Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் இருந்து இந்தியா நோக்கி விரையும் 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற்-கள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளம்பியாச்சு.. 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற்-கள்.. ஓன் தி வே, சீனாவில் இருந்து இந்தியா நோக்கி விரைகிறது..!

china-economy-1587025817.jpg

டெல்லி: எத்தனையோ பிரச்சனைகள், குழப்பங்களை தாண்டி.. ஒருவழியாக நமக்கு ரேபிற் ரெஸ்ற் கிற்-கள்  வரப்போகிறது.. சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற்-களுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது  என்ற நல்ல செய்தி நமக்கு கிடைத்தள்ளது.

அநேகமாக இந்த சரக்கு விமானம் இன்று சாயங்காலம் நம் நாட்டுக்கு வந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.சீனாவில் வெடித்து கிளம்பிய வைரஸ் உலக நாடுகளை மரண பீதியில் நடுங்க வைத்து வருகின்றது.. இந்த கொரோனாவுக்கு இதுவரைக்கும் எந்த தடுப்பு மருந்தும் இல்லை... குணமாக்கும் மருந்தும் இல்லை..

அதை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இந்த வைரஸ் பெருமளவு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைதான் தாக்கும் என்ற அறி குறி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க எந்த மருத்துவ வசதியும் இல்லை..

ஆனால், இதற்கான ரேபிற் ரெஸ்ற் கிற் டினை சீனா கண்டறிந்துள்ளது.இதன் மூலம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.. அவ்வாறு அறிந்து கொண்டால், பிசிஆர் ரெஸ்ற் மூலம் நமக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதையும் ஈஸியாக கண்டுபிடித்து கொள்ள முடியும்..

இந்த கிற்-தான் நமக்கு இல்லாமல் இருந்தது.. இதற்காக ஏற்கனவே சீனாவிடம் இந்தியா கேட்டிருந்த நிலையில் மிகவும் குறைவாகத்தான் வந்ததாக சொல்லப்பட்டது.இதற்கு பிறகு நமக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த கிற் கள் வந்து சேரவில்லை..

இதுதான் பாரிய சிக்கலை இந்தியாவுக்கு கிளப்பியது.. தமிழகமும் இந்த பிரச்சனையை சந்தித்தது.. தென்கொரியா அனுப்பிய ரேபிற்  ரெஸ்ற் கிற் களை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டதாகவும் செய்திகள் வந்து குழப்பியடித்தன..

ஆனால் இப்போது சீனாவிடம் நமக்கு போதுமான கிற்-கள் கேட்கப்பட்டுள்ளன, எப்படியும் 2,3 நாளில் வந்து சேர்ந்துவிடும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் நம்பிக்கை அளிக்கப்பட்டது.அதன்படியே சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற் களுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது..

.ரெபிற் ரெஸ்ற் கிற் கள் வந்த பிறகு சுங்கத்துறை அனுமதியுடன் டெல்லியில் உள்ள தேசிய மலேரியா ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து விமானம் மூலம் அனுப்பப்படும்..

குறிப்பாக வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை தந்து பகிர்ந்தளிக்கப்படும் என நம்பப்படுகிறது..

அந்த வகையில் மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தானுடன், தமிழகத்துக்கும் ரெஸ்ற் கிற்-கள் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது..

இது நமக்கு மிகபெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

https://tamil.oneindia.com/news/delhi/coroanvirus-rapid-test-kits-arrived-india-from-china-382810.html

டிஸ்கி :

      .      ====== ( ட்ரம்பு )=======

Goundamani+Reaction+fb+comment2.png

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து விமானம் மூலம் அனுப்பப்படும்..

ஒரு கிற் மூலம் எத்தனை நபர்களைச் சோதிக்கலாம் ? ஒருவரை மட்டும் என்றால் இது ஒரு ஊருக்கே போதாதே ?

  • கருத்துக்கள உறவுகள்

China dispatches 650,000 medical kits to India to fight COVID-19: Indian envoy

Over two million test kits being procured from China will be sent to India in the next 15 days, Indian Ambassador to Beijing Vikram Misri told.

BEIJING: China on Thursday dispatched 650,000 coronavirus medical kits to India to help fight the COVID-19 pandemic, Indian Ambassador to Beijing Vikram Misri said.

Over two million test kits being procured from China will be sent to India in the next 15 days, he told PTI here.

“#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India,” Misri tweeted on Thursday.

 
 

முதலில் இந்த விரைவு பரிசோதனை உபகரணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு அவற்றின் நோய் கண்டறியும் திறன் உறுதிப்படுத்தப்படவேண்டும். ஏற்க்கனவே சீனா அனுப்பிய  விரைவு பரிசோதனை உபகரணங்களின் கண்டறியும் திறனில் கேவிக்குறி இருப்பதாக துருக்கி, ஸ்பெயின், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், செக் ரிபப்ளிக்  ஆகிய நாடுகள் கண்டுபிண்டித்துள்ளன. 80% கண்டறியும் திறன் உள்ளதாக கூறப்பட்ட உபகரணங்களின் 30-40% திறன்  மட்டுமே உள்ளதாக ஸ்பெயின், பிலிப்பின்ஸ் கண்டுபிண்டித்துள்ளன. 

மூலம் 

https://www.independent.co.uk/news/world/asia/coronavirus-china-test-europe-anitbody-antigen-spain-uk-a9443186.html
https://www.straitstimes.com/asia/manila-should-test-china-made-kits-inquirer

Edited by puthalvan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

ஒரு கிற் மூலம் எத்தனை நபர்களைச் சோதிக்கலாம் ? ஒருவரை மட்டும் என்றால் இது ஒரு ஊருக்கே போதாதே ?

