Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஓர் பகிரங்க கடிதம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒர் பகிரங்கக் கடிதம் – நிலாந்தன்..

Open-letter.png

ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உங்களுடைய தேர்தல் வியூகங்கள் எல்லாவற்றையும் கோவிட்-19 குழப்பி விட்டது.

இதனால் உங்களுக்குப் புதிய செலவுகள் ஏற்பட்டன. பழைய நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டி வந்தது எனினும் அதை நீங்கள் ஒரு நட்டமாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் அனர்த்த நிலைமைகளைக் கையாண்டு நீங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறீர்கள்.

அதைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறீர்கள். அதனால் அது நிவாரண அரசியல் என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும் நீங்கள் நல்லது செய்கிறீர்கள். அதைப் பாராட்ட வேண்டும்.  அப்படி நிவாரணம் வழங்குவதன் மூலம் உங்களுடைய வாக்கு வங்கியை நீங்கள் பலப்படுத்தலாம்.  அது ஓர் அனர்த்த காலத்தில் தேங்கி நிற்கும் உங்களுடைய தேர்தலுக்கான நிகழ்ச்சிநிரலை வேறொரு வடிவத்தில் முன்னெடுக்க உதவக் கூடும்.

எனவே கோவிட்-19 உங்களுக்கு ஒரு விதத்தில் நன்மையும் தான். அது மட்டுமல்ல மொத்த தமிழ் அரசியற் போக்கு என்று பார்க்கும் பொழுது அந்த வைரஸ் ஒரு பாரதூரமான சிதைவு அரசியலை சில மாதங்களுக்காவது ஒத்தி வைத்திருக்கிறது என்பதும் ஒரு நன்மைதான். கடந்த பத்தாண்டுகளில் முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் தமிழ் வாக்குகள் அதிகம் சிதறக்கூடிய வாய்ப்புக்களை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தலே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் அரசியற் பரப்பில் மூன்று தேசிய கட்சிகளும் அதற்கு மேற்பட்ட சுயேச்சைக் குழுக்களும் கூட்டு முன்னணிகளும் களத்தில் இறங்கும் ஒரு தேர்தல் களம் அது.

யாழ்ப்பாணத்தில் மட்டும் மூன்றுக்கும் குறையாத சுயேட்சை குழுக்கள் குறிப்பாக சில சமூகங்களை மையப்படுத்தி போட்டியிட இருந்தன. வன்னியில் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் மதங்களை மையப்படுத்தி போட்டியிட இருந்தன.

கிழக்கில் ஒரு கூட்டு முன்னணி பிரதேசத்தை முதன்மைப்படுத்தி போட்டியிடுகிறது. சுயேட்சைக் குழுக்களில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்ற சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை மதங்களை சாதிகளை பிரதேசவாதத்தை முன்னிலைப்படுத்துவதால் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிர்த்திசையிலேயே நிற்கின்றன.

இதனை எதிரியின் உற்பத்தி என்று சொல்லிவிட்டு இலகுவாக கடந்து போய்விட முடியாது. தமிழ் மக்களின் தேசியத் திரட்சியை சிதறடிக்க விரும்பும் தரப்புக்களால் இயக்கப்படும் அளவுக்கு தமிழ் மக்களில் சில பிரிவுகள் தேசிய நீரோட்டத்திற்கு வெளியே காணப்படுகின்றன என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்களை தேசிய நீரோட்டத்தில் கரைத்துக் கொள்ள உங்களால் முடியவில்லை என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும.; சாதி ஏற்றத் தாழ்வுகள், மதப் பூசல்கள், பிரதேசவாதம் போன்ற தமிழ் மக்களின் தேசியத் திரட்சியை சிதறடிக்கும் அம்சங்களைக் குறித்து உங்களில் பலரிடம் ஒரு தேசியத் தரிசனம் இல்லை. நீங்கள் விட்ட இடைவெளிக்குள் தான் சாதி வாதிகளும் சமய வாதிகளும் பிரதேசவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் உள்நுழைகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் கரைக்க உங்களில் பலரால் முடியவில்லை. இப்பொழுதும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளைப் பெற்று நட்சத்திர அந்தஸ்துடைய ஒரு பிரமுகரை வெல்ல வைப்பது எப்படி என்று தான் உங்களில் பலர் யோசிக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காக சில சமூகங்களைப் பிரதிநிதித்துவபடுத்தும் வேட்பாளர்களைத் நீங்கள் தேடி எடுக்கிறீர்கள். மாறாக உங்களில் யாராவது அந்த வேட்பாளருக்கு வெற்றியை நிச்சயப்படுத்தி தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க தயாரா ? இது தொடர்பில் மனந்திறந்து விவாதிக்க உங்களில் எத்தனை பேர் தயார்?

