்பார்க்கும் போதுதான் எம் இனத்தின் சிறப்புகள் தெரிகிறது என்று. அதற்காக எம்மினம் திறமான இனம் என்றும் முற்றுமுழுதாகக் கூறிட முடியாது.😀

3 hours ago, colomban said:

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

அட அவளின் ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டியளே 🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 2

போன் வருகிறது

நான் : வணக்கம்

அவர் : யார் பேசிறது?

நான் : என்னுடைய பெயர் நிவேதா. உங்கள் வைப் இல்லையா?

அவர் : அவ குளிக்கிறா. நீங்கள் என்ன விசயமாய் எடுத்தனீங்கள்?

நான் : என்ர மகளுக்கு கலியாணம் பேசிறன். உங்களுக்கு மகன் இருக்கிறார் என்று சொன்னவை.

அவர்: யார் தந்தது எங்கட போன் நம்பர்

நான் : என்ர  பிரெண்ட் சுமதி.

என் மைண்ட் வொய்ஸ் (ஆர் தந்தா என்ன அலுவலைக் கதையன்)

அவர் : நீங்கள் ஊர்ல எவடம் ?

நான் : நான் இணுவில் நீங்கள் ?

அவர் :நான் சண்டிலிப்பாய் அவ கொக்குவில்.
            இணுவில்ல எவடம் ?
நான் : அம்மன் கோவிலடி. உங்கட வைபோட ஒரு அரை மணித்தியாலம் கழிச்சுக் கதைக்கட்டே.

அவர்:  அவ உடுப்பு மாத்திறா என்று நினைக்கிறன். அதுசரி உங்கட மக்கள் எங்க படிச்சவ.

நான் : UCL இல. உங்கட மகன் எங்க படிச்சவர்.?

அவர் : சறே யூனிவேசிட்டி

நான்: இப்ப என்ன செய்யிறார்?

அவர்: எனக்கு 2 பெடியள் தங்கச்சி.மூத்தவன் கட்டீற்ரான். இவன் கடைக்குட்டி.
            இதுக்கு முதலும் ஒரு சம்மந்தம் வந்தது. பெட்டைச்சி கேம்பிரிச்சில படிச்சதெண்டு பெரிய      எடுப்புக்கதை.

( மூதேவி உந்த சறே யூனிவேசிட்டியில படிச்ச பிள்ளையை வச்சுக்கொண்டு அந்தக் கதை கதைக்கிறாய். அங்க படிச்ச பிள்ளை அதைச் சொன்னா அது உனக்கு எடுப்புக்கதையோ )

நான் : அங்க படிச்சது எண்டால் கெட்டிக்கார பிள்ளையாக்கும்.

அவர் : இங்க மனிசி வந்திட்டா கதையுங்கோ.

மனைவி: உங்கட மகளுக்கே பாக்கிறியள்.

நான் : ஓம்

மனைவி : நீங்கள் இரண்டுபேரும் அரச உத்தியோகமோ பாக்கிறியள்?

நான்: இல்லை நாங்கள் சொந்தமாக்க கடை நடத்திறம்.

மனைவி : வேற ஏதும் பெடியள் இருந்தாச் சொல்லட்டே ?

நான் : சரி  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் முன்பு இப்படி நினைப்பது உண்டு, ஆனால் தனது 2 வயதில் இந்த நாட்டுக்கு வந்த என் மனைவியிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதில் ஒன்று:

ஊரில் வளர்ந்த எமக்கு தமிழர்களிடையே சாதி பார்ப்பது எப்படியோ அப்படித்தான் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தமக்கிடையே இனம் பார்ப்பதையும் கருதுகிறார்கள்.

நாம் எமது பெற்றோர் சாதி பார்க்கும் போது அடைந்த விசனத்தையே இங்கே வளரும் பிள்ளைகள் நாம் இனம் பார்க்கும் போது அடைகிறார்கள்.

நிழலி, விசுகு தம் பிள்ளைகளின் கூற்றுக்கள் என கூறியவற்றை பார்த்தால் இது புரியும்.

இதனால் தம் இனத்தின் பெருமை, வராலாறு அறியாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல -ஆனால் அதுக்காக கலியாணம் கட்டாயம் அதே இனத்தில்தான் செய்ய வேண்டும் என்பதை அவர்களில் பலர் பிற்போக்குத்தனமாகவே பார்கிறார்கள்.

தவிரவும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்படித்தான், காப்பிலியை எப்படி முடிப்பது, வெள்ளைகாரன் ஒவ்வொரு நாளும் குளிக்கமாட்டன் இப்படி நாம் காவித் திரியும் பலதை அவர்கள், stereotyping என்றே பார்கிறார்கள். உண்மையும் அதுதான்.

நீங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. 

இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு முடிந்த அளவு முயற்சிக்கிறேன். அதிலோன்று அவர்களை இலங்கைக்கு அடிக்கடி கூட்டிச் செல்ல முயற்சிப்பது. மற்றோன்று இலங்கையர்களுடன் முடிந்த அளவு பேச விடுவது. 

ஆனாலும் தோல்வியடைந்து விடுவேனோ என்று உள்ளூரப் பயம் 😀

52 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் அதைத்தான் செய்தேன். ஆனாலும் என் மகள் கூறுவாள் மற்றைய இனத்துடன் பழகிப்பார்க்கும் போதுதான் எம் இனத்தின் சிறப்புகள் தெரிகிறது என்று. அதற்காக எம்மினம் திறமான இனம் என்றும் முற்றுமுழுதாகக் கூறிட முடியாது.😀

பிள்ளைகளுடன் உரையாடும்போது தனித்துவமாக  இருப்பதின் சிறப்புகள்பற்றியும் கலப்பினத்தில் பிறந்த பிள்ளைகள் இழந்தவைபற்றியும் முடிந்த அளவு புரிய வைக்க முயற்சிப்பேன்.

ஆனால் முடிவு எப்படி அமையுமோ நாமறியோம் பராபரமே 🙏 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 1:36 AM, ரதி said:

கொஞ்ச காலத்தில் கடை சாப்பாட்டை சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த பிறகு தெரியும் அருமை 

ஏன் மனிசி மாரோட சாப்பாட்டையே ஆயுள் பூரா சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த கணவன் மார்கள் இல்லையா ...? அவர்களை இந்தநிலைக்கு ஆக்கியது மனிசிமார்தான் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா ...இன்னும் கொஞ்சம் ஒரு படிமேலே போய் தெரிந்தே கணவனுக்கு நஞ்சை சமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதையும் ஏற்பீர்களா ....? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.