Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

கொரோனா அச்சத்தின் மத்தியிலும் மனிதத்துவத்துடன் செயற்படும் ஈழத்து இளைஞர்கள்!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் உலகளாவிய ரீதியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போதுவரை கொரோனாவால் 85000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 76 நாட்கள் ஊரடங்கின் பின்னர் நேற்றைய தினமே அங்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்த கொரோனாவின் தாக்கத்திற்கு ஸ்ரீலங்காவும் முகம்கொடுத்துள்ளது. ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 189 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெல்ல மெல்ல அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்கமும் இளைஞர்களும் நிவாரணம் செய்து வருகின்றனர். ஆனால் வீதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவின்றி தவிக்கின்றன.

இதனால் தமிழர் பகுதியில் உள்ள இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வீதிகளில் உணவின்றி தவிக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140883

  • தொடங்கியவர்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிவாரணத் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்!

In இலங்கை     April 12, 2020 12:37 pm GMT     0 Comments     1068     by : Litharsan

Gnanam-Foundation-Relief-Assistance-Scheme-in-Mullaitivu-9-720x450.jpg

லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள வறிய மக்களுக்கான உதவித் திட்டங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், முதற்கட்டமாக மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 38 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கப்பட்டன.

இதன்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் என்.ரஞ்சனா பங்கேற்றிருந்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இதனால், நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனர்த்த வேளைகளிலும் நெருக்கடியாக சூழலிலும் மக்களுக்கு உதவிகளைச் செய்துவரும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனம், தற்போது நிலவும் இக்காட்டான சூழலில் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

Gnanam-Foundation-Relief-Assistance-Sche

ஐ பி சி ஊடக வலையமைப்பு திருகோணமலையில் உலர் உணவுப்பொதிகளை கையளித்தது

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை அடுத்து அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்கே பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வாறு சிரமத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு ஐ பி சி தமிழ் ஊடக வலையமைப்பு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

மூதூர் நகரம் சார்ந்ததாக முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் மிகவும் வறிய நிலையில் வாழ்கின்றனர் ஆலஞ்சேனை மக்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடியிருப்பு காணிகள் கூட இல்லை.திருகோணமலை நகரத்தில் வாழ்கின்ற தமிழ்மக்களின் காணிகளிலேயே தற்காலிக கொட்டில்களை அமைத்து இவர்களில் பெருமளவானோர் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 72 பேருக்கு உலர் உணவுப் பொதிகளும்

அதேபோன்று மூதூர் மத்திய கிராமசேவையாளர் பிரிவில் கோவில் வீதியில் 24 பொதிகளும்

தர்கா நகர கிராமசேவையாளர் பிரிவில் 4 பொதிகளும்

திருகோணமலை சின்ன மட்டக்களப்பு பிரதேசத்தில் 4 பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141222

4 hours ago, போல் said:

இந்த நிலையில் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்கே பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

சிங்கள அரசை மட்டுமே நம்பாமல், தமக்குள்ளேயே முடிந்தளவுக்கு தீர்வுகளை தேடுவதே நிரந்தரம்.

உதவும் உள்ளங்களுக்கு நன்றிகள்.  

  • கருத்துக்கள உறவுகள்

உண்ண உலருணவும் ருசிக்க இறைச்சிக் கோழியும் வழங்கல்

IMG20200411112253-960x720.jpg?189db0&189db0

 

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் கனடாவின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஊடாக உடுப்பிட்டியில் வாழும் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிவாரணப் பணிகள் கடந்த (07, 08, 09, 11) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இரு கிராம சேவகர் பிரிவுகளில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அளவைப் பொறுத்து குழந்தைகளுக்கான பால்மா உட்பட தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம் கனடாவினால் நிர்வகிக்கப்படும் உடுப்பிட்டி கோழிப் பண்ணையில் இருந்து குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு இறைச்சிக் கோழி என்ற அடிப்படையில் 350 ஞக்கும் அதிகமான கோழிகள் வழங்கப்பட்டன.

  • IMG-20200411-WA0001-1024x576.jpg?189db0&
  • IMG-20200411-WA0002-1024x768.jpg?189db0&
 
 

 

உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன!

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் செரெண்டிப் நிறுவனம் ஊடாக நேற்று (14) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந்திடம் வட்டார மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த உதவி வழங்கப்பட்டது.