இப்படித்தான் சமயப்பூசல்களின் போதும் நீங்கள் கள்ளமௌனம் காக்கிறீர்கள். வெளிப்படையாகத் துணிச்சலாகக் கருத்துக் கூற உங்களில் எதனை பேர் தயார்? திருகேதீஸ்வரம் வளைவு விவகாரத்தை உங்களில் ஒருவராலும் வெற்றிகரமாக கையாள முடியவில்லை.

அது நீதிமன்றத்துக்குப் போனதே உங்களுடைய தோல்விதான்.அதன் விளைவுதான் இப்பொழுது இந்து மத குருமார்கள் ஒரு சுயேச்சையாக நிற்கிறார்கள். மற்றொரு சுயேட்சைக் குழு,சில கத்தோலிக்க மதகுருக்களின் பின் பலத்தோடு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களை முன் வைத்துக் களமிறக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரம் மட்டுமல்ல கோவிட்-19இற்குப் பின்னரான சுவிஸ் போதகரின் விவகாரத்தையும் நீங்கள் சரியாகக் கையாளவில்லை.தீர்க்கதரிசனமாகக் கையாளவில்லை. அது உங்களுடைய பிரச்சினை அல்ல என்பது போல நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள்.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் முன்வந்து ஓர் அறிக்கை விட்ட அளவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.

கோவிட்-19 ஓர் உலகப் பெரும் தொற்றுநோயாக பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சுவிஸ் போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.சமூக ஒன்று கூடல்களைத் தவிர்த்து தனியாள் இடைவெளிகளை அதிகரிப்பது பற்றி சமூக நிறுவனங்கள் சிந்திக்க வேண்டியிருந்த ஒரு காலகட்டத்தில் அவர் ஓர் ஆராதனையை நடத்தியது விபரீதமாக முடிந்து விட்டது.

யாழ்ப்பாணத்துக்கான ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படும் ஒவ்வொரு மணித்தியாலமும் சாதாரண யாழ்ப்பாணத்தவர்கள் அந்த போதகரைத்தான் ஒரு குற்றவாளியாகப் பார்க்கிறார்கள். அவர் வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணத்துக்கு இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சாதாரண ஜனங்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் இந்த விவகாரத்தை ஆவிக்குரிய சபைகள் அனைத்துக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரமாக ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகிறார்கள.; அவர்கள் மத்தியில் உங்களுடைய கட்சிக்காரர்கள் பலருண்டு.

உங்களுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், தாயகத்திலும் புலம்பெயர்ந்த தரப்பிலும் உங்களுக்கு ஆதரவாக காணப்படும் சிலர்,உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாக நின்று படம் எடுப்பவர்கள், இப்போதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிவாரணம் வழங்குபவர்கள் என்று பலரும் உண்டு.

அவர்களுடைய முகநூல் பக்கங்களைப் பாருங்கள். ஆவிக்குரிய சபைகளைக் குற்றவாளிகளாகக் காட்டுகிறார்கள். குறிப்பாக அல்லேலூயா என்ற வார்த்தையை ஒரு தகாத வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள்.

சுவிஸ் போதகர் தனியாள் இடைவெளிகளைப் பேண வேண்டிய ஒரு காலகட்டத்தில் ஆராதனை நடத்தியது தவறு. ஆனால் அதை அவர் வேண்டுமென்று செய்ததாக கூறுவது தமிழ் மக்களின் புத்திக்கூர்மையை அவமதிப்பதாக அமைகிறது.

மட்டுமல்ல அப்படிக் கூறுவது தமிழ்த் தேசியத்தின் மத பல் வகைமைக்கு எதிரானது. அதைவிட முக்கியமாக தமிழ் தேசியத்திரட்சியை சிதைக்க உழைக்கும் சக்திகளின் பொறிக்குள் குருட்டுத்தனமாக விழுவது.

ஒரு போதகர் தன்னை அறியாமல் செய்த ஒரு தவறுக்காக எல்லா ஆவிக்குரிய சபைகளையும் அல்லேலுயா கூட்டம் என்று கூறி அவதூறு செய்வது என்பது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல.

ஒரு நோயாளியை நாங்கள் குற்றவாளியாக காட்டுகிறோம். நோயை ஒரு குற்றமாக காட்டுகிறோம.; அதை வைத்து மதமாற்றத்துக்கு எதிராகவும் ஆவேசமாக பேசுகிறோம்.

உங்களுக்குத் தெரியுந்தானே மதமாற்றத்தின் அடிப்படைகள் எங்கே இருக்கின்றன என்று? வறுமை, அறியாமை, சமூக ஏற்றத்தாழ்வு, போருக்கு பின்னரான உளவியல் போன்றவையே அதற்கு அடிப்படை. உலகம் முழுவதும் என்.ஜி.ஒ.க்களுக்கு பின்னாலும் புதிய மத அமைப்புகளுக்குப் பின்னாலும் உள்நோக்கமுடைய நிகழ்ச்சிநிரல்கள் இருக்கக்கூடும்.

