Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி?
கோப்பு படம்
 
“அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?”

- இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா.

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷியா.

ரஷியா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உண்டு.

1. ரஷியாவின் மக்கள் தொகை 14 கோடியே 67 லட்சம்.

2. உலகுக்கே கொரோனா வைரசை வினியோகித்து இருக்கிற சீனாவுடன் 4,209.3 கி.மீ. பரப்பிலான நீண்ட எல்லையை கொண்டுள்ளது. உலகிலேயே 6-வது நீள எல்லை இதுதான்.

3. அதுமட்டுமல்ல கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, நார்வே உள்ளிட்ட 14 நாடுகளுடன் ரஷியாவின் எல்லை பரந்து விரிந்திருக்கிறது.

4. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம்தான். ஆனால் ரஷியாவில் 9 நேர மண்டலங்கள் உள்ளன. அதாவது, 9 இடங்களில் வெவ்வேறு நேரம் காட்டும்.

இப்படி காரணங்கள் நீளுகின்றன.

ஆனாலும் ரஷியாவில் கொரோனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடைசியாக கிடைத்த தகவல்கள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக சொல்கின்றன. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 28 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லக்சம்பெர்க் நாட்டில் கூட சனிக்கிழமை வரை 670 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவல்.

தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கிக்கொண்டிருக்கிற இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிற மக்கள் தொகையை கொண்டுள்ள ரஷியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.

எப்படி இங்கே மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, அதுவும் வெறும் 15 நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் ரஷிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30-ந்தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. இது மிக முக்கிய காரணம்.

தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷியா அப்போதே உருவாக்கியது.

ரஷிய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர்.

ரஷியாவில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டார்கள். பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தனர். பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.

சோவியத் ரஷியாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான் அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக வாரிக்கொள்கிற இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரஷியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் தான் இருக்கிறதாம்.

ரஷியாவில் அரசியலமைப்பு சாசனம் திருத்தங்கள் தொடர்பாக ஏப்ரல் 22-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறுகையில், “நாட்டு மக்களின் உடல் நலம்தான் இப்போதைக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

மார்ச் 18-ந்தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய அதிபர் புதின், “பொதுவாகவே நாங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதற்காக நன்றி கடவுளே. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ரஷியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், “எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3-வது பரிசோதனையில்தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது” என்று இன்ஸ்டாகிராமில் மார்ச் 5-ல் பதிவிட்டிருக்கிறார்.

ரஷியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஷிய பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷியாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஷியா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன” என்கிறார்.

ரஷியாவில் மே 1-ந்தேதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கிறது என்பது வெளிநாட்டில் இருந்து கூட இந்த நாட்டினருக்கு கொரோனா வைரஸ் வந்து தாக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து குறைக்கிறது என்பதற்கான தகவலாக அமைந்திருக்கிறது.

உற்ற தோழனான ரஷியாவின் பாதையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் என்னும் எதிரியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை.

https://www.maalaimalar.com/news/topnews/2020/03/25091548/1362709/What-Exactly-Is-Going-On-With-Russias-Low-Coronavirus.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.

புட்டின் இப்போது superhero போல கொரோனாவை அழிக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளார் என்று பிபிசி செய்தியில் கேட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.

இது சிறீலங்காவில் பாடம் நடாத்தவிட்டு உலகம் கற்றுக்கொண்டதில் ருசியா முதலிடம் வகிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.

புட்டின் இப்போது superhero போல கொரோனாவை அழிக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளார் என்று பிபிசி செய்தியில் கேட்டேன்!

தகவல் மட்டுமல்ல கொறோனா வைரஸ் பரவுவதைத்  தடுத்தாலும்  கொறோனா கட்டுப்பாட்டில் இருக்கும். 😂

BBC ஊதுகுழலாகி கனகாலமாச்சு. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

தகவல் மட்டுமல்ல கொறோனா வைரஸ் பரவுவதைத்  தடுத்தாலும்  கொறோனா கட்டுப்பாட்டில் இருக்கும். 😂

BBC ஊதுகுழலாகி கனகாலமாச்சு. ☹️

மொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே.

Russian official questions Putin over coronavirus

Moscow mayor Sergei Sobyanin tells president situation more serious than thought

https://www.theguardian.com/world/2020/mar/24/russian-official-questions-putin-over-coronavirus

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

காடியனும் மேற்கின் ஊதுகுழல்தானே. NEWS என்பது நான்கு திசைகளிலுமிருந்து என்பதைக் குறிக்கும். மேற்கு தனக்குத் தேவையான / பொருத்தமான (கொள்கைக்கு) தகவல்களை மட்டும் பரவவிடும் என்பது தெரிந்த விடயமே. ஒவ்வொரு அரசுகளும் இதனையே செய்கின்றன. இவர்களின் சார்புநிலைப்பாட்டுடைய தகவல்களுடன் ஒப்பிடும்போது தென்ஆசியக் கண்டத்தின் ஊடகங்கள் எவ்வளவோ மேல்.