உலருணவு பொருட்கள் கையளிப்பின் போது வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், செரண்டிப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அ.கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  • 20200411_130605-1024x461.jpg?189db0&189d

     

https://newuthayan.com/உலருணவு-பொருட்கள்-வழங்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களிற்கு உலருணவுப்பொதி வழங்கல்

93186024_2333373453629209_6935434999701176320_n.jpg?189db0&189db0

 

புலம்பெயர் உறவான சமூகசேவகர் sk நாதன் என்பவரது நிதியுதவியில் கிளி பொன்னகர் மக்களிற்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

ஊரடங்கு நடைமுறையினால் வறுமை நிலையில் இருந்த மக்களிற்கான உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டின் மூன்றாம் கட்டமாக நேற்றைய தினம் (15) கிளிநொச்சி பொன்னகர் பகுதி மக்களிற்கு உலருணவுப் பொருட்கள் , மற்றும் மீன் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் இருந்து இதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சிமற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 000 ற்கும் அதிகமான குடும்பங்களிற்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முககவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடை என்பனவும் குறித்த புலம்பெயர் உறவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

93136636_216507599638953_35400278119116993136921_689335365154978_689632565027405
 

 

  • தொடங்கியவர்

யாழ். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் வறிய மக்களுக்கு இலவசமாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அளவெட்டி கனேசபுரம் பகுதியில் 41 குடும்பங்களுக்கு இன்று குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண தேசிய இளைர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் வினோதினி சிறீமேனனின் வழிநடத்தலில் இடம் பெற்று வருகின்றது.

இதற்கான நிதியினை பிரான்ஸ் வாழ் உறவுகள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/141658

பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த கொரோனா! களத்தில் ஐபிசி குழுமத்தினர்

உலகத்தை முடக்கியிருக்கும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 334 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த வேளையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும் முழுமையான இயல்பு நிலைக்கு இன்னமும் நாடு திரும்பவில்லை.

அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்காக ஏராளமான குடும்பங்கள் காத்துக்கிடக்கின்றன. பல இளைஞர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து களத்தில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

எமது ஐபிசி இணைய குழுமத்தினரும் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்த்த எமது உயிர்சுவடு குழுமத்தினர், தற்போது தமிழர் தாயகப் பிரதேசமான துணுக்காய் பகுதிகளில் உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

அதேபோன்று ஒட்டுசுட்டான், கிளிநொச்சி வவுனியா போன்ற பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களோடு பயணித்திருக்கிறார்கள். நெருக்கடியான நேரத்தில் தவித்திருக்கும் மக்களின் இன்னல்களை தொடர்ந்தும் அகற்றுவதில் ஐபிசி இணைய குழுமத்தினர் என்றும் முன்னின்று செயல்படுவார்கள்.

தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்காக தமது அனைத்து வகையிலான ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் புலம்பெயர் உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஐபிசி இணையத்தளம் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141762

  • தொடங்கியவர்

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி!

In இலங்கை     April 24, 2020 11:45 am GMT     0 Comments     1041     by : Litharsan

Batticaloa-District-Tamil-Journalists-Association-Peoples-Help-Coronavirus-Alert-Situation.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்து மிகவும் கஷ்ட நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஈரளகுளம் கிராமத்தில் வசித்துவரும் 32 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் நேற்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ‘வல்வை 21 நண்பர்கள்’ அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், கு.குணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதியுதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

Batticaloa-District-Tamil-Journalists-As

Batticaloa-District-Tamil-Journalists-As

Batticaloa-District-Tamil-Journalists-As

Batticaloa-District-Tamil-Journalists-As

Batticaloa-District-Tamil-Journalists-As

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மீன்கள் விநியோகம்

image_76191ab912.jpg

 

எம்.எம்.அஹமட் அனாம்

கொரோனா வைரஸின் தொற்றின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வறிய மக்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சில கிராமங்களுக்கு, வாழைச்சேனை மீனவர்களால் மீன்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களால், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கான மீன்கள் கையளிக்கும் நிகழ்வு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (26) நடைபெற்றது.

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு, முறுத்தானை போன்ற கிராமத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தலா ஒன்றரை கிலோகிராம் எடையுடைய மீன்கள் இங்கு கையளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தால் வழங்கிய தகவலின் பிரகாரம், போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கு மீன்கள் வழங்கி உதவும் வகையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் மீன்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ், கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.முஹமட் இம்தியாஸ், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பதககபபடடளள-கரமஙகளகக-மனகள-வநயகம/73-249288

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தில் செய்யப்படும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது...... அனைவருக்கும் மனசார்ந்த நன்றிகள்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தனிப்பட்ட நபர் அல்லது குழுக்கள்   உதவி பெறுவதை படங்களில் எடுப்பதும், பிரசுரிப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.