ஆனால் அவ்வாறான மதம்மாற்றும் சபைகள் உங்களுடைய சமூகத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய இடைவெளிகளை நீங்களும் நிரப்பவில்லை என்பதே உண்மை. எனவே முதல் தவறு உங்களுடையது.

இது விடயத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களை ஏன் நீங்கள் இதுவரையிலும் சரியாக வழிநடத்தவில்லை ? அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்ககங்களைச் சென்று பாருங்கள்.

அங்கு அவர்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அது தமிழ் தேசியத் திரட்சிக்கு எதிரானது என்பதனை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டுவதில்லையா?  அல்லது ஆவிக்குரிய சபைகளில் உங்களுக்கு வாக்காளர்கள் இல்லையா? அல்லது ஆவிக்குரிய சபை உட்பட கிறிஸ்தவ வாக்குகள் உங்களுக்கு தேவை இல்லையா? அப்படி என்றால் தனிச் சிங்கள வாக்குகளால் மட்டும் வெல்லலாம் என்று நம்பும் ராஜபக்சக்களுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு ? சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் போலவே தமிழ் தேசியமும் ஒரு மதத் தேசியம்தான் என்று கூறப் போகிறீர்களா?

சிங்கப்பூரின் பிரதமர் நாட்டுக்கு உரையாற்றும் போது மலேசியாவில் நடந்த மத நிகழ்வில் பங்குபற்றியவர்களிடமிருந்தும் நோய் தொற்றியது என்பதை எப்படி ஒரு குறிப்பாக மட்டும் கூறிவிட்டுக் கடந்து போகிறார் என்று பாருங்கள். உங்களில் ஒருவருக்கும் அந்தத் துணிச்சல் இல்லையா?

சுவிஸ் போதகரின் விவகாரம் ஒரு குறியீடு மட்டுமே. அதுபோல பல விடயங்கள் உண்டு. கூட்டமைப்பும் மாற்று அணியும் அதிகமதிகம் மையங் கொண்டிருப்பது வடக்கில்தான்.

மாற்று எனப்படுவது அதிகபட்சம் வடக்கு மையமாகவே காணப்படுகிறது. வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோஷம் தேர்தல் கால சுலோகமாக மாறி வருகிறது. கிழக்கு மையத்திலிருந்து தாயகத்தை கட்டியெழுப்பும் பொருத்தமான அரசியல் தரிசனங்கள் எவையும் உங்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இந்த வெற்றிடத்தில் தான் கிழக்கை மையப்படுத்தி குறிப்பாக வடக்கு முதன்மைக்கு எதிராக கூட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.

அதாவது தமிழ் தேசியத் திரட்சியை கட்டி எழுப்பும் விதத்தில் பொருத்தமான வேலைத்திட்டங்கள் உங்களிடம் குறைவு என்பதனால்தான் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் கட்சிகள் மேலெழுகின்றனவா?
இவ்வாறாக மதத்தை மையப்படுத்தி சாதியை மையப்படுத்தி பிரதேசவாதத்தை மையப்படுத்தி கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடும் ஒரு நிலைமை தீவிரமடைவது என்பது கடந்த பத்தாண்டுகளாக நீங்கள் தோல்வியுற்று வருவதைக் காட்டவில்லையா?

இவ்வாறு தமிழ் அரசியல் பரப்பில் நான்குக்கும் மேற்பட்ட கட்சிகளும் பல்வேறு சுயேட்சை குழுக்களும் போட்டியிட இருந்த ஒரு தேர்தல் களத்தை கோவிட்-19 ஓத்தி வைத்திருக்கிறது.

அப்படி பார்த்தால் அது ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. கோவிட்-19க்கு பின்னரான அரசியலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை நின்று நிதானமாக சிந்திப்பதற்கு உரிய ஒரு கால அவகாசத்தை அது உங்களுக்கு தந்திருக்கிறது. இந்த ஒத்திவைக்கப்பட்ட காலத்தை ஆழமாக சிந்திப்பதற்கும் தீர்க்கதரிசனமாக முடிவெடுப்பதற்கும் பயன்படுத்துகிறீர்களா? அல்லது தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு நிவாரண அரசியலிலேயே உங்களுடைய முழுச் சக்தியையும் செலுத்துவீர்களா ?

அங்கேயும் கூட ஒவ்வொரு கட்சியும் தன்பாட்டில் நிவாரணத்தை வழங்குகின்றது. அதற்கென்று ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறை இல்லை. ஓரனர்த்த காலத்திலாவது நீங்கள் எல்லாரும் இணைந்து ஓர் ஒன்றிணைந்த பொறிமுறையைக் கண்டுபிடிப்பீர்களா?