இது ஒன்றும் நீங்கள் அறியாததல்ல. ஆனால்...

என் கேள்வி என்னவென்றால் மேற்கின் தகவல்களை மட்டும் ஏன் நீங்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை ? சீன, இரஸ்ய, வட கொரிய அரசுகளது  செய்திகளின் நம்பகத்தன்மையை மட்டும் உடனே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

என் கேள்வி என்னவென்றால் மேற்கின் தகவல்களை மட்டும் ஏன் நீங்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை ? சீன, இரஸ்ய, வட கொரிய அரசுகளது  செய்திகளின் நம்பகத்தன்மையை மட்டும் உடனே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் ?

ஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது. டொலால்ட் ட்ரம்ப்பைக் கூட கேள்விகேட்டு சங்கடப்படுத்தமுடியும். ஆனால் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஜனநாயகமோ, பத்திரிகைச் சுதந்திரமோ இல்லை. அரசு என்ன சொல்கின்றதோ, அதைத்தான் அவர்கள் கிளிப்பிள்ளைகள் மாதிரி ஒப்புவிக்கவேண்டும். அதனால்தான் சொல்லாதவை பற்றிய சந்தேகங்கள் எப்போதும் வரும்.

மேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே.

Russian official questions Putin over coronavirus

Moscow mayor Sergei Sobyanin tells president situation more serious than thought

https://www.theguardian.com/world/2020/mar/24/russian-official-questions-putin-over-coronavirus

மேயர் எதிர்த்து சொல்வது கூட (500), குறைவாகத் தானே இருக்கிறது.

லண்டன், 100, 000 சனத்தொகைக்கு 22-23

மாஸ்கோ சனத்தொகை, கூகுளில் இருந்து 12.5 மில்லியன்.

மொஸ்கோ மேயர் சொல்வதை வைத்து exrapolate செய்தால், மாஸ்கோ இல்   100, 000 சனத்தொகைக்கு 4.

இதுவும், மேற்கத்திய ஊடகமே, ஆனால் தெரிந்ததை வேறு source யிலும் இருந்து உறுதிப்படுத்த முனைகிறது

https://news.sky.com/story/coronavirus-putins-got-this-but-for-how-much-longer-11962885

6 minutes ago, கிருபன் said:

மேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.

பெரும்பாலும் உண்மை.

6 minutes ago, கிருபன் said:

ஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது.

நம்ப முடியவில்லை.

விக்கி leaks வெளிவந்த பொது என்றே நினைவு.

 கார்டியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, UK government digital assets disposal முறைகளில் இல் அதி கூடிய assurance முறையால் hard drives அழிக்கப்பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது. டொலால்ட் ட்ரம்ப்பைக் கூட கேள்விகேட்டு சங்கடப்படுத்தமுடியும். ஆனால் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஜனநாயகமோ, பத்திரிகைச் சுதந்திரமோ இல்லை. அரசு என்ன சொல்கின்றதோ, அதைத்தான் அவர்கள் கிளிப்பிள்ளைகள் மாதிரி ஒப்புவிக்கவேண்டும். அதனால்தான் சொல்லாதவை பற்றிய சந்தேகங்கள் எப்போதும் வரும்.

மேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.

அப்படியா ? ☹️ இதனை உங்களுக்கு யார் சொன்னது ? மேற்கின் ஊடகங்கள்தானே 🤔சங்கடப்படுத்துவதும்  உண்மைச் செய்திகளை தகவல்களை, புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதும் ஒன்றாகுமா ? 
மேற்கு உங்களுக்குத் தரவிரும்புவதை மட்டும் கேட்பது ஒன்று ஆனால் N-E -W -S  தேடி தெரிந்துகொள்வது மற்றோன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அப்படியா ? ☹️ இதனை உங்களுக்கு யார் சொன்னது ? மேற்கின் ஊடகங்கள்தானே 🤔சங்கடப்படுத்துவதும்  உண்மைச் செய்திகளை தகவல்களை, புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதும் ஒன்றாகுமா ? 
மேற்கு உங்களுக்குத் தரவிரும்புவதை மட்டும் கேட்பது ஒன்று ஆனால் N-E -W -S  தேடி தெரிந்துகொள்வது மற்றோன்று. 