அப்படி உதவி பெறுபவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும், அப்படியான நிலைக்கு உட்படுத்தப்பட்டால் எவ்வாறு கூனிக் குறுக வைக்கும் நிலையையும் எல்லோரும் ஒரு முறை எண்ணி பாருங்கள்.

இதில் உதவி பெரும் பலரோ, சிலரோ தம்மாலான உதவிகளை முன்பு செய்யக்க கூடிய நிலையில் இருந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் மனோநிலையையும் எண்ணிப்பாருங்கள்.

இது எல்லா பிரசுர தளங்கள், ஊடகங்கள், மற்றும் உதவி செய்யும் நிறுவனங்கள், குழுக்கள், தனிப்பட்ட நபர்களுக்கும் பொருந்தும்.  

கிராமங்களில் முகத்தை மறைத்து படம் எடுத்தாலும்,  அது இன்னார் என்பது அந்த கிராமத்தை அறிந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.

கோப்புகள், ஆவணக்களுக்கு படங்கள் வேண்டுமாயின், தூரமாக நின்று வரிசையையோ அல்லது குழுவாகவோ படங்கள் எடுக்கப்படலாம்.  

  • தொடங்கியவர்

யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

In இலங்கை     April 26, 2020 9:34 am GMT     0 Comments     1231     by : Litharsan

Vamadevan-Thiaghendran-Tyagi-Charity-Center-Founder.jpg

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன்.

கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார். மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்ததும் பயணத்துக்கான செலவையும் இவரே ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா நிதியத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது மட்டுமல்லாது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு இதுவரை ஒரு கோடி ரூபாவையும் வழங்கியுள்ளார்.

http://athavannews.com/யாழ்-பல்கலையின்-வெளிமாவ/

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகத்தால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகத்தால் தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் இன் வேண்டுகோலுக்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெறிப்படுத்தலில் இன்று ஞயிற்றுக்கிழமை யாழ். கே கே பி இளைஞர் கழகத்தினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாவடி காளி அம்பாள் விளையாட்டு கழகம், அராலி சென் ஸ்ரார் விளையாட்டு கழகம், அராலி ஜக்கியம் விளையாட்டு கழகம், அராலி சென் நியூ ஸ்ரார் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களை சேர்ந்த 41 உதை பந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் உபதலைவர் ,செயலாளர் மற்றும் தேசிய இளைர் கழக சன்மேளன உதவி அமைப்பாளர் மற்றும் கே கே பி இளைர் கழக தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/141955

  • கருத்துக்கள உறவுகள்

நற்பணி சேவைக்காக... பாடப்பட்ட பாடல். 

  • தொடங்கியவர்
35 minutes ago, தமிழ் சிறி said:

நற்பணி சேவைக்காக... பாடப்பட்ட பாடல். 

👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்

1797 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல்

கல்குடா கொவிட்-19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் எட்டு கிராம சேகவர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1,797 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது

சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். (150)

  • 01-5-3.jpg?189db0&189db0

     

https://newuthayan.com/1797-குடும்பங்களுக்கு-உலரு/

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உலருணவு வழங்கல்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு என்பன இணைந்து கொக்கட்டிச்சோலை உட்பட்ட மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நேற்று முன் தினம் (29) வழங்கி வைத்துள்ளனர்.

உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவி அ,அமலநாயகி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். (150)

 

  • தொடங்கியவர்
2 hours ago, உடையார் said:

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு என்பன இணைந்து கொக்கட்டிச்சோலை உட்பட்ட மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நேற்று முன் தினம் (29) வழங்கி வைத்துள்ளனர்.

இளைஞர்கள் நல்ல வேளைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சுருட்டினத்தை எண்ணி முடியலை.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு வாகரையில் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

In இலங்கை     May 2, 2020 11:08 am GMT     0 Comments     1127     by : Litharsan

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி மற்றும் பால்சேனை போன்ற கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பினால் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் மக்களிடையே இன்று (சனிக்கிழமை) விநியோகிக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தின் சமூக அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இந்த உதவி வழங்கப்பட்டதாக குறித்த அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்தார்.