கோவிட்-19 பூகோள அரசியல் போக்கில், பொருளாதாரதில் எதிர்பாராத இடைநிறுத்தத்தைச் செய்திருக்கிறது. ஒரு பூகோள நெருக்கடியை முன்வைத்து நீங்கள் குளோபலாகவும் லோக்கலாகவும் சிந்திப்பதற்கு அருமையான ஒரு தருணம் இது.

கோவிட்-19ற்குப்பின் பூகோள மயமாதலைக் குறித்தும் தேசியவாதத்தை குறித்தும் புதிய உரையாடல்கள் தொடங்கப் போகின்றன. இப்பொழுது புகையில்லாத வானம் நிர்மலமாக இருப்பது போல உங்களுடைய மனதையும் நிர்மலமாக மாற்றி ஆறஅமர இருந்து ஆழமாக யோசியுங்கள்.

உலகம் முழுவதற்கும் ஒரு பொது ஆபத்தாக மேலெழுந்த கோவிட்-19 தமிழ் மக்களுக்கும் ஒரு புதிய அனுபவம்தான். இத்தருணத்தில் நிவாரணம் கொடுப்பதற்கும் அப்பால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்ட பொழுது எல்லாக் கட்சிகளும் அதற்கு எதிராக அறிக்கை விட்டீர்கள்.

அதேசமயம் கோவிட் -19 கொண்டுவந்திருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களுடைய சமூகத்தை தயார்படுத்தும் நோக்கில் நம்பிக்கையூட்டி வழிகாட்டும் விதத்தில் உங்களில் எத்தனை பேர் இதுவரையிலும் பேசி இருக்கிறீர்கள் ? பெருந்தமிழ்ப் பரப்பில் தாயகத்தை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கோவிட்-19 அதிகம் உயிர்களை எடுத்திருக்கிறது

உங்களில் எத்தனை பேர் டயஸ்பொறாவோடு கூட்டொருமைப்பாட்டைக் காட்டியுள்ளீர்கள்?ஒரு புலம் பெயர்ந்த தமிழ் நண்பர் கேட்டார் தொழில் சார் மருத்துவர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் நிவாரணப் பொதிகளோடு படம் போடுகிறார்கள்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் முன்னணிப் படையாக நிற்பவர்கள் மருத்துவர்களே. அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழ் மருத்துவர்கள் தமது தொழில்சார் உதவிகளை ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கலாமே என்று. ஓய்வு பெற்ற மருத்துவர்கள் சேவைக்குத் திரும்புமளவுக்கு இங்கு நோய்த்தொற்று தீவிரமாகவில்லைத்தான்.

அதேசமயம், அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கார் தற்காலிகமாக தனது மருத்துவத் தொழிலுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். இங்கிலாந்தில் அழகு ராணியாக வந்த பார்ஷா முகர்ஜீ தனது மருத்துவத் தொழிலுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழ் மருத்துவர்களோ நிவாரணப் பொதிகளுடன் நிற்கிறார்கள்.

ஸ்பானியாவின் மாட்ரிட் நகரில் இருந்து ஒரு மருத்துவர் கூறினார் கோவிட்-19 இற்கு முன்னே நாங்கள் நிர்வாணமாக நிற்கிறோம் என்று. ஆனால் இப்பொழுது மெய்யாகவே நிர்வாணமாக நிற்பது கடவுளின் முகவர்கள்தான் என்று எனது நண்பன் ஒருவன் கூறினான். அவ்வாறு கடவுளின் முகவர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு காலத்தில் மருத்துவர்கள் சமூகத்தின் பேச்சாளர்களாக மாறுகிறார்களா?

ஒம். மருத்துவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் அவரவருக்குரிய கடமையைச் செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட நெருக்கடியான அசாதாரண சூழ்நிலையில் தமது மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.

அவர்களுடைய கூட்டு உளவியலைச் சோர விடாமல், சிதைய விடாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு உலகப்பொது நோயை எதிர்கொள்வதற்கு தேவையான சமூக நோய் எதிர்ப்புச்சக்தி என்பது சமூகத்தின் தன்னம்பிக்கையிலும் தங்கியிருக்கிறது.

ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப முதன்மையாக அரசியல் தலைவர்களாலும் ஆன்மீகத் தலைவர்களாலும்தான் முடியும். ஒரு உலகப்பெரும் தோற்று நோய்க்கு எதிராக சமூக நோய் எதிர்ப்புச் சக்தியை மருத்துவர்கள் மட்டும் கட்டியெழுப்ப முடியாது.

அதற்கு ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சிவில்சமூகங்கள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் கூட்டாக உழைக்க வேண்டும்.