நீங்கள்  விரும்பியதை மட்டும் நான் பதிலாகத் தந்தால் அது criminal wastage of time (நன்றி நாதமுனி👍🏾). வடகொரியாவுக்கு போய் வந்து மிச்சத்தை எழுதுங்கள்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நீங்கள்  விரும்பியதை மட்டும் நான் பதிலாகத் தந்தால் அது criminal wastage of time (நன்றி நாதமுனி👍🏾). வடகொரியாவுக்கு போய் வந்து மிச்சத்தை எழுதுங்கள்😂🤣

சரியான அர்த்தம் அது அல்ல என்பது என் துணிபு.

உங்கள் (கண்ணாடிக் குவழை போன்ற)  நம்பிக்கையில் கீறல்விழவைத்துவிட்டேன் என நினைக்கிறேன். கோவித்துக் கொள்ளாதீர்கள் கிருபன் . 😂

சோவியத் யூனியனை மேற்குலகம் ஏமாற்றி, குறிப்பாக ரீகன் கர்பச்சோவை, உடைத்து பின்னர் உருசியாவையும் பலவீனமாக வெளிக்கிட்டது. அதுவே, பூட்டின்  போன்ற சர்வாதிகார்த்திற்கு  வழிசமைத்தது. அதில் போனது, பத்திரிகை (ஒப்பீட்டளவான சுதந்திரமே மேற்குலகில் உண்டு) சுதந்திரமும் தான்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புடின் மக்களால் சனனாயக (மேற்குலகின்)  முறைப்படி தெரியுசெய்யப்பட்டவர். இதில் எப்படி சர்வாதிகாரம் வந்தது. 🤔

Just now, Kapithan said:

புடின் மக்களால் சனனாயக (மேற்குலகின்)  முறைப்படி தெரியுசெய்யப்பட்டவர். இதில் எப்படி சர்வாதிகாரம் வந்தது. 🤔

எதிராக போட்டியிடுபவர்களை ஒன்றில் 'போட்டுத்தள்ளுவது' இல்லை 'வாங்குவது' மூலமாக !

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா புள்ளவிபரம் பிரகாரம் இந்தியாவுக்கு மேல் உள்ளது. அப்படி பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் தொற்று வியாதியை கட்டுப்படுத்திவிட்டதா?

https://www.worldometers.info/coronavirus/

Russia:

Total cases 658

New cases today 163+

Active cases 626

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

எதிராக போட்டியிடுபவர்களை ஒன்றில் 'போட்டுத்தள்ளுவது' இல்லை 'வாங்குவது' மூலமாக !

நிச்சயமாகத் தெரியுமா ? சும்மா கண்டபாட்டிற்கு எழுதப்படாது. ஆதாரத்துடன் கூறவேணும். ஆதாரம் நம்பகமானதாய் இருக்க வேண்டும். 

சோவியத் யூனியன் உடைந்தபோது ரஸ்யா பிச்சையெடுத்துக்கொண்டிருந்தது. இருபது வருடங்களில் நாட்டை மீட்டெடுத்து உலகின் முன்ணணிக்கு கொண்டுவந்தவர். 

சீனா இருபது வருடங்களில் அறுனூறு மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது.  

விமரிசனங்கள் இவற்றையெல்லாம் மனதிலிறுத்தியதாக இருக்கவேண்டும். சும்மா ஒருபக்க தகவலை மட்டும் சாப்பிட்டுவிட்டு  கண்டபடி வாந்தியெடுக்கப் படாது 😆😆😆

45 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா புள்ளவிபரம் பிரகாரம் இந்தியாவுக்கு மேல் உள்ளது. அப்படி பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் தொற்று வியாதியை கட்டுப்படுத்திவிட்டதா?

https://www.worldometers.info/coronavirus/

Russia:

Total cases 658

New cases today 163+

Active cases 626

இந்தியாவின் நிலை கையை மீறும்போல் உள்ளது. இருவாரங்களில் வெற்றியா அல்லது தோல்வியா எனத் தெரியும். ☹️

3 minutes ago, Kapithan said:

நிச்சயமாகத் தெரியுமா ? சும்மா கண்டபாட்டிற்கு எழுதப்படாது. ஆதாரத்துடன் கூறவேணும். ஆதாரம் நம்பகமானதாய் இருக்க வேண்டும். 

நான் தான் ஆதாரம்  😆

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நான் தான் ஆதாரம்  😆

எங்கள் நாட்டைப்பற்றிய தவறான செய்திக்கு எனது ஆட்சேபணையை பதிவு செய்கிறேன்

இப்படிக்கு புடின்.. 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.