கேட்டதோ 4 லட்சம்.. தமிழகம் வந்ததோ 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள்.. கொரோனா ஒழிப்பு சாத்தியமா?

corona-kit-1585464134-1587105623.jpg

சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனையை 1 மணி நேரத்திற்குள் செய்ய உதவும், 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் முதல்கட்டமாக தமிழகம் வந்துள்ளது. ஆனால், இது ஆர்டர் செய்த அளவான 4 லட்சத்துடன் ஒப்பிட்டால், யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போன்றதுதான்.கொரோனா வைரஸ் பாதிப்பை உடனடியாகக் கண்டு பிடிப்பதற்கு ரேப்பிட் டெஸ்ட் என்ற ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் இந்த ரேப்பிட் டெஸ்ட் கருவி, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தெரிவித்து விடும்.சீனாவிலிருந்து இது போன்ற கருவிகளை மத்திய அரசு தமிழக அரசு ஆர்டர் செய்து இருந்தது. ஆனால அது அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த பரிசோதனை கருவிகளுக்காக காத்திருந்தது தமிழகம்.மத்திய அரசு அதை வாங்கி ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்து கொடுக்கும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து, முதல் கட்டமாக 24,000 ரேப்பிட் பரிசோதனை கருவிகள் சென்னை வந்துள்ளன.இன்று மாலை அனைத்து பகுதிகளுக்கும் அது அனுப்பிவிடப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்த கிட்கள் தற்போதைய நடைமுறையில் பரிசோதனை செய்யும் பிசிஆர் சோதனை முறைகள் போல முழுக்க நம்பகத் தன்மை கொண்டவை இல்லை

.இந்த கிட்களை வைத்து பரிசோதனை செய்த பிறகு, பிசிஆர் சோதனையும் செய்து பார்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். குறிப்பாக பாசிட்டிவ் என காட்டினால் பிசிஆர் சோதனை செய்யாமல் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்க மாட்டார்கள்

மேலும், கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 9ம் தேதி இரவே தமிழகத்திற்கு வந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் இன்றுதான் கிட் வந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. அங்கேயும் நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது.

இந்நிலையில் தான், ஒரு மணி நேரத்திற்குள், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்கி தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி சுமார் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அறிவித்தார்.

ஆனால், மத்திய அரசு, திடீரென ரேப்பிட் டெஸ்ட் கருவியை மாநிலங்கள் நேரடியாக வாங்க தடை விதித்தது. மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கிய பிறகுதான், அவை தமிழகத்துக்கு பிரித்து தரப்படும் என்றும் கூறியது.

இந்த நிலையில்தான், வெறும் 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள், தமிழகம் வந்துள்ளன. 4 லட்சம் ஆர்டர் கொடுக்கப்பட்டதற்கும், வந்துள்ள கருவிகள் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம் இருப்பதால், வேகமாக பரிசோதனைகள் செய்யப்படுவதில் சிக்கல் எழும் சூழ்நிலை உருவாகியுள்ளது

https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-recieved-24-000-rapid-test-kits-for-coronavirus-test-382895.html

டிஸ்கி :

mqdefault.jpg

அதோ தெரியுது பார் மல .. அதைதான் நீ சானை பிடிக்கணும்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கேட்டதோ 4 லட்சம்.. தமிழகம் வந்ததோ 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள்.. கொரோனா ஒழிப்பு சாத்தியமா?

 

சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனையை 1 மணி நேரத்திற்குள் செய்ய உதவும், 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் முதல்கட்டமாக தமிழகம் வந்துள்ளது. ஆனால், இது ஆர்டர் செய்த அளவான 4 லட்சத்துடன் ஒப்பிட்டால், யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போன்றதுதான்.கொரோனா வைரஸ் பாதிப்பை உடனடியாகக் கண்டு பிடிப்பதற்கு ரேப்பிட் டெஸ்ட் என்ற ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது.

 

டிஸ்கி :

mqdefault.jpg

அதோ தெரியுது பார் மல .. அதைதான் நீ சானை பிடிக்கணும்..☺️..😊

 நல்லா விளையாடுகின்றார்கள் தமிழ்நாட்டுடன்

  • கருத்துக்கள உறவுகள்

கரோனா பரிசோதனைக்கு 3 லட்சம் ரேபிட் கிட்கள்: சீனாவில் இருந்து விமானம் புறப்பட்டது

nearly-3-lakh-rapid-antibody-test-kits-have-just-been-airlifted-by-air-india-from-guangzhou-in-china

3 லட்சம் ரேபிட் கிட்களுடன் ஏர் இந்தியா விமானம் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும்.

சீனாவில் இருந்து விரைவான ‘கரோனா’ பரிசோதனைக்காக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தது. மாநில சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இந்த ரேபிட் டெஸ்ட் ‘கிட்’களை விநியோகம் செய்தது. இதில், ‘ரெட் அலர்ட்’ பட்டியலில் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதலாக இந்த டெஸ்ட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான கருவிகள் சீனாவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இதனை கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் ரேபிட் கிட்களுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/india/550263-nearly-3-lakh-rapid-antibody-test-kits-have-just-been-airlifted-by-air-india-from-guangzhou-in-china-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏத்தினான் பாரு ரூபிளிக்கேட்ட ; வச்சான் பாரு சீனன் ஆப்ஸ..😢

94310998_3450693391659511_10982931713239

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.