அது ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். தமிழ் கட்சித் தலைவர்களே அப்படி ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்குவீர்களா?

கோவிட்-19இன் தாக்கம் குறையும் பொழுது உலகில் ஒரு தொகுதி தலைவர்கள் நிறுவப்பட்டிருப்பார்கள். ஒரு தொகுதி தலைவர்கள் கழித்து விடப்பட்டிருப்பார்கள். தமிழ்க் கட்சித் தலைவர்களே நீங்கள் இதில் எந்த வகைக்குள் அடங்கப் போகிறீர்கள்?

#தமிழ்க்கட்சித்தலைவர்கள் #கடிதம்  #திருக்கேதீஸ்வரம்

http://globaltamilnews.net/2020/140408/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுவிஸ் போதகர் தனியாள் இடைவெளிகளைப் பேண வேண்டிய ஒரு காலகட்டத்தில் ஆராதனை நடத்தியது தவறு. ஆனால் அதை அவர் வேண்டுமென்று செய்ததாக கூறுவது தமிழ் மக்களின் புத்திக்கூர்மையை அவமதிப்பதாக அமைகிறது.

சுவிஸ் போதகர் தமிழ் மக்களை மதம் மாற்றுவதற்காக கொரோனாவில் காப்பாற்ற யேசு பிரானிடம் வாருங்கள் என்று சர்ந்தர்பத்தை பயன்படுத்தியதிற்கும் தமிழ் மக்களின் புத்திக்கூர்மைக்கும் என்ன தொடர்பு?

சுவிஸ் போதகரின் மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அதை ஆதரிக்கும் கட்டுரையாளரின் புத்திக்கூர்மைக்கும் தொடர்பு உள்ளது.

ஏதாவது உருப்படியா இருக்குமென வாசிச்சா எல்லாமே வெறும் புலம்பலா இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

ஏதாவது உருப்படியா இருக்குமென வாசிச்சா எல்லாமே வெறும் புலம்பலா இருக்கு. 

தமிழ் மக்களுக்கு உரிமைகளும் தனிநாடும் வேண்டும் என்ற காலம் போய் இப்போது  சமூக, சாதி, மத, பிரதேசப் பிரிவினைகள் அதிகரித்துள்ள நிலை.

தமிழ்ச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை உள்ள நிலாந்தன் போன்ற நேரிய மனிதர்கள் கள்ள மெளனத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களை நோக்கி வைக்கும் நியாயமான கேள்விகள் புலம்பல்களாகத் தெரிந்தால் நாம் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றுதான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுவிஸ் போதகரின் மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அதை ஆதரிக்கும் கட்டுரையாளரின் புத்திக்கூர்மைக்கும் தொடர்பு உள்ளது.

ஆவிக்குரியவர்களுக்கு நிலாந்தன் வக்காலத்து வாங்கவில்லை. சுவிஸ் போதகர் தான் முன்னர் இந்துவாக இருந்தேன்; பின்னர் ஞானம் கிடைத்தது என்று சொல்லி மதமாற்றத்திற்கான பிரச்சாரம் செய்தது உண்மைதான். கொரோனாவிலிருந்து சுவிஸ் மருத்துவர்களின் உதவியால் தப்பிப்பிழைத்தவர் தனது ஆவிக்குரிய சபையின் பிரார்த்தனையால்தான் மீண்டுவந்தேன் என்று தெம்பு வந்தபின் பிரச்சாரம் செய்வார். அவர் பின்னால் போகின்றவர்கள் அறியாமை, வறுமை காரணமாகத்தான் போகின்றார்கள். தமிழ் சமூகத்தில் ஆவிக்குரியவர்களும் அடக்கம் என்பதைத்தான் நிலாந்தன் சொல்கின்றார். ஆவிக்குரியவர்களை வெறுத்துப் புறந்தள்ளுவதன் மூலம் பிரிவினைகளை கூட்டலாம் ஒழியக் குறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் போன்ற வாசகர்களை நம்பித் தான் நிலாந்தன் போன்றவர்கள் இன்னும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் 😪
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ் சமூகத்தில் ஆவிக்குரியவர்களும் அடக்கம் என்பதைத்தான் நிலாந்தன் சொல்கின்றார். ஆவிக்குரியவர்களை வெறுத்துப் புறந்தள்ளுவதன் மூலம் பிரிவினைகளை கூட்டலாம் ஒழியக் குறைக்க முடியாது.

