Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி

     by : Litharsan

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூறமுடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மதபோதகரினால் ஏற்பட்ட தொற்று, சங்கிலித் தொடராக இவர்களுக்கும் தொற்றியிருக்கலாம். ஆனாலும் தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாகக் கூறமுடியாது.

தனிமைப்படுத்தல் முகாம்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். இவர்களைத் தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணியிருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பாகும்.

இந்தக் கூட்டுப் பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தற்போது தெளிவாக கூறமுடியாது. ஆனாலும் இது தொடர்பாக சுகாதார அமைச்சு, மாகாண சேவைப் பணிப்பாளருக்கு தெளிவாகக் கூறியுள்ளேன். அது தொடர்பாக ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அதன்மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்திசெய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/பலாலி-முகாமில்-இருந்தவர்/

2 hours ago, nunavilan said:

அதன்மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்திசெய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இராணுவம் மூலமாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பதை சொல்ல தயங்குகிறார் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி .

6 hours ago, nunavilan said:

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சொறிலங்காட போர்குற்றங்களை சர்வ சாதாரணமா புரிஞ்ச ராணுவத்தின் சதி முயற்சியால் கொரோனா தொற்று பலருக்கு பரவியிருக்கும் என்டு சந்தேகிறார்?

ஏதாவது சர்வதேச விசாரணை நடந்தா மட்டுமே உண்மை வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்துக்குரிய தனிமைப்படுத்தல் முகாம்களை தமிழர் பிரதேசங்களில் நிறுவியதில் இருந்து புரிஞ்சு கொள்ள வேண்டாமோ? திட்டமிட்டே பரப்புகிறார்கள். பழியும் தமிழர் மேலே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

இராணுவம் மூலமாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பதை சொல்ல தயங்குகிறார் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி .

இரணுவம் மூலம் பரவியிருந்தால், இரணுவத்தில் எத்தனை பேருக்கு பரவியிருந்திருக்கும் இதுவரை

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்

யோவ் ...வைத்தி 
சும்மாயிருந்தவர்களையும் ,கட்டாய தனிமைப்படுத்தல் என்று வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு  போய் கொரோனாவை கொடுத்தனுப்பியது இராணுவம் ,எனக்கு தனிமைப்படுத்தலுக்கு வர விருப்பமில்லை என்று சொன்னால் சரி நீங்க வீட்டிற்கு போங்கோ என்று அனுப்பி வைத்துவிடுவினமோ...?

எல்லாவற்றுக்குள்ளும் அறப்படிச்ச இராணுவத்தை கொண்டு வந்து ஓட்டினால் இதுதான் நடக்கும்,
இராணுவத்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென்றால் வைத்திய நிபுணர்கள் எதற்கு , வைத்தியசாலைகள் எதற்கு ,மருத்துவ தாதிகள் உதவியாளர்கள் எதற்கு   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

பாவம் திரிசங்கு நிலை. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். தமிழருக்கு எதிராக  மன்னர் குடும்பம்  போட்ட திட்டம் நிறைவேறும்வரை, யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இருக்க வேண்டும்.  அதற்கு இவரது மருத்துவ அறிக்கை தேவைப்படுகிறது. கொரோனா நோயாளிகள் யாரும் இனங் காணப்படாவிட்டால் இவரது அறிக்கை கேள்விக்குறியாகும். ஆரோக்யமானவர்ளுக்கு கொரோனா வர வைத்த  பொறுப்பு இவரே. மனசாட்சி வேறு குத்தியிருக்கும். அதனால் கைகழுவி நழுவப் பார்க்கிறார். 

2 hours ago, satan said:

ஆரோக்யமானவர்ளுக்கு கொரோனா வர வைத்த  பொறுப்பு இவரே.

நீங்கள் வைத்தியர் சத்தியமூர்த்தியையா குறிப்பிடு கிறீர்கள்?

அப்படியானால், எதை ஆதாரமாக இல்லை மேற்கோள் காட்டி இதை குறிப்பிடுகிறீர்கள் ? 

22 hours ago, Rajesh said:

ஏதாவது சர்வதேச விசாரணை நடந்தா மட்டுமே உண்மை வெளிவரும்.

அதென்னமோ உண்மை தான் ஸ்ரீலங்காவை பொறுத்தவரை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

நீங்கள் வைத்தியர் சத்தியமூர்த்தியையா குறிப்பிடு கிறீர்கள்?

அப்படியானால், எதை ஆதாரமாக இல்லை மேற்கோள் காட்டி இதை குறிப்பிடுகிறீர்கள் ? 

On 16/4/2020 at 20:00, nunavilan said:

பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?

தொற்று இனங் காணப்படாமல் மதபோதகரின் வழிபாட்டில் கலந்து கொண்டார்கள் என்ற காரணத்தால்    தனிமை படுத்தலுக்கு பலாலி  முகாமுக்கு அந்த மக்களை அனுப்ப காரணமானவர், சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த பின் அவர் எழுப்பும் கேள்வி, தெரிவிக்கும் அப்பாவி விளக்கம் அந்தச் சந்தேகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு எப்படியும் தொற்று ஏற்படுத்தப்பட்டு விடுமோ என்கிற கவலையையும் ஏற்படுத்துகிறது. இராணுவ தனிமைப்படுத்தல் தமிழர் செறிந்து வாழும் இடங்களில். தமிழரை  தனிமைபப்டுத்த இராணுவ முகாம் தேவைப்படுகிறது.  கேட்க ஆளில்லை.  

22 hours ago, உடையார் said:

இரணுவம் மூலம் பரவியிருந்தால், இரணுவத்தில் எத்தனை பேருக்கு பரவியிருந்திருக்கும் இதுவரை

இராணுவ வைத்தியசாலைகளில் இருக்க கூடிய தொற்றாளர்களை இரகசியமாக வைத்திருப்பார்கள். 

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.