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Batticalao-Vakarai-Peoples-Help-2.jpg

Batticalao-Vakarai-Peoples-Help-3.jpg

Batticalao-Vakarai-Peoples-Help-4.jpg

Batticalao-Vakarai-Peoples-Help-1.jpg

Batticalao-Vakarai-Peoples-Help-5.jpg

Batticalao-Vakarai-Peoples-Help-22.jpg

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல்

கொரோணா தொற்றுநோய் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொடர் உள்ளிருப்பினால் அன்றாடம் உழைத்து வாழும் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதில் இருபாலைதெற்கு கிராம அபிவிருத்தி சங்கம் பொது அமைப்புக்களுடன் இணைந்து 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது பிரதேசத்தில் வதியும் கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப்பொதிகளை வழங்கியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் (UK) கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுசரணையுடன் கட்டப்பிராய் ஆரம்பசுகாதார நிலைய குடும்பநல உத்தியோகத்தர் ஊடாக இப்பொருட்கள் கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடும்பநல உத்தியோகத்தர், பணியாளர்கள், பிரதேசசபை உறுப்பினர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார், இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திசங்க தலைவர் திரு.பாக்கியராசா பிரதீபன், இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி.திருமதி.சறோஜா தங்கராசா, மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142366

  • கருத்துக்கள உறவுகள்

கிளாலியில் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது

 

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிளாலி கிராமத்தில் 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் இன்று காலை வழங்கப்பட்டது.

கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன் கனடாவின் மொன்றியலில் வசிக்கின்ற ஜொலிரவல்ஸ் நிறுவுனர் ஐயாத்துரை பரமேஸ்வரனின் தனிப்பட்ட நிதியான சுமார் ஒரு லட்சம் ரூபாவில் 62 குடும்பங்களுக்கு குறித்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் இ.தயாபரன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சிந்தூரம் சுப்பர் மார்க்கெட் உரிமையாளர் வி.லவன் ஆகியோர் இணைந்து உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

  • 20200502_1226370-1024x576.jpg?189db0&189
  • 20200502_122807-1024x576.jpg?189db0&189d
  • 20200502_125432-1024x576.jpg?189db0&189d
  • 20200502_123141-1024x576.jpg?189db0&189d
 
 
  • தொடங்கியவர்

மனித நேயப்பணிகள் தொடர்வது நம்பிக்கை அளிக்கிறது.

  • 2 weeks later...

துன்பப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய புலம்பெயர் உறவுகள்

இடர்காலத்தில் துன்பப்படும் மானிப்பாய் கட்டுடை மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுடை குடியேற்றத்திட்டம், கட்டுடை மத்தி, கேலங்காமம் வீதி, அரசடி வீதி ஆகிய பகுதிகளில் வறுமைக்குட்பட்ட 110 குடும்பங்களுக்கு தலா 2600 ரூபா பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று கேளிமூலை ஞானவைரவர் கோவிலடி பகுதியில் வைத்து முன்னாள் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் மற்றும் இளைஞர்களின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

உலகெங்கும் வேகமாக பரவி மனித உயிர்களை காவு கொள்ளும் கொரோனா நோய்த்தாக்கத்தின் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் பாதிப்புற்ற மக்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த கட்டுடை மருத மன்றம் மற்றும் கட்டுடையிலிருந்து புலம்பெயர்ந்து வதியும் அன்பர்களின் உதவியில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் வசித்தாலும் எமது ஊரையும் உறவுகளையும் மறக்காமல் இடர்காலத்தில் உதவியிமைக்கு பயன்பெற்றவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143348

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

IBC தமிழின் "உயிர்ச்சுவடு" அறப்பணி தொடர்கிறது.....

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அதன்பால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு பூராகவும் மக்கள் விசேடமாக தினக்கூலிக் குடும்பங்கள் உணவுத் தட்டுப்பாடினை எதிர்கொண்டிருந்தனர்.

அவ் வேளையில் தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் சிலவும் மற்றும் தனி நபர்களும் மக்களின் பசி போக்கும் உன்னத பணியில் ஈடுபடதொடங்கின.

அவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஓரிரு தினத்திலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக தாயகத்தின் பல்வேறுபட்ட பிரதேங்களில் மிகவும் வறுமையின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கு கிராமம் கிராமமாக சென்று IBC தமிழ் குழுவினர் தமது "உயிர்ச்சுவடு" நிவாரண பணியினை மேற்கொண்டுவருவது பயனாளிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளது.

அத்தோடு இவ்வாறான ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்றைய தினம் (06.06.2020) கிளிநொச்சியின் பின்தங்கிய மற்றும் போக்குவரத்து வசதி மட்டுப்படுத்தப்பட்ட மயில்வாகனபுரம் மற்றும் கண்டாவளை பிரதேச மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதோடு, இவ்வாறு இன்றும் ஒருசில கிராமங்களில் இவ் நிவாரணப் பணிகள் தொடரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144790

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.