ஆவிக்குரிய சபைகளை சேர்ந்தவர்கள் தான் மற்றய தமிழர்களை சிலை வணங்கிகள் என்றும் யேசுபிரானை ஏற்று கொள்ளாத பெரும் தவறை செய்பவர்கள் என்றும் வெறுத்து புறந்தள்ளுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவரின் இறப்பு வீட்டில் அவரின் மதம் மாறிய அக்கா வந்து இறந்த தம்பியும் யேசுபிரானை எற்று கொண்டவர் என்றும் ஆதாரம் தன்னுடன் சேர்ந்து பிரார்த்தனை பாடல்கள் போனில் பாடுபவர்  இறுதிகிரிகை கிறித்துவ முறைபடி தான் நடைபெறவேண்டும் என்று பிரச்சனை கிளப்பினா. அவர் மதம்மாறி இருப்பார் என்பதை அவர் மனைவியோ குடும்பத்தாரோ நண்பர்களோ நம்பவில்லை.

5 hours ago, கிருபன் said:

தமிழ்ச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை உள்ள நிலாந்தன் போன்ற நேரிய மனிதர்கள் கள்ள மெளனத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களை நோக்கி வைக்கும் நியாயமான கேள்விகள்

நிலாந்தன் அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்ப்பது சுவிஸ் போதகர் போன்றவர்களின் மதமாற்ற நடவடிக்கைகளை மக்கள் குறை சொல்லும் போது நீங்கள் கண்டித்து கண்டும் காணாத மாதிரி அவர்களை போகவைக்க வேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

நிலாந்தன் அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்ப்பது சுவிஸ் போதகர் போன்றவர்களின் மதமாற்ற நடவடிக்கைகளை மக்கள் குறை சொல்லும் போது நீங்கள் கண்டித்து கண்டும் காணாத மாதிரி அவர்களை போகவைக்க வேண்டும் என்பதே.

நிலாந்தனின் எழுத்தை ஆறுதலாகப் படித்தால் மேலே நீங்கள் சொல்வது தவறு என்று விளங்கும்.

திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரம் மட்டுமல்ல கோவிட்-19இற்குப் பின்னரான சுவிஸ் போதகரின் விவகாரத்தையும் நீங்கள் சரியாகக் கையாளவில்லை.தீர்க்கதரிசனமாகக் கையாளவில்லை. அது உங்களுடைய பிரச்சினை அல்ல என்பது போல நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள்.

கோவிட்-19 ஓர் உலகப் பெரும் தொற்றுநோயாக பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சுவிஸ் போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.சமூக ஒன்று கூடல்களைத் தவிர்த்து தனியாள் இடைவெளிகளை அதிகரிப்பது பற்றி சமூக நிறுவனங்கள் சிந்திக்க வேண்டியிருந்த ஒரு காலகட்டத்தில் அவர் ஓர் ஆராதனையை நடத்தியது விபரீதமாக முடிந்து விட்டது.

யாழ்ப்பாணத்துக்கான ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படும் ஒவ்வொரு மணித்தியாலமும் சாதாரண யாழ்ப்பாணத்தவர்கள் அந்த போதகரைத்தான் ஒரு குற்றவாளியாகப் பார்க்கிறார்கள். அவர் வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணத்துக்கு இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சாதாரண ஜனங்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் இந்த விவகாரத்தை ஆவிக்குரிய சபைகள் அனைத்துக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரமாக ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகிறார்கள.; அவர்கள் மத்தியில் உங்களுடைய கட்சிக்காரர்கள் பலருண்டு.

அவர்களுடைய முகநூல் பக்கங்களைப் பாருங்கள். ஆவிக்குரிய சபைகளைக் குற்றவாளிகளாகக் காட்டுகிறார்கள். குறிப்பாக அல்லேலூயா என்ற வார்த்தையை ஒரு தகாத வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள்.

சுவிஸ் போதகர் தனியாள் இடைவெளிகளைப் பேண வேண்டிய ஒரு காலகட்டத்தில் ஆராதனை நடத்தியது தவறு. ஆனால் அதை அவர் வேண்டுமென்று செய்ததாக கூறுவது தமிழ் மக்களின் புத்திக்கூர்மையை அவமதிப்பதாக அமைகிறது.

மட்டுமல்ல அப்படிக் கூறுவது தமிழ்த் தேசியத்தின் மத பல் வகைமைக்கு எதிரானது. அதைவிட முக்கியமாக தமிழ் தேசியத்திரட்சியை சிதைக்க உழைக்கும் சக்திகளின் பொறிக்குள் குருட்டுத்தனமாக விழுவது.

ஒரு போதகர் தன்னை அறியாமல் செய்த ஒரு தவறுக்காக எல்லா ஆவிக்குரிய சபைகளையும் அல்லேலுயா கூட்டம் என்று கூறி அவதூறு செய்வது என்பது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல.

உங்களுக்குத் தெரியுந்தானே மதமாற்றத்தின் அடிப்படைகள் எங்கே இருக்கின்றன என்று? வறுமை, அறியாமை, சமூக ஏற்றத்தாழ்வு, போருக்கு பின்னரான உளவியல் போன்றவையே அதற்கு அடிப்படை. உலகம் முழுவதும் என்.ஜி.ஒ.க்களுக்கு பின்னாலும் புதிய மத அமைப்புகளுக்குப் பின்னாலும் உள்நோக்கமுடைய நிகழ்ச்சிநிரல்கள் இருக்கக்கூடும்.

ஆனால் அவ்வாறான மதம்மாற்றும் சபைகள் உங்களுடைய சமூகத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய இடைவெளிகளை நீங்களும் நிரப்பவில்லை என்பதே உண்மை. எனவே முதல் தவறு உங்களுடையது.

இது விடயத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களை ஏன் நீங்கள் இதுவரையிலும் சரியாக வழிநடத்தவில்லை ? அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்ககங்களைச் சென்று பாருங்கள்.

அங்கு அவர்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அது தமிழ் தேசியத் திரட்சிக்கு எதிரானது என்பதனை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டுவதில்லையா?  அல்லது ஆவிக்குரிய சபைகளில் உங்களுக்கு வாக்காளர்கள் இல்லையா? அல்லது ஆவிக்குரிய சபை உட்பட கிறிஸ்தவ வாக்குகள் உங்களுக்கு தேவை இல்லையா? அப்படி என்றால் தனிச் சிங்கள வாக்குகளால் மட்டும் வெல்லலாம் என்று நம்பும் ராஜபக்சக்களுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு ? சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் போலவே தமிழ் தேசியமும் ஒரு மதத் தேசியம்தான் என்று கூறப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன் , அவருக்கு[அந்த பாஸ்டருக்கு ] இலங்கைக்கு வரும் போதே காய்ச்சல் இருந்திருக்கு...கட்டுநாயக்காவில் எங்கேயோ மருந்து வாங்கி இருக்கிறார்கள்...அவர்களது சபை அவருக்கு வருத்தம் என்று தெரிந்து  பாதுகாப்பாயத் தான் கூட்டம் நடத்தினோம் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள்.
அவருக்கு வருத்தம் வந்தது தப்பில்லை ...அது யாருக்கும் வரும்...ஆனால் வருத்தம் என்றும் தெரிந்தும் கொரோனாவை ஒழிக்கிறேன் என்று கூட்டம் நடத்தினது தான் தப்பு.
இதை நிலாந்தனுக்கு விளக்கமாய் சொல்லி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

கிருபன் போன்ற வாசகர்களை நம்பித் தான் நிலாந்தன் போன்றவர்கள் இன்னும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் 😪
 
அவர் செகிடு கிழிஞ்ச அரசியல்வாதிகளுக்கு எவ்வளவுதான் ஓதினாலும் ஏறாது என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்தும் எழுதிவருகின்றார். நான் வாசிக்கமட்டும்தான் செய்கின்றேன்.😀

6 minutes ago, ரதி said:

கிருபன் , அவருக்கு[அந்த பாஸ்டருக்கு ] இலங்கைக்கு வரும் போதே காய்ச்சல் இருந்திருக்கு...கட்டுநாயக்காவில் எங்கேயோ மருந்து வாங்கி இருக்கிறார்கள்...அவர்களது சபை அவருக்கு வருத்தம் என்று தெரிந்து  பாதுகாப்பாயத் தான் கூட்டம் நடத்தினோம் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள்.
அவருக்கு வருத்தம் வந்தது தப்பில்லை ...அது யாருக்கும் வரும்...ஆனால் வருத்தம் என்றும் தெரிந்தும் கொரோனாவை ஒழிக்கிறேன் என்று கூட்டம் நடத்தினது தான் தப்பு.
இதை நிலாந்தனுக்கு விளக்கமாய் சொல்லி விடுங்கள்.

போதகர் எப்படி கூட்டம் நடாத்தினார், ஏன் நடாத்தினார் என்று நிலாந்தனுக்கு விளக்கமாகத் தெரியும் என்பதை அவரது இன்னோர் கட்டுரையில் படித்திருந்தேன். போதகருக்கு கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. இப்போது தெரிந்திருந்தும் தனது பிழைப்புக்காகச் சொல்லப்போவதில்லை.  ஒருவரின் தவறினால் ஒரு சமூகத்தையே குற்றம்காண்பது தவறு என்பதுதான் சொல்ல வருவது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவர் செகிடு கிழிஞ்ச அரசியல்வாதிகளுக்கு எவ்வளவுதான் ஓதினாலும் ஏறாது என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்தும் எழுதிவருகின்றார். நான் வாசிக்கமட்டும்தான் செய்கின்றேன்.😀

போதகர் எப்படி கூட்டம் நடாத்தினார், ஏன் நடாத்தினார் என்று நிலாந்தனுக்கு விளக்கமாகத் தெரியும் என்பதை அவரது இன்னோர் கட்டுரையில் படித்திருந்தேன். போதகருக்கு கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. இப்போது தெரிந்திருந்தும் தனது பிழைப்புக்காகச் சொல்லப்போவதில்லை.  ஒருவரின் தவறினால் ஒரு சமூகத்தையே குற்றம்காண்பது தவறு என்பதுதான் சொல்ல வருவது.

நீங்கள் சும்மா,சும்மா அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் :39_angry:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நீங்கள் சும்மா,சும்மா அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் :39_angry:

நான் யெகோவாவின் சாட்சிகள் போன்ற ஆவிக்கூட்டக்காரருக்கு வக்காலத்து வாங்குவதில்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தும் பிள்ளையாரைப் பிசாசு என்று தனது மகனுக்குச் சொல்லிக்கொடுத்த போதகரின் மனைவியான உறவினர் ஒருவரை வீட்டுப்பக்கம் கூட அண்டுவதில்லை. அவ்வளவு தெளிவாக இருக்கின்றேன்😀

ஆனால் தமிழ்ச் சமூகத்தில் அவர்களும் அடங்குகின்றார்கள் என்று நிலாந்தன் சொல்வதை ஏற்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 09:16, கிருபன் said:

நிலாந்தனின் எழுத்தை ஆறுதலாகப் படித்தால் மேலே நீங்கள் சொல்வது தவறு என்று விளங்கும்.

உங்களில் நம்பிக்கை உண்டு. உறவினரின் பிள்ளை பிறந்ததை பார்க்க போன போது ஆவிக்குரிய சபை போதகரின் மதமாற்றும் முயற்சியை எதிர்த்து நீங்கள் நின்றது  ஒன்றே போதும். ஆனால் நிலாந்தனில் நம்பிக்கை இல்லை.

எனக்கு இன்னும் விளங்காதது  மதம் மாற்றுகின்ற ஆவிக்குரிய சபைகளும் தமிழ்ச் சமூகத்தில் அடங்குகின்றார்கள் என்று சொல்லும் நீங்கள் இந்தியாவில் எந்த சாதிகாரன் எந்த பத்திரிக்கை நடத்துகிறார் என்று சாதி பார்க்கிறீர்கள்😢

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இந்தியாவில் எந்த சாதிகாரன் எந்த பத்திரிக்கை நடத்துகிறார் என்று சாதி பார்க்கிறீர்கள்😢

அரைகுறையாக விளங்கித் திரிக்கக்கூடாது.😃 அந்தத் திரியில் மலையானுக்கு தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறேன்.  அது விளங்காவிட்டால் பத்துத் தரம் படியுங்கள்😀 

Quote

பார்ப்பனியம் என்பது சாதி இல்லை. சிந்தனைமுறை. 

பார்ப்பனர்கள் இல்லாதவர்களுக்கும் பார்ப்பனியச் சிந்தனை இருக்கும். அது ஈழத்தமிழரில் சிலரிடம் இருக்கு.

சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவற்றை பரப்பும் ஊடகங்களை நான் பொதுவாகப் படிப்பதில்லை. அதனை சாதி பார்ப்பதாக நீங்கள் நினைப்பது தவறு

இன்னும் விளங்காவிட்டால் இதனையும் படியுங்கள்..😎

மார்க்ஸிய லெனினியவாதிகளான நாம் லூசிபரின் நேசர்களல்ல. ஆயுதங்களைச் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்தப் பழகாததுமான ஒடுக்கப்பட்ட வர்க்கமொன்று அடிமைகளாகக் கணிக்கப்படுவதற்கே தகுதியானதாகும். நாம் ஜைன வேதத்தினரோ மோகனதாஸ் காந்தியைப் பின்பற்றுபவர்களோ அல்ல. வர்க்க எதிரிக்கு முன்னால் அஹிம்சையாளர்களாக இருக்கவேண்டுமென்றோ எதிரி வர்க்கத்திற்குக் கருணை காட்ட வேண்டுமென்றோ நாம் உபதேசிக்கமாட்டோம். நாம் லியோ டால்ஸ்டாயின் மாணவர்களோ சாந்திவாத காவியத்தில் வரும் தவுஷரைப் பின்பற்றுபவர்களோ அல்ல. மார்க்ஸியவாதிகளாகிய நாங்கள் பிலென்கிவாதிகளல்ல. மென்ஷ்விக்குகளும் அல்ல. போல்ஷ்செவிக் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நாங்கள் மல்காந்தி ஆச்சாவின் மகன் சந்துல் சகோதரயாவின் சதுரக்கோடுகள் போட்ட காகிதக் குறிப்புகள் - இச்சா

நடு நிலையான ஒரு தமிழனின் ஆதங்கம்।தமிழர்களுக்கு  புரிந்தால் சரி।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.